அத்தியாயம் - 10

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே.

அத்தியாயம் – 10

இரவின் குளுமை இன்னும் நீண்டால் என்ன என்று மலர்கள் சோம்பல் கொண்டு மெல்ல மெல்ல மலர்ந்து நிற்க, அது விழிக்கும் அழகை ஒளிந்து மறைந்து பார்த்துக் கொண்டு இருந்தார், கதிரவன்.

பார்வை தீண்டல் மெல்ல மெல்ல முன்னேறி, தனது கதிர் என்னும் கை கொண்டு வருடி விட, சிலிர்த்து அடங்கியது, பெண் பூ!

இவ்வகையான போதை கொள்ளும் காலை வேளையில், ஊஞ்சலாட்டம் ஆடிக் கொண்டே, மணக்க மணக்க மனைவியின் கையிலான காப்பியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டு இருந்தார், அம்பலத்தான்.

ஒவ்வொரு முறை தனது காலை உந்தித் தள்ளி ஆடும் போது, மனிதர் முகத்தில் எத்துணை குதூகலம்! அம்பலத்தான் ரசனைக்காரன் தானோ?
நேற்றைய இன்பங்கள் இருவருக்கும் உண்டு.

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரவர் வேலைகளை, வெகு இயல்பாகச் செய்து கொண்டு இருந்தனர்.

சிவகாமி காலை உணவை பரபரப்பாகத் தயார் செய்ய, அவருக்கு அமர்ந்தவாரே, சிறு சிறு உதவிகள் செய்து கொண்டு இருந்தார், நாச்சி.

அங்கு வேலை ஆட்கள் இருந்தாலும், பொதுவான நலன் விசாரிப்புடன் அவரவர் வேலையை பார்க்கச் செல்ல, ‘இதுங்கெல்லாம் என்ன மனுஷனுங்கடா சாமி?’ என்று எண்ண வைத்தது.

இவர்கள் நடத்தைக்குக் காரணம் நாச்சியென்றால் அது மிகையல்ல. அப்படி ஓர் பெண் மணி அவர்.

ஒரு வார்த்தை, இன்று இந்த நிமிடம் வரை சிவகாமியிடம் நடந்தவை நிகழ்ந்தவை என்று பேசவில்லை. அனைத்தும் நடக்கும் அப்பெண்ணுக்கு என்னவோ என்று பேசி, வியக்க வைத்து விட்டார்.

அக்காலத்திலும் புனிதங்கள் உண்டே! சொல்லப் போனால் அக்காலத்தில் மட்டுமே புனிதங்கள் உண்டு என்று எண்ண வைக்கிறது, இன்றைய வாழ்க்கை முறை.

முடிந்த அளவிற்கு மருமகளுக்கு உதவியவர், காலை உணவை தட்டில் எடுத்துக் கொண்டு உண்ண கூடத்திற்குச் சென்றார். அங்குள்ள தூணில் சாய்ந்து உணவை உண்டு கொண்டே, கண் மூடி ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கும் தனது மகனைப் பார்த்தவாறே சிரித்துக் கொண்டார்.

“ஏன்னா, மணி எட்டு ஆயிடுத்து. கிளம்புங்கோ! நேக்கும் நேரம் ஆச்சு. பொன்மொழி காத்திண்டு நிற்பா, போகனும்.”

கணவனுடன் பேசிக் கொண்டே, மதிய உணவை அடைத்துக் கொண்டு இருந்தாள்.

“மாமி, மதியம் வெஞ்சனத்தோடு எல்லாம் செஞ்சுட்டேன். நேரத்துக்குச் சாப்பிடுங்கோ! நான் நாலு மணிக்கு வந்துடறேன்.”

“சரி பாப்பா. பார்த்துச் சூதானமாப் போங்க.”

“சரி மாமி.” என்றவள் பள்ளி கூடத்திற்குச் செல்லும் போது உடுத்தும் பருத்திப் புடவையை எடுத்து வேகமாக இஸ்திரி போட்டு, அவரசமாக உடுத்திக் கொண்டு கிளம்பி வந்தாள்.

அதற்குள் அம்பலத்தான் கிளம்பி வர, இருவரும் பேசக் கூட நேரமற்று, சேர்ந்தே உண்டு கிளம்பினர்.

அவசரமாகக் காலனி அணிந்து கொண்டு, கணவனையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
“சிவகாமி, ஏண்டி இந்த ஓட்டம் ஓடுறவ? இரு வண்டி எடுத்துட்டு வரேன்.”

“சீக்கரம் வாங்கோ”

“நேரம் ஆகுதுன்னு யோசிக்கிறவ, நேரத்துல கிளம்ப வேண்டாமா சொகுசா கட்டிக்கிட்டு தூங்கறவ..!”

“நான் பள்ளிக் கூடத்துக்கு மட்டம் போடலான்னு நல்லா தூங்குனேன். மாமி எழுந்து பள்ளிக் கூடத்துக்குப் போனு, ஒரே விரட்டு!”

வண்டியில் ஏறி அமர்ந்தவர், பின்னில் அமர்ந்திருக்கும் சிவகாமியை திரும்பிப் பார்த்து அட்டகாசமாகச் சிரித்தார்.

“ஹா ஹா ஹா! நீ இன்னும் பாப்பானு, உங்க ஐத்தைக்கு நினைப்புடி மாமி. ஆனாலும் ரொம்ப அநியாயம் பண்ணுறாக போ!”

“சிரிக்காதேள்! நேக்குத் தூக்கம் தூக்கமா வர்றது மீசை.”

“பள்ளிக் கூடத்துக்குப் போய் நல்லா தூங்கிடு. ஏன்னா இரவைக்கு நெறைய சோலி இருக்கு. அலுப்பா இருக்குனு சாக்கு வைக்கக் கூடாது.”

அம்பலத்தான் பேச்சில் வெட்கம் உச்சம் தொட, “சீ.. போங்கோண்ணா!”

“ஏன்டி..?” என்று ஏக்கமாகக் கேட்டார் அம்பலம்.
வண்டியை ஒட்டி கொண்டே, கண்ணாடி வழியால் மனைவியை வார்த்தையிலும் கண்களாலும் தீண்டிக் கொண்டே வந்தார், அம்பலத்தான்
இருவரும் பள்ளிக் கூடம் வரும் வரை கனவில் மிதந்து கொண்டு வந்து சேர்ந்தனர்.

பள்ளிக் கூடத்து வாசலில் பொன்மொழி நிற்க, அவளுடன் இணைந்து கொண்டு, தலை அசைத்து விடை கொடுத்தார் சிவகாமி.

அவரும் தலை அசைத்து, பின்பு பொன்மொழியிடம் திரும்பி, “வரேண்டாம்மா!”

“சரிண்ணே..” என்ற பொன் மொழியிடமும் மனைவியிடமும் விடை கொடுத்தான்.

அவர் தலை மறையும் வரை அமைதியாக வந்த பொன்மொழி, ஒருமுறை அம்பலத்தானை திரும்பிப் பார்த்து விட்டு, அவர் சென்றதை உறுதி செய்தவள், மாமியை வசமாகப் பிடித்துக் கொண்டாள்.

“அடியேய் சிலுப்பி! எம்புட்டு வசனம் பேசுன, அண்ணே கூடப் பேசு. அங்கன போய் வாழுன்னு எங்க அம்மா எம்புட்டு சொல்லுச்சு? உங்க அப்பாரு அம்மா எம்புட்டு சொன்னாக? யாரு பேச்சையாவது கேட்டியா நீ? என்னா குதி குதிச்ச! இப்ப சோடியா வந்து இறங்குற! ஹான்! திருட்டு மாமிடி நீ!”

“ப்ச் நோக்குச் சொன்னா புரியாது. நான் வந்த நாள் முதல் பேசி இருந்தேன்னு வை, உங்க அண்ணன் என்னைக் கூட்டிண்டு போய் இருப்பார். ஆனா, உறவுக்கு இது செய்தியா மட்டுமே போகும்.”

“போனா என்ன, எல்லாரையும் கூட்டி வச்சு எதுக்குப் பஞ்சாயம் பண்ணனும். காதும் காதும் வச்ச மாதிரி காரியம் முடிஞ்சு இருக்கும்.”

“அவர்கிட்ட நான் எதிர் பார்த்த அங்கீகாரம், அது தான் நோக்கு விவரமா எல்லாம் சொல்லுறேன். நாளை விடுமுறை தானே, வீட்டுக்கு வா!”

“ஹ்ம்ம் வரேன். சரி வா வேலையைப் பார்ப்போம்.” என்று பொன்மொழியும் தோழியுடன் இணைந்து கொண்டாள்.
என்ன தான் நட்பென்றாலும், ‘அவர்கள் வீட்டில் அன்று என்ன நடந்தது? திருமணத்திற்குப் பின் சிவகாமியின் வாழ்க்கை எப்படி என்று இன்றளவும் யாருக்கும் தெரியாது.’

சிவகாமி தன்னைப் பெற்றவர் இடத்தில் கூடப் பகிர்ந்து கொள்ளவில்லை.

அம்பலத்தானுக்கு சிவகாமி இருக்கும் போதே உமையாளுடன் திருமணம் உறுதி நிகழ்வு. அதனால் வம்பு என்றே ஊரிலும் உறவிலும் பேச்சு. ஆனால் அது மட்டுமே இல்லை.

இதில் நுணுக்கமான உணர்வுகளும், சிவகாமி மற்றும் நாச்சியின் பிணைப்பும் உள்ளது என்று, யாரும் அறியார்.

மாமியாரும் சரி, மருமகளும் சரி, அதனை யாரிடமும் வெளிப் படுத்தவில்லை. அத்தனை சாமர்த்தியமாக, குடும்பச் சக்கரத்தை சுழட்டினர். அது சரி, இருவரும் ஜாடிக்கேத்த மூடி போலும்!

அதன் பின், அவரவர் வேலையில் கண்ணும் கருத்தாக இருக்க, இறக்கை கட்டிக் கொண்டு இவர்களைப் பதம் பார்க்க வந்து சேர்ந்தது, மாலைப் பொழுது.

சிவகாமி வழமை போல் தோழியுடன் வீடு வந்தவள், நேராக மாமியாரிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

“வா பாப்பா!”
பள்ளி பருவத்தில் சென்று வரும் போதும், அவர் இப்படித் தான் அழைப்பார். இப்பொழுதும் அப்படியே அழைக்க, சிரிப்பு வந்தது.

“மாமி, நான் இப்போ ஆசிரியர். நீங்க என்னைப் பாப்பாவை போலவே பார்க்கிறேள்!”

“ஹா ஹா, எனக்கு நீ பாப்பா தான் சாமி.” என்றவர் “போய் முகம் கழுவி விளக்கேத்திட்டு, சூடா என்னத்தையாது குடி! ஓடு, ராசா வந்துட்டார்.”

அம்பலத்தான் வருகையில் ஆச்சரியம் கொண்ட சிவகாமி, தலை அசைத்து மாமியார் சொன்னதை ஏற்றவர், சிறு பிள்ளையாகத் துள்ளி ஓடினார்.
அவர் ஓடி வருவதைப் பார்த்த அம்பலத்தான், “என்னடி மாமி பள்ளிக் கூடம் நாளைக்கி விடுமுறைன்னு துள்ளி கிட்டு வாரியா?”

அவரது கேலி புரிந்து,
“வம்பு செய்றேள்!”

“ஆமாம், வம்பு தான். என்ன பண்ணிவியாம் பாப்பப்பா” அவர் பாப்பா என்று கிண்டல் செய்ய,
“யோவ் மீசை, என்ன…?”

“ராவடி பொம்பளையாடி நீ?”

“ஆமாம். உங்களை விட ஒன்னும் இல்லை. என்ன சேட்டை பண்ணேள். அடாவடி அம்பலம்.”
“வேணாம்டி! பெயர் சொன்னதுக்குத் தான் வாங்கிக் கட்டிக்கிட்ட. திரும்பச் சொன்னா, அதே போலச் செய்வேன்.”

“அப்படிதான் சொல்லுவேன், அம்பலத்தான்! என்ன செய்வேள்?” என்றவள், வெகு சூதானமாக மூன்றடி தொலைவில் நின்றாள்.

“தைரியம் இருக்குறவ, பக்கத்தில் வந்து சொல்லுடி! எட்டு ஊருக்கு நிண்டு கிட்டு, என்ன பேச்சு?”

“எங்க நின்னால், என்ன அம்பலம்?”

“அடிங்க..” என்றவர் வேட்டியை மடித்துக் கொண்டு பிடிக்க வர,
மாமி ஓட..
பார்க்க கண் கொள்ளாக் காட்சி தான்.

வெகு நேரம் இருவரும் தங்களை மறந்து விளையாட,
இவர்கள் விளையாட்டைப் பார்த்து ஒருவன் வாய் பிளந்து நின்றான் என்றால், மூன்று பெண் மணிகளும் சிரித்துக் கொண்டனர் மனதுக்குள்.

“டேய் மாப்புள்ள! கடையை அம்போன்னு விட்டு புட்டு ஓடும் போதே, ஏதோ சங்கத்தினு தெரியும். ஆனா, இது விவகாரமான சங்கதின்னு இப்பத் தானே தெரியுது!” என்றவாறே உள்ளே நுழைந்தார், சிவநேசன்.

அவருக்குப் பின்னால் நாச்சி, உமையாள் மற்றும் அவரது தாய்.
இவர்களைக் கண்டதும், வேட்டியை சரி செய்த அம்பலத்தான்,

“வாங்க ஐத்த. வா உமை.”
என்றவர் சிவகாமியை பார்க்க,
அவர் அப்பொழுதே அடுக்களைக்குள் சென்று விட்டார்,
அம்பலத்தானுக்குச் சங்கடமாகிப் போனது.

“வரேன் தம்பி. எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன், ஐத்த”

“நல்லா இருக்கியா உமை?”

“நல்லா இருக்கேன் மாமா.”

அதன் பின் அனைவரும் மௌனம் கொள்ள, அவர்களுக்குக் குடிக்க காபி கலந்து வந்தவள், நால்வருக்கும் கொடுத்தாள்.

உமையாளுக்கும் அவரது தாய்க்கும் கொடுக்கும் போதே, அவர்களை அழைத்து விட்டுத் தான் கொடுத்தாள். “வாங்கோ! காப்பி எடுத்துக்கோங்க” என்று.
“நல்லா இருக்கியா சிவா.” உமையாள் கேட்க

“நல்லா இருக்கேன் அக்கா. நீங்க..”

“நல்லா இருக்கேன்.”

“குழந்தைகள் அண்ணன்மார்…”

“எல்லாரும் நலம்.” உமையாள் சொல்ல

“பேசிட்டு இருங்கோ, வந்துடுறேன்.” என்றவள் தங்களது அறைக்குச் சென்று விட்டாள்.

ஏதோ ஒரு ஒவ்வாமை, அவர்களிடம் இயல்பாகப் பேச முடியவில்லை. அவர்கள் புறமும் தவறு இல்லை என்றாலும், பொதுவான பேச்சு கூட வராமல் முரண்டியது. அது என்னவோ மனம் தள்ளி நிறுத்தி விட்டது, அவர்களை.

நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்று கணித ஆசிரியருக்குத் தெரிந்தாலும், தான் என்று வரும் போது இவ்வகைக் கூற்றுகளை வென்றது மனித மனம்.

அதன் பின் பொதுவாக அம்பலம், நாச்சி, உமையாள், அவரது அம்மா, சிவநேசன் என்று எல்லாரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

“சிவா பாப்பா வந்துச்சுனு உமையாள் சொன்னா, அதான் ஓர் எட்டு பார்த்துப்புட்டு போலாமுன்னு.” என்றவர் பின்பு தயங்கி, “நானும் தப்பு தானே! அதேன் மன்னுச்சுக்கிட கேட்கலாம்னு..”

“என்ன ஐத்த! என்ன சொப்பு!” மகனும் நாச்சியும் கடிந்து கொண்டனர்.

“நீ எனக்கு நாத்தி. என்ன பேச்சு இது? எனக்கு என்கிட்ட சொல்லாம செஞ்சது கோபமாத்தேன் இருந்தாலும், மன்னிப்பு எதுக்கு? விடு சொப்பு!”

“இல்ல மதனி, அந்தப் புள்ள எம்புட்டு வருஷம் தனியா கஷ்ட பட்டு இருக்கு. அதுக்குத் தம்பி மேல நினைப்பு இருக்கும்னு தெரிஞ்சு இருந்தா, நான் அப்படி பண்ணி இருக்க மாட்டேன்.”

“என்ன கூறு இல்லாமப் பேசுற, எந்தப் பொஞ்சாதிக்கு புருஷன் மேல நினைப்பு இருக்காது?” என்று நாத்தியை கடிந்தவர், கோபத்தை அடக்கி கொண்டு, அவரை விட்டுக் கொடுக்காமலும் பேசினார்.

“விடு சொப்பு! உம்ம மேல எந்தத் தவறுமில்லை. நீ செஞ்சது சரிதேன்! எங்க வூட்டு ராசா செஞ்சுதும் சரிதேன்! என் பாப்பா செஞ்சுதும் சரிதேன்! நான் செஞ்சதும் சரிதேன்! அவூக அவூக பக்கம் நிண்டு பார்த்தா, எல்லாம் சரிதேன்! வுடு!”
அதன் பின் அனைவரும் மௌனம் கொள்ள,
அம்பலத்தானை தனியாக இழுத்துச் சென்றார், சிவநேசன்.

“என்னடா செய்தி? தள்ளிக் கிட்டு வார?”

“என்ன செய்தியா? டேய் கடங்காரா! என்ன தேவைக்கு நேத்து அந்த ஓட்டம் ஓடுனவன்?”

“ஹா ஹா நீ பார்த்திட்டியா?”

“பார்த்தேனா, உம்ம பின்னாடி நானும் ஓடி வந்தேன்.”

“நீ ஏன்டா மாப்புள்ள ஓடுன?” என்று சிரித்துக் கொண்டே அம்பலத்தான் கேட்க,
அவரை முறைத்துக் கொண்டே பதில் சொன்னார் சிவநேசன்.

நேத்து நடந்த நிகழ்வைச் சொல்ல, சிரிப்பை அடக்க முடியவில்லை. அம்பலத்தான் சத்தம் போட்டு சிரித்து வைத்தார்,

“இன்னும் எட்டூருக்குக் கேட்கட்டும் என் பொழப்பு! நீ சிரி மாப்புள்ள!”

“சத்தியமா முடியல மாப்புள்ள. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையா இருக்கு போ! நீ ரொம்பப் பாவம். தங்கச்சி என்ன சொல்லுச்சு.”

“என்ன சொல்லும்? முகத்தை முண்ணூறு முழத்துக்குத் தூக்கிட்டு சுத்துது, பேசவே இல்லை!”

“அது சரி! கதவைச் சாத்திட்டு காலுல விழுந்துரு, மாப்புள்ள!”

“செஞ்சுட்டேன் மாப்புள்ள! ஊருல பெரிய கட்டுன்னு கேடா மீசை வச்சுட்டு சுத்துனவனே, அதேன் செய்யுறான். நான் சாதாரண மனுசன். எனக்கு என்ன? அதேன் விழுந்துட்டேன்!” என்று சிரியாமல் அம்பலத்தானை வாரினார்.

“கொழுப்பு!”
சள சள என்று நண்பர்கள் உலகத்தில், அவர்கள் பேசிக் கொண்டே செல்ல,
இரவு ஏழு மணி போல் இரவு உணவை முடித்துக் கொண்டே சென்றனர், உமையாளும் அவரது தாயும்.

கிளம்பும் சமயம், உமையாள் தனியாக சிவகாமியை சந்தித்து, அவரது கைகளைப் பற்றி,
"சிவா, எனக்கும் அந்த அளவுக்கு விவரம் தெரியாது. நான் அந்த நேரத்துல பேசவும் முடியாது...... நான் கிளம்புறேன்.

பார்த்துக்கோ!” என்றவள் இரு வரிகளில் தனது நிலையைச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
ஏனோ மன்னிப்பு கேட்கும் அளவிற்கு, தான் ஒன்றும் செய்யவில்லை என்பது அவளின் நியாயம்.

அம்பலத்தான் கடைக்குச் சென்று அவரைப் பார்த்துச் சொல்லி கொண்டு கிளம்பினர். அதன் பின் வழமையான செயல்கள் நடந்தேற, யோசனையாகவே படுக்கச் சென்றார், அம்பலத்தான்.
இன்றைய சிவகாமியின் நிலை என்ன என்று கணிக்க முடியவில்லை. ஏன் என்றால், நேற்றைய தினம் போலவே வெகு உற்சாகமாகச் சுற்றினாள், அரிவை.

அறைக்குள் நுழைந்தவர் எப்பொழுதும் போல் படுத்துக் கொள்ள, இன்று சிவகாமி அம்பலத்தான் மேல் விழுந்து, அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாள்.

எதிர் பாராத அவரது செயலில் மூச்சு முட்டிய அம்பலத்தான், அவரை இறுக்கி அணைத்தவாறே,
“என்னடி மாமி இது? உன் மீசை சொக்கிட்டேன் போ....!”
கண்ணில் மயக்கம் கொண்டு அவர் பார்க்க, பெண் பதில் சொல்லவில்லை. அதை விட மயக்கம் கொண்டு பார்த்து வைத்தது.

அதன் பின் நடந்தவை அனைத்தும் அபாயகர நிகழ்வுகள் தான்.
கண் மூடி கவிஞன் கவி படைக்க, கண் மூடி அக்கவிதையைப் படித்தாள், இந்த பரம ரசிகை!
“ஏட்டி சிலுக்கு, உன்ன புரிஞ்சுக்கிடவே முடியலடி!”

“பழகுனாத்தானே மீசை புரியும்!”

“அதானே! இனி தினமும் பழகிக்கிடுறேன்.” என்றவர், பார்த்து பழகியது அனைத்தும் எல்லைக்கு அப்பாற்பட்டவை
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top