மாலை சூடும் வேளை-28

Advertisement

laxmidevi

Active Member
மாலை -28

பாடல் வரிகள்.

காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா...

தங்கள் வீட்டிற்கு வந்த விக்ரமையும் மஙகையையும் வாசலுக்கே வந்து வரவேற்றனர் விஜய்யும் மலரும். விஜயின் அப்பாவிடமும் அம்மாவிடமும் தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு முறையாக அழைப்பு விடுத்தான் விக்ரம்.பின்
அனைவரும் ஒன்றாக தங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.மங்கையை அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள் மலர்.

விஜய்யும் விக்ரமும் அந்த கொலை வழக்கினை பற்றி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

எப்ப குலுமணாலி கிளம்புற விஜய் என்றான் விக்ரம்.

வரும் வெள்ளியன்று கோவிலில் பூஜை உள்ளது.அது முடிந்தவுடன் கிளம்பனும் என்றான் விஜய்.

விஜய் வாங்கியிருந்த தோட்டத்திற்குப் பக்கத்தில் தான் அந்த கொலை நடந்திருந்தது. நான் அங்கு வேலை செய்யும் நம் ஆட்கள் கிட்ட விசாரித்துப் பார்க்கிறேன் என்று கூறினான் விஜய் .

சரிடா விஜி கொஞ்சம் வேலை இருக்கிறது பிறகு பார்க்கலாம் என்று கூறினான்.

மங்கை கிளம்பலாமா என்று அழைத்தான் விக்ரம்.

மாமா உங்களுக்கு வேலை இருந்தா நீங்க போங்க நான் மங்கையை அப்புறமா எங்கள் காரிலேயே அனுப்பி வைத்து விடுகிறேன் ப்ளீஸ் மாமா கொஞ்ச நேரம் என்னுடன் இருக்கட்டும் என்று கேட்டாள் மலர்.

சரி மா பாத்து பத்திரமாக இரு என்று கூறினான் விக்ரம் தன் மனைவியிடம்.

நான் உங்கள மனைவியை கடித்தா சாப்பிட போறேன் பத்திரமாக இரு என்கிறீர்கள் என்று கேலி பேசினால் மலர் .

அதற்கு விக்ரம் தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.

விஜயும் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அவனுடைய அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான்.

பெண்களிருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் . பெண்கள் ஒன்று சேர்ந்தால் பேசுவதற்கு விஷயமாய் இல்லை!??

அப்போது விஜய்யின் சித்தி சுமதி அதாவது விஜய் தந்தையின் தம்பி மனைவி அங்கு வந்தார்.

அவரிடம் இது மங்கை என் மாமா விக்ரமின் மனைவி என்று அறிமுகப்படுத்தினாள் மலர்.

ம்ம் தெரியும் மலர்மா. மங்கையே உன் அப்பா ராமநாதன் அம்மா ,மாது, பாட்டி எல்லோரும் நலமா என்று கேட்டார் சுமதி.

உங்களுக்கு அப்பாவை தெரியுமா என்றாள் மங்கை கேள்வியாக.

நல்லா தெரியும். ஒரு வகையில் நானும் உன் அப்பாவும் உறவினர்கள் தான் .அண்ணன் தங்கை முறை வரும் நான் முதலில் உன்னை விஜய்க்கு பெண் கேட்டு இல்லை... பேசியே முடிக்கலாம் என்றுதான் நானும் விஜயின் அம்மாவும் எண்ணியிருந்தோம் ஆனால் எங்களுக்கு முன் முரளிதரன் மாமா முந்திக்கொண்டார். இல்லை உன்னை விஜய்க்கு பேசி முடித்து இருப்போம். அதன் பின்புதான் மலரை பார்த்தோம்.விஜய் மலரை விரும்பியது அவன் பெற்றோருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் இதை அரென்ஸ்ட் மேரேஜ் என்று தான் தெரியும்.எது எப்படியோ ரத்தினம் போல் இரண்டு மருமகள்கள் கிடைத்திருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது என்று இருவருக்கும் திருஷ்டி கழித்தார் அந்தப் பெண்மணி.

இதைக் கேட்ட மங்கை ஒருவேளை விஜய்க்கு பேசி முடித்து விடுவார்களோ என்றுதான் தன்னை அவசரமாக திருமணம் செய்து கொண்டாரோ என்று மனதில் நெருடியது.

இல்லை .. இதைப்பற்றி அவரிடம் நேரடியாகக் கேட்டு விட வேண்டும் என்று எண்ணினாள் .

பின்பு மலர் மங்கை விஜய் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

கொஞ்ச நேரம் கழித்து மங்கை வீட்டுக்கு கிளம்பலாமா என்று கேட்டாள்.

தன் காரிலேயே மங்கையை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் விஜய்.

தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.இரவு ஏழு மணி போல் வந்த விக்ரம் தன்னுடைய ஸ்டரி ரூமிற்கு புகுந்து கொண்டான்.

வெளியே வரட்டும் கேட்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் வராமல் இருக்கவும் தானே உள்ளே சென்று உங்களிடம் ஒன்று பேச வேண்டும் என்றாள்.

கொஞ்சம் வேலை இருக்கிறது அப்புறம் பேசலாமா என்றான் விக்ரம்.

இல்லை நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றாள் பிடிவாதமாக.

சரி சொல் ..

என்னை விஜய் மாமாவுக்கு பெண் கேட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டால் மங்கை.

ம்ம் தெரியும் என்றான் அவன்.

எப்போது என்றால் மங்கை.

திருமணத்திற்கு முன்னமே தெரியும் என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

இதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பது என்று அவளுக்கு தெரியவில்லை. நான் ஒரு விஜய் மாமாவை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதால் நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டிர்களா என்று எவ்வாறு கேட்க முடியும் அதுவும் தன் கணவனிடம். அவர் ஏதும் கூறவில்லை .ஒருவேளை அப்படி எதுவும் இருக்காது என்று எண்ணினாள். அது ஆசை கொண்ட மனிதன் எதிர்பார்ப்பாகவே தோன்றியது அவளுக்கு.

மலரும் விஜயம் விக்ரமின் வீட்டிற்கு விருந்துக்கு வந்து விட்டு தேன்நிலவிற்கு குலுமணாலி சென்றனர்.

எங்காவது என்னை வெளியில் அழைத்துச் செல்லுங்கள் ஆனந்த். எப்ப பார்த்தாலும் ரூமிலேயே இருந்துட்டு என்று அவனிடம் திட்டினாள் மலர்.

சுற்றி பார்ப்பதற்காகவா வந்திருக்கேன் என்று கேட்டு கண்ணடித்தான் அவன்.

பிறகு எதற்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க வீட்டிலேயே இருக்கலாம் இல்ல என்று அவனிடம் கோபமாக கேட்டாள் மலர்.

அங்கே இருந்தால் யாராவது விருந்துக்கு வாங்க பூஜைக்கு வாங்கனு தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க. என் ஆசை மனைவியை கொஞ்ச விடுறாங்களா கொஞ்ச நேரமாவது என்று மலரின் இதழில் கவிதை எழுதினான் விஜய்.

பின் இருவரும் காதல் பாடம் படித்தனர்.

ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டும் கெஞ்சிக் கொண்டும், தங்கள் தேனிலவை முடித்து விட்டு கோவை வந்து சேர்ந்தனர் .

பின் விஜய் தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினான். மலர் தன் தந்தையின் அலுவலக வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படியாக இருவரும் இரு மாதங்கள் முடிவடைந்திருந்தது மங்கைக்கு அவளுடைய தேர்வுகள் எல்லாம் முடிந்திருந்தன. பிராஜக்ட் சப்மிஸன் மட்டும் தான் பாக்கி இருந்தது.

விக்ரம் மங்கையுடனான உறவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை பின்னடைவும் இல்லை.

இன்னும் ஒரு மாதத்தில் தன்னுடைய படிப்பு முடிந்து விடும். விக்ரம் கூறியதுபோல தங்களுடைய வாழ்க்கை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அவரே முடிவெடுக்கட்டும் என விக்ரமின் பதிலுக்காக காத்திருந்தால் மங்கை.

இங்கு நடந்தது போல் இன்னொரு மாநிலத்திலும் ஒருவன் கொலை செய்யப்பட்டிருந்தான். ஆனால் கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை இரு மாநில போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது சாதாரண கொலை வழக்கு தான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் பார்த்துக்கொள்வார் ஆனாலும் இதில் ஏதோ தவறு இருப்பதாக பட்டது விக்ரமிற்கு.எனவே அவனே விசாரணையில் இறங்கியிருந்தான். அந்த வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தான் விக்ரம்.

ஒருநாள் கம்ப்யூட்டரில் பிராஜக்ட் வேலை செய்துகொண்டிருந்த மங்கை களைப்பாக இருக்கவே அந்த மேஜையிலேயே தலை வைத்து படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த விக்ரம் தூங்கும் தன் மனைவியின் அழகை ரசித்தான். தூங்கும்போதும் அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை அவனை ஈர்த்தது.இப்போதெல்லாம் இன்னும் கொஞ்சம் அழகாக தெரிந்தால் அவனுக்கு.

எப்பவும் போல அவளை தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்தவன் அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டு அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
பின் வேலை இருக்கவே அவளை பிரிய மனமில்லாமல் தன் ஸ்டடி ரூமிற்கு சென்றான் .

தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்து வந்து பார்க்கும் போதும் அவள் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். விக்ரம் குளித்து முடித்துவிட்டு வரும்போது மங்கை எழுந்து அமர்ந்திருந்தாள் .

நான் தான் தூங்கி விட்டேன் நீங்களாவது என்னை எழுப்பக் கூடாதா? இன்னும் ப்ராஜெக்ட் வேலை முடியவில்லை .அதில் ஒரு சின்ன எரர் அது சரியாகவே மாட்டேங்குது என்னவென்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை என்று சிறு குழந்தை என அவனிடம் புலம்பினாள்.

நான் வேணா பார்க்கவா என்று கேட்டான் விக்ரம்.

உங்களுக்கு தெரியுமா நீங்கள் சரி செய்து தருவீர்களா என்றால் கண்ணில் மலர்ச்சியுடன் ஆவலாக.

முயற்சி செய்து பார்க்கிறேன்.

பின விக்ரம் அவருடைய ப்ராஜெக்ட் சரிசெய்து நல்லபடியாக முடித்துக் கொடுத்தான்.

ரொம்ப தேங்க்ஸ் என்று அவனை கட்டிக்கொண்டாள் அவன் மனைவி. நீண்ட நாட்களுக்கு பின் தன் மனைவியின் அருகாமை அவனுக்கு பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்தியது . விக்ரமும் அவளை அணைத்துக்கொண்டான்.பின் இது இத்துடன் நிக்காது என்று தன் எண்ணத்திற்கு தடை செய்து சாப்பிட போகலாமா என்ற அவளின் தோள்மேல் கைபோட்டு தன்னுடன் சேர்த்தணைத்தவாறே அழைத்து சென்றான் விக்ரம்.

இவ்வளவு நேரம் போராடி தன்னால் முடியாததை தன் கணவன் சரி செய்த மகிழ்ச்சியில் அவளுக்கு வேறு எதுவும் மனதில் பதியவில்லை.

இருவரும் மகிழ்ச்சியான மனநிலையில் சாப்பிடச் சென்றனர். இவர்களது வாழ்க்கை சின்ன சின்ன தீண்டல்களுடன்,செல்ல சண்டைகளுடனும் தெளிந்த நீரோடையாக அமைதியாக சென்றது

விக்ரமிற்கு அந்த போன் கால் வரும் வரை ?

மாலை தொடுக்கப்படும்...
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மி தேவி டியர்

மங்கைக்கு இதே வேலையா போச்சு
முதலில் மலர் பெண்ணை விக்ரம் லவ் செஞ்சானான்னு ஒரு சந்தேகம்
இப்போ விஜய்க்கு இவளை பெண் கேட்டாங்களான்னு ஒரு குழப்பம்
இவளே லூசுத்தனமாக குழம்புவாள்
இதிலே சொந்தக்காரங்க வேற ஏழரையைக் கூட்டுறாங்க
 
Nasreen

Nice ud
Policekaranalae eppovumae paraparapa thaan irupanga, enna Vikram konjam mangai kitta avan manasa thiranthu pesiirukalam..
Enna seiyya rendu perum avanga Anba purinjikka problem varanum polavae..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top