என் இதய விழி நீயே-Episode 9

Advertisement

achuma

Well-Known Member
hi , next update potutaen,,, pls say ur sujjestions n comments
take care all:)


என் இதய விழி நீயே
அபிக்கு வாழ்க்கையில் இது வரை பெரிதாக ஏதும் எதிர்பார்ப்பு இருந்ததில்லை ,
இப்பொழுது திருமணம் , என்று ஆனா பின்பு, ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அபியிடம் இருக்கிறது அது என்ன வென்று அவளிற்கே தெரியவில்லை...


அதுவும், பிரேமாவின் ஏளன வார்த்தை அபிக்கு அதியிடம், திடீர் என்று, ஒரு உரிமை, ஒரு எதிர்பார்ப்பு , ஏதோ ஒன்று,... ஒரு முரண்டு பிடிக்கும் தன்மை , என்னவென்றே அபிக்கு விளங்கவில்லை ...

திருமண வாழ்வில், கணவன் மனைவி ஒருவரின் மீது ஒருவருக்கு எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையான ஒன்று தானே ...

கனவின் மனதில் மனைவியே முழுத இருக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று...

காலங்கள் கடந்தாலும் கணவன் மனைவி வாழ்வில் எதிர்பார்ப்புகள் எனபதற்கு எல்லை இல்லை ...

அதே போன்று தான் அபியும் எதிர்பார்க்கிறாள் ...
அதியின் மனதில் நிஷா இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறாள் அபி ...
அவனின் மனம் மாறும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் ...


சிவநேசனின் வார்த்தைக்கு மதிப்பளித்து திருமணத்தில், ஒற்றுக்கொண்டாலும், அவளின் மனதிற்கு , ஆதியுடனான வாழ்வில் அவளிற்கான முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் ...

படிப்பில் புத்திசாலியான அபி, ஆதியின் மனதை படிக்க தவறினாள் ...

அவனின் காதல் பார்வை பூரிந்து கொள்ள தெரியவில்லை அபிக்கு...

அபிக்கு, ஆதி அவளிற்காக பிரேமாவிடம், எதிர்த்து பேசியது, அதெல்லாம் எதுவும் தெரியவில்லை ...

அதனால், ஆதியுடனான வாழ்க்கை இனி எவ்வாறு கொண்டு செல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை .....

நிஷா தான் வேறு ஒருவனை திருமண செய்து கொண்டாள் , ஆனால் பெரியவர்கள் வீட்டினில் நிஷா மற்றும் ஆதிக்கு என்று பேசும் போது, ஒரு வேலை ஆதிக்கு மனதில் நிஷா மீதான விருப்பம் இருந்தால் , ஆதி- அபி இருவரின் வாழ்வும், கேள்வி குறி தானே ...

அபியின் சிந்தனை இவ்வாறே இருந்தது, எப்பொழுதும் பிரேமாவின் பேச்சிற்கு கண்டு கொள்ளாமல் செல்லும் அபி, இத்தனை வருடம் கடந்தும் , பிரேமா எதற்கு அவள் மீது வஞ்சம் வைக்க வேண்டும், என்று அவர் மீது கோபமே வந்தது அபிக்கு...

இதை பற்றியே அபி சிந்தித்து அமர்ந்து இருந்தாள் சிவநேசன் வந்து அழைக்கும் வரை ...

சிவநேசன் அர்ஜுன், ஸ்ரீ, மற்றும் குழந்தை ஆரவ் உடன் மணமக்கள் ஆதி- அபி ஆகியோர் காரில் ஏறினர் , சந்தீப் மற்றும் திவ்யா அவர்களுக்கு முன்பு வீட்டுக்கு சென்று அங்கு , இவர்கள் வரும் முன்ன வீடு திறந்து, ஆரத்தி தயார் செய்து காத்து கொண்டிருந்தனர் ...

காரில் அர்ஜுன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொள்ள , சிவநேசனும் அர்ஜூனுடன் அமர்ந்தார் ... ஸ்ரீ அபி மற்றும் ஆதி பின் இருக்கையில் அமர்ந்தனர்...

பெரிய வண்டி எனினும் அபி அதியுடன் சேர்ந்து அமராமல் , அவனிடம் இருந்து விலகி ஸ்ரீயை ஒட்டியே அமர்ந்தாள்....
அபி ஆரவை மடியில் அமர வைத்து கொண்டாள் ...
ஆரவும் தூக்கம் களைந்து எழுந்து அபியுடன் விளையாட ஆரம்பித்தான் ...
அபி ஆதியிடம் இருந்து விலகி அமர்ந்தது ,ஆதிக்கு அது மேலும் கோவத்தை கொடுத்தது ...


ஆதி ஏற்கனவே பிரேமாவின் வார்த்தையால் , பிரேமாவின் மீது கடுங் கோவத்தில் இருந்தான்.

அபியின் செயல் அவனுக்கு மேலும் கடுப்பை தந்தது ...

அபிக்கு மட்டும் கேட்கும் குரலில்,

" ஹே குள்ள வாத்து! ஒழுங்கா உட்கார்ந்து இருந்தா கூட உன்ன விட்டு இருப்பேன், ஆனா , நீ இவ்ளோ கேப் விட்டு அண்ணிய ஒட்டி உட்கார்ந்தல , இப்போ நீ என் பக்கம் வரலனா , நானே உன்ன ஏன் மடில உட்கார வெட்சிப்பேன்," என்று அவளிற்கு அருகில் கைகளை கொண்டு சென்றான்.
அபி தானாக பயந்து சிறுது அவனின் அருகில் சென்று அமர்ந்தாள்.


ஆதியும் அவளின் அருகாமையில் சிறிது கோவம் தணிந்து, அபியின் மடியில் இருக்கும் ஆரவை கொஞ்சிக்கொண்டிருந்தான் ..

ஆதியின் நெருக்கம் ஒரு வித அவஸ்த்தையையம் கோபத்தையும் அபிக்கு குடுத்தது...

வேறு வழி இன்றி யாரும் எதுவும் கவனிக்கா வண்ணம் ஆரவுடன் அபி ஒன்ற ஆரம்பித்தாள் அபி...

வீட்டிற்கு செல்வதற்கு முன்ன கோவிலுக்கு சென்று பிறகு செல்லலாம், என ஸ்ரீ கூறியதால் , நேராக , கோவிலுக்கு சென்றனர் ...
அபி காலையில் வந்த அதே கோவில் ...


அன்று வெள்ளிக்கிழமை , அனைவரும் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் சன்னதி முன் நின்று அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு கொண்டிருந்தனர்...

அபி காலையில் இதே கோவிலுக்கு ஆரவுடன் வந்ததை பற்றி நினைத்து பார்த்தள் ...

ஆதிக்கு இறை பக்தியில் அவ்வளவாக நாட்டம் இல்லை , பியுடன் சிறிது நேரம் நின்று பிறகு கோவிலில் உள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்து கொண்டான் ...

ராஜேஸ்வரி அம்மன் சன்னதி முன்ன நின்று, காலையில் இருந்து இப்பொழுது வரை நடந்த நிகழ்வினை பற்றி யோசித்து பார்த்தாள் ...

"இந்த உறவின் முக்கியத்துவம் எனக்கு தெரியும், ஆனா வாழ்க்கைய எப்படி கொண்டு சொல்றதுன்னு எனக்கு தெரில...., என்று அம்மனிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தாள் ...

இதுல ஆதி வாழ்க்கையும் அடங்கி இருக்கு ...

நீ எனக்கு துணையா இரு என்று, கண் மூடி அம்மனிடம் வேண்டினாள் ...

அபிக்கு இனி வழக்கை , அவள் கணவன் ஆதி என்று எல்லாம் புரிந்தே இருந்தது, ஆனால் திருமண உறவில், இருவர் மனமும் ஒரே பாதையில் பயணம் செய்தால் மட்டுமே அந்த வாழ்க்கை சிறப்பாகும்...

ஒரு வேலை அம்மா அப்பா இருந்து இருந்தா இந்த நிலைமை வந்து இருக்காது ... என்று எப்போது போல் அவள் பெற்றோர்களின் நினைவில், கண்களில் இருந்து தானாக கண்ணீர் , வழிய ஆரம்பித்தது...

ஆதியின் காதல் உணரும் வரை அபி இந்த சிந்தனையில் சுழற்றி அடிக்க படுவாள் ...

பிரேமா இருக்கும் வரை அபியின் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லை ...
அங்குள்ள மண்டபத்தில் ஆதி ஒர் தூணின் அருகில் சென்று அமர்ந்தான் ...
அபி அழுதது எதுவும் அவனுக்கு தெரியாது ...


காலையில் பிரேமா அபியை பற்றி தாழ்வாக பேசியது பற்றிய நிகழ்வே அவன் மனதில் இருந்தது...

சிவநேசனின் கண்டன பார்வையில், ஆதி அங்கு அடங்கினான் ...
இல்லை என்றால் என்ன செய்து இருப்பானோ, அவனுக்கே வெளிச்சம் ...


"என்ன தைரியம் இருந்தா , இவங்க என் அபியை பேசுவாங்க, யாரு குடுத்த இடம்?" என்று மனதில் கருவி கொண்டான்...

"ஆதி! நீ எதை பற்றி இவ்வளவு தீவிரமா யோசிக்கிறனு தெரியுது, உன் அம்மா பக்க சொந்தம் , சுந்தரம் முகத்துக்காக, பொறுத்துக்கணும் ..." என்றார் சிவநேசன் ...

"அப்பா! அவங்க இனி ஒரு எல்லையில் இருக்கிறா மாதிரி பார்த்துக்கங்க, நான் இப்போவே சொல்லிட்டேன்," என்று கூறினான் ஆதி...

அதன் பிறகு அனைவரும் வீட்டுக்கு சென்றனர் ...

அங்கு சென்றால், அபிக்கு ஒரே குழப்பம் , ஸ்ரீயிடம் , "இது யாரு வீடு?" என்று கேட்டாள் ...

ஏனெனில் வீடு முழுதாக கட்டப்பட்டு, பெயிண்ட் எல்லாம் அடித்து, புது வீடாக இருந்தது ...

"எல்லாம் கேள்வியும் என்ன தவிர , என் வீட்டு ஆளுங்க கிட்ட தான் இவளுக்கு கேட்க தோணுது , ஹ்ம்ம்! என்று பெருமூச்சினை விட்டுக்கொண்டான் ஆதி...

அதற்குள் சிவநேசன், அபி இது தான் உன் புருஷன் புதுசா வாங்குன வீடு , இனி இது உன் வீடு மா ...

திவ்யாவும் தங்கை இல்லா குறை தீரும் அளவிற்கு, ஆதி அபியுடன் வம்பிழுத்து, ஆரத்தி எடுத்து , அவர்கள் இருவரையும் வீட்டினுள் விட்டாள் ...
அங்கு சென்று பூஜை அறையில் விளக்கேற்ற அழைத்து சென்றனர்...
பூஜை அறையில் பூரணியின் படம், மற்றும் காமாட்சி அம்மன் விளக்கு தவிர ஏதும் இல்லை ...


அபியம் ஏதும் கேட்காது, பூரணியின் படம் முன்று நின்று, அங்குள்ள காமாட்சி அம்மன் விளக்கில் விளக்கு ஏற்றினாள்... உடன் ஆதியும் அருகில் நின்று இருந்தான் ...

அபியும் எதுவும் ஆதியிடம் கேட்க தயாராக இல்லை, அவளுக்கு ஆதியின் நெருக்கத்தில் விருப்பம் இல்லை ...

வீட்டில் தேவையான பொருள்கள் ஏதும் இல்லை ...

பெரிய வீடு, பெரிய கூடம்- அங்கு சோபா போட்டு இருந்தது , கீழே நான்கு படுக்கை அறை , சமையல் அறை - கொஞ்சம் பாத்திரம் இருந்தது , அவ்வளவே ,

அதன் அருகே சிறிதாக டைனிங் ஹால் ...
வீட்டினுள்ளே படிக்கட்டு வைத்து அங்கு மேல் சென்றால் , இரண்டு பெரிய படுக்கை அறை , ஒரு கூடம் , பால்கனி என்று வீடு பார்ப்பதற்கு பொருள்கள் ஏதும் இன்றி இருந்தது...


அபிக்கு எப்பொழுதும் ஒரு சிந்தனை இதை பற்றி இருக்கும்...
சிறு வயதில் இது போன்ற வீடுகள் சினிமாவில் , பார்க்கும் பொழுது , வீட்ல இருக்குற, ரெண்டு பேருக்கு , இவ்ளோ பெரிய வீடா என்று, அவள் அம்மாவிடம் கூட கேட்பாள் ....


இப்பொழுது அதே கேள்வி தான், ஆனால் கேட்பதற்கு தயக்கம் ...
அபிக்கு நன்றாக நினைவு இருக்கிறது பூரணியின் வீடு, அதன் கொண்டே ஏன் அங்கு அழைத்து செல்லவில்லை , ஸ்ரீ எங்கு இருக்கிறாள் , என்று நிறைய கேள்விகள் ...ஆனால் கேட்பதற்கு பயம் ...


ஆதி அபியின் முக மாற்றங்கள், ஏதோ சிந்தனையில் அவள் நெற்றி சுருங்குவது என்று அவளையே பார்த்து கொண்டிருந்தான் ...

"ஹ்ம்ம்!"

" இவன் அபிய சாதாரணமாவே சைட் அடிப்பான் , இப்போ லைசென்ஸ் வேற இவனுக்கு குடுத்தாச்சு , கேட்கவா வேணும்...." என்று நினைத்து அர்ஜுன் அவன் தொண்டையை செருமி, சுற்றம் ஞாபக
படுத்தினான் ...


சந்தீப்பும் ஆதியின் காதல் பற்றி அர்ஜுனிடம் இருந்து தெரிந்து கொண்டான்... ஆதியின் வாழக்கையில் இனி நிம்மதியே குடு தெய்வமே என்று நண்பனின் வாழ்விற்காக இறைவனிடம் வேண்டினான் ...

இவ்வாறு ஒவ்வொருவர் ஒரு வேலையில் இருக்கும் நேரம், அபி நேராக
சிவநேசன் முன் சென்று, மாமா வீட்டுக்கு சொல்லணும், என்று கூறினாள் ...


நாளை மாலை அங்கு இருப்பது போன்று டிக்கெட் போட்டு இருப்பதாக கூறினாள் ...

ஆதிக்கும் சுறு சுறு என்று கோவம் , வந்தது....

"இப்போ என்ன சொல்ல வர, நீ நாளைக்கு ஊருக்கு போகணுமா, என்று அவளிடம் நேராக சென்று ,அபி முதல் கூறிய வாகியத்தை மறந்து, ஊருக்கு செல்வது பற்றி கூறியதை வைத்தே அவளிடம் சண்டைக்கு தயார் ஆனான் ஆதி ... "

அவளின் ஒதுக்கம் ஆதிக்கு அவ்வளவு கோவத்தை கொடுத்தது ...

எங்கு அபி தன்னை விட்டு சென்று விடுவாளோ, அவள் வீட்டில் உள்ளவர்கள் வேண்டாம் என்று கூறினால், தன்னை ஒதுக்கிடுவாளோ என்று சிறு பிள்ளை போன்று பயம், ஆதிக்கு ...

ஏதோ அபியுடன் காலம் காலம் வாழ்ந்தது போன்றும், அவள் பிறந்த வீட்டுக்கு செல்வதற்கு , மனைவியை அனுப்ப விருப்பம் கொள்ளாமல் சண்டை பிடிப்பது போன்றும் இருந்தது ஆதியின் பேச்சு ...

அபி அவனின் கத்தலில் பயம் கொண்டாள் , ஸ்ரீயின் அருகில் சென்று நின்று கொண்டாள் ...

பயத்தில் அவளுக்கு வார்த்தை ஏதும் வரவில்லை , இவன் ஏன் என்னை கண்ட்ரோல் செய்து , அனைத்தும் நிறைவேற்றி கொள்கிறான், என்று காரில் ஆதி அபியுடன் நடந்த நிகழுவினை ஒப்பிட்டு பார்த்து கண்ணீர் சிந்தினாள் ...

ஆதிக்கு ஸ்ரீயுடன் அபி சென்று நின்றது மேலும் கோவம் கொள்ள செய்தது,

"அது என்ன எப்போ பார், போய் , அண்ணியிடம் ஒளிஞ்சிக்கிற , என்று அபியின் கைகளை வேகமாக இழுத்து அவனின் முன் அபியை நிற்க வைத்தான் ... "

ஆதியின் இசெயலில் அபி ஆதியை அறவே வெறுத்தாள் ...

அவளின் மனதில் உள்ள குழப்பத்திற்கு ஆதியின் இந்த கோவம், ஆதி மீது ஒரு தவற என்ன உருவாக்க வழி விட்டது ...

அபிக்கு மேலும் அழுகை அதிகமா ஆகியது ...

ஆதியின் நிலையும் , அங்குள்ள அனைவருக்கும் அப்பொழுது தான் புரிந்தது...

"இவன் நல்லா சொதப்புறான் ," என்று ஸ்ரீ அர்ஜுனிடம் கூறினாள் ...
"அபிக்கு லவ் சொல்வானு பார்த்தா , கார்லயும் ஏதோ அவளை திட்டுறா மாதிரி இருந்துச்சு, இங்கயும் இப்டி எரிஞ்சு விழுறான் ," என்று அர்ஜுனிடம் அவள் தம்பியை பற்றி ஸ்ரீ திட்டிக் கொண்டிருந்தாள்...


"உங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் வராது என்று அர்ஜுனையும் வாரினாள் ..."

"டேய் மேரேஜ் பார்க்க வந்த பெண்ணை இப்போ நீ மேரேஜ் பன்னிட்டு , அவங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டிய, என்று அது வரை அங்கு அமைதியாக இருந்த சந்தீப் ஆதியை திட்டினான் ... "

சிவநேசன் ஆதியிடம் சிறிது குரல் உயர்த்தி " ஆதி! " என்று அழைத்தார் ...
ஆதியும் அமைதியானான் ...
 

CHITHRA. K

Active Member
முதலில் ஆதியை அபியிடம் பேச வைக்கல, அப்பறம் எப்படி அவன் காதல் தெரியும். இதுல வேற அபி அழுதுட்டு இருக்கு, அவனுக்கு கோவம் வர தான் செய்யும்.
பிரேமாக்கு அல்வா சாப்பாடுவது போல் இவங்க பிரச்சனை கிடைக்கபோவது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top