அத்தியாயம் – 5

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 5

வாடை காற்று வீசும் நடு நாசி பொழுதில் மதில் சுவரை தடவி கொண்டு இருந்தனர் மாமனும் மருமகனும்.யார் இந்த மாமன் மருமான்? அதாங்க வம்பு நாட்டான் நம்பர் ஒன்று திருவாளர் சோமதேவன் இரண்டு திரு சடையதேவன்.

“மாமா இது நம்ப முனிசாமி வூடுதானே”

“ஆமா மருமகனே”

“அவன் எப்போ மாமா வூட்டு சுவர ஏத்தி கட்டுனா நான் பார்த்தவரைக்கும் ஏறி குத்திக்கிற மாதிரித்தேன் இருந்துச்சு நான் நோட்டம் போட்டுதேன் உங்கிட்ட சொன்னேன்”

“அதானே” என்று சோமதேவனும் யோசிக்க

“அடேய்...ப்பா.... மாமே மறுமவன் ரவுசு தாங்க முடியலடா சாமி” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் கருப்பன்.அந்த அளவிற்கு இருவரும் ஒரு மணி நேரமாக அந்தச் சுவற்றைத் தடவி கொண்டும் தள்ளி கொண்டும் இருந்தனர்.

கண் மண் தெரியாமல் இன்று குடித்து விட்டுக் கருப்பனை அழைத்துக் கொண்டு வந்து விட்டனர்.

“அண்ணே! வாண்ணே! விடியட்டும் நேருல வந்தே நங்கை கூடப் பேசிக்கிடலாம் நம்ம வூட்டு புள்ளய பார்க்க நாமளே மதில் ஏறினா நல்லவா இருக்கும் அதுவும் ராவுல”

“ஒய்!.. கருப்பு நான் என் பொஞ்சாதி கிட்ட நியாயம் கேட்டே ஆகணும் நீ கம்னு கெட இல்ல வூட்டுல போய் லாலி தூங்கு என்ன” என்றார் சோமதேவன்

“லாலி தூங்கவா!......... நீ நியாயம் கேட்டு விளங்கும் போ எம்புட்டு வருஷம் செண்டு நியாயம் கேக்குற..... யோவ் கூறுகெட்ட மாமா வந்து தொலையா எம்ம ஜவன் போயிடும் போலையே” என்று அவரை இழுக்க ஒரே தள்ளாகத் தள்ளி விட்டார் மனிதர் அவர் தள்ளிய வேகத்தில் கல்லில் மோதி விழுந்தவன்

ஆ!.... என்று அலறி எழுந்து நின்று இருவரையும் முறைத்துப் பார்த்தான் அவர்களோ அந்த அரையடி உள்ள சுவரை ஏறி குதிக்க முடியாமல் போதையில் தள்ளாடி அதனைத் தடவி கொண்டும் தள்ளி கொண்டும் நின்றனர்.

“எல்லாம் என் நேரம் நான் போறேன்”

“போ!.. போ!... படு நக்கலாகச் சோமதேவன்”

“யோவ் மாமா உன்ன!” பல்லை கடித்தவன் இனி தன் ஒருவனால் இவர்களை சமாளிக்க முடியாது என்று எண்ணி வண்டியை எடுத்துக் கொண்டு நடனதேவர் வீட்டை நோக்கி சென்றான்.

மூன்று பெண்களும் வீட்டை விட்டு வந்து சுமார் ஒரு வார காலம் ஆகிறது பெரிய வீட்டு பெண் தனித்துத் தனது வீட்டில் தஞ்சம் கொண்டதை முறையாக நடனதேவரிடம் வந்து சொல்லிவிட்டார் முனிசாமி.

அவரும் முனிசாமியிடம் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சொன்னார்.விடயம் காட்டுத் தீயாக ஊர் முழுக்கப் பரவி சல சலக்க நல்லம்மாள் காதிற்கும் செய்தி நலமாக வந்து சேர்ந்தது.

அவ்வுளவு தான் நேராகத் தனது தம்பியும் மருமகனுமாகிய நடனதேவர் வீட்டுக்கு வந்து ஒரே சண்டை ம்மா!... என்று வந்த ஆவுடையம்மாளுக்கும் செல்லம்மாளுக்கும் ஒரே வசவு

“ஆருடி அம்மா நான் நாத்தியா வந்து இருக்கேன் உன் மகளுக்கு மாமியாவா வந்து இருக்கேன் என் பையனை நிக்க வச்சுக் கேள்வி கேட்டலாமே? வர சொல்லுடி... என்ன கேக்க சொல்லு நான் சொல்லுதேன் பதில்” நின்று நிற்க கூட்டமே நடுங்கித்தான் போனது

நல்லம்மாள் மூன்று தலைமுறை பார்த்த வைரம் பாய்ந்த கட்டை அவரிடம் மரியாதைக் கலந்த பயம் அனைவருக்கும் உண்டு.அவரது தோற்றமே மிரட்டும் ஓங்கு தாங்காக நல்ல அகலமாக இருப்பார் (சோமு சடையானும் அவர் வாகை ஒத்தே)

கோபமாகப் பேசி தீர்த்தவரை அமைதி படுத்தி “அக்கா பேசிக்கிடலாம் விட்டு பிடிப்போம் அதுக்கு எதோ சங்கடம் பேசி புடுச்சு பெரிய முடிவு எடுத்து புடுச்சு என் கண் காணிப்புலதேன் இருக்கு.அது கொதிப்பு அடங்கட்டும் பேசி புடலாம் நீ வா” என்று அழைக்க வருடங்கள் கடந்து அந்த வீட்டுக்கு அடியெடுத்து வைத்தார் நல்லம்மாள்.

மகளைத் தம்பி வாழ வைக்க வழி செய்யவில்லை, தன்னிடமும் முறையாக வந்து பேசவில்லை, பேத்திகளுக்கு எந்த நல்லது கேட்டதும் பண்ண வில்லை என்ற கோபம் அவருக்கு நிரம்ப உண்டு.

அதனால் தான் இத்தனை வருடங்கள் ஒதுங்கியே இருந்தார் ஆனால் அவர் அறிவழகி விடயத்தைக் கேள்வி பட்ட நொடி கொதித்துப் போனார்.

என்ன சங்கடம் என்றாலும் பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு சென்றதை அவரால் ஏற்க முடியவில்லை அதனால் தான் வந்து விட்டார்.

வண்டியை வேகமாக ஓட்டிவந்த கருப்பன் மூச்சிரைக்க நடனதேவர் வாசலில் வந்து நின்றான் நெடு நாள் பேசி கொள்ளாத அக்காவும் தம்பியும் நேரம் போவதை அறியாமல் பேசி கொண்டு இருந்தனர்.

வண்டியை நிறுத்திய கருப்பன் அவர்களிடம் மூச்சு வாங்கி நிற்க அவனது கோலம் கண்டு பயந்தனர் இருவரும் மேலும் அவர்களை கலவரம் ஆக்குவது போல்

தாத்தா!.... அப்பத்தா!....... தாத்தா!.......... என்று மூச்சு வாங்க கத்தியவனை

“என்னலே என்ன ஆச்சு ஏன் இப்படி ஓடியார”

“இரு அப்பத்தா என்றவன் முதல அண்ணணுக்களக் கூப்பிடு”

ஏன்? என்ற கேள்வி இருந்தாலும் நடனதேவர் விரைந்து சென்று தனது மகன்களையும் மாப்பிள்ளைகளையும் சேர்த்தே அழைத்து வந்தார் அனைவரும் பதறியெடுத்து கைக்குக் கிட்டிய துணியைப் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்தனர் கருப்பனை பார்த்த ராசியப்பன்

“என்னலே ராவுல வந்து நிக்க”

“அண்ணே மாமனும் அண்ணனும் ஐத்த வூட்டு மதிலை ஏறிக் குதிக்கிறேன் நியாயம் கேக்கிறேன்னு ஒரே ரவுசு”

“அய்யயோ !......”

“போதையாடே”

“ஆமாங்க ண்ணே”

“கூடவே தானே திரியிற ஏம்முல குடிக்க விட்ட”

“அப்பத்தா தினமும் இல்ல எப்பையாவதுதேன் குடி... குடிப்போம்... அப்பத்தா!... இரண்டு பெரும் கடைக்குப் போனதே தெரியாது இல்லனா வுடுவேனா சொல்லு பேச நேரமில்லை ண்ணே இவுக போடற கூச்சலுல ஊரே முழுச்சுக்கும் போல” என்றதும் ஆண்கள் அனைவரும் ஓட்டமும் நடையுமாகச் செல்ல

அதற்குள் வீடே முழித்து வெளியில் வந்து நின்றது ஒருவர் தொட்டு ஒருவருக்கு விடயம் சொல்ல பட மீண்டும் சிவ ராத்திரியாகி போனது

*

அங்கே இன்னும் சுவரை முட்டி கொண்டு நின்ற சோமுவையும் சடையையும் நோக்கி ஓடியவர்கள் இருவரையும் வயிற்றுடன் கையைப் பற்றி இழுக்க ஹ்ம்ம்... முடியவில்லை

“மாமா!... மாமா!.. எந்தக் களவாணி பையலோ வவுத்த இழுக்கான் வுடாதே மாமா” என்று சடை சலம்ப

“ஏது? நான் களவாணி பையலா?” பல்லை கடித்தார் ராசியப்பன்

“டேய் என்னால பண்ணிக்கிட்டு இருக்க நம்ம வூட்டு புள்ளைங்க இருக்கிற வூட்டுல ஏறி குத்துச்சா அதுவும் ராவுல ஊர் என்ன பேசும் கொட்டி பையலே”

“ஆரு அது ராசியப்பன் அண்ணே குரல் மாதிரி இருக்கு” சடையப்பன் குழறல் குரலில் கொஞ்ச

“இருக்கும்லா உனக்கு வாடே” என்று தனது தம்பியுடன் மல்லுக்கட்ட சோமனுடன் போராடி கொண்டு இருந்தனர் சொக்கனும் மூக்கையனும்.

“யோவ்!.... சகல நீ என்ன இளந்தாரி பையுலுக மாதிரி துள்ளி கிட்டு கிடக்க இரண்டு பொண்ணுங்க கண்ணாலத்துக்கு நிக்குது வாய்யா வூட்டுக்கு போயி பேசி தீர்த்துக்கிடலாம்”

“இரண்டு பொண்ணுக இருந்தா என்ன சகல என் பொஞ்சாதிக்கு பையன் வேணுமா அதுவும் என்ன போல அதுக்கு நான் போனதேன் முடியும் நீ என்ன லூசாட்டம் பேசிகிட்டு உடுவே”

“ஆத்தி பையன் வேணுமா” என்று சொக்கன் அதிர்ந்து நிற்க அந்த தருணம் பார்த்து அவரது கையில் இருந்து மீண்டும் நழுவி போனார் சோமன்.

“யோவ் சகல என்னய்யா அக்கப்போரா இருக்கு புடியா”

“இவரையா நானே என்பது கிலோ இருப்பேன் இவர் அதுக்கும் மேல இருப்பாரு போல முடியலையா அடேய் பார்த்துகிட்டு இருக்கியே வாடா நல்லவனே” என்று கருப்பனை அழைக்கக் கிட்ட வந்தவனை ஒரே எத்து நமது சோமதேவன்.

இவர்களது செயலில் கோபம் கொண்ட ராசியப்பன் மீண்டும் சடையப்பனை இழுத்து பிடித்து சடை “வாரியா? இல்லையா?”

“அண்ணே என் பொஞ்சாதி கிட்ட நியாயம் கேட்க போறேன் வுடு” என்றவன் திமிறி வெளி வர ராசியப்பன் நிலை தடுமாறி முத்துவையும் இழுத்துக் கொண்டு கருங்கல்லில் விழ இருவருக்குமே காயம் பட்டு விட்டது.

நல்ல அடி போலும் எழ முடியவில்லை கருப்பன் தான் ஐயோ! அண்ணே! என்று இருவரையும் தூக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான்

“நல்ல கேட்டாய்ங்க நியாயம் மாமா அவிங்கள புடிங்க”

ஐயோ!.. நானா என்று பதறிய சொக்கனும் மூக்கையனும் தங்கள் முழுப் பலத்தையும் செலுத்தி பிடிக்கப் போக இருவரையும் ஒரே போல் குனியவைத்து சுவர் ஏறி குதித்து சென்று விட்டனர் மாமனும் மச்சானும்.

அவர்கள் அமுக்கிய வேகத்தில் நச்சென்று கல்லில் குத்தி இருவரது மூட்டும் பேர்ந்து ரெத்தம் வந்தது வலி பொறுக்க முடியாத மூக்கையன் “அட சண்டாள பையலே உம்ம வூட்டுல பொண்ணு எடுத்தது எம்புட்டு குத்தமாகி போச்சு”

“அதை வுடு சகல நம்ம பொண்ணு தப்புச்சுகிடுச்சு அதை எண்ணி சந்தோச படு”

“அதைச் சொல்லு”

“யோவ் சகல மூட்டு செத்துப் போச்சுய்யா கைய குடு” என்றவர் சொக்கன் கை பிடித்து எழுந்து நின்று மூச்சு வாங்க

காலில் அடியோடு ராசியப்பன் முத்துவும் நின்றனர் சற்று முன் நொடி பொழுதில் நடந்த தாக்குதலை எண்ணி கருப்பனுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது இப்பொழுது சிரித்து வைத்தால் தன் கதை முடிந்தது என்று எண்ணிய கருப்பன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு

“அண்ணே அடி பலமா” என்க

“நக்காலே சிவனேனு தானே உறங்கிக்கிட்டு இருந்தோம் கூட்டி வந்து கால்லையும் மூட்டையும் பேர்த்து புட்டு கேக்கான் பாரு கேள்வி” என்றவர் மேலும் அவனைப் பிலு பிலுவெனப் பிடித்து விட்டார்.

*

அதற்குள் முற்றத்தின் வழியே வீட்டினுள் கள்ளனாக நுழைந்த இருவரும் பெண்களைத் தேட அதிசயமாகக் கூடத்தில் அறிவழகி உறங்க உள் அறையில் இரு பெண்களும் உறங்கி கொண்டு இருந்தனர்.

பொதுவாக மூவரும் ஒன்றாகத் தான் உறங்குவார்கள் புது இடம் என்பதால் இன்று அறிவழகி கூடத்தில் படுத்துக் கொண்டார் போலும்.

இருளில் இருந்த கூடத்தில் புடவையைச் சற்றுத் தளர்த்திக் காற்றுப் புக ஏதுவாகப் படுத்திருந்தவரை நெருங்கி படுத்துக் கொண்ட சோமதேவன் அவரை இறுக்க அணைக்கத் தூக்கத்திலும் விழுப்புடன் இருக்கும் பெண்மை சரியாக விழித்துக் கொண்டது.

அதிர்ந்து ஆ!............. என்ற சொல் மட்டுமே அறிவழகியிடம் இருந்து வந்தது சோமதேவன் என்ன செய்தாரோ சத்தம் சுத்தமாக நின்று போனது முழுத் தேங்காயை உருட்டிய நாயின் நிலையில் கண் மண் தெரியாமல் அறிவழகியுடன் உருண்டார் சோமதேவன் ஐயோ பாவம்....

........

அங்கே இருளில் வாசனையை வைத்து தனது வசந்தத்தைத் தேடி கொண்டு இருந்தான் சடையப்பன் “என்ன சந்தனம் வசம் வருது அப்போ இது மலரு எங்கன போச்சு என் ரோசாப்பூ” என்றவன் எருமையாய் உருண்டு நங்கையை நெருங்கி அவளை வேகமாக உலுக்க அடித்துப் பிடித்து எழுந்து கொண்டாள் நங்கை

தன்னை எழுப்பிய முரட்டுக் கரங்களை எண்ணி அதிர்ந்து முழித்தவள் சடையனை பார்த்து மீண்டும் அதிர்ந்து அமர அவளை அலேக்காக வெளியில் தூக்கி சென்றான் சடை.

"மாமா என்ன வேலை பாக்குற நீ வுடு "அவளது பேச்சை கண்டு கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இளையவன்

இங்கோ அறிவழகியின் கன்னத்தைத் தன் கன்னம் கொண்டு தேய்த்துக் கொண்டே “எஞ்சாமி ஆம்புள புள்ள வேணுமா என் தங்கத்துக்கு அதுவும் என்ன மாதிரி காத்துக் கெடக்கேன்டி என் மஞ்ச மயிலு” என்று கொஞ்சியவர் பிடியில் இருந்து வர போராடி கொண்டு இருந்தவர் சற்று உறக்கவே மலரு நங்கை என்று அழைக்க

“ஏண்டி கத்துற”

“வுடு!... வுடு மாமா!... என்றவள் மீண்டும் கத்த மலர் தனது தாயின் கத்தலில் அடித்துப் பிடித்து எழுந்தவள் இருளில் நிற்கும் இரு ஆண்கள் உருவத்தைப் பார்த்து கத்த பெண்களின் கூச்சலில் போதை தெளிந்தது மாமனுக்கும் மருமவனுக்கும்.

உள்ளே பெண்களின் குரலை கேட்டு திடுக்கிட்ட ஆண்கள் “ஐயோ!... மச்சான் குடிய கேடுதானுக போ ஓடுயா இங்கன நின்னோம் ஒட்டு மொத்த மானமும் போயிடும்”

“ஐயோ!... ஓட கூட முடியல மாமா காலு நோவுது” என்று முத்து விந்தி விந்தி ஓடி வர இவர்கள் நால்வரையும் முந்தி கொண்டு வண்டியில் கிளம்பிவிட்டான் கருப்பன்

இவர்களை தாண்டி அவன் செல்ல “அட எடுபட்ட பையலே கூட்டி வந்து கால உடைச்சு புட்டு எம்புட்டு வேகமா ஓடுறான் பாருய்யா சகல”

“அவுக கூட்டாளி பைய தானே இவன் நம்மள கூப்புடும் போதே யோசுச்சு இருக்கனும்” என்று புலம்பியவரே நால்வரும் வேகமாக ஓடினர் ஊரில் பெரிய தலைக்கட்டுக் கொண்ட குடும்பம் நடு இரவில் ஆகாத வேலை செய்தால் அதுவும் பெண் பிள்ளைகள் விடயத்தில் எத்தனை பினுக்கு யாராவது பார்த்தால் மானம் போகும் என்று பயந்து விரைந்தனர்.

தன் வீட்டுப் பிள்ளைகள் என்றாலும் தனித்து வாழும் பெண் பிள்ளைகளின் வீட்டின் மதில் சுவர் தாண்டுவது அது கணவனாக என்றாலும் உறுத்தியது நாளை ஒருவர் கை நீட்டி பேசினால் உயிர் போய்விடும் என்ற வழக்கத்தைக் கொண்ட மக்கள் அல்லவா.

இங்குக் கத்தலை நிறுத்திய மலர் ஓடி சென்று விடி விளக்கை போட அங்கே கண்ட காட்சியில் வாய் பிளந்து நின்றாள்

ஐயோ!... என்று கத்த போனவளை

கத்தி மானத்தை வாங்கிப் புடாதடி குள்ளச்சி சடையன் அவளை அமட்ட

“என்ன மாமா பண்ணுற நீ”

“என் பொஞ்சாதிய பார்க்க வந்தேன்” என்றவனை முறைத்தவள் தனது தந்தையைப் பார்க்க வேகமாகப் பட்டாபட்டியின் மேல் உள்ள வேட்டியை கீழே இறக்கி விட்டவர் தலை குனிந்து நின்றார்”

“மாமா எதுவா இருந்தாலும் வூட்டுக்கு போ விடியட்டும் பேசிக்கிடலாம்” என்றவள் பார்வை தந்தையை துளைக்க மகள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்பது போல் அமைதியாக வந்த வழியில் தனது மருமகனை இழுத்து சென்றார்.

ஏக்கமாக நங்கையைப் பார்த்துக் கொண்டே சென்றான் சடையப்பன் வந்தது போல் பக்கவாட்டில் உள்ள சுவற்றில் இருவரும் ஏறி குதிக்க இளைய பெண்கள் இருவருக்கும் அப்படி ஓர் சிரிப்பு அதற்கு நேர் மாறாக அழுது கொண்டே உள் அறைக்குள் சென்று விட்டார் அறிவழகி.

நியாயம் என்ன ஆச்சு மாமன்! மருமவனே!
 
Last edited:

Nirmala senthilkumar

“அவுக கூட்டாளி பைய தானே இவன் நம்மள கூப்புடும் போதே யோசுச்சு இருக்கனும்” என்று புலம்புவரே நால்வரும் வேகமாக ஓடினர் ஊரில் பெரிய தலைக்கட்டுக் கொண்ட குடும்பம் நடு இரவில் ஆகாத வேலை செய்தால் அதுவும் பெண் பிள்ளைகள் விடயத்தில் எத்தனை பினுக்கு யாராவது பார்த்தால் மானம் போகும் என்று பயந்து விரைந்தனர்.

தன் வீட்டுப் பிள்ளைகள் என்றாலும் தனித்து வாழும் பெண் பிள்ளைகளின் வீட்டின் மதில் சுவர் தாண்டுவது அது கணவனாக என்றாலும் உறுத்தியது நாளை ஒருவர் கை நீட்டி பேசினால் உயிர் போய்விடும் என்ற வழக்கத்தைக் கொண்ட மக்கள் அல்லவா.

இங்குக் கத்தலை நிறுத்திய மலர் ஓடி சென்று விடி விளக்கை போட அங்கே கண்ட காட்சியில் வாய் பிளந்து நின்றாள்

ஐயோ!... என்று கத்த போனவளை

கத்தி மானத்தை வாங்கிப் புடாதடி குள்ளச்சி சடையன் அவளை அமட்ட

“என்ன மாமா பண்ணுற நீ”

“என் பொஞ்சாதிய பார்க்க வந்தேன்” என்றவனை முறைத்தவள் தனது தந்தையைப் பார்க்க வேகமாகப் பட்டாபட்டியின் மேல் உள்ள வேட்டியை கீழே இறக்கி விட்டவர் தலை குனிந்து நின்றார்”

“மாமா எதுவா இருந்தாலும் வூட்டுக்கு போ விடியட்டும் பேசிக்கிடலாம்” என்றவள் பார்வை தந்தையை துளைக்க மகள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்பது போல் அமைதியாக வந்த வழியில் தனது மருமகனை இழுத்து சென்றார்.

ஏக்கமாக நங்கையைப் பார்த்துக் கொண்டே சென்றான் சடையப்பன் வந்தது போல் பக்கவாட்டில் உள்ள சுவற்றில் இருவரும் ஏறி குதிக்க இளைய பெண்கள் இருவருக்கும் அப்படி ஓர் சிரிப்பு அதற்கு நேர் மாறாக அழுது கொண்டே உள் அறைக்குள் சென்று விட்டார் அறிவழகி.

நியாயம் என்ன ஆச்சு மாமன்! மருமவனே!
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top