அத்தியாயம் - 12

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் - 12

கருப்பனது தாய் தந்தை அத்தனை தூரம் மன்றாடியும் நல்லம்மாள் இறங்கி வருவது போல் இல்லை அது சரி அவர் நிலை சூடு கண்ட பூனை அல்லவா.

அது மட்டுமில்லை ஆண் மகனான தனது பிள்ளையையே எத்தனை வஞ்சம் செய்தார்கள். மலர் பெண் தன்னைப் போல் தைரியம் கொண்டு இருந்தாலும் சரி என்று சொல்லிவிடலாம் வெளி உலகம் காணாத பெண் படிப்பறிவு இருந்தாலும் அனுபவம் இல்லை அதுவே அவர் பயத்திற்கு முதல் காரணம்.

நல்லம்மாள் இறுகிய முகத்தைப் பார்த்த சடையன் தலையை இருபுறம் ஆட்டி கொண்டு “ஏலேய்! கருப்பு இது வேலைக்கு ஆகாது நீயே பேசிப்புடு அதுதேன் நல்லது”

“அண்ணே பயமா இருக்குண்ணே பெரியவுக எம்புட்டு பேரு இருக்காக”

“அட நல்லவனே அப்போ பொண்ணு உனக்கில்லை நேரம் விரையம் இல்லாம நடைய கட்டு அடுத்தப் பஞ்சாயம் முடிச்சுப் புடலாம்”

“ஐயோ!.... எனக்கு மலர் வேணும் நானே பேசுறேன்”

“சொல்லாத போ இல்லயிண்டா எங்களை விடு” சடையன் குறி பார்த்து அடிக்க

“ப்ச்... போறேன்” என்றவன் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு நல்லம்மாளை நெருங்கி அவர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள வெடுக்கெனத் திரும்பியவர் அவனது நோக்கம் அறிந்து

“இங்கன பாரு கருவா குஞ்சு நீ சமாதானம் பேசுனாலும் நான் கண்ணாலத்துக்கு ஒத்துக்க மாட்டேன் நீ தாஜா பண்ணி காரியம் முடிக்கப் பார்க்காதா”

“அம்மாயி நான் காலுல விழுந்தா கூட நீ பொண்ணு தர வேண்டாம் தரவும் மாட்ட” என்றவனைப் பெரியவர்கள் அனைவரும் யோசனையுடன் பார்க்க ராசி,முத்து, என்ற முதுமகன்கள் குழு மட்டும் “ஹ்க்கும்” என்று சடைத்துக் கொண்டது

“அண்ணே பேசியே காரியம் பண்ணுவான்” முத்து ராசி காதை கடிக்க

“கண்டிப்பா என்னவோ யோசுச்சு புட்டான் இல்லண்ட இம்புட்டு பதிவிசா இருக்க மாட்டான்” ராசியப்பனுக்கும் குறு குறுப்பு என்ன பேசுவான் என்று.

“சரியா சொன்னீக மச்சான் எமகாதாகப் பையலுக” சொக்கன் அவர் பங்கிற்கு.

“பார்த்து பேசு சகல உம்ம தங்கச்சி பையன் உன்ன தேன் முறைச்சு நிக்கான் அடுத்து உம்ம பஞ்சயாம் தேன்”

“யோவ்! பொண்ணு எனக்கு மட்டுமே பொண்ணா” சொக்கன் கடுப்பில் மூக்கனை பார்த்து கேட்டு வைக்க.

“அன்னம் எனக்கும் பொண்ணுத்தேன் ஆனா உரிமை பேச இப்போ நேரமில்ல அதைப் புரிஞ்சு கிடு சகல உம்ம பொஞ்சாதியையும் என் பொஞ்சாதியையும் கூப்பிடு பேசி புடுவோம்”

“ஹ்ம்ம் அதுவும் சரித்தேன் வாக ராசி முத்து மச்சான் நீங்களும் வாக” என்றவர்கள் யார் கருத்தையும் கவராமல் மனைவிகளை அழைத்துக் கருத்து கேட்க.

வள்ளியும் குமாரியும் முரண்டு பிடித்தனர் சொக்கனுக்கும் அரை மனது தான் ஆனால் கழுத்தில் கத்தியை வைத்துப் பெண் கேட்டால் அவர்களுக்கு வேறு வழி...

மீண்டும் கருப்பனிடம் பார்வை செல்ல “அம்மாயி இங்கன பார் நீ பொண்ணு கொடுக்காதா அவிங்க கொடுக்குற மாப்பிள்ளையை ஏத்துக்கோ ஆருக்கு கிடைக்கும் இந்த மாதிரி மாப்புள?

“அதானே பேச்சை பார்த்தியா சகல நான் சொல்லல இவனுங்க வம்பு நாட்டானுங்க”

“அட இருய்யா என்னதான் சொல்றான்னு கேட்போம்” சொக்கன் முத்துவை அடக்கினார்.

“கண்ணாலம் கட்டி என்ன உன் கூட வச்சுக்கோ உம்ம பேத்தி உன் கூடவே இருக்கட்டும் எப்போ என் மேல நம்பிக்கை வருதோ அப்போ அனுப்பி வை என்ன” கருப்பனது பேச்சில் நெஞ்சில் கை வைத்தார் நல்லம்மாள் ஆண்கள் குழு அனைத்தும் பேய் முழி.

“அட கொட்டி பையலே நீ உங்க அப்பன் ஆத்தாளுக்கு ஒரே புள்ள டா உன்ன பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு எம்புட்டுச் சுளுவா சொல்லுற உன் அப்பன் ஆத்தாளா யாருடா பார்ப்பா”

“அதெல்லாம் அவுக பார்த்துக்கிடுவாக நானும் அப்போ!.. அப்போ!...”

“என்ன பேச்சு இது இதுதேன் நீ பொறுப்பா இருக்கிற லட்சணமா இதுக்கே உனக்குப் பொண்ணு இல்ல போடா”

“அம்மாயி இதெல்லாம் அநியாயம் காட்டுக்கு போன மேட்டுக்கு இழுக்க நீ. நான் எம்புட்டு இறங்கி வந்து நிக்கேன் இதுக்கு மேல என்ன செய்ய சொல்லுற மலர் இல்லன்டா நான்........”

“என்ன செத்து போவியா” நல்லம்மாள் பட்டென கேட்க

“ஆரு சொன்னா நான் ஏன் சாகனும் மலர் இல்லன்டா பட்டணம் போயிடுவேன் இனி இந்தப் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன் எந்த உறவும் வேணாம்” என்றவன் எழுந்து செல்ல பெரியவர்கள் அனைவரும் அமைதியாக நின்றனர்.

நடனதேவர், “அக்கா உன் முடிவும் மலர் முடிவுத்தேன் இறுதி சொல்லு இது விளையாட்டு பேச்சா தெரியலை”

நல்லம்மாள் யோசிக்க ஆரம்பித்து விட்டார் கருப்பனை பொறுத்தவரை அவர் பார்க்க வளர்ந்த பிள்ளை நல்ல தொழில் குணம் கலையும் அமைதி தான்.

ஆனாலும் அவரால ஒரு முடிவை எடுக்க முடியவில்லை தனது மகன் நிலை பேத்திக்கு வர கூடாது அன்று இருந்த நிலை இப்பொழுது இல்லை அல்லவா.

அதில் அவர் உறுதியாக நின்றார் “தேவா மலரையும் அவ ஆத்தா அப்பனையும் கேளு அவுக முடிவுத்தேன் நல்லம்மாள் சொல்லிவிட”

நடனதேவர் பார்வை சோமதேவனைத் தீண்ட “என் பொஞ்சாதி பிள்ளைக முடிவுத்தேன் மாமா” என்றவனைக் கண்கள் சிரிக்கப் பார்த்தவர் பார்வை அறிவை தீண்ட.

அவர் “மலர் இங்கன வா நீ கலை ஐத்த பையனை கண்ணாலம் கட்டுகிரியா உன் விருப்பம் என்ன சொல்லிப்புடு” என்றவரிடம் நெருங்கிய மலர்.

அனைவருக்கும் சபை மரியாதை நிமித்தம் வணங்கி யாரும் எதிர் பார்க்காத வகையில் சம்மதம் சொல்லிவிட்டாள்” எனக்கு சம்மதம் தானுங்க”

கருப்பன் வாய் கொள்ளா புன்னகை அவனது கருமை நிறத்திற்கு வெள்ளை பற்கள் அபாராமாக டால் அடித்தது

“ஏன் பாப்பா அந்தப் பைய எதுவும் மிரட்டுனான” நல்லம்மாள் கேட்க

“கொழுப்புதேன் அம்மாயி உனக்கு”

“ இரு டா என் பேத்தி சொல்லட்டும்”

“ஹ்க்கும்...”

“இல்ல அவர் பேசுனதே இல்ல அப்பாத்தா நல்லது கெட்டதுல பார்த்து இருக்கேன் அம்புட்டுதேன்” என்றதும் கருப்பன் பெற்றவர்களுக்கு அத்தனை களிப்பு

“அக்கா இப்போ சொல்லு”

“தேவா கண்ணாலத்துக்கு முன்னாடி தெளிவா பேசிப்புடனும் கண்ணாலம் உறுதி கொடுக்கும் போது அவுக சாதி சனத்துக்கிட்ட நான் சொல்லுற மாதிரி எழுதி வாங்கிப் புடு” என்றதும் சுப்பு மற்றும் கலையின் முகம் வாடி விட்டது

சுப்பு “எங்க மேல நம்பிக்கை இல்லையாக்கா?”

“அம்புட்டு பெரியவுக நிக்க என் மகனுக்கு உறுதி வாங்கித்தேன் கண்ணாலம் முடிச்சேன் அவன் வாழ்க்கைய பார்த்தீர்களா? என்ன புரிஞ்சுக்கிடுக சாமி எழுதி கொடுத்து புடுக” என்றவர் மறைமுகமாகச் சம்மதம் சொல்ல இதுவரை போதும் இனி பேசி கேடுக்க மனம் இல்லாமல் ஒத்துக்கொண்டனர்.

“ஜாதகம் கொடுகச் சுப்பு பேசி நல்ல நாள் சொல்ல சொல்றேன் அதே நேரம் என் மகனுக்கும் சின்னப் பேத்திக்கும் முடிச்சு புடலாம்னு இருக்கோம் இரண்டு கண்ணாலத்தையும் என்ன சொல்லுற மச்சான்”

“பண்ணிபுடலாம் மாமா” அறிவு?..

“சரிங்க ஐயா!”

“பிறவு என்ன நல்ல நாள் பார்த்து சொல்லுதேன் அதுக்கு முன்னாடி அன்னம் பெரிய பேத்தி கண்ணாலம் முடிக்கனும் என்ன மாப்புள” என்றவர் அடுத்த வாக்கு வாதத்திற்கு அழகாகப் பிள்ளையார் சுழி போட்டார்.

**

“சொல்லுக சொடலை என்ன செய்தியா வந்தீக”

“தாத்தா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல சும்மா பத்து வருசமா அவதேன் வேண்டுமுண்டு கதியா நிக்கேன் முறையா எங்க ஆத்தா அப்பாவை விட்டு பொண்ணு கேட்டேன்...

ஆனா என் மாமனுக்கு கொடுக்க மனசில்ல எதுல நான் குறை கேட்டு சொல்லுக” பட படவென பேசி நின்றவனுக்கு என்ன பதில் சொல்ல என்று முழிக்க.

“சரித்தேன் சொல்லுக மாப்புள உங்க தங்கச்சி மவன் தானே உருத்து இருக்கே பிறவு என்ன?”

“அட ஏன் மாமா சடை மச்சானுக்குக் கொடுக்கவே யோசுச்சு நின்னே என் பொஞ்சாதி காரி முடிவு எதிர்க்க முடியல”

“எஞ்சாமி எங்க மவனுக்கு என்ன குறை” சடையனை சொல்லவும் நடனதேவருக்கு என்னவோ போல் ஆனது

“எத்தேசோடு இருக்கானுக பார்த்தீகளா முரட்டு பையலுக வாய்ய விடக் கைத்தேன் அதிகம் பேசும் நான் பொத்தி பொத்தி வளர்ந்த புள்ள மாமா எதுக்கு சொல்றேன்னு புடிபடுதா”

“அது சரி நீங்களும் வயசுல இப்படித்தேன் நான் என் பொண்ண கொடுக்கலை” சரியாக அடித்தார் நடனதேவர்.

இதனைச் சொல்லவும் சொக்கன் திருத் திருவென முழிக்க இளவட்டங்களுக்கு ஒரே சிரிப்பு இதற்கு என்ன பதில் சொல்வது.

சொடலை யின் தாய் “மாமா நீக பேசி உறுதி கொடுங்க மதனியும் அண்ணனும் தட்டி கழிக்கிறாக நான் எங்கண்ணே பொண்ண தங்கமா வச்சுக்கிடுவேன் மாமா”

“பிறவு என்ன மாப்புள காலம் மாற மாறச் சொந்தம் வெளில போகப் பழகிட்டாக இன்னும் காலம் போச்சுன்னு வைக சொந்ததுல கொடுக்கல் வாங்கல் நின்னு போயிடும்.

மாமா மவன் ஐத்த மவன்னு பேச்சு கூட வராத அளவு. எங்க காலம் இருக்குற வரை அது வேணமே அனுசரிப்போம் மாப்புள பையன் தங்கம் என்ன முன் கோபி அதை அன்னம் பார்த்துக்கிடும்”

“இன்னொன்னு சொல்லுதேன் பொதுவுல கேட்டுக்கிடுக இப்போ இருக்குற காலக் கட்டத்துல உள்ள புள்ளைகளை விட நம்பப் பசங்க மேல்னு தேன் சொல்லுவேன்.

உருத்து உள்ள பிள்ளைகள் பக்கத்துல இருந்தும் கண்ணியம் காத்து நிக்குறாக எங்க காலத்துல பேசி முடிச்ச உடனே கேலி கிண்டல்னு சீண்டி கிட்டு இருப்போம்.

ஆனா இதுங்க கண்ணுல கூடப் பார்த்துக்கமா இருந்துருக்காய்ங்க இதுக்கு மேல என்ன வேணும் முரடான இருந்தாலும் பண்பு கொண்ட காளைங்கய்யா” நடனதேவர் சொல்லவும் விசில் அடிக்கத் தோன்றியது இளவட்டங்களுக்கு

பெண்கள் பயந்தாலும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னது இந்தப் பண்பிற்குத் தான் ஒரே ஊர் ஒரே வீடு என்றாலும் இதுவரை எந்த வித கண்ணியமற்ற செயல்களும் இருந்ததில்லை

ஆண்கள் தற்போது முரண்டியதே தங்களது வயதை காரணம் கொண்டு தான் அதுவுமின்றிப் பெண்களுக்கு வரன் தேடவும் தான் இந்தச் சேட்டை.

நடனதேவர் சொன்னதை யோசிக்க வேண்டி “மாமா நான் நல்ல செய்தி சொல்றேன் அது வரைக்கும்....”சொக்கன் இழுக்க அதற்கு பதில் கொடுத்தது என்னவோ சொடலை தான்

“மாமா நீ எம்புட்டு நாள் வேணாலும் எடுத்துக்கிடு ஆனா நாளைக்கு எனக்குச் சம்மதம் சொல்லிப்புடு” என்றவன் கூற்று மெதுவாகப் பிடிபட எல்லோர் முகத்திலும் புன்னகையின் சாயல்

“ராவுடி பைய” முனகி கொண்டார் சொக்கன்

அதன் பின் பெரியவர்கள் ஆண்கள் கூட்டம் தனியே பொதுவாகப் பேசி கொள்ளப் பெண்கள் கூட்டம் தற்போது நடப்பை பேசி நிற்க.

இளவட்டம் வழமை போல் தனியே ஒதுங்கி கொண்டது அது சரி கேட்க கேலி பேச ஆயிரம் உண்டு அல்லவா

முத்தரசனை தவிர அனைத்து இளவட்டங்களும் அங்கே கூடி நின்றனர் அன்னத்தை மட்டும் தனியாக அழைத்து பேச எண்ணி சொடலை.

“சடை பார்த்துக்கிடு அன்னத்துக்கிட்ட பேசணும்”

“சரி டா உன் முரட்டுத் தனத்தைக் காட்டாத இன்னும் உன் மாமன் சம்மதம் சொல்லல நியாபகம் வச்சுக்கோ”

“சரிடா” என்றவன் அன்னத்தின் கையை பிடிக்க வர பயந்து பின்னால் சென்றது பெண்

“ஒய் என்ன பண்ணிபுடுவேன் உன்ன அப்படி பின்னால போறவ வாடி உங்கப்பனை விட கரைச்சல் பண்ணிக்கிட்டு” என்றவன் வார்த்தையில் மட்டுமே மிரட்டல் பெண்ணை மெதுவாக கை பிடித்து அழைத்து செல்ல பயம் போயி புன்னகை வந்தது பெண்ணுக்கு.

வாய் பிளந்து நின்ற நங்கையை ஆசையாக நெருங்கி நிற்க அதில் சுயம் பெற்றவள் “பெருசு கொஞ்சம் உரசாம தள்ளி நில்லுக”

நங்கையின் பேச்சில் கோபம் வர “அடிங்கொப்புரானே ஆருடி பெருசு” என்று சடையன் வேட்டியை மடித்து கொண்டு வர

“கல கலவென சிரித்து ஓட்டம் எடுத்தவள் “நீதேன் மாமா அப்பத்தா சொல்லுச்சு நீ என்னைவிட மூப்பு கூட”

“அடி நில்லுடி தைரியம் இருந்தா நிண்டு பேசு என்னத்துக்கு ஓடுறவா”

“நான் என்ன உன்ன மாதிரி கிழடு கட்டையா” என்றவள் மீண்டும் சிரித்து கொண்டே ஓட அவளை சடையனும் துரத்த இந்த காட்சியை பார்த்த,

நடனதேவர் உற்பட அனைவர் கண்ணிலும் சிறு கலக்கம் சுமந்த நிறைவு. அமைதி என்று எண்ணிய பேத்தியின் உண்மை குணம் இது தான் போலும் இன்னும் சொல்ல போனால் அவள் இது போல் சிரித்து அவள் தாயே பார்த்ததில்லை

அனைவர் முகத்திலும் புன்னகை இருந்தாலும் மனதின் ஓரத்தில் குற்ற உணர்வு குத்தி கொண்டே இருந்தது காலத்திற்கும் வடுவோ!...
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top