அத்தியாயம் -11

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 11
நடந்து முடிந்த கூடலில் தன்னை மறந்து முத்துத் துயில் கொள்ள அறைக்கு வெளியில் சந்தை கடை தோற்று போகும் அளவுக்கு தனது வெண்கல தொண்டையை வைத்து கத்தி கொண்டு இருந்தார் வீராயி பக்கத்தில் முனியாண்டி அங்காயி இருக்க அவரைத் தாண்டி நின்று கொண்டு இருந்தனர் பிச்சியின் பெற்றோர்கள் பொன்னுரங்கம் சோர்வில் நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவரது கால் அடியில் லட்சுமி.

நல்ல வேளை பிச்சி அவர்கள் வருவதற்குச் சற்று முன் தான் குளித்து வந்தாள் வாசலில் அவர்களைப் பார்த்ததும் படப் படத்து போய்விட்டாள் அதுவும் அவளது அன்னையின் பார்வையில் சற்று கூடுதல் நடுக்கம் தான் வெளியில் நடப்பை அறியாமல் அதன் தாக்கம் சிறுதும் இல்லாமல் நல்ல உறக்கத்தில் முத்து.

அத்தனை அயர்வு மனுசனுக்கு இருக்காதா பின்னே இரவெல்லாம் பளு தூக்கி வேலை செய்த கலைப்புப் பாவம் முத்துவின் தாய் காக்கையாய் கரைந்து கொண்டு இருந்தார் அத்தனை சத்தத்துக்கு அசந்து கொடுக்கவில்லையே நமது சிங்கம்.

“அடேய் எடுபட்ட பையலே சூரியன் கிழக்க பல்லைக் காட்டுது இன்னும் ஐயாவுக்குக் கண்ணு முழிக்க முடியலையோ எடு அந்தத் தொடப்ப கட்டைய” வீராயின் குரல் சற்று வீரியம் கொண்டு உச்சியில் ஒலிக்கக் கனவில் இருந்து முழிப்பவன் போல அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தான் முத்து.

காத்தாடி இல்லாத அறையில் உறங்கியதால் முத்து முத்தாக வேர்வை அரும்பி இருக்க அதனைத் துடைத்தவன் தன்னைக் குனிந்து பார்க்க ஒரு மெல்லிய வேட்டி மட்டும் தன்னை மூடி இருக்க அப்போது தான் நேற்று நடந்தது நினைவு வந்தது.

ஐயோ! என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கேன் வெளியில தெரிஞ்சா என்ன ஆகும் எங்க அம்மா வேற இங்கன தான் இருக்கு போல இருக்கே என்ன செய்வேன்! நான் என்ன செய்வேன்! சண்டாள சிறுக்கி ஒட்டு துணி இல்லாம அம்புட்டையும் உருவிட்டு போயிட்டா என் மானம் மரியாதை எல்லாம் போச்சே! போச்சே! என்று புலம்ப ஆரம்பித்து விட்டான்.

ஒருவளுடைய கற்பையே சுகித்த உத்தமன் புலம்பி தவித்தான் வெளியில் செல்ல பயமாகவும் சங்கடமாகவும் இருந்தது.அதை விட வெளியில் யார் இருக்கிறார்களோ என்ற தயக்கம் வேறு இந்தச் சூழ்நிலை தன்னால் சமாளிக்க முடியாது என்று எண்ணியவன் அழைத்துவிட்டான் சீயானை.

மறுமுனையில் போனை எடுத்த சீயான் சொல்லுடா என்று தூக்க கலக்கத்தில் கேட்க “டேய் சீயான் என்ன? ஏதுனு? கேட்காம எனக்கு ஒரு வேட்டி சட்டை எடுத்துட்டு வாடா நான் பிச்சி புள்ள ரூமுல இருக்கேன்”
“என்னது பாப்பா ரூமுல இருக்கியா!...... அதிர்ந்தவன் கோபம் துளிர்க்க என்னடா பண்ண என்ன பாப்பாவ”நேரம் காலம் தெரியாமல் இவன் வேற பாப்பா ஒப்பான்னு என்று முனகிய முத்துச் சுருக்கமாக நடந்ததைச் சொல்ல கொதித்து விட்டான் நமது சீயான்

“டேய் பரதேசி பாப்பா பாவம் டா”

“நீ மட்டும் அன்னக்கி............”முத்துவை முடிக்க விடாமல்

“நாதாரி எனக்கு வந்த சூழ்நிலை வேற நீ பண்ணி வச்சது வேற”

“இங்க பார் சீயான் பேச நேரமில்லை ஆஸ்பத்திரில இருந்து அம்புட்டு பெருசும் இங்கன தான் டேரா என் ஆத்தா வேற வெளியில இருந்து என்ன ஆத்து ஆத்துன்னு ஆத்துது என்னால முடியல வந்து என்ன வேணா பண்ணு உடுப்ப மட்டும் எடுத்துட்டு வாடா ராசா” என்று கெஞ்ச

“என்னது! எல்லாரும் அங்கன இருக்காங்களா ஐயோ மணி என்னடா” அனைவரும் எப்படி அங்கே என்ற அதிர்ச்சியில் சீயான் கேட்க.

“அது கெட்டுச்சு போ சூரியன் உச்சில நிக்கான்டா”
தலையில் கைகளை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சீயான். இன்று பொன்னுரங்கத்தைக் கூட்டிவர அவனைத் தான் முனியாண்டி வர சொல்லி இருந்தார். ஆனால் நேற்று வேம்புவுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஆரம்பித்து அது பைபாஸ் பிடித்து எங்கோ சென்று விட்டதால் விழிக்க நேரம் ஆகிவிட்டது பாவம்.

சீயனின் செய்கையில் குழம்பி போன வேம்பு “என்ன மாமா” என்று தோளில் கை வைக்க அவளை அண்ணாந்து பார்த்தவன் “மொத்தமா சொதப்பிட்டேண்டி உங்க அப்பாரு இன்னைக்கி வீட்டுக்கு வராரு ஐயா நேத்தே சுருக்கா வானு சொன்னாரு. அது மட்டுமில்ல இந்த முத்து பைய வேற பிச்சி ரூம்ல தூங்கிட்டான் போல அவனது தயக்கத்தை சரியாக நாடி பிடித்தவள்.

“ஐயோ! என்ன இது?” என்பது பார்த்து வைத்தாள் “மாமா பயமா இருக்கு எல்லாம் உங்களால இப்போ நான் எப்படி எல்லாரு முஞ்சியையும் பார்ப்பேன்”

“அடிப்பாவி இதுக்கு நான் மட்டுமா காரணம் நீயும் தான..... “என்றவனை மேல் கொண்டு பேச விடாமல் தடுத்தவள் “ஒழுங்கா கிளம்பி வாங்க அண்ணனும் தம்பியும் பண்ணி வச்ச வேலைக்கு நானும் பிச்சியும் மாட்டிட்டு முழிக்கோம்” என்றவள் அவனை பேச விட்டால் அதோகதி தான் எண்ணியவள் அவனை துரித படுத்தி அழைத்துச் சென்று விட்டாள்.
பிச்சியின் வீடு…..

அங்கோ நிலை இன்னும் மோசம் நேரம் ஆக ஆக வீராயின் குரலின் வீரியம் கூடி கொண்டே போனது பிச்சியின் தாய் தான் “மதனி மாப்பிள்ளை வருவாரு செத்த பொறுங்க என்னத்துக்கு வையிறீங்க”

“நீ என்ன கூறுகெட்டவளா இருக்க அவனை அண்ணே என்ன பண்ண சொன்னா இந்த நாய் என்ன பண்ணி வச்சு இருக்கு வரட்டும் வெளியில் அடேய் எரும மாடே காதுல கேட்குதா? இல்லையா? நீ வரியா? இல்ல கதவை உடச்சுப்புட்டு நான் வரவா?”

அவரது குரல் தெளிவாக முத்துவை எட்ட எங்கே தனது தாய் வந்து விடுவோரோ எனப் பயந்தவன் மீண்டும் சீயானுக்கு அழைத்தான் அதற்குள் சீயானின் குரல் வெளியில் கேட்க உயிர் வந்தது நமது முத்துவிற்கு.

வந்தவன் நேரே தனது தந்தையிடம் சென்று ஐயா! என்று எதுவோ சொல்ல வர கை நீட்டி அவனைத் தடுத்தவர் “முதல அந்தக் கொட்டி பையில இழுத்துகிட்டு வா பெறவு பேசலாம்” என்றவர் அமைதியாக அமர்ந்து கொண்டார்.

அவரது கோவத்தில் சற்று தடுமாறிய சீயான் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பார்வையால் அலசி கொண்டே பிச்சியின் அரை நோக்கி சென்றான் பொன்னுரங்கம் மற்றும் அவரது மனைவி அமைதியாக இருக்க அவர்களது முகத்தில் இருந்து எதுவும் கண்டு கொள்ள முடியவில்லை பிச்சியின் தந்தை முனியாண்டியுடன் அமர்ந்திருந்தார் வீராயின் வசை ஓய்ந்த பாடில்லை

என்னவாக இருக்கும் என்று எண்ணியவாறே பிச்சியின் அறைக் கதவை தட்ட வேகமாக வந்து திறந்த முத்துவின் நிலையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் சீயான்.

“கருமம் கருமம் என்ன கண்டராவிட இது”

“கண் மூடுடா சீயான்”

“ஏன் நாயே கவர்ச்சி கண்ணன் மாதிரி பிட்டு துணியோட இருக்க”

எல்லாம் அந்த பிச்சி சதிகாரி பண்ண வேலை அம்புட்டு துணியையும் அள்ளிட்டு ஒட்டு துணி மட்டும் விட்டுட்டு போய் இருக்காடா இதை வச்சு எங்கன மறைக்க முத்துப் பாவமாகச் சொல்ல சிரிப்பு தான் வந்தது சீயானுக்கு அதை விடு வெளில என்னடா கூட்டம் சீயான் கொடுத்தத் துணியை மாட்டிக்கொண்டே முத்து கதை கேட்க
“ஐயா கோவமா இருக்காங்க வா போனாதான் தெரியும்” என்றவர்கள் வெளியில் வர அனைவரது பார்வையும் இவர்கள் மேல் முத்துவின் நிலையைப் பார்த்து பிச்சியின் தாய் உள்ளே செல்ல அவரைத் தொடர்ந்து பொன்னுரங்கத்தின் மனைவியும் சென்று விட்டார்.

வீராயி வேப்பிலை அடிக்க முனியாண்டி தான் சாமி ஆட தயாராக இருந்தார் “என்ன மாப்பிள்ள மாமனார் வூட்டுல நல்ல கவனிப்போ மதியம் கூடத் தூக்கம் தெளியல அம்புட்டு மப்பு...”

ஐயோ! பெரியப்பா..

“பேசாத என்ன சொன்னேன் உங்க இரண்டு போரையும் ஒரே வீட்டுல ஒண்ணா இருங்கனு சொன்னேன் யாரை கேட்டுத் தனித் தனியா இருந்திங்க”

அவரது கோவத்தில் எச்சில் விழுங்கிய முத்து சீயானை பார்க்க அவனோ ‘நீ யாரு’ என்பது போல் முத்துவை பார்த்து வைத்தான் “அது சரி இவன் என்னைக்கு நமக்கு வக்காலத்து வாங்கி இருக்கான் இவரும் லேசு பட்ட ஆளா நான் தப்பு பண்ணாலும் என்ன நிக்க வச்சுக் கேள்வி கேட்டாக வேண்டியது இவன் தப்பு பண்ணாலும் என்ன நிக்க வச்சுக் கேள்வி கேட்க வேண்டியது எந்த ஊர் நியாயம்" முத்து முனக.
மேலும் அவர் "சரிடா இன்னக்கி ஆஸ்பத்திரி போகணுமுன்னு தெரியுமுள்ள பொறுப்பான பிள்ளையா இருந்தா நேரத்துக்கு வந்து இருப்பிங்கள கிழவனுக பார்த்துக்கட்டும் மெதப்பு" என்றவரை பார்த்து பதறிய சீயான்.

“ஐயா நான் அசந்துட்டேனுங்க வேம்பு புள்ள இரவைக்கு அழுதுகிட்டே இருந்துச்சு அது சமாளிச்சு தூங்கவே நேரம் நடுச் சமம்” சீயானின் சரளமான மெய் கலந்த பொய்யில் முத்து அதிர்ந்து பார்க்க வேம்பு சிரிப்பை ஒளித்துக் கொண்டு தனது தந்தை காலடியில் அமர்ந்து இருந்தாள்.

முத்து சீயானிடம் நெருங்கி “டேய் இதெல்லாம் அடுக்குமாடா நீ அந்தப் புள்ளைய சமாதானம் பண்ண அதுவும் விடிய விடிய” சன்ன குரலில் கேட்க

அவனும் அதே குரலில் “ஆமா ஐயா பாரு நான் பேசுனத்துக்குப் பேசாம இருக்காரு”

“உங்க அப்பாக்கு எங்க தெரியும் உன்ன பத்தி கூடவே சுத்துற எனக்குல தெரியும் அண்ட புளுகா”

“அட போடா”

இருவரும் கிசுகிசுக்க “என்னத்த அங்கன பேசிக்கிறீங்க பெரியவங்க கேட்டதுக்கு ஒழுங்கான பதில் இல்லையே கால் கடுக்க அங்கன ஒரு மணி நேரம் முடியாதவர திண்ணையில உட்கார வச்சுட்டு கதவ போட்டு உடைச்சும் நீங்க முழிகல நம்பப் பக்கத்து வீட்டுக் கிழவி பிச்சி வீட்டுக்கு போச்சு ஒரு வேல அங்கன இருப்பாங்க சொல்லுச்சு,

சரினு இங்கன வந்து ஒரு மணி நேரம் தட்டி கை காப்புக்காட்சி போச்சு அப்புறம் பிச்சி வந்து கதவை திறந்துச்சு இப்படிப்பட்ட புள்ளைங்கள நம்பி என்னத்த பண்ண” காலையில் இருந்து தங்களை அலைய விட்ட மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்தர் முனியாண்டி.

சீயானும்,முத்துவும் அசையவில்லையே என்ன வென்று சொல்வது சொன்னால் கொலையே விழுமே நடந்த கூத்துக்கு அதனால் இருவரும் அமைதி காத்தனர்.

வீராயி தான் “டேய் எரும பெரியப்பா கேட்கிறீங்களா சொல்லுடா" என்க நமது பிச்சிக்கு அழுகையே வந்து விட்டது எங்கே நடந்தவை பெரியவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்று அமைதி காத்தவள் இப்போது நெருக்கி கேட்கவும் பயந்து அழுது கொண்டு தனது மாமனிடம் சென்றவள்

“மாமா நான் வேணான்னு தான் சொன்னேன்…” என்று ஆரம்பிக்க

“அய்யோ முத்துப் பாப்பாவா புடிடா உளறி வைக்கப் போறா” என்று சொல்லி முடிக்கவில்லை அனைத்தையும் சொல்லி இருந்தால் பட்டும் பாடமாலும்

அவளது பேச்சை கேட்ட முனியாண்டிக்கு ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது வெகுளியாக அனைத்தையும் சொல்லி முத்துவின் மானத்தை சந்தியில் விட்டு விட்டாள்.

இதனைக் கேட்ட வீராயி கொதித்து எழுந்து முத்துவின் முடியை பிடித்து ஆட்டி “என்ன திண்ணகம்டா உனக்கு எரும மாடே” என்றவர் முதுகில் இரண்டு அடியை போட்டு மீண்டும் அழுக ஆரம்பிக்க அதுவரை அமைதியாக இருந்த அங்காயி.

“ப்ச்.. வீராயி அழுது ஊற கூட்டாதா” என்றவர் பிச்சியின் தந்தையிடம் போயி அவரது கை பற்றி அண்ணே என் புள்ளைக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் இருகரம் கூப்ப தனது பெரிய அன்னை தனக்காகக் கை ஏந்துவதா எண்ணியவன் நொடியும் தாமதியாமல் முத்து ஓடி வந்து பிச்சியின் தந்தை காலில் விழுந்து விட்டான்.

அவனது செயலில் அனைவரும் அதிர்ந்து நிற்க பிச்சியின் தந்தை பதறிப் போனார் “மாப்பிள்ளை என்ன இது” என்றவர் அவனை தூக்கி நிறுத்தி அனைத்து கொள்ள.
அதன் பின் சங்கடமான மௌனம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூடச் சற்றுத் தயக்கமாக இருந்தது இருந்தாலும் பேச வேண்டிய அவசியம் புரிய பெரிய மனிதரான முனியாண்டி அனைவரையும் பார்த்து “நடந்தது நடந்து போச்சு இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்” என்றவர்

“வீராயி கல்யாணம் ஏற்படப் பார்” என்றவர் சீயானையும் முத்துவையும் பார்வையில் வா என்று அழைத்துப் பிச்சியின் தந்தையையும் கூட்டி கொண்டு வெளியில் சென்று விட்டார்.சிறியவர்களின் போக்கு எல்லை தாண்ட இனி சில முக்கிய முடிவுகளை எடுத்தே ஆக வேண்டிய நிலை அவருக்கு.

அந்த முரட்டு கிராமத்து மனிதனுக்கும் சீயான் மற்றும் முத்துவின் நிலை புரியாதான் செய்தது.சில வருடங்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் எந்தச் செயலும் நல்லவை அல்ல என்ற நிலையில் பிள்ளைகளின் மன அழுத்தம் அவர்களை இவ்வாறு செயல் பட வைத்துள்ளது என்பதை அனுபவஸ்தனாக அவர் அறிவார் அதனாலே பிள்ளைகளை அழுத்தமாகக் கண்டிக்க முடியவில்லை

இதே நிலை தொடர கூடாது என்று நிலையில் தான் இந்தப் பேச்சு வார்த்தை............

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top