அத்தியாயம் – 19

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டனாடி தில்லையிலே

அத்தியாயம் – 19

இரவு வேலை தனது பணியைச் சிறப்பாகச் செய்து முடித்து, பகலவனுக்கு வழி விட, வெகு உற்சாகமாகத் தனது பணியைத் தொடங்கினான் ஆதவன்.அவரவர் கடமையை அவரவர் செய்ய, நாச்சி வீட்டுப் பெண்கள் தங்களது வழமையை மறந்த பயத்துடன் அமர்ந்து இருந்தனர்.

நேற்று சென்ற ஆண்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்றால் பதறத் தானே செய்யும். வேலைக்காரர் முத்துவின் மூலம் அவர்கள் தோட்டத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தாலும், ஒரு நாளும் அங்கே தங்கியது இல்லை.

அதுவே என்னவோ ஏதோவென்று அடித்துக் கொண்டது. நேரம் செல்லச் செல்ல பயத்தின் அளவும் கூட, வாசுகி ஓ.. வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளது அழுகையில் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர், நாச்சி உட்பட.

சக்தி ஓடி வந்தவள்,“மதனி எதுக்கு அழுறீக. அண்ணே வந்துருவாக! செத்த நேரம் பொறுப்போம். இல்லையா, நம்ப நேருல போகலாம் அழுவாதீக.” என்றவளைப் பார்த்து,

“எல்லாம் என்னாலதேன்! அவுகள நோவப் பேசிட்டேன். என்னால தாங்க முடியல.”

“ப்ச்.. அழாதேள் அக்கா. சக்தி சொல்லறப் போல நேருல போயிடலாம்.”

“இல்லை சிவகாமி. எனக்கு ரொம்பப் பயந்து வருது. ஒரு நாள் ஒரு பொழுது கூட, வெளில தங்குனது இல்லை.”

வாசுகி சொல்வதும் சரி தான். வேலை தொழில் தவிர வெளியில் சென்றதுவேறு. இன்று உள்ளுரில் இருந்து கொண்டே வராமல் இருப்பது மனதை நெருடியது.

நாச்சி எதுவும் பேசவில்லை. யோசனையாக அமர்ந்திருந்தார்.

அவரது மௌனம் கூடப் பெண்களைக் கலவரப் படுத்தியது. பொதுவாக இது போல் பயம் கொள்ளும் விடயங்கள் நடந்தால் ஆறுதல் அளிக்கும் நாச்சி, இன்று ஏனோ அமைதியாக இருந்தார்.

நேற்றைய தினம் பெண்கள் சற்று பரபரப்பாக இருந்ததினால் ஆண்களை யோசிக்கவில்லை. இரவு உணவின் போதுத் தான் அவர்களது இருப்பைப் பற்றிய எண்ணம் வந்தது. அந்த அளவிற்கு வாசுகி படுத்தி வைத்தாள்.

சிவகாமியை வாசுகியுடன் பேசச் சொல்லிவிட்டு, நாத்திகள் அனைவரும் ஒன்று கூடி தனது சொந்தங்களிடம் விசாரித்து, அதுவும் நெருக்கம் கொண்டவர்களிடம் மட்டுமே. இது வேறு பேச்சாகப் பேசப்பட்டால், அதனை வேறு சமாளிக்க வேண்டும் அல்லவா…!

அதனால் மிக முக்கியமானவர்களிடம் பேசி ஆலோசனை பெற்று மருத்துவரைப் பிடித்து விட்டனர்.இதனை நாச்சியிடம் சொல்லி அவரது கருத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

அங்கோ வாசுகியை கடித்துக் குதறிக் கொண்டு இருந்தாள், சிவகாமி.

"என்ன நெனைச்சுண்டு இருக்கேள்? ஏதோ பொருளை தூக்கிக் கொடுக்கற மாதிரி சின்ன அத்தானை தூக்கிக் கொடுக்கிறேன் சொல்லுறேள்! எப்படி மனசோட சொல்லத் தோணுது"

“அவுகளாவது நல்லா இருக்கட்டும். என்னைக் கட்டிக்கிட்டு ஏச்சும் பேச்சும் எதுக்கு?”

“என்ன பேசுறேள்? உலகம் முன்னேறிப் போயிட்டு இருக்கச்ச, இதெல்லாம் ஒரே விஷயமே இல்லை!”

“ப்ச்.. நிதர்சனம் பழகனும் சிவா.”

“நல்லாப் பழகுங்கோ! யார் வேண்டாம்னு சொன்னது. என் கதை தெரியும் தானே? அவர் என்னை மனைவியாய் பார்க்காதது எத்தனை வலி தெரியுமா? போராடி அந்தக் கல்யாணத்தை நிறுத்தினேன். ஏன்? அவரை விட்டுக் கொடுக்க முடியாது!”

“சரிதான். ஆனா குறை என்கிட்ட இருக்கும் போது…”

“நிறுத்துங்கோ அக்கா! குறைன்னு சொல்லாதேள். நம்பப் பேசிண்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவு இருக்காது.. உங்களண்டை உள்ள நியாயம் உங்களுக்குப் பெருசு! தர்க்கம் ஓடிண்டே இருக்கும். நான் கேட்குறதுக்கு மட்டும் உண்மையாப் பதில் சொல்லுங்கோ!”

“சொல்லு சிவா..!”

“அத்தானுக்கு உங்க தங்கச்சிய கட்டி கொடுக்றேள்னு வச்சுக்கோங்க. அதுக்கு அப்புறம் நீங்க என்ன செய்யப் போறேள்? உங்க பிறந்தகம் போவேளா…!”

“இல்ல இல்ல.” பதறிக் கொண்டு வந்தது பதில்.

“பின்னே..”

“நானும் இந்த வீட்டுல...” வாசுகி முடிப்பதற்குள் இடையிட்டால் சிவகாமி.

“ஓ! நீங்களும் இங்கேயே இருப்பேள். உங்க தங்கச்சி உங்க ஆத்துகார் கூட அவா அறையில இருப்பா! அவாளுக்கு எல்லாம் சேவையும் செய்வா! நீங்க அவா இரண்டு பேருக்கும் செய்வேள் அட அட ரொம்ப அருமை போங்கோ”

‘இதற்கு என்ன பதில் சொல்வது? அதை எல்லாம் பார்க்க வேண்டுமா? ஆம், பிள்ளைக்கு என்று கல்யாணம் செய்தாலும், கணவனைத் தாரைவார்த்து விட்டால் உரிமை அவளுக்குத் தானே!’ ஐயோ! இதை எப்படி யோசிக்காமல் போனோம்? மனம் பதறினாலும் அழகாக அதனை மறைத்துக் கொண்டு, தர்க்கம் பண்ணினாள் வாசுகி.

“அந்தக் காலத்துல இதெல்லாம் இருந்தது தானே, சிவா.”

“அக்கா இப்போ காலம் மாறிண்டு வர்றது. அவா அந்தக் காலத்துல விட்டுக் கொடுத்துக் குடும்பச் சூழ்நிலை எண்ணி சகுச்சுண்டு இருந்தா! வேற வழியும் அவாளுக்கு இல்லை. ஆனா,! நமக்கு அப்படி இல்லை தானே... உங்களுக்கு அந்தச் சகிப்புத் தன்மை இருக்கா, சொல்லுங்கோ?”

”.....”

“அக்கா, அத்தான் நல்லா இருக்கனும் தான். அதுக்காக அவாளை தாரைவார்க்க வேணாம். உங்க அன்பை வேற விதமா காமிங்கோ.எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினோமோ? இந்தக் குடும்பத்துல வாழ்க்கைப் பட்டு இருக்கோம். அதைக் கெட்டியா புடிச்சுக்கோங்க.”

“எனக்கு மட்டும் ஆசையா சிவா…”

“ப்ச்… அக்கா! என்ன பேசினாலும் நீங்க காது கொடுத்து கேக்கிற நிலையில் இல்லை. ஆனா, எங்களுக்காக ஒரே ஒரு முறை வாங்கோ. மீனா அக்கா அவாளுக்குத் தெரிஞ்ச மருத்துவர் கிட்ட பேசி இருக்கா. அவர் பரிசோதிக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.” என்றதும்,

சிறுது நேரம் மௌனம் கொண்டவள், மெதுவாகத் தலை அசைத்துச் சம்மதம் சொன்னாள்.

வாசுகி சம்மதம் கிடைத்ததும், பெண்கள் குழு படு வேகமாகச் செயல் பட்டு ஒரு முடிவை எடுத்து விட்டுப் பெருமூச்சு விட, இதோ இப்போது ஆண்களின் நிலை...!

பொழுது உச்சியைத் தொட, இனி மேலும் தாமதிக்க முடியாதென்று சிவகாமி முத்துவை அழைத்து, சிவநேசனை அழைத்து வரச் சொன்னாள்.

“என்னமா சொல்லுற? தோட்டத்துல வீட்டுல தங்குற பழக்கம் இல்லையே!”

“தெரியலை அண்ணா.”

கையைப் பிசைந்து கொண்டு நின்ற பெண்களை ஒரு முறை பார்த்த சிவநேசன், முத்துவைப் பார்க்க, அவன் திருத் திருவென முழித்து நின்றான்.

பெண்கள் முன் எதுவும் கேட்க முடியாமல் அவர்களைத் தேற்றும் பொருட்டு,

“முக்கியமான தோப்பு வேலையாக் கூட இருக்கலாம். நீங்க பயந்துக்கிடாதீங்க! நான் என்னனு செய்தி சொல்லிவிடுறேன்.! டேய் முத்து என்கூட வா!” என்று அழைத்துச் சென்றார்.

வாசல் வரும்வரை அமைதியாக வந்த சிவநேசன், வாசல் தாண்டியுடன்,“என்னடா முத்து, திருத் திருனு முழிச்ச? என்ன செய்தி?”

சிவநேசன் திடீரெனக் குரலை சற்று உயர்த்திக் கேட்க, பயந்து தான் போனான் முத்து.

“சிவாண்ணே..” மென்று முழுங்கினான்

“என்னா மெண்டு முழுங்குற..?”

“இல்லண்ணே தோட்டத்துல... அவுக.....”

“ப்ச்.. வெரசா சொல்லுடா!”

“அம்மா வூட்டு மாப்பிள்ளைங்க அம்புட்டு பெரும் கள்ளு குடிச்சுப் புட்டு, ஒரே சத்தம். அவுக ஆடி அடங்க பொழுது விடிஞ்சுடுச்சு. எல்லாம் ஆளுக்கு ஒரு திசையுல கிடக்காக! ஆச்சி கிட்ட என்னனு சொல்ல? அதேன் தெரியாத மாதிரி இருந்துக் கிட்டேன்.”

“அய்யய்….யோ! தோட்ட வேலைக்கு வர ஆளுங்க பார்த்தா என்ன ஆகும்?” என்று பதறினான் சிவநேசன்.

“இல்லண்ணே! சபாபதி கணக்கு கிட்ட சொல்லி நாளைக்கு வரச் சொல்லிட்டேன்.”

“நல்ல வேலை பார்த்தடா! சரி, அம்பலத்தான் கிட்ட சொல்ல வேண்டியது தானே!” என்றதும்,

தலையைக் குனிந்து கொண்டான் முத்து

“என்னடா…?”

“அண்ணே மாப்பிள்ளைங்கள விட, நேத்து அதிக ஆட்டம் போட்டது அண்ணேந்தான். என்னால சமாளிக்க முடியல. விட்டாப் பொதுமுண்டு ஓடியாந்துட்டேன்!” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான், முத்து.

கேட்ட சிவநேசன் தான் அதிர்ந்து போனார்.

“அடப்பாவி அம்பலம். வர வர உன் சேட்டை தாங்க முடியலடா! இவனை.......” என்றவர் வெட்டியை மடித்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி விரைந்து செல்ல, அவர் பின்னே ஓடினான், முத்து.

தோட்டத்துக் கதைவை முத்து திறந்து விட, சிவநேசன் விரைந்து சென்று பார்க்க,

சிறு குடிசை வீட்டுத் திண்ணையில் மாப்பிள்ளைகள் புடைசூழ பட்டாபட்டியுடன் உல்லாசத் தூக்கத்தில் இருந்தார், அம்பலத்தான்.

அவரது நிலையைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சிவநேசன்,“டேய் முத்து! மாப்பிள்ளைங்கள எழுப்பு..” என்றவர் அம்பலத்தானை உலுக்கினார்.

“அடேய் அம்பலத்தான்!”

“ஹ்ம்ம்......”

“டேய் அம்பலம்..?

“ஹ்ம்ம்....”

சிவநேசன் உலுக்கிப் பார்த்தும் அடித்துப் பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகாமல் போக, குடிசைக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தவர், பாரபட்சம் பார்க்காமல் அம்பலத்தான் தலையில் கவிழ்க்க, அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தார், அம்பலம்.

நல்ல தூக்கத்தில் இருந்தவர் முகத்தில் குளிர் நீர் பட மூச்சு வாங்கியது. தனது கை கொண்டு முகத்தில் இருக்கும் தண்ணீரைத், துடைத்தவர் எதிரில் முறைத்துக் கொண்டு நிற்கும் சிவநேசனைப் பார்த்து,

“என்ன மாப்புள்ள..?”

“என்ன வேலைடா இது? மணி என்னனு தெரியுமா? அங்கன தங்கச்சிங்க சிவா எல்லாம் பதறிக்கிட்டு இருக்குங்க.”

“ஏன்?”

“ஏன்னா? அடேய் இரவைக்கு வூட்டுக்குப் போகாம ஆட்டமா ஆடி இருக்கீங்க! இது தெரியாம அங்கன புள்ளைங்க பயந்து என்கிட்ட ஓடி வருதுங்க.”

“ப்ச்.. என்னைக்கோ ஒரு நாள் தானே..”

“அது சரி... எங்கடா அந்த நல்லவன்”

“யாரு சுப்புவா?”

“அவனே தான்! அவன் தானே பிள்ளையார் சுழி போட்டது. அந்தப் புள்ள பாவம் அழுதுகிட்டு இருக்கு.”

“அங்கன தான் இருக்கான்.” என்று அம்பலத்தான் கை காட்டிய திசையில் பார்க்க, செல்வத்தின் மேல் மல்லாந்து கிடந்தான் சுப்பு.

“ஆடியாத்தி! ஆச்சி பெத்த இரண்டும் இரண்டால்ல இருக்கு!” என்றவர் ஓடிப் போய் சுப்புவை எழுப்ப, அம்பலத்தானும் மற்றவர்களை எழுப்பினார்.

சிலருக்குத் தெளிந்தும் தெளியாமலும் தள்ளாடி நின்று கொண்டு இருந்தனர்.

தோளுக்கு மேல் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஆண்களை எப்படிச் சமாளிக்க. முத்து பயந்து போனான்.

அவனது முகத்தைப் பார்த்த சிவநேசன்,“அடேய்! நீ என்னடா வேடிக்கை பார்க்க?”

“அண்ணே என்ன தூக்கச் சொல்லிப்புடாதீங்க. என்னால முடியாது.”

அவன் பதறவும், அம்பலத்தான் உரக்கச் சிரித்தார்.

அவரது சிரிப்பில் எரிச்சலான சிவநேசன், “அடேய் சிரிப்பு கேக்குதோ! வூட்டுக்குப் போடி, உனக்கு இருக்கு! பண்ணுறது அம்புட்டும் அடாவடிதனம் வாய் பேசினாலும், காரியமாகச் சுப்புவை எழுப்பி அமர வைத்தார்.

அம்பலத்தான் விநாயகத்தை எழுப்பி அமர வைத்துக் கொண்டே பதில் சொன்னார்.“என்ன பண்ணுவாலாம் உன் தங்கச்சி!”

“வீராப்புத்தேன் நீ தங்கச்சிக்கு பயபுடலன்னு நம்புறேன். ஆனாப் பாரு மாப்புள்ள, கெடா மீசை வச்சுக்கிட்டு வீராப்பு காட்டுற அம்புட்டு பயலும், கதவச் சாத்திப்புட்டு காலுல உளுந்து புடுறானுகலாம். எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்புன்னு கேக்குறேன்?”

“நீ எங்கன பார்த்தியாம்..?” கெத்தாகவே அம்பலம் கேட்க.

“இதுவரைக்கும் பார்க்கலை தான், சாமி. ஆனா இன்னைக்குப் பார்க்காமப் போறதில்லை.” நக்கலாகப் பதிலடி தந்தார், சிவநேசன்.

இதில் விநாயகம் வேறு, “சிவநேசா மீனா என்னைக் கேட்டுச்சா?”

“ஆமா மாப்புள்ள! வூடே அம்புட்டு பேரையும் வலை வீசித்தேடுது. இன்னும் கொஞ்ச நேரம் இங்கன இருந்தீக,அம்புட்டு பொண்ணுங்களும் ஆச்சி புடைசூழ வந்துடுவாக.”

“ஐயோ!” என்று சொக்கன் தனது வேட்டியைத் தேட,

விநாயகம் தனது சட்டையைத் தேட,

ஆடை தேடுதல் முடித்து, ஆண்கள் அனைவரும் முடிந்த மட்டும் தங்களைத் திருத்திக் கொள்ள முயல, அதனைப் பார்த்த சிவநேசனுக்குச் சிரிப்பாக வந்தது.

அந்த அளவிற்குச் சேட்டை செய்தனர்.

இதில் அம்பலத்தான் அடித்த கூத்தைச் சொல்லி, மச்சானுங்கள் கேலி செய்ய, அவரும் அதற்கு ஈடுகொடுக்க, ஒருவழியாகத் தோட்டத்திற்கு விடை கொடுத்தனர், மாப்பிள்ளைகளும் மச்சான்களும்.

இதில் அதிகச் சேதம் கொண்டது, முத்துவும் சிவநேசனும் தான்.

கலைந்த தலையும் கசங்கிய மண் படிந்த ஆடையுடனும் இருந்தவர்களை நடத்திச் செல்ல முடியாமல், அவர்களைக் கிளப்பிக் காரில் கூட்டி வந்து வீட்டில் விடுவதற்குள், நொந்து போனார்கள் இருவரும்.

கார் சத்தம் கேட்டவுடன், அனைத்துப் பெண்களும் கூடத்தில் கூடி விட்டனர். ஆச்சி, அங்கே தான் அமர்ந்திருந்தார்.

ஆண்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அமைதியாக வர, அவர்களது நிலையைப் பார்த்த பெண்கள் அதிர்ந்து நின்றனர்.

“ஐயோ மாமா! என்ன ஆச்சு?” உலகம்மை பதறிக் கொண்டு போக, மற்ற பெண்களுக்கும் பதற்றம் தான்.

சிவகாமி முதலில் அதிர்ந்தாலும், அம்பலத்தான் தோற்றம் உறுத்தியது.

மண்ணில் உருண்டு பிரண்டு விளையாடி வரும் குழந்தை போல், அனைத்து ஆண்கள் சட்டையும் புழுதி படிந்து இருந்தது.

சொக்கன் “ஒண்ணுமில்ல.. தோட்டத்துல கொஞ்சம் வேலை. பாத்திகட்டி காய் செடி கொஞ்சம் வச்சுப் புட்டு வந்தோம், அதேன்!”

சொக்கன் சமாளிப்பை உண்மை என்று நம்பி பெண்கள் குழு தலையாட்ட, நாச்சியும் சிவகாமியும் ஆண்களைக் கூர்ந்து பார்த்தனர்.

மீனம்மாள் “இதை முன்னமே சொல்லி இருந்தா, சாப்பாடு அனுப்பி இருப்போம்.” என்றவள் முத்துவிடம் திரும்பி,

“உன்கிட்ட எம்புட்டுத் தரம் கேட்டோம்? ஏன் நீ சொல்லல?”

“அது.. அதுவந்துங்க...”

முத்து உளறி விடுவான் என்று அறிந்த அம்பலத்தான் வேகமாக,

“அது ஒண்ணுமில்லமா, நாந்தேன் எதுவும் வேணான்னு சொல்லிப்புட்டேன். ரவைக்கு வேலை முடுஞ்சுடும் யோசுச்சேன். அது இழுத்துக்கிச்சு.”

அம்பலத்தான் பேசப் பேச அவருக்குச் சில அடி தூரம் நெருங்கி வந்த சிவகாமி, அவரது கண்களை உற்றுப் பார்த்தாள்

அவளது செயலில் தடுமாறினாலும், வெளியில் விறைப்பாக நின்றார், அம்பலம்.

சில அடி தூரம் நின்றாலும், கள்ளின் நெடி அம்பலத்தானின் களவை காட்டிக் கொடுக்க, அவரை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளது பார்வையை உணர்ந்த அம்பலம் “பாதகத்தி! கண்டுக்கிட்டாளே!” அம்பலத்தான் முணுமுணுக்க,

இவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த சிவநேசன் உரக்கச் சிரித்துவிட்டு,“அப்போ… நான் கிளம்புறேன் ஆச்சி.” என்று சொல்லிக் கொண்டு, சிரித்துக் கொண்டே செல்ல, பல்லைக் கடித்தார், அம்பலத்தான்.

மற்ற பெண்கள், என்ன இது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top