Uyirin ularal - episode 33

Advertisement

Saroja

Well-Known Member
ப்ரியா என்ன குட்டி கரணம்
அடித்தாலும்
ஒண்ணும் நடக்காது
அவங்களுக்கு நன்மை தான்
நடக்கும்
 

shiyamala sothy

Well-Known Member
சூப்பர் கதை. பொறுத்த கட்டத்தில் எபியைக் காணோம் எபி ப்ளீஸ் சிஸ்.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Nasreen

Well-Known Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 33


கட்டிலில் பைலை பரப்பி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மனைவியை பார்த்த ரிஷிக்கு என்னடா இது என்பது போல தோன்றியது.
" என்ன அம்மு ஆபீஸை இடமாற்றி விட்டாயா "? என்றான் கிண்டலாக.
" என்ன செய்ய கண்ணன் அத்தான் கொஞ்சம் அதிகமாகவே மூழ்கி போயிருக்கிறாரே " என்றாள் அம்மு பைலில் கவனமாக.
" என்னை போல யாரும் மூழ்கி இருக்கவே முடியாது " என்றான் ரிஷி.
" என்ன ?" என்றவளிடம்
" காதலில் " என்றான் ரிஷி.
" காதலில் மூழ்கியவரை எப்போதுவேன்றுமென்றாலும் தூக்கிக்கொள்ளலாம், ஆனால் கடனில் மூழ்கியவரைதான் முதலில் தூக்கியாக வேண்டும் " என்றாள் அபி சிரிக்காமல்.
" இது என்ன நியாயம், காலையில் என் கணவனை பார்த்த பிறகுதான் எதையும் பார்ப்பேன் என்று கூறினாய் " என்றான் அவன் பொய் கோபத்தில்.
" சும்மா சொன்னேன் " என்றாள் இவள்
" நேஹா விளையாடாதே, பஸ்ட் நான் தான், நீ என்னைத்தான் முதலில் பார்க்கவேண்டும் " என்றான் ரிஷி.
இவனுக்கு பதில் கூறியதில் பார்த்துக்கொண்டிருந்த பைலில் சிறு பிழை நேர்ந்துவிட ஒரு பெருமூச்சுடன் அதை மூடினாள் அபி.
" போதுமா, உன்னிடம் பேசிக்கொண்டே எல்லாம் தவறாக பார்த்தது, சொல்லு இப்போ உனக்கு என்ன வேண்டும் " என்றாள் அபி சலிப்பாக.
" ஆங் ஒரு அறை கிலோ உப்பும், சர்க்கரையும் " என்றான் ரிஷி.
" நான் என்ன மளிகை கடையாய் வைத்திருக்கிறேன் நீ கேட்பதை கொடுக்க" என்றவள் எழுந்து அவனுக்கு தேவையான மாற்று உடையை எடுத்துவைத்தாள்.
ஆனால் அவன் அசையாமல் நிற்க
" ஏன் இப்படி நிற்கிறாய் ? போய் பிரெஷ்சாகு நான் உனக்கு டீ கொண்டு வருகிறேன் " என்று கூறியவளிடம்
" ஒன்றும் தேவையில்லை " ?என்றான் ரிஷி.
" ஏன் "
" ஏன்னா என்ன அர்த்தம். உனக்கு வேலை இருந்தால் எல்லாம் மறந்துவிடுமா ? உனக்கு ஏன் என்று தெரியாதா ?" என்றான் ரிஷி.
" அடேய் கொடுமைக்காரா, ஏன் இப்படி என்னை படுத்துகிறாய், என்ன வேண்டும் உனக்கு" என்று தலையில் அடித்தவளுக்கு நினைவில் வந்தது.
" ஓஒ சாரி " என்று அவனை நெருங்கி தன் கையை அவன் கழுத்தில் கோர்த்தாள். அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தன் கன்னத்தை அவனின் இதழுக்காக காட்டினாள்.
அவனோ அவளின் கன்னத்தை திருப்பிவிட்டு மெதுவாக அவளின் இதழை நோக்கி குனிந்தான்.
" இதுதானே வேண்டாம்" என்று அவனை தடுத்ததாள். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாரது என்று அபி யோசித்துக்கொண்டு கதவை பார்க்க ரிஷி கிடைத்த அந்த கேப்பில் அவளின் இதழை கவ்வினான். தட்டுபவர்கள் தட்டிக்கொண்டே இருங்கள் என்பதுபோல இருந்தது அவன் செயல்.
சட்டென்று விலகுவான் என்று பார்த்தால் அவன் அவளை கிறங்கடித்துக்கொண்டிருந்தான். கதவை தட்டுபவர்களும் சலித்தவர் இல்லை போல, விடாமல் தட்ட அபி இவனை தள்ளிவிட்டு குளியல் அறைக்குள் ஓடிவிட்டாள்.
" ஏய் நேஹா " என்றவன் கோபத்தில் கதவை திறந்தான். அங்கே ப்ரியா நின்றுகொண்டிருந்தாள்.
" ரிஷி அபியிடம் பேச வேண்டும், முக்கியமான விஷயம் " என்றாள் அவள்.
" என்னிடம் சொல், நானே சொல்லிவிடுகிறேன், அவள் பிசியாக இருக்கிறாள் " என்றான் ரிஷி. அதற்குள் அபி வந்துவிடவே ப்ரியாவை கேள்வியாக நோக்கினாள்.
" அபி உன்னிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் " என்றாள் ப்ரியா.
" ம் சொல்லுங்க " என்றாள் அபி.
அவள் ரிஷியை பார்க்க அபி " இதோ வருகிறேன் " என்று பிரியாவுடன் சென்றாள்.
தோட்டத்திற்கு சென்றனர் இருவரும்.
" அபி நீ ஏன் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாய் ?" என்றாள் ப்ரியா நேரடியாக.
" ஏன் ? யார் என்னை ஏமாற்றினார்கள், நான் யாரிடம் ஏமாந்தேன் ?" என்றாள் அபி பட்டும் படாமல்.
" ரிஷிதான் வேறு யாரு ? நான் அவரை பற்றி அத்தனை கூறியபோதும் இன்னும் அவரிடம் நீ ஏன் நெருக்க பார்க்கிறாய். அவர் எனக்கானவர். நீ அவரிடம் எதுவும் கேட்டிருக்கலாம், அவரும் உன்னிடம் ஏதாவது கூறி சமாளித்திருக்கலாம். ஆனால் ரிஷி என்னுடையவர், அதில் எந்த மாற்றமும் கிடையாது, நீ விலகிக்கொள். அவரை எப்படி அடையவேண்டும் என்பது எனக்குத்தெரியும் " என்றாள் மிரட்டலாக.
" அவர் என் கணவர் " என்றாள் அபி அழுத்தமாக.
" தாலியை கட்டிக்கொண்டாள் மட்டும் நீ அவருக்கு மனைவியாகிவிட முடியாது. நீ இல்லாத ஐந்து வருடத்தில் இங்கே என்ன நடந்தது என்று உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நானும் இலைமறை காய்மறையாக சொல்லிபார்த்தால் நீ கேட்க மறுக்கிறாய். " என்றாள் ப்ரியா.
" என்ன நடந்திருக்க போகிறது, என்ன நடந்தாலும் இப்போது அவர் என் கணவர். நீங்கள் சொல்வதற்கெல்லாம் என்னால் அப்படி போக முடியாது. இவ்வளவு பேசுகிற நீங்கள் அவர் கூறிய குறையோடு அவரை ஏற்று கொண்டிருக்கவேண்டும் " என்றாள் அபி.
" அப்படியென்றால் முடியாது என்கிறாய் அப்படித்தானே, சரி உன்னை எப்படி விலக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்." என்றவள் வேக நடையுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவளின் பேச்சில் அபி யோசனைக்குள் விழுந்தாள்.
டீயோடு வருவாள் என்று ரிஷி நினைக்க அபியோ வெறும் கையோடு வந்து நின்றாள்.
" அம்மு டீ எங்கே ?" என்றான் ரிஷி.
ஏதோ புரியாத பாஷையை கேட்டதுபோல விழித்தவள் " அத்தான் நாம் எங்கேயாவது வெளியே போவோமா ?" என்று கேட்டாள்.
" அம்மு ஆர் யூ ஓகே " என்றான் ரிஷி அவளை ஒருமாதிரி பார்த்து.
" ய்யா ஐ அம் ஓகே, ப்ளீஸ் " என்றாள் அபி கெஞ்சலுடன்.
" இதற்கு எதற்கு ப்ளீஸ், கூட்டிட்டுபோன்னா போக போகிறேன், கிளம்பு " என்றான்.
இருவரும் வெளியே சென்றுவிட்டு இரவு உணவையும் வெளியே முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அபியின் முகத்தில் தெரிந்த சோர்வை பார்த்த ரிஷி அவளை தொந்திரவு செய்யாமல் இருந்தான்.
என்றுமே தன்னை அணைத்துக்கொண்டு மார்பில் தூங்குபவள்தான், ஆனால் இன்றோ அவளின் அணைப்பில் ஒரு வேகம் இருந்தது. முரட்டுத்தனமாக பட்டது அவள் அணைப்பு. அவளின் கேசத்தை வருடிவிட்டவன்
" ஐ லவ் யூ பேபி " என்றான். அவளிடம் பதில்லை ஆனால் ஆழமாக அவனில் புதைத்தாள்.
ப்ரியாவிடம் பேசிவிட்டு வந்ததில் இருந்து அவள் சரியில்லை என்று தெரிந்தபோதும் அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. சொல்லக்கூடியதாக இருந்தால் தானாக சொல்லுவாள் என்று காத்திருந்தான்.
நடு இரவுவில் தண்ணீர் குடிப்பதற்காக விழித்தவன் தன் மேல் கனம் இல்லாமல் போகவே சற்றென்று எழுந்தான். அபி அணைத்துக்கொண்டு தூங்கினாலும் பாதி இரவுக்கு மேல் இவன் மேல்தான் பரவியிருப்பாள். இருவருக்கும் பழகிப்போன ஒன்று. ரிஷியின் பாட்டி இதற்காகவே இவர்களின் படுக்கையை சிறுவயதிலேயே தனியாக பிரித்தார். ஆனால் இன்றோ இந்த நடு ராத்திரியில் அவளை பெட்டில் காணாமல் பதறியவன்
" அம்மு, அம்மு " என்று பதட்டமாக அழைத்துக்கொண்டு அறை முழுவதும் தேடினான். அவளோ பால்கனியின் அந்த குளிரில் நின்றுகொண்டு இவன் அழைத்ததை உணராமல் நின்றுகொண்டிருந்தாள்.
" அம்மு " என்று அவளை நெருங்கியவன் தோளோடு அணைத்தான். அவள் உடல் ஜில்லென்று இருந்தது. அவளோ எந்த பதட்டமும் இல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து நின்றாள்.
" அம்மு என்னடி இது ? எவ்வளவு நேரம் இங்கேயே நிற்கிறாய் ? இப்படி உடம்பெல்லாம் ஜில்லென்று இருக்கு, தூக்கம் வரவில்லையென்றால் என்னை எழுப்பவேண்டியதுதானே ? வா உள்ளே போகலாம் " என்று அவளை அணைத்தபடி திரும்ப முயன்றான்.
ஆனால் அபியோ அசைய மறுத்து அவனின் சட்டையை கொத்தாக பிடித்தாள். ரிஷிக்கு உள்ளே பதற தொடங்கியது. அவன் அசையாமல் நின்றான், அவள் பேசட்டும் என்று.
அப்படியே நின்றவள் அவனின் கையில் இருந்து விடுபட்டு அவனை நேருக்கு நேர் நின்று கோபத்தோடு பார்த்தாள்.
" நான் ஏற்கனவே உன்னிடம் கூறினேன் அல்லவா ? கல்யாணத்திற்கு பிறகு யாராவது உன்னை உரிமை கொண்டாடிக்கொண்டு வந்தால் நான் மனுஷியாக இருக்க மாட்டேன் என்று. அப்போது அப்படி எதுவும் நடக்காது என்று சொன்னியே ஆனால் இன்று அவள் வந்து நிற்கிறாளே என் ரிஷியை என்னிடம் தா, விலகி போன்னு. நான் விலகி போகணுமா ? உன்னை விட்டு நான் விலகி போகணுமா ? " என்று அவனின் சட்டையை பிடித்து உலுக்க தொடங்கினாள்.
" அம்மு, அம்மு ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப், ப்ளீஸ்மா " என்று ரிஷி அவளை அமைதிப்படுத்த முயல, திடீரெண்டு அவனின் சட்டையை விட்டுட்டு கீழே மடிந்து இருந்து அழ ஆரம்பித்தாள்.
" என்னால முடியாது நந்து, முடியவே முடியாது, அதுக்கு நான் செத்தே போயிடுவேன். என்னால உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. உன்னை விட்டு விலகினா என் மூச்சே நின்னு போயிடும்" என்று அரற்றினாள்.
அவளின் அழுகையை பார்த்து ரிஷி முதல் முறை சந்தோசப்பட்டு நின்றான். இவனை போல நான் உன்னை காதலிக்கிறேன் என்று அன்பை காதல் என்ற வார்த்தையாக சொல்லாவிட்டாலும், அதன் உணர்வை அப்பட்டமாக காட்டும் அவளின் அழுகை அவனுள் சந்தோச பூக்களை மலர செய்தது.
ப்ரியாவுக்கு தான் கடன்பட்டிருப்பதாக நினைத்தான். ஒவ்வொருமுறையும் அவள் செய்யும் கலகம் தனக்கு நன்மையில் முடிவதை எண்ணி மகிழ்ந்தவன் குனிந்து மனைவியை எழுப்பி அவளை கையில் ஏந்தியபடி படுக்கையை நோக்கி சென்றான்.
அபியோ கோபம் அடங்காமல் இருந்தாள். அவளை படுக்கையில் இருக்க வைத்தவனிடம்
" எனக்கு ஸ்லீப்பிங் டேப்லெட் வேண்டும் " என்றாள்.
" நான் இருக்கும் போது அது உனக்கு எதற்கு " என்றவன் அவளை மெல்ல அணைத்துக்கொண்டு அவளின் இமையில் முத்தமிட்டான். அவளோ அவனை தள்ளிவிட்டாள். இதுவே தொடர்ந்து நடக்க அபி மெதுவாக அமைதியானாள்.
" அவளுக்கு பளார்ன்னு ஒன்று வைக்காமல் என்னிடம் கோபத்தை காட்டினால் என்ன அர்த்தம் ? நீயே விலக நினைத்தாலும் உன்னை விட்டுவிடுவேன்னா என்ன ? என்னை நீ யாருக்கும் விட்டுத்தர வேண்டாம், என்னை விட்டு நீ விலகவும் வேண்டாம். ஐ லவ் யூ பேபி. எங்கே நீயும் சுற்றிவளைக்காமல் என்னை போல நேரடியாக சொல்லு பார்க்கலாம் " என்று கண்ணால் சிரித்தான் ரிஷி.
" சாரி நந்து. அவள் பேசியபோது எனக்கு கோபம் வந்தது, ஆனால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அதை நினைக்க நினைக்க எனக்கு உன் மேல் தான் கோபம் வருகிறது. இதெல்லாம் என்ன நந்து. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு." என்றாள் அபி எழுந்து கட்டிலில் அறை முழங்கால் போட்டு இருந்துகொண்டு.
" சாரிடி செல்லம், இனி அவள் தொந்திரவு உனக்கு இல்லாமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு சரியா ? சரி இப்போ சொல் என் மேல் உனக்கு பிரியம் ஐ மீன் லவ் இருக்குதா இல்லையா ? அதைச்சொல் முதலில்." என்றான் அவனும் அவளைப்போல அமர்ந்துகொண்டு.
" போ நந்து நீ சரியான டியூப் லைட். உன்னை பிடிக்காமலா கல்யாணம் செய்திருப்பேன். ஆனால் நீ சொல்வது போல லவ் என்று நான் நினைக்கவில்லை அப்போது. ஆனால் இந்த நான்குமணி நேரத்தில் நான் புரிந்துகொண்டேன், எஸ் ஐ அம் லவ் வித் யூ. இப்படி எரியுது தெரியுமா அவள் பேசியதை நினைத்து." என்றாள் அபி.
அவள் எதிரே அமர்த்திருந்தவன் " பேபி ஐ லவ் யூ " என்றான் முகம் முழுவதும் பூரிப்புடன் அவள் முகத்தை கையில் ஏந்தி.
" ஐ லவ் டூ பேபி " என்றாள் அபி கண்ணீருடன் அவனை கட்டிக்கொண்டு.
கொஞ்ச நேரம் அங்கே எந்த சத்தமும் கேட்கவில்லை. இரு உள்ளம் சங்கமித்து தங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்ட களைப்பில் அமைதியாக இருந்தது.
" நேஹா ஒன்ஸ்மோர் ப்ளீஸ் " என்றான் ரிஷி.
" ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ " என்றாள் அபி பாதி கண்ணீர் மீதி சிரிப்புடன்.
சந்தோஷத்தில் அவளை இழுத்து தன்மேல் போட்டுகொண்டு கட்டிலில் சாய்ந்தவன் சத்தமாக சிரித்தான். " தாங்க்ஸ் டு ப்ரியா " என்றான்.
" என்ன ?" என்று கேட்டவள் அவன் மார்பிலேயே குத்தினாள்.
" ஏய் சாரி சாரி, சரி சொல்லு இன்று எப்படி தோன்றியது உனக்கு " என்று அவளை கீழே கொண்டுவந்து தன் கையால் அவன் தலையை தாங்கியபடி அவளை பார்த்து கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் அவனின் முகத்தில் ஒற்றை விரலால் கோலமிட்டவள்,
" நானே தொலைந்த கதை நானறியேன் மன்னவனே, காதல் நுழைந்த கதை கண்டறிவாய் காதலனே " என்று பாடினாள்.
அவளின் பதிலை பாடலாய் கேட்டவன் சொக்கி போய் அவளின் இதழில் ஒரு ஸேக்கன் கொடுத்தான்.
பிறகு " பதிலை நான் சொல்லவா ? உனக்கு அந்த ஜெய்யுடன் நிச்சயம் நடந்ததே அன்று. சரிதானே " என்றான் ரிஷி.
" இருக்கலாம் " என்றாள் அவள் சிரித்துக்கொண்டு.
" அப்படியென்றால் ?"
" அப்படியென்றால் அப்படிதான். ஒரு உறவு நம்முடன் இருக்கும் போது நமக்கு அதன் அருமை தெரியாது. அந்த ப்ரியா உன்னை காதலிப்பதாக கூறியபோது எனக்குள் எதுவும் தோன்றவில்லை, ஆனால் எனக்கு இன்னொருவனுடன் நிச்சயம் என்ற போது உலகமே சூனியமாக தெரிந்தது. காரணமே இல்லாமல் அவனை எனக்கு பிடிக்கவில்லை. அதற்கேற்றார்ப்போல எதேச்சையாக அவனை பார்த்தால் அவன் பார்வை சரியில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய், அவனை பிடிக்காமல் போனதால் மனம் அவனை வெறுக்க காரணம் தேடுவதாக நினைத்தேன், யாரிடமும் சொல்ல முடியவில்லை, தற்கொலை செய்யலாமா என்றுகூட நினைத்தேன். மோதிரம் மாற்றும் அன்று உன்னை தவிர என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. அப்புறம் எப்படியோ நீயே அவனை பற்றி கண்டுபிடிக்க, என் மனதின் பெரிய பாரம் இறங்கியது." என்றவள் சிறிது நிறுத்தி அவனிடம் கேட்டாள்.
" அன்று நீ ஏன் நீச்சல் குளத்தில் அப்படி நடந்துகொண்டாய், என்று யோசித்தேன், அதைவிட உன்னை எப்படி நான் அனுமதித்தேன் என்றும் யோசித்தேன். பஸ்சில் சால்வ். ஆனால் இதையெல்லாம் நான் நீ உன் காதலை கூறிய பிறகுதான் யோசித்தேன் " என்றாள் அபி.
சிரித்தவன் " நேஹா இப்போது மணி என்ன தெரியுமா ? விடியற்காலை மூன்று மணி. உலகத்திலேயே தன் காதலை இந்த நேரத்தில் கூறிய பெண் நியாகத்தான் இருப்பாய்." என்றவன் அவளை அணைத்து முத்தமிட்டான். பிறகு இருவரும் தங்கள் மனதில் தோன்றிய எண்ணத்தை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
**********
மறுநாள் காலை கண்ணாடிமுன் அமர்ந்துகொண்டு இருந்த அபி ரிஷியிடம்
"நந்து, கண்ணன் அத்தானிடம் ஒரு மீட்டிங் அரேஞ்சு பண்ண சொல்லியிருக்கிறேன். கம்பெனிக்கு ரா மெட்டிரியல் சப்லே செய்யும் எல்லோரையும் அப்புறம் பேங்க் மேனேஜர் என்று எல்லோரையும் வைத்து ஒரு மீட்டிங் போட்டுட்டா 25% பிரச்சனை தீர்ந்தமாதிரி. அவர்களில் ஒத்துழைப்பு கிடைத்தால் 50% ஓகே. அப்புறம் அந்த பார்ட்னரையும் பார்த்து பேச வேண்டும். அவரின் மகனையும் வர சொல்லியாச்சி,எப்படி பார்த்தாலும் கொஞ்சம் பணம் புரட்டியாக வேண்டும். என் அக்கவுண்டில் இருந்து எடுக்க முடியுமா ?" என்று கேட்டாள்.
" எடுக்க முடியாது. அது எல்லாம் பிக்ஸில் இருக்கு. என்னிடம் வேணா எடுக்கலாம். ஆனால் எவ்வளவு என்று முன்கூட்டியே தெரியவேண்டும் " என்றான் அவன் சட்டையின் கை பட்டனை போட்டவாறு.
" உன்னிடம் இருந்து வேறொரு உதவி தேவைப்படுது. தொழிலில் மிக பெரிய மூலதனமே நம்பிக்கைதான். கண்ணன் அத்தான் அதைத்தான் முதலில் தொலைத்துவிட்டு நிற்கிறார். நீதான் மீட்டிங்கில் எல்லோருக்கும் அஸுரன்ஸ் கொடுக்கப்போகிறாய் " என்றாள் அபி.
" பார்த்துக்கொள்ளலாம், நீ அங்கே போ, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது நான் ஒருமணி நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்றான் ரிஷி.
திரும்பியவள் உதட்டை பிதுக்கி தன் மறுப்பை தெரிவித்தாள்.
" என்ன ?" என்றான் ரிஷி சிரித்துக்கொண்டே.
" எனக்கு தனியாக ஆபீஸ் போகவே விருப்பம் இல்லை" என்றாள் அபி சோகமாக.
" எனக்கு ஆபீஸ் போகவே விருப்பம் இல்லை, ஆனால் என்ன செய்வது ? போயே ஆகவேண்டிய கட்டாயம்." என்றான் ரிஷி.
" ஆமாம் இல்லையா ? ஆனால் நான் தனியாக போகமாட்டேன், உன்னுடன் தான் வருவேன் " என்றாள் அவள்.
" எப்போது மீட்டிங் "
" 11 மணி "
" சரி நாம் இருவரும் சேர்ந்தே போகலாம் " என்றான் ரிஷி தீர்வாக. அப்போது அவள் முகம் பூவாக மலர்ந்தது.
"ஸோ ஸ்வீட் " என்று அவனுடன் கிளம்பினாள் அபி. கதவருகில் சென்றவளை நேஹா என் பைலை காணவில்லை கொஞ்சம் எடுத்து தரியா ?" என்று கேட்டுக்கொண்டு தன் போனை பார்த்துக்கொண்டிருந்தான்.
" எந்த பைல் " என்று அருகில் வந்தவளை பின்னே இருந்து கட்டிப்பிடித்தான் ரிஷி.
" ஏய் விடுங்க ப்ளீஸ், அறை மணி நேரமாக ரெடியாயிருக்கிறேன், புடவை கட்டுவது எனக்கு அவ்வளவு சுலபம் இல்லை " என்று நெளிந்தாள் அபி.
" பின்னே எதற்கு கட்டினாய் " என்றான் அவள் காதோடு இதழால் இழைந்தபடி.
" மீட்டிங் என்று கட்டினேன் " என்று கூறும் போது அவள் வாய் உளறியது.
" நீ கட்டியது தப்பு " என்றான்.
"ஏன் "
" உன்னை புடவையில் பார்க்கும் போது எனக்கு போதை தலைக்குள் ஏறுகிறது " என்றவனின் கை அத்துமீறியது.
அபியோ சரியாக சுவாசிக்க முடியாமல் திணறினாள். அவன் கை இடையை தாண்டி எல்லை மீற " ப்ளீஸ் நேரமாகுது " என்று கூற நினைத்து குரல் வெளியே வராமல் காற்றுதான் வந்தது. அவளின் கால் தன் பலத்தை இழந்து தள்ளாட, ரிஷி அவளை திருப்பி அவளின் இதழின் வழியாக பலத்தை ஊட்டினான். அபி மெய்மறந்து நின்றது சில நிமிடங்கள்தான். நினைவுக்கு வந்தவள் முழு பலத்தோடு அவனை தள்ளிவிட்டாள்.
ரிஷி அவளின் செய்கையில் அதிர்ந்து நின்றான்.
Hi
What happened
Abi reaction ennachu
R u ok??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top