இரவு உணவுக்கு பிறகு, “உன் அத்தை இன்னைக்கு போன் பண்ணி அம்மாகிட்ட பேசி இருக்கா. ரெண்டு நாள் உங்களை அங்க அனுப்பி வைக்க சொன்னாளாம். நீயும் வெண்ணிலாவும் இந்த வாரம் சனி ஞாயிறு அங்க போயிட்டு வந்திடுங்க.” என ஜெயராமன் ஒரு குண்டைப் போட...
“அதெல்லாம் முடியாது.” என்ற பதில் ஜெய்யிடம் இருந்து வேகமாக வர...
பொள்ளாச்சியில் வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பணியில் தான் ஜெய் ஆனந்தனுக்கு வேலை. மண்ணை ஆராய்ந்து அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் என்ன விதைத்தால்... விளையும் என மண்ணை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் அவன் வேலை.
இடம் இருக்கிறது என எல்லா இடத்திலேயும் நினைத்ததை விதைத்து விட முடியாது. மண்ணின்...
அறையில் விளக்கு எரிந்ததால் ஜெய் தன் கைக் கொண்டு கண்ணை மறைத்தபடி படுத்திருந்தான். அதைப் பார்த்ததும் விளக்கணைக்க சென்றவள், பிறகே எடுத்து வந்த பாலைக் கவனித்தாள்.
“அத்தான், அத்தை பால் கொடுத்து விட்டாங்க. சொல்ல மறந்திட்டேன்.” என்றாள்.
“நீயே குடி.” என்றான்.
“உங்களுக்கு பால் பிடிக்காதா.. நேத்தும்...
ஜெய் நன்றாக ஓரத்தில் தள்ளி உட்கார்ந்து கொண்டு வெண்ணிலாவை சீட்டில் படுத்துக்கொள்ள சொல்ல, அவள் வேண்டாம் என மறுக்க....
மற்றவர்கள் உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்தவன், அவளை இழுத்து சீட்டில் படுக்க வைத்தான். வெண்ணிலா எழுந்துகொள்ள நினைத்தாலும், எழுந்து கொள்ள முடியவில்லை.
சிறிது நேரம் போராடி...
“என்னப்பா கூப்பிடீங்களா?” என்ற மகனை ஏற இறங்க பார்த்தவர், “வெண்ணிலாவை கேட்காம நீயாவே அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லி இருக்க...” என்றதும்,
ஐயையோ அதுக்குள்ள மாட்டிகிட்டோமா என விழித்தவன், வெண்ணிலாவுக்கும் தெரிந்திருக்குமே, அவள் எப்படி சமாளித்தாளோ... அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக்...
ராஜ் பதில் சொல்லாமல் இருக்க... ராஜகோபால் கைபேசியில் மனைவியை அழைத்தவர், “என்ன உனக்கு திமிரா? நீயே எல்லாம் முடிவு பண்ண ஆரம்பிச்சிட்ட.” என்றார் கோபமாக.
எப்போதும் கணவரின் கோபத்திற்கு அடங்கிப் போய் விடும் மகேஸ்வரி இந்த முறை அப்படியில்லை. “ஆமாம் உங்க பேச்சையும் உங்க அம்மா பேச்சையும் கேட்டுத்தான் என்...
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்துக் கொண்டிருந்தான். விடுதியில் தங்கித்தான் படித்தான். எல்லோரையும் போல கல்லூரி வாழ்க்கை என்பது அவனுக்கும் இனிமையானவையே.... உடன்படித்த தோழியின் பார்வை தன் மீது நட்பையும் தாண்டி ஆர்வமாக படிவத்தை உணர்ந்தான்.
மனதில்...
மூன்று நாட்களாக கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு எதோ ஆகி விட்டது என அவன் பெற்றோர் பதற... இந்த திருமணத்தை நிறுத்த அவன் எதோ முடிவு செய்து விட்டான் என வெண்ணிலாவுக்கு புரிந்தது.
அவன் வீட்டில் சொன்ன போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது திருமணம் நெருங்கும் வேளையில், அவன்...
திருமணத்திற்கு பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதை குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.
வேலை இருக்கிறது என சொல்லி கரன் வரவில்லை. வெண்ணிலாவை மட்டும் தனியே வீட்டில் விட முடியாது என அவளையும் அழைத்துக் கொண்டு இரு குடும்பமும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.