உறவால் உயிரானவள் P18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஆதியையும், கார்த்திக்கையும் எதிர்க்கும் வில்லன் வந்துட்டான் பா...

images (10).jpg


சுபாஷ் சந்திரன் சென்னையில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர். வயது முப்பதுக்கு மேல்... மனைவி சாந்திபிரியா. காதல் திருமணம். இரண்டு பசங்க. காதல் கணவன் அன்பான தந்தை. வீடே கதி என்று இருக்கும் மருமகன். ஏழைகளுக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதன். இதுதான் சுபாஷ் சந்திரனின் வெளித்தோற்றம்.



உண்மையில் சுபாஷ் என்பவன் தான் உயிர்வாழ பிறரை வேட்டையாடும் ஒரு கொடிய மிருகத்தையும் ஒப்பிட முடியாத படி கொடூரமானவன்.



வாழ்க்கையில் சாதிக்கணும், கடுமையாக உழைத்து முன்னுக்கு வரணும் என்பது சுபாஷின் கனவாக இருக்க அவன் தேர்தெடுத்த வழி குறுக்கு வழி. அது சாந்தியை காதலித்து கல்யாணம் செய்து அவளுடைய சொத்துக்களை அடைவதே.



படிப்பால் அவளுடைய கம்பனியில் வேலைக்கு சேர்ந்தவன் சில, பல திட்டங்களை தீட்டி சாந்திப்ரியாவை தனது வலைக்குள் சிக்க வைத்தவன் அவளே அவனை காதலிப்பதாக சொல்ல வைத்தான்.



சாந்திப்பிரியா பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்ப்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி. சாம்பசிவத்தின் ஒரே வாரிசு. அவளுக்கு என்ன பிடிக்கும் என்று அவளுக்கே தெரியாது. சுபாஷின் பெயரை பிடித்தே அவனோடு பேச ஆரம்பித்தாள். அவன் அழகை விட கம்பீரமும், நேர்கொண்ட பார்வையும் அவளை ஈர்த்தது. தானே வலியச் சென்று பேசினாலும் ஒதுங்கிப் போகிறவனை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது. சுபாஷின் நடிப்பில் தன்னிலை மறந்து அவனிடம் மனதை பறிகொடுத்து விட்டாள்.



அவனிடம் போய் காதலை சொல்லவும் மறுப்பேதும் சொல்லாத சுபாஷ் வேலையை விட்டு வெளியேற தந்தையிடம் போய் நின்றவள் சுபாஷ் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கலானாள்.



சுபாஷை இளமையானவன், கடுமையான உழைப்பாளி, பொறுப்பானவன். இளரெத்தம் சாதிக்கணும் என்று துடிப்பவன் இதுதான் சாம்பசிவம் அவனிடம் கண்டவைகள். நேர்மையான நல்ல மனிதரான சாம்பசிவம் சுபாஷுக்கு தனது ஒரே மகளை கட்டிக் கொடுக்க இரண்டு தடவை கூட யோசிக்கவில்லை. உடனே சம்மதம் சொல்லி கல்யாணத்தையும் பெரிய விழாபோல் கொண்டாடியவர். அனைத்து பொறுப்புக்களையும் மருமகன் வசமாக்கினார்.



ஒருவன் எவ்வளவு நாள் தான் நடிக்க முடியும்? சுபாஷ் பெண் பித்தனோ? குடிகாரனோ? சூதாடுபவரோ அல்ல மாறாக அவனின் குறிக்கோள் பணம் மட்டுமே! அதை சம்பாதிக்க நேர்வழி இல்லையென்றால் குறுக்கு வழியில் செல்பவன்.



அவர்களுடைய மருந்துக் கம்பனியை இந்தியாவின் நம்பர் ஒன்னு கம்பனியாக மாற்றும் பொருட்டு அடுத்த இருக்கும் சிறு சிறு கம்பனியை கண்காணித்து அவர்களின் கண்டு பிடிப்புக்களை திருடினான். கேள்வி கேட்பவர்களை கொன்றும் விடுவான்.



மனைவியின் மேல் காதலா? மோகமா? அவளிடம் மாத்திரம் அடங்குபவன். குழந்தைகள் அவனுடைய இரத்தம் என்பதால் பாசம் காட்டுகின்றானா அது அவனுக்கே வெளிச்சம்.



மருமகனிடம் எல்லா பொறுப்புகளையும் விட்டு விட்டு கோவில், குளம் என்று இருந்த சாம்பசிவத்துக்கு மருமகனின் செய்கைகள் தகவலாக வர அதை பற்றி அவனிடம் கேட்டவரை கொன்றொழித்தான். அதில் தவறுதலாக மாட்டிய கார்த்திக்கை கொல்ல நாள் பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதில் ஆதியின் தந்தை தேவசகாயம் எங்கே வந்தார்? அவருக்கும் இவனுக்கும் என்ன பகை?

எந்த கதையை முதல்ல எழுதி முடிக்கிறேனோ அந்த கதையை தரேன்

:):)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top