கற்பூர முல்லை என்ற Episode 12

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 12

அன்றும் வழக்கம் போல் ஸ்டேஷன் கிளம்பிக் கொண்டிருந்தாள் அகிலன். போவதற்கு முன் தழிழை பார்க்க வேண்டும் என்று மனது அடம் பிடித்தது. அதற்கு கடிவாளம் போடாமல் அவளை காண சென்றான். வழக்கம் போல் ராசாத்தி அக்காவின் காலை சமையலை உண்டுவிட்டு சொல்லி கொண்டு சென்றான். தமிழை பார்க்கவா இவ்வளவு அவசரம்.......? என கேட்டே விட்டாள் ராசாத்தி. அதற்கு அவன் சிரிப்பே அழகாய் பதில் சொல்லியது.

தமிழின் ஆபிஸின் முன் வண்டியை நிறுத்தினான் அகிலன். வரவேற்பில் விசாரித்தால் தமிழ் மீட்டிங் கில் இருப்பதாக கூறினார்கள். வேறு வழியின்றி அவள் வரும் வரை காத்திருந்தான். அரைமணி நேரம் ஆயிற்று ஆனாலும் அவள் வரவில்லை. அவளை பார்க்காமல் செல்வதற்கோ மனம் இடம் தரவில்லை. இப்படியே சில மணித்துளிகள் சென்றது. பிறகு அவன் காத்திருப்பிற்கு பலனாய் கண்ணாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள் தமிழ். ஸ்கை புளு கலர் புடவையில் அம்சமாய் இருந்தாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவனை கண்டதும் வந்து வரவேற்றாள். இருவரும் அவள் அறைக்குள் சென்றனர். உள்ளே சென்று அமர்ந்ததும் வீட்டில் எல்லோரும் நலமா.... ? என விசாரித்தாள். எல்லாரும் நலம் என்றான். அப்பறம் ஏதாவது கேஸ் விஷயமாக வந்தீர்களா என்றாள். இல்லை என்றான். அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அது கண்டு அவன் உங்களை பார்க்கத்தான் வந்தேன் என்றான். என் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்கு வந்ததற்கு நன்றி என்றான். அவள் சிரித்துக் கொண்டு இதை போன்லேயே சொல்லி இருக்கலாம் என்றாள். அதற்கு அவன் அது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்றான். சரி கிளம்புகிறேன் என்று கிளம்பியவனை இருங்கள் ஏதாவது சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்றாள். அவனும் மறுக்க முடியாமல் அமர்ந்தான்.

இண்டர்காமில் இருவருக்கும் காபி ஆர்டர் செய்தாள். அப்புறம் இந்த வாரம் கோயம்புத்தூர் போக வேண்டும் என்று கூறினாள். அவனுக்கு அதை கேட்டதும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது இருந்தாலும் சொந்த ஊரின் ஞாபகம் வந்து விட்டதா.. ...? என்றான். இல்லை அடுத்த வாரம் காயூ வின் பிறந்த நாள் கண்டிப்பாக நான் அங்கு இருந்தே ஆக வேண்டும் என்றாள். சரி போய் வாருங்கள் என்றான். உங்களிடமிருந்து இன்னொரு உதவி வேண்டும் என்றாள். என்ன என்பது போல் பார்த்தான். அவள் சொல்வதற்கு தயங்கினாள். பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள் என்றான். காயூவிற்கு பிரெசண்ட் வாங்க வேண்டும் எனக்கு இங்கு எந்த இடமும் தெரியாது நீங்கள் கூட வந்தால் நல்லாயிருக்கும் என்று கூறினாள். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை கண்டிப்பாக வருகிறேன் என்றான். சரி என்ன வாங்க வேண்டும் என்று கேட்டான். நகை ஏதாவது வாங்க வேண்டும் என்றாள். இதை உங்கள் ஊரிலேயே வாங்கலாமே என்றான். வாங்கலாம் தான் பட் இங்கே நிறைய கலெக்ஷன்ஸ் இருக்கும் அதான் என்றாள். சரி நாளை போகாலாமா....? என்றான் இவள் சரியென்றதும் அப்போ நான் நாளை வருகிறேன் என்று கிளம்பினான்.

அவன் சென்றவுடன் தனது அலுவல்களை கவனித்தாள். மறுபடியும் தமிழின் கம்பெனிற்கு ஒரு ஆர்டர் வந்திருந்தது. இதையும் வேலையாட்களிடம் கொடுக்காமல் அவளே கோட் செய்து அனுப்பினாள்.

தமிழ் இங்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆபிஸில் இருக்கும் நபர்கள் தவிர வேறு யாரையும் புதிதாக அறிமுகப்படுத்தி கொள்ள வில்லை. அது தவிர அகிலன் குடும்பம் மட்டுமே அறிமுகம் ஆகி இருந்தது. இவள் நினைத்தால் தனியாக போய் காயூ விற்கு பிரெசண்ட் வாங்கலாம்தான் ஆனால் மனது ஏன் அவனை எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை இது காதலாக இருக்குமோ என்று எணணினாள். காதல் கல்யாணம் என்று ஒன்று தனக்கு வேண்டாம் என்று நினைத்தாள். ஆனாலும் அகிலன் மேல் ஓர் அன்பு இருக்கத்தான் செய்தது.

அடுத்த நாள் 6 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தான் அகிலன். தமிழ் அவனுக்காக காத்திருந்தாள். அவன் வர சற்று தாமதமாயிற்று. சாரி தமிழ் சற்று லேட் ஆகிவிட்டது என்றவாறே வந்தான். பரவாயில்லை கிளம்பலாமா என்றாள். சரி என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர். இப்பொழுதும் அவனுடன் பைக்கிலேயே சென்றாள்.

அவனுக்கு தெரிந்த நகை கடையின் வாசலில் வண்டியை நிறுத்தினான். இருவரும் உள்ளே சென்றனர். நகை கடையின் உரிமையாளரருக்கு இவனை தெரியுமாதலால் அவர் வரவேற்றார். வாங்க சார் நல்லாயிருக்கீங்களா.. ...என்ன சார் பார்க்கறீங்க என்று கேட்டதற்கு அவன் தமிழை பார்த்தான். நெக்லஸ் பார்க்க வேண்டும் என்றாள். உடனே அவர்களிடம் அந்த செக்க்ஷன் இருக்கும் இடத்தை காட்டினார் அவர்.

இவர்கள் சென்றதும் விற்பனையாளர் நிறைய கலெக்ஷன்ஸ்களை காட்டினார். அவள் செலக்ட் செய்வதை அவன் ரசித்து கொண்டிருந்தான். நிறைய பார்த்த பிறகு ஒரு நெக்லஸை தேர்வு செய்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. பில் போட கொடுத்த பின்னர் என் தங்கைக்கும் அடுத்த வாரம் பிறந்த நாள் வருகிறது அதற்கும் ஒரு சேர்த்து பிரெசண்ட் வாங்கி விடலாம் என்றான். சரி என்ன வாங்கலாம் என்றாள். அதையும் நீங்களே சொல்லுங்கள் எனக்கு நகைகளை பற்றி அவ்வளவாக தெரியாது என்றான். சரி செயின் வாங்கலாம் என்றாள். அதையும் நீங்களே செலக்ட் செய்தால் நல்லது என்றான். அதையும் அவளே செலக்ட் செய்தாள். இரண்டிற்கும் பில் போட்டு அவரவர் பொருளுக்கு அவரவர் பணம் தந்தனர்.

தமிழை அவள் வீட்டில் இறக்கி விட்டான். எப்பொழுது ஊருக்கு போக வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள் நாளை மறுநாள் என்றாள்.

அதற்கு மறுநாள் காலை ஆபிஸில் தனது அலுவல்களை கவனித்து கொண்டிருந்தாள். ஏனோ மனம் அகிலனை எதிர்பார்த்தது. அவள் எதிர்பார்த்தது போலவே அவள் முன் வந்து நின்றான் அகிலன். உள்ளே வந்தவன் அவள் வியப்பின் அழகை ரசித்தான்.

இது என்ன......? என்னை எதிர்பார்த்ததால் வந்த ஆச்சர்யமா.. ..இல்லை எதிர்பாராததால் வந்த ஆச்சர்யமா.. ....? என்று கேட்டான். அதற்கு அவள் இரண்டும் தான் என்று சிரித்தவாறு பதில் சொன்னாள். சரி சரி எத்தனை மணிக்கு டிரெயின் என்று கேட்டான். இரவு 9 மணிக்கு என்றாள். ஒரு 8.30 க்கு அங்கு இருக்குமாறு செல்ல வேண்டும் என்றாள். எதில் செல்கிறாய் என்று கேட்டான். கேட்டதுக்கு அப்புறம் தான் தெரிந்தது தான் ஒருமையில் பேசுகிறோம் என்று. அதை அவள் கவனிக்கவில்லை போலும் என்று நினைத்தான் ஆனால் அதை கவனித்து இருந்தாள் இருந்ததாலும் கவனியாதது போல் இருந்தாள்.

சரி நான் 8.30 க்கு ரயில்வே ஸ்டேஷன் வந்து விடுகிறேன் என்றான். எதற்கு என்றாள். எங்கள் ஊருக்கு வந்து இருக்கிறீர்கள் நான் தானே பாதுகாப்பாக வழி அனுப்பி வைக்க வேண்டும் என்றான். அவளால் அதை மறுக்க முடியவில்லை. சிரித்து கொண்டே சரி என்றாள்.

ஓகே தமிழ் இப்பொழுது டைம் ஆகிவிட்டது நான் இரவு வருகிறேன் என்றவாறு கிளம்பினான்.

அவளும் அலுவல்களை எல்லாம் முடித்து விட்டு கிளம்ப 6 மணியாயிற்று. ஹரியிடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.

வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு லைட்டாக மட்டும் சாப்பிட்டாள். வேலைக்கார பெண்மணிக்கு தான் வரும் வரை விடுப்பு விட்டிருந்தாள்.

சரியாக 8.30 க்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தாள். ஆனால் அகிலனை தான் காணவில்லை. போன் செய்யலாமா.. ...? என்று நினைத்தாள் ஆனாலும் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

அங்கே அகிலனோ உயர் அதிகாரியின் மீட்டிங்கில் மாட்டிக் கொண்டான். உடல் மட்டுமே அங்கு இருந்தது. மனமெல்லாம் தமிழை மட்டுமே நினைத்து இருந்தது. மீட்டிங் முடிந்ததும் குமாரிடம் நான் வருகிறேன் அப்புறம் எல்லாம் விவரமாக சொல்கிறேன் என்றாவாறு கிளம்பினான். இவன் ஏன் இப்படி அடித்து பிடித்து செல்கிறான் என அவனுக்கு தெரியவில்லை.

மணி ஒன்பதை கடந்து இருந்தது. தமிழ் சென்றிருப்பாளா..... என தெரியாமல் மனம் அடித்து கொண்டது. வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு பிளாட் பாரத்தில் சென்று பார்த்தபின் தான் தெரிந்தது கோவை செல்லும் ரயில் வர தாமதம் ஆகிவிட்டது என்று.

அங்கே சென்று சுற்றும் முற்றும் தேடியதில் தமிழ் அவன் கண்களில் பட்டாள். அப்பொழுது தான் அவனுக்கு உயிர் வந்த மாதிரி இருந்தது. தமிழும் அவனை பார்த்துவிட்டாள்.

சாரி தமிழ் மீட்டிங் இருந்ததால் வர லேட் ஆயிற்று. ஏதாவது சாப்பிட்டாயா..... வேறு ஏதாவது வேண்டுமா....? என்றாவாறு கேள்வியை அடுக்கினான்.

எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொன்னாள். ஏன் தமிழ் பேக் எதுவும் எடுக்கவில்லையா....வெறும் ஹேண்ட் பேக் மட்டும் போதுமா....? என்று கேட்டான். துணிகள் எல்லாம் அங்கே வீட்டிலேயே இருக்கிறது என்று பதிலுரைத்தாள்.

எப்பொழுது வருவீர்கள் தமிழ் என்று கேட்டான். இங்கே வந்த பிறகு இப்போது தான் செல்கிறேன் காயூ என்ன சொல்வாள் என்று தெரியாது அதை பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்றாள். ஆனாலும் கூடிய விரைவில் வந்து விடுவேன் என்றாள்.

அதற்குள் டிரெயின் வந்து விடவே அங்கே இருந்த கூட்டம் உஷாரானது. தமிழ் ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் ரயில் கிளம்ப தயாரானது. பார்த்து ஜாக்கிரதையாக செல்.சென்று சேர்ந்ததும் போன் பண்ணு தமிழ் என்றான். கண்டிப்பாக என்றாள். நீ அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக என் காதலை உரைப்பேன் என்று மனதில் நினைத்து கொண்டான். நான் போய் வருகிறேன் என்று சொன்னதும் ரயில் வேகமாக நகர தொடங்கியது. அவனும் கையசைத்து விடைகொடுத்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top