தேவியின் திருமுக தரிசனம் - 6 precap

Advertisement

ஹாய் பிரெண்ட்ஸ்,

Story almost ready guys, sunday or Monday i will posted.

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

Read and share your throught thank you..

தரிசனம் ஆறாவது அத்தியாயத்தில் இருந்து சில வரிகள்.

திருமுக தரிசனம்.

மேகமகள் சொட்டு சொட்டாக தூரலை தூவி கொண்டிருந்த காலை வேளை. இல்லம் இருந்த இருப்பை கண்டு சாரதாவிற்கு கோபம் சிரத்திற்கு ஏறியது.

"ஏண்டி நீ சென்னை கிளம்பி போறதுக்கு வீட்டையே இப்டி அலங்கோல படுத்தி வச்சுருக்க, இனி எல்லாத்தையும் நான் ஒருத்தியே எடுத்து வச்சு சுத்தம் பண்ணனும் எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும்னு தெரியாது"என சிடுசிடுக்க,

"கத்தாதீங்க ம்மா கொஞ்சம் மெதுவா பேசினா தான் என்னவாம் காலையிலயே உங்க சுப்ரபாதத்தை ஆரம்பிக்கணுமா?" என சலித்து கொண்டவள்,

"என்னோட திங்கஸ் எல்லாம் சரியா எடுத்து வைக்க வேணாமா எதையாவது மறந்து வச்சுட்டு போய்ட்டேன்னா யார் கொண்டு வர்றது" என தன் ட்ராவல் பேக்கில் அனைத்து துணிகளையும் அடக்கி, பள்ளி சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலையும் பைக்குள் அடக்கம் செய்தாள் வருணா.

"வரு கிளம்பியாச்சா சீக்கிரம் கிளம்புடா இன்னும் ஒரு மணி நேரத்துல நாமா ஸ்டேஷன்ல இருக்கணும்" என அறையில் இருந்தவாறே அவசரப்படுத்தினான் ராகவன்.

"இதோ பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன் ண்ணா"என துணிகள் அடங்கிய பையை மர நாற்காலியில் வைத்துவிட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு மின்னலாய் மறைந்து விட,

"இப்டி பண்ணி வச்சிருக்காளே இப்போ தான் சுத்தம் பண்ணேன் இவள..!" என பல்லை கடித்தவர் புலம்பியபடி வீட்டை ஒழுங்கு படுத்த துவங்க,

"விடுங்கம்மா இந்த நிமிஷம் தானே இனி அவளே நினைச்சாலும் கொஞ்ச நாளைக்கு உங்கள தொந்தரவு பண்ண முடியாது, இன்னும் கொஞ்ச நேரத்துல ட்ரெயின் ஏறிடுவா" என அறையில் இருந்து வெளிபட்டவனின் கூற்றில் சாரதாவின் முகத்தில் கவலை படர தொடங்கியது.

அமைதியாக, செய்யும் வேலையில் கவனத்தை செலுத்த, உடன் உதவி புரியலனான் ராகவன். ஒருவழியாக இருவரும் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு ஆசுவாசம் கொள்ள,

"அண்ணா நா ரெடி வாங்க போகலாம்" என்றவாறே வந்து நின்றாள் வருணா.

பீச் நிற காட்டன் சுடிதாரை உடுத்தி கொண்டு வந்து நின்றவளை கண்ட சாராதவுக்கு பெருமையாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது.

கோதுமையை அலசி வெயிலில் காய வைத்து எடுத்தார் போன்ற நிறம். இடையை தாண்டிய கூந்தலின் அடர்த்தியும், சிரித்தாள் அம்சாய் எடுத்து காட்டும் தும்பை நிற பல் வரிசையும், பார்வையில் தெளிவும் நிமிர்வும் என தன் மகள் அனைத்திலும் அழகு தான் என்பதை பெருமையாக உணர்ந்தவரின் எண்ணங்களின் ஓரமாய் அதே அழகு அவளை பாழ் படுத்தி விடுமோ என்ற பயமும் தொற்றி கொண்டது.

"இப்பவும் சொல்றேன் சென்னைக்கு போய் தான் அவ படிக்கணுமா? இங்க இருந்தே படிக்கலாமே ராகவா. இங்க இல்லாத காலேஜ்ஜா மனசுக்கு சரியா படலை, என்னமோ தப்பா நடக்க போற மாதிரியே பயமா இருக்குடா" என கவலை தேய்ந்த குரலில் பேசினார் சாரதா.

"அம்மா நீங்க கவலைபடுற மாதிரி எதுவும் நடக்காது அவ மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நா வருணாவை முழுசா நம்புறேன் என்மேல இருக்கிற நம்பிக்கைய விட அவ மேல அதிக நம்பிக்கை வைச்சிருக்கேன், காரணம் நீங்க. இந்த குடும்பம் இவ்ளோ தூரம் வந்துருக்குன்னா அது உங்களால தான் ம்மா அவள சந்தேகபடுறது உங்கள சந்தேகபடுற மாதிரி கவலைய விடுங்க சந்தோஷமா அவள வழி அனுப்பி வைங்க",திடமான குரலில் ராகவன் பேச,

"இல்லடா மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு அதான்...! அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்னோட பசங்களை நா நம்பாமா வேற யார் நம்புவா?" என்றவர்,

"இத்தனை வருஷம் கைகுள்ளயே இருந்தவ வெளிய படிக்க போறான்னதும் கஷ்டமா இருக்கு அதுவும் தனியா.எந்த வேலையும் செய்ய தெரியாது எப்டி எல்லாத்தையும் சாமாளிப்பா அவள பாக்காம எப்டி இருக்க போறேன்னு தெரியலை அதுவே!" என்றவருக்க தொண்டை அடைக்க,

"ம்மா" என அணைத்து கொண்டவள்,"எனக்கு எதுவும் ஆகாது என்னை நினைச்சு நீங்க கவலைபடாதீங்க, அதான் ராகவனோட ஃபிரெண்ட் இருக்காரே எனக்கு நீங்க தான் தைரியம் சொல்லி அனுப்பணும் நா சொல்லிட்டு இருக்கேன்.
என்ன ராகவா உன்னோட அம்மா இவ்ளோ சென்சிட்டிவ்வா இருக்காங்க இதெல்லாம் கேட்க மாட்டியா? பாரு கிளம்பி போற நேரத்துல ஸ்கூல் பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்காங்க" என்று தீவிரமான முக பாவனையில் சொல்ல,

பட்டென சிரித்து விட்டான் ராகவன்." ஏய் குட்டி பிசாசே உன்னோட அலம்பல் தாங்க முடியாம இத்தனை நாள் நொந்து நூலான அம்மா இன்னைக்கு உன்ன பிரியிறதை நினைச்சு அழுகுறாங்க அதை நினைச்சு சந்தோஷப்படு".

"அட ஆமால்ல மறந்தே போனேன்" என தலையில் தட்டி கொண்டவள், "கொஞ்ச நாளைக்கு என்னோட தொந்தரவு இல்லாம ஜாலியா இரு சாரதா, மாசத்துல ரெண்டு முறை விசிட் வறேன். சாரதா பில்டர் காஃபிய டேஸ்ட் பண்ணாம என்னால இருக்க முடியாது, காலையில எந்திரிச்சத்தும் சாரதா பில்டர் காஃபிய ரொம்ப மிஸ் பண்ணுவேன்" என்று உதட்டை பிதுக்கி அழுவது போல பாவனை செய்தாள் வருணா.

மிதமான சூட்டில் கால்கடுக்க நின்று காஃபி கொட்டையை வறுத்து அரைத்து அதன் மணம். வெளியே சென்றுவிடாமல் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து, சுவைக்க தோன்றும் போது பில்டரில் வெந்நீர் ஊற்றி பவுடர் கலந்து சில நிமிடங்கள் கரைந்து, காய்ச்சிய பால் சேர்ந்த சர்க்கரை கலவையுடன் நீர்த்த காஃபி பவுடரை கலந்து நுரை பொங்க எடுத்து வரும் சாராதவின் பில்டர் காஃபிக்கு அந்த தெருவில் ரசிகைகள் பலருண்டு.

"சாரதாம்மா நானும் தான் காஃபி போடுறேன் ஆனா உங்க அளவுக்கு டேஸ்டா வர மாட்டேங்கிது நீங்க சொன்ன பக்குவத்துல தான் நானும் பண்ணேன் மனுஷன் கிளாஸை தூக்கி வீசாத குறையா முறைச்சு பாத்துட்டு ஒன்னுமே சொல்லாம போயிட்டாரு" என அருகில் குடியிருப்போர் நடத்தும் கூட்டத்தில் குறைகளை வைப்பர் சிலர்.

அத்தனை பெயர் போன சாரதாவின் குளம்பிக்கு அடிமையாகாமல் இருக்க முடியுமா என்ன?,

"கஷ்டப்பட்டு ஏன் போகணும் இங்க இருந்தா பில்டர் காஃபி என்ன, வாய்க்கு ருசியா நினைச்சதை சாப்பிடலாம்" என சாரதா கூற,

"அண்ணா வா கிளம்பலாம் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன் என்னோட மனச மாத்துனாலும் மாத்திருவாங்க எனக்கு பில்டர் காஃபிய விட என்னோட கேரியர் தான் முக்கியம் அதனால நா போய்ட்டு வாரேன் ம்மா"என சாரதாவின் கன்னத்தில் முத்தமிட்டவள், கொண்டு செல்ல வேண்டிய உடமைகளை எடுத்து கொண்டாள்.
____

"அம்மா உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு போற மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க காலேஜுக்கு படிக்க போறேன் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கி பெரிய கம்பெனியில வேலைக்கு சேந்து என்னோட சம்பளத்துல சென்னையிலயே சொந்தமா வீடு வாங்கி நாம ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுவீங்களா அழுது வடிஞ்சிட்டு இருக்கீங்க" என்றாள் வருணா.

"நீங்க ரெண்டு பேர் மட்டும் தானா நா இல்லையா?" என வருத்தம் நிறைந்து கேட்டவனை பார்த்தவள்,

"ம்ஹும் இல்ல, நா வீடு வாங்குற வரைக்கும் நீ கல்யாணம் பண்ணாம இருப்பியா ராகவா?".

"நீ படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்கிற வரைக்கும் நா கல்யாணம் பண்ணாம இருக்காணுமா..!".

"ஆமா உனக்கு கல்யாணமானா உனக்குன்னு ஒரு குடும்பம் வந்துரும் எங்களை கண்டுப்பியா நான் தான் அம்மாவை பத்திரமா பாத்துக்கணும் அதுக்கு நல்லா படிக்கணும் மார்க் வாங்கணும் வேலைக்கு போகணும்" என மீண்டும் முதலில் இருந்து தொடங்க,

"பகுமான கோழி பறந்து பறந்து முட்டை போட்டுச்சாம்!", படக்கென சாரதா கூறிய கூற்றின் அர்த்தம் உணர்ந்து வாய்விட்டு சிரித்தான் ராகவன்.

"ம்மா செம்ம டைமிங்" என மெச்சியவனை முறைத்து பார்த்தாள் வருணா.

வேகமாக சாரதாவின் புறம் திரும்பியவள் "எவ்ளோ ஆசையா என்னோட கனவை சொல்லிட்டு இருக்கேன் இப்டி மட்டம் தட்டுற மாதிரி பேசுறீங்க" என மல்லுக்கு நிற்க,

"பின்ன என்னடி இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுகுள்ள என்ன பேச்சு பேசுற முதல நல்லா படி அப்றம் பேசலாம், வேலைக்கு போறது வீடு வாங்குறதுன்னு" என நொடித்து கொண்டார் சாரதா.
_

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வர்றிங்களா?" என்று விட்டு வேகமாக அறைக்குள் மறைந்து கொண்டாள் மைதிலி.

அவள் சென்ற வேகமே கோபத்தின் அளவை குறியிட்டு காட்ட, 'என்ன சொல்ல போகிறாளோ' என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தவனை எரிக்கும் பார்வை பார்த்தவள், "உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என எடுத்த எடுப்பிலேயே பொறிய தொடங்கினாள்.

"மைத்தி நா சொல்றதை கொஞ்சம் கேளு" என நிலமையை எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றவனின் முகத்திற்கு நேரே கை நீட்டி தடுத்தாள்.

"எதுவும் பேசாதிங்க நா அவ்ளோ தூரம் சொல்லியும் அந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க உங்க சம்பளத்துல நாம ரெண்டு பேரும் குடும்பம் நடத்துறதே கஷ்டம் இதுல இன்னொரு ஆள் வேற. இந்த மாச வாடகை கொடுக்கணும் வீட்டுக்கு யாராவது வந்தா வாடகைய கூட்டி கொடுக்க சொல்லி வீட்டுக்காரம்மா கேட்கும் என்ன பண்ண போறீங்க?, அந்த அளவுக்கு ஐயாவுக்கு சம்பாத்தியம் இருக்கா?", எள்ளல் தொனிக்க கேட்டவளிடம் என்ன சொல்வது என தெரியமால் மலைப்பாக பார்த்தான் பாலாஜி.

மைதிலியின் குணம் இது தான் என்று தெரியும் சில காலமாகவே இதை தானே கேட்டு கொண்டிருக்கிறான்.அவன் எண்ணத்தை சொல்ல வாய்ப்பாளிக்காமல் சிடுசிடுத்தவளை காண ஆத்திரம் மூண்டாலும் அதை முகத்தில் காட்டாது,

"மைத்தி நா சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு. வேற வீடு கிடைக்கிற வரைக்கும் தான் அந்த பொண்ணு இங்க இருப்பா க்ளோஸ் பிரெண்ட்ஸ் அவன் கேட்டு எப்டி ஹெல்ப் பண்ணாம இருக்குறது மனசு கேட்கலை வீட்டு ஓனர் கிட்ட நா பேசிக்கிறேன்" என முடிந்த மட்டு தணிந்த குரலில் சொல்ல,

"மனசுல கர்ண பரம்பரைன்னு நினைப்பு. முடியாது இல்லன்னு சொல்ல வாய் வாரதாக்கும்", ஏகத்துக்கும் நொடித்து கொண்டவள்,

"வீட்டு ஓனர் உங்க சொந்தகாரங்க பாரு நீங்க சொன்னதும் சரின்னு தலையாட்ட, இந்த முறை என்னால உங்களுக்கு உதவி எதுவும் பண்ண முடியாது மாசம் ஆனா எப்பவும் வர சம்பளம் கரெக்ட்டா ஏ கைக்கு வந்திடனும்.

என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது முதல வேற வீடு பாத்து அந்த பொண்ணை தங்க வைங்க அதிகமா வாய் பேசுறவங்களை பாத்தாலே எரிச்சலா வருது, என்னமா வாய் பேசுறா ஒரு பொம்பளை பிள்ளைக்கு இவ்ளோ வாய் துடுக்கு ஆகாது.

யார் என்னனு தெரியாத நம்மகிட்டயே இப்டி பேசுறவ நாளைக்கு வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்காம ஏதாவது பிரச்சனைய இழுத்துட்டு வந்தா என்ன பண்றது?. இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு இருக்கோம் இவளால அசிங்க படனுமா?" என கேட்டவளை திகைப்பு மாறாமல் பார்த்தான் பாலாஜி.

'பாவி, ரெண்டு நாள் முன்னாடி எதுவுமே நடக்காத மாதிரி பேசுறியே. இந்த தெருவே உன்ன கரிச்சு கொட்டிச்சு அது உனக்கு அவமானமா தெரியலை நடக்காத ஒன்னை நடந்துறும்னு கற்பனை பண்ணி பாக்கிறது அவமானமா இருக்கு. நடந்த சம்பவம் மறந்து போச்சா?' என அவளிடம் வெளிப்படையாக கேட்க முடியாததை தனக்குள்ளே கேட்டு கொண்டவனின் இதழ்கள் நிந்தனையான சிரிப்பை உதிர்க்க,

"நா பேசுறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா என்ன பாத்தா உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் எப்டி தெரியிது?".

"இப்போ எதுக்கு அவங்களை இழுக்குற பேச்சு உனக்கும் எனக்கும் தான் மைத்தி".

"ஓ.. அம்மாவை பத்தி பேசவும் கோபம் வருதோ ரெண்டு நாள் முன்னாடி இந்த தெருவுல இருக்குற அத்தனை பேரும் என்கிட்ட சண்டைக்கு வந்தாங்களே அவங்ககிட்ட உங்க கோபத்தை காட்ட முடியல இப்போ என்கிட்ட கட்டுறிங்க".

"தப்பு உன்மேல மைத்தி அதனால தான் அன்னைக்கு அமைதியா இருந்தேன்".

"இல்லன்னா பாஞ்சுகிட்டு மல்லுக்கு வந்துருப்பிங்க பாருங்க ம்ஹும். என்னால யார் முன்னாடியும் தலை குனிச்சு நிக்க முடியாது. ரெண்டு நாள் தான் உங்களுக்கு டைம் வேற வீடு பாத்து அந்த பொண்ணை இங்க இருந்து கூட்டிட்டு போறீங்க சொல்லிட்டேன்" என கொக்கரித்தவள் கெடு அளித்து விட்டு செல்ல,

புயல் அடித்து ஓய்ந்தது போல மைதிலி சென்றதும் அத்தனை நிசப்பதமாய் இருந்தது அறை. 'ஹப்பாட' என மூச்சை உள்ளிழுத்து ஆசுவாசம் கொண்டவன், தலையில் ஏற்றிவிட்டு சென்ற எரிச்சலை கட்டுபடுத்த வேண்டி குளியலறைக்குள் புகுந்தான், சவரின் பிடியை திருகி அதன் முன் தலையை காட்ட, தூரலாய் தூவிய நன்னீர் துளிகளில் உச்சி நனைத்து உள்ளங்கால் வரை வழிந்து செல்ல மெல்ல மெல்ல தணிந்தது எரிச்சலின் சுவடுகள்.

கீழே நடந்த களோபரம் எதுவும் வருணாவின் செவிகளை எட்டவில்லை, எட்டி இருந்தால் அந்த ஷனமே வீட்டை விட்டு வெளியேறி இருப்பாள். வாய் துடுக்கு மட்டுமல்ல அளவிற்கு மீறிய தன்மானம் கொண்டவள். அறைக்கு சென்றவள் குளியலை போட்டுவிட்டு சென்னை வந்து சேர்ந்ததை ராகவனிடம் தெரிவித்து கொண்டிருந்தாள்.​
 
Nirmala senthilkumar

Well-Known Member

கீழே நடந்த களோபரம் எதுவும் வருணாவின் செவிகளை எட்டவில்லை, எட்டி இருந்தால் அந்த ஷனமே வீட்டை விட்டு வெளியேறி இருப்பாள். வாய் துடுக்கு மட்டுமல்ல அளவிற்கு மீறிய தன்மானம் கொண்டவள். அறைக்கு சென்றவள் குளியலை போட்டுவிட்டு சென்னை வந்து சேர்ந்ததை ராகவனிடம் தெரிவித்து கொண்டிருந்தாள்
.
Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
இந்த ராகவன் என்ன இருந்தாலும்
வயசு பொண்ண நண்பன்
வீட்டில விடலாமா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top