என் இதய விழி நீயே 20

Advertisement

achuma

Well-Known Member
be safe :)(y)

ஹாய் , அடுத்த அப்டேட் குடுத்து இருக்கேன் , ப்ளீஸ் படித்து பார்த்து கருத்து சொல்லவும் . போன லைக் ன் கமெண்ட்ஸ் குடுத்த அனைவர்க்கும் நன்றி .
ஒரு வழியாக ஆதியும் மனதினை தேற்றி இனி வரும் நாட்களையாவது காபியுடன் நிம்மதியாக வாழ விரும்பினான் .

அறையில் வெகு நேரம் கழித்தே ஆதி வந்து சேர்ந்தான் .



அபி எப்பொழுதோ அலைச்சலில் உறங்கி கொண்டிருந்தாள் .

அன்றும் கீழே விரித்து அதில் படுத்திருந்தாள் .

ஆதியும் சற்று தள்ளி விரித்து படுத்திருந்தான் .

"இவளுக்கு டி சி வாங்கணும், அடுத்த கோர்ஸ் இங்க இருக்கிற காலேஜ்ல சேர்க்கணும், நெக்ஸ்ட் இவளுக்கு என்ன தேவை , மேடம் எதுவும் சகஜமா சொல்றது இல்ல , ஹ்ம்ம்," இவ்வாறு ஒரு பெருமூச்சுடன் உறங்க முயற்சி செய்தான் .
வெகு நேரம் கழித்தே விடியலில் உறங்கினான் .

ஸ்ரீயின் பெற்றோர் அவரின் வீட்டிற்கும், பிரேமாவின் கணவர் அவரின் வீட்டிற்கும் சென்றனர் .
அங்கு பிரேமா கணவரை கண்டதும் முகத்தை தூக்கி வைத்து அறைக்கு சென்றார் .
அவரும் அவளின் பின்னோடேசென்றார் "பிரேமா! நமக்கு இருக்குறது ஒரு பொண்ணு, அவ நம்மகிட்ட மறைச்சிது , தப்பு தான் , ஆனா அவ உறவு முறிகிறது அவளை விட நமக்கு தான் மா பெரிய தண்டனை .
நாம பிள்ளை சந்தோஷம் தானே நமக்கு முக்கியம் ".
"ஹ்ம்ம்! போதும், உங்க பொண்ணு பற்றிய பேச்சு ,என்று கணவரிடம் சிடுசிடுத்தார் ...

பிரேமாவின் கணவர் பிரேமாவிற்கும் வருத்தம் இருக்கும், என்றும், பேரன் பிறந்ததும், எல்லாம் மாறி விடும் என்றும், பிரேமாவின் யோசனை படிந்த முகம் கண்டு அவரை தேறினார்.

அவருக்கு எங்கே தெரிய போகுது, பிரேமாவின் சிந்தனை எல்லாம் அபியை அக்குடும்பத்தில் இருந்து எவ்வாறு பிரிப்பது, குடும்பத்திற்குள் அடுத்து அடுத்து பிரச்சனை உருவாக்குவது, அதன் மூலம் , அக்குடும்பத்தில் யாருக்கும் ஷோரூம் பற்றிய சிந்தனையே வரக்கூடாது என்றும் சிந்தித்தார்.

சிவநேசனிடம் கேட்டாலே அவருக்கு குடுத்து விடுவார் , ஏதோ தானமாக பெற விரும்பவில்லை, அதிலும், அபி மேல் எப்பொழுதும் ஒரு வஞ்சம் பிரேமாவிற்கு உண்டு , பூரணி அபியை சிறுவயதில் எப்பொழுதும் தூக்கி கொண்டு சுற்றுவது, நிஷாவை விட, அபிக்கு அக்குடும்பத்தில் முக்கியத்துவம் தருவது, இறுதியில், மருமகள் ஆக்கும் ஆசை அறிந்து, ஒரு வழியாக , மாமியாரின் விருப்பமத்தின் பேரில் அந்த விருப்பத்தை முலையிலே முறியடித்தாது (ஹ்ம்ம் சாதனை தான் ) . ஆனால் இப்பெண் , இரண்டு நாட்களில், அனைத்தும் தலை கீழாக மாற்றி விட்டாளே , என்று குரோதம் மேலும் வளர்த்து கொண்டாள் அபி மீது...

(நிஷா காதல் செய்தது, வகையாக மறந்து போயிற்று போலும்)
இங்கு ஆதியின் வீட்டிலே சந்தீப் தம்பதியினர் அன்று இரவு தங்கினார்.


அபி எப்பொழுதும் போல் காலை 5.30 மணிக்கே எழுந்து விட்டாள், அவ்வறையில் ஆதி இல்லாது எங்கு சென்றான் என்று யோசித்து, பிறகு அவள் குளித்து தயார் ஆகி கீழே வந்தாள் .
ஆதி நடை பயிற்சி முடிந்து வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான்.

நேற்றய பொழுதிற்கு பிறகு அபியுடன் இனி அவன் வாழ்வு எப்படி கொண்டு செல்வது என்று சிந்தித்து அதில் ஒரு தெளிவு பெற்றிருந்தான் . அதன் முடிவில் முதலில் அபியை அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து, அவளை தொந்தரவு செய்யாமல் இருப்பது என்பதே..

அபிக்கு ஆதி மீது விருப்பம் தானாக வர வேண்டும் என்றும்,அதன் பிறகு இவனின் காதலை கூறலாம் என்றும் முடிவில் இருந்தான் , (ஆதி இங்கு தான் தவறு செய்கிறான் ).

அதனால் , எந்த விட சீண்டலும் இல்லாமல், அபியுடன் சகஜமாக பழக ஆரம்பித்தான், அவளிற்கு அவர்கள் வாழ்க்கையின் பற்றிய புரிதல் வந்ததும் பிறகு அவனின் காதலை புரிய வைக்க முடிவு செய்தான் .

"ஹாய் அபி! குட் மார்னிங் , இவ்வளவு சீக்கிரம் எழுந்திடுவியா , என்று எதிரில் வந்த அபியிடம் ஆதி கேட்டான் , அவளும் நேற்று அவனின் வருத்தமான முகத்தை பார்த்து, சாதாரணமாக பேச ஆரம்பித்தாள் .
ஆமா பழகிடிச்சு , எழுந்துட்டேன் ."
"பிஜில , என்ன கோர்ஸ் பண்ண போற ?" என்றான் .
" நான் மாமா கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்கணும், ஆதி".
"லுக் அபி, நான் உன் கணவன், உனக்கு இது எப்பவுமே ஞாபகபடுத்துற போல வெச்சிக்காத , எங்க வீட்டை பற்றி உனக்கு தெரியாதது இல்ல , அப்பா இதுக்கு எல்லாம் வேண்டாம் சொல்ல மாட்டாரு."

" நான் கேட்குறதுக்கு, உன் மைண்ட்ல என்ன ஓடுதோ அத அப்படியே எனக்கு சொல்ல பாரு, ஓகே," என்றான்."
அவளும் ஒரு முடிவு எடுத்தாள் தான், காலத்தின் போக்கில் போக வேண்டும் என்று.
ஆனால் இந்த பெங்களூரு பயணம் அவள் புரட்டி போட்டது.
அதன் படி முதலில் பெற்றோர், பிறகு சிவநேசன், லீலா பெரியன்னை,இப்பொழுது, அவளின் வாழ்க்கை ஆதியின் கையில் என்று விட்டாள் ...
சரியாக யோசித்து பார்த்தால் , அவளின் விருப்பத்தின் பேரில் தான் அவன் சென்றுகொண்டிருக்கிறான் என்று அபிக்கு தெரியவில்லை .
"ஆதி, (M.sc maths) பண்ணனும் ஆதி, உங்களுக்கு ஓகே வா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் .ஆதியும் கொஞ்சம் கொஞ்சமாக தான் சரிக்கட்ட முடியும் என்று, அவனிற்கு அவனே சமாதானம் செய்து கொண்டான் .
"குட் அபி , சகஜமாவே கேளேன் , ஏன் இவ்வளவு தயக்கம் , சரி உன் திங்ஸ் எல்லாம் நம்ம வாடரோப்ல வைச்சிடு , உனக்கு எற்றது போல வீட்டுக்கு தேவையானது லிஸ்ட் போடு , நம்ம வாங்கிட்டு வந்துடலாம் "அடுத்த மாதம் காலேஜ் ஓபன் பண்ணுவாங்க அதுக்கு முன்ன நீ இங்க செட் ஆகிக்கோ ," என்றான் .
செர்வன்ட்ஸ் பற்றி அண்ணிகிட்ட கேளு , ஆதி ஒரு செர்வன்ட் மட்டும் போதும் , ப்ளீஸ் . நானே சமையல் பார்த்துகிறேன்."
" ஹே! நீ ஏன் ரிஸ்க் எடுக்குற,"என்று கேட்டு கொண்டே ஸ்ரீ வந்து சேர்ந்தாள் ...
"அண்ணி! அவ இல்ல, அவ சமையல் சாப்பிடற நான் தான் ரிஸ்க் எடுக்கணும்," என்று ஆதி அபியை கிண்டல் செய்தான் ...
அபி அவனை முறைத்து , "அக்கா பாருங்க கா என்று அபியின் சிலுங்களில் ஆதி தான் அவனை கட்டுப்படுத்த பெரும் பாடு பட்டான் . உன்ன பக்கத்துல வெச்சிட்டு கொஞ்ச முடியாம இருக்கேன் , இதுல இவ வேற கொல்றாளே ," மனதிற்குள்ளே புலம்ப மட்டுமே முடிந்தது .

ஸ்ரீயும் சிரித்துக்கொண்டே,"ஓ கே அபி, சமையல் மட்டும் நீ பாரு , வீடு கிளீனிங், பாத்திரம் கிளீன் பண்றது எல்லாம் ஒரு செர்வன்ட் நம்ம வீட்டுல இருந்து நான் அனுப்புறேன் . இருவரும் தேவையானது வாங்க தயார் ஆனார்கள் .

கணவரே தங்கையின் வீட்டிற்கு செல்வது பற்றி பேசுவாரா என்று காலையில் இருந்து பிரேமா யோசனையில் இருந்தார், தாமாக கேட்டால், இந்த நேரத்தில் என்ன நினைப்பார், என்றும் அறிய முடியவில்லை .
காலையில் உணவு நேரத்தில், "பிரேமா, நாம,ஒரு எட்டு பூரணி வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம், ஆதி அபி கல்யாணம், நடந்த பிரச்னையில சரியாய் கவனிக்கல,அங்க போய் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லிட்டு வரலாம் ."
இதற்கு தானே பிரேமாவும் காத்திருந்தது , உடனே சரி என்றார். (பிரேமா கவுண்டன் ஸ்டார்ட்ஸ் )

ப்ரேமாவால் இனி கிளப், மேல்தட்டு வர்கத்தின் வழக்கை முறை, ஷோரூம், அதனில் கிடைக்கும் பயன் , இதில் இருந்து இனி வெளிவர இயலாது ..
அதற்கு அபியையம் ஆதியும் பிரிந்தால் மட்டுமே முடியும் என்று, கற்பனை செய்து கொண்டார்.
அவரின் கற்பனை வினையாக போவது தெரியாமல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top