அத்தியாயம் - 11

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 11

இதமான காலை வேளையில் ஆலமரத்தடியில் அனைவரும் கூடி இருந்தனர். இது நடனதேவருடைய குல தெய்வ கோவில் விளாங்குடியில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும் சுற்றிலும் வயல் வெளி நடுவில் கம்பீரமாக நின்றார் அய்யனார்.

பூசாரி பூஜையை முடித்துக் கொண்டு நடனதேவர் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டு இருந்தார். இந்த வரவு எதற்கு? போன மாதம் தானே குல தெய்வ வழிபாடு நடந்தது என்ற யோசனை இருந்தாலும்.

அவர் என்ன? ஏது? என்று கேட்டு கொள்ளவில்லை சொல்ல கூடிய விடயமென்றால் முதல் நாளே ஆட்களை வைத்து முறையாக தெரிவித்திருப்பார் அல்லவா அதனால் அவர் சொல்லுக்காக காத்திருந்தார்.

“மூர்த்தி மதியம் ஒரு அம்பது பேர் சாப்புடுற மாதிரி கறி சோறு ஏற்பாடு பண்ணிடு” என்றவர் தனது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து அவரை அனுப்பி விட்டார்.

அவர் போகும் வரை அமைதி காத்தவர் போன உடன் பேச்சை தொடங்கினார் தனது மகனை பார்த்து

“வீடு காடுனு சோழிய பார்த்துகிட்டு இருந்த அம்புட்டு பேரையும் குண்டு கட்டையா தூக்கிட்டு வந்து இங்கன தள்ளி புட்டு சமைஞ்ச புள்ள கணக்கா தலை குனிஞ்சு நின்னா என்ன அர்த்தம்” என்றார் நடனதேவர் குரலில் எரிச்சல் கலந்த கோபம்.

அவர் பேச்சில் கோபம் வர தலையை உயர்த்திய சடை “கருப்பன் வூட்டு ஆளுகளும் சொடலை வூட்டு ஆளுகளும் வரணும் அதேன் காத்து நிக்கேன்”

“அவிங்க வேறையா” ராசியப்பன் மெதுவாக முனக

“ஏன் கூட்டாளிக இருந்தாதேன் பேச்சு வருமா”

“அல்லாரும் இருக்கும் போதே ஒட்டுக்கா பேசி முடிச்சு புடலாம் இல்லனா நாள் கணக்கு பஞ்சாயம் பண்ணனும் நீக பெரியவுக வசதி பார்த்துக்கிடுக” இந்த புனையும் பால் குடிக்குமா என்ற தினுசில் பேசி வைக்க..

“லந்தா பார்த்தியா? முரட்டு பைய” என்றவரது பார்வை ஆவுடையம்மாளை துளைக்க அவர் செல்லத்தின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டார்

“வுடுக்கா பார்த்துக்கிடலாம்” என்ற செல்லம் நடனதேவரை முறைக்க அவர் பார்வையை விலக்கி கொண்டார் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சறுக்கும் இடமுண்டு அது போல் நடனதேவர் சறுக்கி நிற்பது செல்லத்திடம் தான் அவர்களது வாழ்க்கையில் இது பரம ரகசியம்.

“ஏன்யா சகல கூடத்துல ஆரம்பிச்ச பஞ்சாயம், திண்ணை போயி அடுத்த தெருவு போயி, இப்போ கோவிலுக்கு வந்து நிக்குது இதுக்கு மேல போனா?...” மூக்கன் சன்னமாகச் சொக்கனிடம் கேட்டு வைக்கப் பதில் வந்ததோ சோமதேவனிடம்

“அடுத்துத் தெருவு தேன் கட்டி உருள இடம் விசாலம இருக்கும்”

“யோவ் சகல நக்கலா? இதுக்கெல்லாம் காரணம் நீ தான்யா அவிங்க தான் இளந்தாரி பையலுக விவரவம் புரியாம துள்ளிக்கிட்டு நிக்காங்க உமக்கு என்ன?” சொக்கன் சோமதேவன் மீது பாய அவரோ ஜென் நிலை கண்ட மகான் போலத் தெய்விக புன்னகை பூக்க தாங்க முடியவில்லை

“என்ன லந்தா?” மேலும் சீறியவரை

“ப்ச்... என்ன சகல நீ கொதுச்சு போயி நிக்க நான் கொம்பு சீவல அவிங்க ஆட்டத்துல ஒரு பங்குதேன் என்னுட்டு அதுவும் அறிவு கூடச் சேர்னுமுண்டு. மத்த படி ஆட்டத்துக்குச் சேர்த்துக்க மாட்டாய்ங்க அதேன் என் காரியம் முடியவும் கழண்டு கிட்டேன்”

“பெரிய மனுஷன் பேசுற பேச்சையா இது” மூக்கன் தலையில் அடித்துக் கொள்ள

“இதுல என்னத்த பெருசு சிறுசு எம்புட்டுக் காலம் நான் ஒத்தையில சாக நரகம் சகல” தீவிரமாகச் சொன்னவர் கூற்றிலும் நியாயம் உண்டே!

“ப்ச்... எங்க ஆத்தாக்கு அவுக வூடு நியாயம் செய்யலை, எங்க ஆத்தா எனக்கு நியாயம் செய்யலை, நான் என் பொஞ்சாதிக்கு நியாயம் செய்யலை, நாங்க எல்லாரும் சேர்ந்து என் பிள்ளைகளுக்கு நியாயம் செய்யலை.

நெஞ்சை மொக்க கத்தி வச்சுத் துடிக்கத் துடிக்க அறுத்து எடுக்குற மாதிரி வலி சகல ராவுல தூங்கி பல வருசமாச்சு” என்றவர் கவலையில் மூக்கன் சொக்கன் இருவருமே அயர்ந்து நின்றனர்.

“சரி!... சரி!... வுடு சகல பார்த்துக்கிடலாம்” என்று தோள் தட்டி நின்றனர் சகல பாடிகள் உறவுகளின் உன்னதம் வியப்பு தான் தான் போலும் முட்டினாலும் ஓட்டினாலும்.

***

அன்னம், “நல்ல பொழுது போகுது “ஏய் நங்கை நீயும் மாமனும் எங்கன எல்லாம் சுத்தி இருகீக” இளைய வட்டாராம் தங்கள் வேலையைச் சரியாகச் செய்தது.

“ஐயோ! அக்கா நீக நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்லை வூட்டுல வச்சு மாமா பார்க்க கூடச் செய்யாது”

“அப்போ வெளியில ஜாலியா இருப்பீக” சரசு

“சரியா போச்சு நான் எங்கன வெளியில போயி நீ பார்த்த”

“அதுவும் சரித்தேன் ஆனா கண்டே புடிக்கமுடியல நேத்து எங்க அப்பாரு புலம்பி தீர்த்து புட்டாரு இம்புட்டு பெரியவுக இருந்தும் இதுங்க செய்தி காதுக்கும் கண்ணுக்கும் அம்புடலைனு” மதியழகி சொல்ல நங்கை சிரித்துக் கொண்டே

“இன்னும் சொல்லுறேன் மதி அத்தாச்சி கேளு “செல்வம் மாமா சரசுக்கு ரூட்டு போடுது... சொடலை மாமா அன்னம் அக்காவ டவடிக்குது ...கருப்பன் மாமா அது தான் எங்க ஐத்த மவன் அவரு மலருக்கு” என்றதும் அதிர்ந்து நின்றனர் பெண்கள் குழு மதியழகிக்குப் பயம் என்றால் செல்வம் பேய் முழி முழித்து நின்றான்

சரசு கோபமாகச் செல்வத்தை முறைத்து வைக்க அவனோ பார்வையைத் திருப்பிக் கொண்டான் பொதுவில் இருவரும் பேசி கொள்ள முடியவில்லை.

“நாங்களும் இங்கன தானே இருக்கோம் உன்ன விட வெளில போற ஆளுக ஆனா எங்களுக்குத் தெரியல பாரு” ஆதங்கமாக மதியழகி சொல்ல

“மதியக்கா என்ன செய்ய அம்புட்டும் என் கண்ணனுக்கும் காதுக்கும் தேன் மாட்டும் அது போகட்டும் விடுக இதுங்க அம்புட்டு பேர் கண்ணுளையும் மண்ணைத் தூவி புட்டுக் காரியம் சாதிக்கிற ஆளுங்க அதுக்குச் சாட்சி என் கண்ணாலம்”

“என்ன புள்ள பயம் காட்டுற” ரெங்கதேவன் உண்மையில் அரண்டு தான் போனான் அவனும் சேட்டை தான் என்றாலும் பெரியவர்களுக்கு அடங்கிய பிள்ளை.

“சின்ன மாமா உண்மைத்தேன் நீ வேணா பாரு பெருசுங்க அம்புட்டும் எதிர்த்தா எப்படி ஆட்டைய களைச்சுக் காரியம் சாதிக்கிதுங்கனு பாரு அப்போ புரியும்”

“ஐயோ!” என்ற அன்னத்தை

“என்ன ஐயோ? அக்கா எனக்குத் தெரிஞ்சே சொடலை மாமா உன் பின்னாடி வருஷ கணக்கா சுத்துது நீயும் மலர் மாதிரி சூதனம் இல்லை வாயித்தேன் போ” என்றதும் மலர் நங்கையை முறைக்க ஆண்கள் அனைத்தும் முழித்து நின்றது.

அழகர் “என் கூடப் படிச்ச பையன் ஒருத்தன் சொன்னான் ஆனா அப்போ எனக்கு புரியல”

“நல்ல வேலை நான் தப்புச்சேன்” மதியழகி பெரு மூச்சு விட்டாள் இவ்வாறு சிறியவர்கள் அவர்களுக்குள் பேசி கொள்ளப் பெண்கள் குழுவோ அதிர்ச்சிக்கு மேல் எதாவது வார்த்தை இருக்குமோ என்ற நிலையில் இருந்தனர்

வள்ளி புலம்பி புலம்பி மயங்காத குறை தான் “அக்கா என்னக்கா நீ பேசுனதையே பேசி புலம்பிகிட்டு” அறிவு கவலையாகச் சொல்ல.

அவளது கைகளைப் பற்றிக் கொண்டார் வள்ளி நடந்தவையைப் பேசி நியாயம் கொள்ள யாருக்கும் விருப்பமில்லை அதற்காக ஒட்டி உறவாட வும் முடியவில்லை.

முன்னிருந்த விலகல் மட்டும் சரி செய்து கொள்ள முடிவு அது மட்டுமே அறிவால் முடிந்தது எதோ ஒரு வேகத்தில் அன்று பேசி கொட்டியாயிற்று.

இனி முடிந்த காலம் திரும்பி வருவது சாத்தியமற்றது அதற்காகத் தன்னிலை இழக்கவும் முடியவில்லை அதனால் முடிந்த வரை சரி செய்ய முயற்சித்துக் கொண்டனர்.

“வள்ளி என்னத்துக்கு இந்தப் புலம்பு புலம்புர”

“குமாரி என் நாத்தி மவனா இருந்தாலும் ரொம்ப முரட்டு பைய எங்க அண்ணிமாரு வந்து பொண்ணு கேட்டுச்சு இவர் பிடியா நின்னு முடியாதுனு சொல்லி புட்டாரு அதை நெனைச்சதேன் பயந்து வருது அவனைப் பார்த்தா நீ சடையனை பார்க்க வேண்டாம் அம்புட்டு பெருசா இருப்பான்”

“நானும் அங்காளி பங்காளி கண்ணாலத்துல பார்த்து இருக்கேன் வள்ளியக்கா”

“ஏண்டி அறிவு நீ என்ன தைரியமா இருக்க உனக்கு மலரை கருப்பனுக்குக் கொடுக்க விருப்பமா”

“என் முடிவு எதுவுமில்ல எல்லாம் என் பொண்ணுக தேன் அதுங்க பேசட்டும் நம்பக் காலம் வேறக்கா”

“அதுவும் சரித்தேன் அவிங்க மக்க மனுஷாள் வரட்டும் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” இவர்களை அதிகம் காக்க வைக்காமல் இரு கார்களில் வந்து இறங்கினர் கருப்பன் மற்றும் சொடலை குடும்பம்

இளவட்டம் அனைத்தும் பதுங்கி கொண்டது ஆண்களைத் தவிர, விடயம் தெரியாத வரை எப்படியோ ஆனால் தங்கள் மீது விருப்பம் கொண்டு பஞ்சாயம் வைத்த ஆண்களை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை அன்னமும் மலரும் சற்று பயந்து தான் நின்றனர்.

தோரணையாக வந்த காளைகள் இரண்டும் சடையனுடன் வந்து நின்றது மரியாதை நிமித்தம் அனைவரும் எழுந்து கும்பிட அவர்களும் பதில் மரியாதை செய்தனர் நல்லம்மாள் ஆத்திரத்தை அடக்கி கொண்டு வெடிக்கத் தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

நேரத்தை மேலும் விரையம் செய்யாமல் பேச்சை தொடங்கினார் நடனதேவர் கருப்பன் தந்தையை பார்த்து “எப்படி இருக்கீக”

“நல்ல இருக்கேனுங்க ஐயா!..”

“செய்தி கேட்டு இருப்பீக”

“ஆமாங்க பையன் முன்னக்கூட்டியே சொல்லி புட்டான் கட்டுனா மலருதேன்னு”

“உங்க முடிவு” என்றதும் கருப்பன் தாய் நல்லம்மாளின் நாத்தி கலை பேசினார்

“புள்ளையா கொடுங்க மாமா நல்ல பார்த்துக்கிடுவோம்” என்றது தான் தாமதம் வரிந்து கொண்டு சண்டைக்கு வந்தார் நல்லம்மாள்

“எப்படி பார்த்துக்கிடுவீக? இல்ல எப்படி பார்த்துக்கிடுவீக? என் மவனைப் பார்த்துகீட்டிகளே அது மாதிரியா?”

“அண்ணி செத்த நான் சொல்லுறதை கேளுக”

“போதும் சாமி நான் கேட்ட வரைக்கும் போதும் கண்ணாலம் கட்டி வந்து நாளுல இருந்து என் பொறந்த வூடு மறந்து. உங்க அக்கா தங்கச்சிய பார்த்து வளர்த்து எடுத்து வாலிபம் பண்ணி.

அதுங்களுக்கு நல்லது கேட்டது பார்த்து எடுத்து நின்ன எனக்கு நீக செஞ்ச கைம்மாறு போதும் சாமி இனி என் குடும்பத்துல இன்னொரு பொண்ணைக் கொடுத்து சீரழிய முடியாது என்னோட போகட்டும்”

“அண்ணி நீக சொல்லுறது அம்புட்டும் சரித்தேன் ஆனா நான் என்ன செஞ்சேன் சொல்லுக”

“நீ ஒன்னும் செய்யலை அதுதேன் நானும் சொல்லுறேன் உம்ம தங்கச்சி சதி பண்ணும் போதே என் பக்கம் நிண்டு இருக்கணும். நீயும் உன் அக்காளுகளும் செஞ்சீங்களா? என்ன இருந்தாலும் ரெத்தம் தானே பேசுச்சு நான் தனுச்சு தானே நிண்டேன்”

“அண்ணி கருப்பன் மலர் தானு பிடியா நிக்கான்”

“முடியாது கலை உம்ம அக்கா தங்கச்சி பேச்சை கேட்டு என் பேத்திய எதாவது பண்ணிபுட்டிகனா நான் என்ன செய்ய? இம்புட்டு வருஷம் செண்டு கண்டு எடுத்து வச்சுருக்கேன் திரும்ப என்னால துளைக்க முடியாது சாமி” என்றவர் பெரிய கும்புடாகப் போட்டு விட்டு அமர்ந்து கொண்டார் பேசியது மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க நங்கையும் மதியும் அவருக்குத் தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர்.

நல்லம்மாள் கூற்றில் உள்ள ஆதங்கம் யாரையும் பேசவிடவில்லை அவர் பட்ட பாட்டைக் கேக்கும் போதே மூச்சு வாங்கியது ஆனால் அவரும் அவரது கணவரும் தனித்து நின்று அத்தனை பெண்களையும் முறையாக வளர்த்து தாரை வார்த்தது அப்பப்பா தற்போது உள்ள நிலையில் யோசிக்கக் கூடப் பயம் தான்.

கருப்பன் தந்தை சுப்பு நல்லம்மாளை நெருங்கி அக்கா நீக தானே என்ன கட்டி வச்சீக என்ன நம்பி கூட உங்க பேத்தியை தர மாட்டிக்கலா”

“நான் பார்த்து பார்த்து எடுத்த முத்துச் சுப்பு!... நீ! மட்டுமில்லை என் நாத்திகளுக்குக் கட்டி வச்ச அம்புட்டு பெரும் தங்கமத்தேன் ஆனா மனசு ரணப்பட்டு கிடக்கு சாமி இனி ஆறையும் நம்ப முடியாது” என்றிடம் இனி என்ன பேச என்ற நிலையில் சுப்பு விலகி நிற்க அவரை நெருங்கினான் கருப்பன்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top