“உற்றத்துணை
என்
உயிர்த்தோழியுடன்
ஊடல்”
“செல்லக்கோபம்
சிலநேரம்
சின்னசண்டை
பலநேரம்
வாக்குவாதம்
வண்டிக்கணக்காய்
இருந்தும்
வருத்தம் தராது
எங்களுக்கு
எதுவும்”
பேசாமல்
அவளை பார்க்காமல்
சிறிய பொழுதுதான்
சென்றிருக்கும்
சிறு சிரிப்போடு
சேர்த்து வைப்பேன்
அவள்
தட்டில்
என் உணவை...