அத்தியாயம் -13

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானாடி தில்லையிலே

அத்தியாயம் – 13

இரவில் குளுமை தென்றலை உசுப்பி விட, அது தன் சீண்டலை தொடங்கி விட்டது, அரிவை பெண்களிடம்.

மச்சியில் பாய் விரித்து நல்ல விசாலமாகப் படுத்துக் கொண்டே, கதையைத் தொடர்ந்தனர் தோழிகள்.

“அப்புறம் என்னடி மாமி ஆச்சு?” குப்புற படுத்துக் கொண்டு கதை கேட்க.

சிவகாமியும், அவளை போலவே படுத்துக் கொண்டு தனது கதையைத் தொடர்ந்தாள்.

ஊருக்கு சென்று வந்த அம்பலம், இரு தினங்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டு இருந்தார். சக்தி மற்றும் உலகுடன் சென்று பள்ளித் தலைமை ஆசிரியரைப் பார்த்து சிவகாமியை பற்றிக் கூறி, படிக்க வழி செய்தார்.

அதனை தனது தாயிடம் சொல்ல, அவரும் தனது மகனை பெருமையாக எண்ணிக் கொண்டார்.
தான் செய்ய நினைத்ததை, அவர் மகன் செய்தது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

அவருக்கு, தனது மகனின் உள்ள நோக்கம் புரியவில்லை, பாவம். அதன் பின் மருமகளை அழைத்து விஷயத்தைச் சொன்னார், நாச்சி
சிவா பாப்பா பள்ளி கூடத்துக்குப் போகோனும். புத்தகம் எல்லாம் ராசா வாங்கியாந்துட்டாரு. நீ வா நம்ம கடையில போயி தாவணி எடுத்து, தைக்கக் கொடுத்துட்டு வரலாம்.”

“மாமி, உண்மையா நான் படிக்கப் போறேனா…”

“ஆமா சாமி.”
அத்தனை மகிழ்ச்சி, பெண்ணுக்கு. நாச்சியின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள்,

“மாமி நேக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கு. நேக்கு படிக்கப் பிடிக்கும் மாமி.”

“சக்தி சொன்னாக சிவா பாப்பா.”

“ஆனா, அவா கிட்ட கேட்கணும் தானே, மாமி.”

“யாரைச் சொல்லுற?”

“அதான் உங்க மகன்..”

“மாமான்னு சொல்லணும் கண்ணு.”

“ஹ்ம் சரிங்க மாமி. அவா கிட்ட கேட்டுட்டு வரேன் மாமி.” என்ற பெண்ணை, தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டவர், குனிந்து உச்சியில் இதழ் பதித்து,

“அவுக தான் பாப்பா பள்ளி கூடத்துல சேர்த்து, புத்தகம் வாங்குனது.”
சிறு பெண்ணுக்கு, சந்தோசம் தாங்க முடியவில்லை. உடனே துள்ளிக் குதித்தது.

“மாமா கிட்ட நன்றி சொல்லனும், மாமி. இருங்கோ அஞ்சே நிமிசத்துல கிளம்பி வந்துடுறேன்.” என்று ஓட.

“பார்த்துப் போ, பாப்பா” என்றவர் போகும் பெண் மானை பார்த்துக் கொண்டு இருந்தார்.
சொல்லிக் கொடுத்தால், அதைக் கற்பூரமாகப் பிடித்துக் கொண்டு செயல் படும் பெண்ணை எண்ணி, பெருமை பிடி படவில்லை அவருக்கு.

என்ன தவறு செய்தாலும், அதனைச் சுட்டிக் காட்டினால் உடனே சரி செய்து கொள்ளும் குணம், அவரைக் கட்டி இழுத்தது. தான் பெற்ற பெண்களை மறந்து மருமகளின் பின்னே சுற்றும் நாச்சியின் செயல் விந்தை தான்.

அதற்காக அவர் பெண்களைப் பார்க்காமல் இருக்க வில்லை. தாயாக, சமாகத் தான் இருந்தார், அது எப்படிச் சொல்ல?
நோஞ்சான் பிள்ளையைத் தாய் தனது சூட்டில் வைத்துக் கொண்டு அதனைத் தேற்றிவிடச் சுற்றுவது போல், மருமகளைத் தேற்ற தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டார், நாச்சி.

இதுவும் சுயநலமான அன்பு தான். மகனை கொண்டு தான் சிவகாமி என்ற எண்ணமும் உண்டு.
இரு வேறு மனநிலையில்,

அவர் மகனைக் கொண்டு சிவகாமி. ஆனால் நடப்பவை சிவகாமியை கொண்டு மகனாகச் சிரித்துக் கொண்டார், நாச்சி.

பல எண்ணங்கள் கொண்ட மனிதனை, எதைக் கொண்டு நிர்ணயிக்க முடியும்.

சிவகாமி அழகான இளம் மஞ்சள் பாவாடை சட்டையில் கடைக்குக் கிளம்பி வர, மாமியும் மருமகளும் பேசிக் கொண்டே கடைக்குச் சென்றனர்.

இந்த அழகை சுந்தர் பட்டரும் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு மனம் களிப்பு கொண்டது. உடனே இந்த விஷயத்தை மனைவிக்குக் கடத்த விரைந்து விட்டார், மனிதர்.
**
மஞ்சள் குயிலாக, தத்தி தத்தி கடைக்குள் நுழையும் மனைவியை முதல் முறையாக ஊன்றிப் பார்த்தார், அம்பலம்.
திருமணம் முடிந்து சில நாட்கள் ஆனாலும், இன்னும் அவர் மனையாள் மதி முகம் காணவில்லை அல்லவா!
நாச்சியின் சிவப்புக் கல் அட்டிகை, ஓய்யாரமாக சிவகாமியின் கழுத்தை அலங்கரிக்க, தனது தாயையும் தாரத்தையும் யோசனையாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மனதுக்குள் ‘சேர்க்கையே சரி இல்லையே! என்ன பண்ணுச்சு இந்தக் குட்டிப் பொண்ணுன்னு தெரியல. இவுக கூடவே சுத்திக் கிட்டு இருக்காக, அம்மை.’
தலையை இடமும் வலமும் ஆட்டிக் கொண்டவர், தனது தாயை நோக்கிச் சென்றார்.

“வாங்க அம்மா”

“வரேன் ராசா.”

“சிவா பாப்பாக்கு தாவணி எடுக்க வந்தேன். சதாசிவம் இல்லை..?”

“உள்ளார இருக்காரு. வருவாரு.” இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே சதாசிவம் வந்தார்

“வாங்க பெரியம்மா”

“வரேன் சாமி. எப்புடி இருக்கீக. பொண்டுக பிள்ளை எல்லாம், நல்லா இருக்காகளா?”

"எல்லாம் நல்ல இருகாக பெரியம்மா"

“சரிய்யா. இவுக தேன், அம்பலம் சம்சாரம்.” என்றதும் ஒரு புன் சிரிப்புடன் வணக்கம் சொன்னவர்,
“வாங்க சிவா பாப்பா.” என்றார் அவருக்கும் செய்தி எட்டியது போலும்.
கண்ணுக்கு அழகான பொம்மை ஒன்று உயிர் பெற்று நின்றது போல் இருந்தது.

“என்ன நிறம் வேணும் சாமி, எடுத்துக்கோ.”

“நீங்க எடுங்கோ மாமி. நான் அவராண்டா பேசனும்.” என்று சொல்ல,
சிரித்துக் கொண்டே “சரி போயிட்டுவாக, நான் எடுத்து வைக்கிறேன்.”
இவர்களது பேச்சுக் காதில் விழுந்ததும், கணக்கு எழுதிக் கொண்டு இருந்த அம்பலம், நிமிர்ந்து அமர்ந்தார்.

தன்னை நோக்கிப் பறந்து வரும் மஞ்சள் குருவியை, கொஞ்சம் பதற்றமாகத் தான் பார்த்தார்.

அம்பலத்தானை நெருங்கிய சிவகாமி, அவரது கையைப் பற்றி தனது கைகளுக்குள் வைத்துக் கொள்ள, பதறி எழுந்து விட்டார்.

“என்... என்ன....?”

“நேக்கு, என்ன சொல்லுறதுன்னே தெரியலை. ரொம்பச் சந்தோசமா இருக்குண்ணா. ரொம்ப நன்றி. நேக்கு கணக்கு டீச்சர் ஆகனும்னு ஆசை. என்னை அதுக்குப் படிக்க வைப்பேளா?”

“ஹ்ம்ம் கண்டிப்பா.” என்றவர் கைகளை நாசுக்காக விலக்கிக் கொண்டார்.

“ரொம்ப நன்றின்னா.”

“சரிம்மா அம்மா கூடப் போக.”

“ஹ்ம்ம்..” என்றவள் மீண்டும் திரும்பி அவரிடம் வந்து,

“ஏன்னா, ஏன் வீட்டுக்கு நாழி ஆகி வரேள். ராத்திரி சாப்பாடே மூணு எடுக்குறதில்லை. ஏன்?” என்ற பெண்ணை அதிர்ந்து பார்த்தார், அம்பலம்.

சிவநேசனுடன் இரவு உணவை முடித்து விட்டு வெகு நேரம் சென்று வரும் கணவனை, சரியாகக் கண்காணிக்கிறாளே என்ற பயம்.

“அது.... அது..” வார்த்தை வழுக்கிக் கொண்டு தான் போனது, ‘சிறு பெண்ணிடம் சிக்கி ஐயோ! என்னடா அம்பலத்தான் உனக்கு வந்த சோதனை?’ என்று எண்ணியவர், தொண்டையை மீண்டும் கனைத்துக் கொண்டு,
“வேலை அதிகம். அதான் இனி சரியாய் வந்துடுவேன்.” என்ற வாக்கை கொடுத்து, தன்னை அறியாமலே சிறந்த குடும்பஸ்தனாக மாறினார், அம்பலம்.

ஒருவழியாக மாமியாரும் மருமகளும் ஜவுளி எடுத்துக் கொண்டு கடையைக் காலி செய்ய, சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்தார், சிவநேசன்.

அவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆனது குறிப்பிடத் தக்கது.

“குட்டி மனைவி, குட்டி மனைவின்னு குஜாலா இருக்கடா, மாப்புள்ள நீ.”

“வேணாம் மாப்புள்ள, கடுப்ப கிளப்பாத”

“சரி சரி கோவப்படாத. என்ன ஆச்சு? அப்புச்சி என்ன சொன்னாரு?” என்றவரிடம் தங்களது பேச்சு வார்த்தை மற்றும் முடிவைச் சொல்ல,
ஆடித் தான் போனார், சிவநேசன்

“மாப்புள்ள, கொஞ்சம் யோசி. இன்னும் காலம் இருக்கு. அதுக்குள்ள அந்தப் புள்ள வளர்ந்துடும். பிறவு என்ன உனக்கு? படிக்க வை, வேலை வாங்கிக் குடு. ஆனா இது வேணாம் மாப்புள்ள!”

“ப்ச் எனக்குச் சரியா படல.. இது தான் என் முடிவு அம்மைக்குத் தெரிய வேணாம்.:

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்! நான் விசாரிச்ச, வரைக்கும் உன் பொஞ்சாதி படு தெளிவு. கெட்டிக்காரப் புள்ளையாம். என் பொஞ்சாதி சொல்லுச்சு. பார்த்துக்கிடு மாப்புள்ள, அம்புட்டுதான்!”

“ப்ச் சரி இதை விடு. மீனம்மாளுக்குப் பார்த்த மாப்புள்ள என்ன ஆச்சு?”

“பார்த்தியா மறந்துட்டேன். நேத்தே செய்தி வந்துச்சு அன்பு, சங்கரி சேர்த்து கேக்குறாங்க. அங்காளி பங்காளிங்க போல.”

“என்னடா இது? ஓட்டுக்கா கேட்டா எப்படி?”

தடுமாறினார் அம்பலம்.
என்ன தான் வசதி வாய்ப்பு இருந்தாலும், மூன்று பெண் பிள்ளைகளை ஒரே நேரத்தில் கரை சேர்ப்பது என்பது சிரமம் இல்லையா!

“நானும் அதேன் மாப்புள்ள சொன்னேன். மூணு மாச இடைவெளி கொடுத்துப் பண்ணிக்கிடலாம் சொல்லுறாரு. கருப்பான் செட்டி குடும்பம் மாப்புள்ள, கும்பகோணத்துல பெரிய ஆளுக!”

“சொன்னாக. அம்மைகிட்டையும் அப்புச்சி கிட்டையும் பேசிட்டு முடுச்சுடலாம்.”

“ஆமா, அப்போ தானே சக்திக்கும், உலகுக்கும் பார்க்க முடியும்.”

“அதுங்க இரண்டும் நல்லாப் படிக்கட்டும். பெறவு பார்க்கலாம்.”

“அதுவும் சரிதான். சரி மாப்புள்ள, நான் வாரேன். ஆறப் போடாத. பேசி முடி!”

“சரி மாப்பிள்ளை.” என்றவர் முதல் வேலையாக, சிவநேசன் சொன்னதைச் செய்தார். அன்றே பெண் பார்க்கும் படலம் முடிவாகி விட்டது.
அங்காளி பங்காளி என்பதால் ஒரே வீடு என்பதால், மூவரையும் ஒன்றாகப் பார்த்து விடலாம் என்றும், திருமணம் மட்டும் பேசி முடி வெடுக்கலாம் என்றும் பேசி வைத்தனர்.

அதன் பின் கடை வேலையில் முழுகிப் போனார், அம்பலத்தான்.
இன்றும் வேலை இருந்ததால், வெகு நேரம் சென்று வீட்டுக்குள் வந்தவர், கூடத்தைக் கடந்து உள்ளே செல்லப் போக, அங்கே கண்ட காட்சியில், ஓர் நிமிடம் நின்று விட்டார்.

வீட்டுப் பெண்கள் அனைவரும் ஒன்றாகப் படுத்துறங்க. நாச்சியின் பக்கத்தில் தனது மனையாள், அவரது சீலை முந்தியை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் காட்சி, அவரை நிற்க வைத்தது.

விவரம் தெரிந்து அவர் அணைத்துக் கொண்டது எப்போ, தன்னையும் தனது தங்கைகளையும் என்ற யோசனைக்குச் சென்று விட்டார், மனிதர்.

வர வர சிவகாமியின் மீது பொறாமை வந்துவிடும் போலும்.

அவருக்கு யார் சொல்வது? தன்னை எதிர் பார்த்து ஏமாந்து நின்ற மனைவி, தூக்கம் வராமல் அல்லாட, அவளை அணைத்துப் படுக்க வைத்துக் கொண்டார், நாச்சி.
கண் மூடி படுத்த அவருக்கு, மனதுக்குள் ஒரே குழப்பம். பின்பு அதனைத் தள்ளி வைத்து விட்டு, தனது முடிவே இறுதி என்று கண் மூடிக் கொண்டார்.
அது சரி, எண்ணியது எல்லாம் நடந்தால், நாம் தான் கடவுள் அல்லவா?
****
மீனம்மாள், அன்பு, சரசு மூவரையும் பெண் பார்த்து, திருமண உறுதி செய்து என அனைத்தும் நடக்க, இதோ மூவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

மூன்று திருமணத்தையும் கண்டு கழித்த சிவகாமிக்குத் தான் மனம் முரண்டியது.

திருமணம் என்றால் என்ன? புரிந்தும் புரியாமலும் ஓர் பந்தம். அதனை இப்படித் தான் நடத்த வேண்டுமா? தன் சூழல் தெரிந்தாலும் சிறு பெண்ணுக்கு ஆசை உண்டு அல்லவா!

கழுத்திரு கொண்ட தாலிகளும், மாமன் இறக்கிய சீரும் பிறந்தகம் வளமையும் தந்த பூரிப்பு மின்ன நின்ற பெண்களை, ஒரு நிமிடம் பார்த்து ஆசை கொண்டது, சிவகாமியின் மனம்

வீட்டின் மருமகளாக, நாச்சி சொல்லிக் கொடுத்தது போல அனைத்தையும் முன் நின்று செய்தாள், பெண்.

கண்ணுக்கு அழகாக, தனித்துவமாக இருந்த பெண் மேல் அனைத்து கண்களும் ஒரு முறை தீண்டிச் சென்றது, அம்பலத்தானை தவிர.

ஒரே ஆண்டில், மூன்று திருமணத்தையும் இனிதே நடத்தி முடித்து விட்டனர், நாச்சியும் அம்பலத்தானும். நாத்திகளின் திருமணத்தில் சந்தோஷம் என்றாலும், அவர்கள் இல்லாத வீடு வெறுமையை அவ்வப்போது கொடுத்தது.

சக்தியும் உலகும் அவளை ஒட்டியே!

காலம் எடுத்த ஓட்டத்தில் ஆண்டுகள் கடக்க, இதோ ஆசிரியர் பயிரிச்சிக்காக ஆறு மாதங்கள் கணக்குச் டீச்சராக, தான் படித்த பள்ளியிலே சேர்ந்து விட்டாள், சிவகாமி.
முதல் முறையாகத் தனது தந்தையைப் பார்த்து ஆசி பெற வேண்டும் என்று பிறந்தகம் செல்ல எண்ணி, தனது மாமியிடம் அனுமதி பெற்றுச் சென்றாள், சிவகாமி.

திருமணம் முடிந்து கையோடு நாச்சி வீட்டுக்கு வந்தவள் தான், அவ்வப்போது கோவிலில் தாயை மட்டும் கண்டு பேசிக் கொள்வாள்.

விவரம் பிடிபட, தனது நிலை உணர்ந்து நடந்து கொண்டாலும், தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டாள், சிவகாமி.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
அம்பலம் சிவகாமி நாச்சியார்
சரியா தான் நடந்துக்குறாங்க

பிள்ளையாரு தப்பு தப்பா
யோசிக்காக
பஞ்சாயத்து என்ன ஆச்சு
 
dhanuja senthilkumar

Well-Known Member
அம்பலம் சிவகாமி நாச்சியார்
சரியா தான் நடந்துக்குறாங்க

பிள்ளையாரு தப்பு தப்பா
யோசிக்காக
பஞ்சாயத்து என்ன ஆச்சு
திங்கள் அன்று
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top