அண்டாவை காணோம்!!

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#1
இவ்வளவு சின்னதா நான் எந்த கதையும் எழுதினதே இல்லை... அரைப்பக்கத்தில் முடித்த அண்டாவை காணோம் சிறுகதை இங்கே...

இடம்: சென்னை

வீட்டில் தண்ணீர் மோட்டாரில் ஏறவில்லை. தண்ணீர் பிடித்து வைப்பதற்காய் இறக்கப்பட்டிருந்து அது இப்போது. வெகு நாளைக்கு பின் பரண் மேலிருந்து அதை கீழிறக்கி வைத்தார் வைதேகி. அவரின் திருமணத்தின் போது தாய் வீட்டு சீராய் அவர் கொண்டு வந்திருந்த அண்டா அது.

மிகப்பழமையானது வைதேகியின் பாட்டிக்கும் பாட்டி உபயோகப்படுத்தியது. வழிவழியாய் வந்தது. வைதேகிக்கும் ஏனோ அந்த அண்டாவின் மீது மிகப்பிரியம்.

அவள் பாட்டி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது அவள் ஒளிந்து கொள்ளும் இடமும் அது தான்.

ஒரு முறை வைதேகியின் மகள் வேணியின் சடங்கின் போது அது காணவில்லை என்று அவ்வளவு ஒரு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார் அவர் அப்போது. அதை அவரின் கணவர் மாடியில் இருந்த அறையில் ஒதுங்க வைத்த போது தெரியாமல் இடம் மாற்றிவிட்டார் என்பது பின்னர் அறிந்த விஷயம்.

இன்று அந்த அண்டாவை காணோம்... வேணி தான் காலையில் அதை கண்டுப்பிடித்தாள், ‘அய்யோ அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான், ரகளையாகி விடுமே...’ என்று அவள் பதறிக் கொண்டிருந்தாள்.

தன் அப்பாவிடம் விஷயத்தை மெதுவாய் சொல்லி அன்னையிடம் சொல்ல சொல்லலாம் என்றெண்ணி அவள் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்க அதை தற்செயலாய் கேட்ட வைதேகி கத்திய கத்தலில் அதிர்ந்தனர் அந்த தந்தையும் மகளும்.

“அண்டாவோட இருந்த தண்ணீயை காணோமே... எவன் கொண்டு போனானோ...” என்று ஒப்பாரி படித்தார் இன்றைய வைதேகி...
 
Advertisement

Sponsored

New Episodes