உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 11

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

அடுத்த பகுதியுடன் வந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். சென்ற பகுதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 11
rana-and-sai-pallavi.jpg

மறுநாள் பள்ளி முடிந்து வந்ததும் சிறிது நேரம் பாடங்களை படித்தவள் இரவு வழக்கம்போல் உறங்கச் செல்லும் முன் முகநூலை திறக்க, அவள் ஆச்சரியப்படும் வகையில் அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது, அன்றைய நிகழ்ச்சியை தாங்கிக் கொண்டு. அதனைக் கண்டவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவன் அனுப்பியதை முழுவதும் கேட்டவள் அவனுக்கு நன்றி கூறி செய்தியனுப்பினாள். அதற்கு புகழும் பதிலளிக்க, மகிழ் அவனோடு பேசலாமா வேண்டாமா என்று தனக்குள்ளே பட்டிமன்றம் செய்யலானாள்.

மூளை சொல்வதை மனம் என்று கேட்கிறது? ஆசை கொண்ட மனம் அவளை வழிநடத்த, புகழிடம் பேச ஆரம்பித்தாள்.

“உங்க பேர் தமிழ்ன்னு வைச்சிருக்கீங்கள்ள. முழு பெயரே தமிழ் தானா?”

இதனை அவள் கேட்கும்போது அவள் உள்மனமே அவளை வருத்தெடுத்தது, ‘அடியே! அவன் முழுபெயர் என்ன, எல்லாமே உனக்கு தெரியும். அப்படியும் இப்படி கேட்டா என்ன?’ என்று. அதனை விலக்கியவள், அவன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“முழு பெயர் தமிழ் இல்லை. இப்போ ஷோக்காக மட்டுமே இந்த பெயர்” என்றவன் அதற்கும் மேல் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

“ஓ… அப்போ உங்க பெயர்?” என்று அவள் கேட்டாள். அவன் தன்னிடம் உண்மையாய் இருக்கிறானா என்று தெரியவேண்டியிருந்தது அவளுக்கு.

“தமிழ்வேந்தன்” இதனைக் கேட்டதும் அவள் மனம் சிறு சுணக்கம் கொண்டது. அவன் முழுபெயர் இதுவல்லவே! ஆனால், அவள் தன் அடையாளத்தையே மறைத்து தான் அவனிடம் பேசுகிறாள் என்பதை அவள் மனம் தற்போது வசமாக மறந்துவிட்டது.

“நல்ல தமிழ் பெயர், என்னோடதைப் போல. ஏன் இந்த பெயர் உங்களுக்கு வெச்சாங்க?”

“உங்க பெயர் தமிழ் பெயரா?” என்று அவன் கேட்க, தலையிலடித்துக்கொண்டவள், “என் பெயர் நல்ல பெயர்ன்னு சொன்னேன்” என்றவள் தான் கேட்டதையே மீண்டும் ஒருமுறை கேட்டாள்.

“அப்பா அம்மா தான் வைத்தார்கள். ஏன் என்று அவங்களிடம் தான் கேட்கனும்” என்று அவன் கூற, அதன்பின் அவர்களின் பேச்சு அவனது அன்றைய நிகழ்ச்சியை நோக்கி திரும்பியது.

இவ்வாறு தினமும் இரவு இருவரும் அவன் நிகழ்ச்சியைப் பற்றி பேசினர், அவன் தொகுத்து வழங்கும் விதம், அவன் கூறிய கருத்துகளைப் பற்றிய தன் பார்வை என்று முதலில் ஆரம்பித்தது விரைவில் அரசியல், நாட்டு நடப்பு, உலக நடப்பைப் பற்றி திரும்பியது. இருவருக்குமே இதில் ஆர்வம் அதிகம் என்பதால் பேசுவதற்கும் நிறைய இருந்தது. (வயலும் வாழ்வும் மறந்துட்டாங்க!)

சில நாட்களிலேயே இருவரும் மற்றவரிடம் அன்றைய முக்கியமான விடயங்களைப் பற்றிய கருத்து பரிமாற்றத்தை செய்தாலொழிய அன்றைய நாள் முழுமையடையாதென்ற நிலைக்கு வந்திருந்தனர்.

சில சமயங்களில் குழந்தைத்தனமாகவும், சில சமயங்களில் முதிர்ச்சியடைந்தவளாகவும் பேசி தமிழை அவளைப் பற்றி கணிக்க முடியாதபடி செய்துகொண்டிருந்தாள் மகிழ்.

அவனுடனான பொழுதுகளில் தன்னை அவனிடம் தொலைத்துவிடுபவள், கீர்த்தியை பார்க்கும்போதெல்லாம் தான் செய்வது தவறோ என்று தனக்குள்ளேயே மறுகிவிடுவாள். கீர்த்தியிடம் சொல்ல எண்ணும்போதெல்லாம் ஏதோ ஒன்று அவளை தடுத்துவிட, கீர்த்திக்கு இவ்விடயம் தெரியாமலேயே போனது.

மகிழும், அவனிடம் தோழமையாக தானே பழகுகிறேன் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். ஆனால், அவள் உள்மனம் அறிந்தே இருந்தது புகழின் மேல் அவள் கொண்ட காதலை.
*******
புகழ் முதன்முதலில் மகிழிடம் இருந்து வழக்கமான நேயர்களில் ஒருவர் என்று மட்டுமே நினைத்தான். ஏனென்றால், சில சமயங்களில் தங்கள் எண்ணங்களையோ நிகழ்ச்சியில் அவன் கூற வேண்டும் என்று தாங்கள் நினைப்பதை அவன் எஃப்.எம்.மின் உள்பெட்டியில் அல்லது அதன் தனிப்பட்ட பக்கத்தில் கூறுவர்.

புகழ் நடத்தும் நிகழ்ச்சியானது காதலைக் குறித்தது. இதில் பலர் தங்களது அனுபவங்களைக் குறித்து கூறுவார்கள். சில சமயம் ஒரு கேள்வியெழுப்பி அதற்கு பதிலை தொலைபேசியிலும் முகநூலிலும் பகிரச் சொல்லுவான். ‘அவ்வாறு ஒரு செய்தியோ? தனது பக்கத்தில் இதுவரை யாரும் இவ்வாறு கூறியதில்லையே? ஆனாலும் நிகழ்ச்சி முடிந்துவிட்டதே!’ என்று அவன் யோசித்தவாறே அதனை திறக்க, “ஹாய்!” என்ற ஒற்றைச் சொல் மட்டும் வந்திருக்க, யாராக இருக்கும் என்று தெரியாததால் தனக்கு தெரிந்தவர்களாக இருக்குமோ என்றெண்ணி பதிலளித்தான்.

யாரோ தன் நிகழ்ச்சியைப் பற்றி கருத்து கூறப்போகிறார்கள் போல என்று நினைத்தவன் யூசர்நேமை காண, அதிலிருந்து பெண் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அறிய இயலவில்லை. அதற்குள் மகிழிடம் இருந்து வந்த பதிலில் தன் பின்னே சுற்றும் பலரில் ஒருவர் போல என்று நினைத்துக்கொண்டான் புகழ். அவன் மனதில் அவளைப் பற்றிய முதல் விதை நன்றாக விழவில்லை.

அவன் படிக்கும் என்.ஐ.டி.யில் முன்பே அவனுக்கு பல விசிறிகள். இதில், அவன் தற்போது ஆர்.ஜேவாகவும் பணிபுரிய தொடங்க, அவனுக்கு திருச்சியில் இருந்தும் சில விசிறிகள் முளைத்தனர். நல்ல வேளையாக பலருக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாததால் தப்பித்தான். இருந்தும் சிலர் அவன் படிக்கும் கல்லூரியை கண்டுபிடித்து அங்கே வந்தும் நின்றனர். அதில் ஒருவர் போலும் என்று நினைத்தவன் எண்ணப்படியே அடுத்த பதிலும் வந்தது.

அதனை கண்டவன் ஒரு இளக்கார சிரிப்பை உதிர்த்து அவன் கல்லூரியும் வந்துவிடவே இறங்கி தன் விடுதிக்கு சென்றுவிட்டான். அத்தோடு அதனை மறந்தும் போனான்.

அடுத்த நாள் இரவு செய்தி வந்ததற்கான ஒலி வர, அவள் தான் அனுப்பியிருக்கிறாள் என்று பார்த்ததும் மானசீகமாக தன் தலையில் கை வைத்தவன், ‘இவளிடம் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம் போலவே!’ என்று நினைத்தவாறே அதனை திறந்தவன், அவள் கேட்ட உதவியைக் கண்டு குழம்பினான்.

அவள் கேட்டது ஒன்றும் அவனுக்கு செய்யமுடியாத உதவி அல்ல. கீர்த்திக்கு அனுப்புவதை இங்கும் அனுப்பினால் முடிந்தது. ஆனால், அவள் ஏன் இவ்வாறு கேட்கிறாள் என்று அவன் அறிய வேண்டியிருந்தது.

அதனால் அவன் பேச்சை வளர்க்க, அவள் கூறிய பதில் முன்னுக்குப்பின் முரணாக தோன்றியது அவனுக்கு. இருந்தும் அடுத்த நாள் அவன் ஏன் தன் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை அவளுக்கு அனுப்பினான் என்று இன்று வரை அவனுக்கு புரியவில்லை. ஆனால், அதனை நினைத்து அவன் சந்தோஷப்படாத நாளும் இல்லை, வருந்தாத நாளும் இல்லை.

அவளிடம் இருந்த ஏதோ ஒன்று அவனை அவள் புறம் இழுத்தது, அவனே அறியாமல்.

இருவரும் பேசத்தொடங்க, அதில் பலவாறு அவனை குழம்படித்தாள் அவள், தன்னைப் பற்றி ஒன்றும் அவனிடம் உரைக்காமல்.

அவளுடன் விவாதங்களில் அவன் ஈடுபடும் நாட்களில் பல நேரம் அவளுக்கு ஒரு விடயத்தினைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்து இருந்தது அவனைக் கவர்ந்தது. இதனாலேயே சில சமயங்களில் அவளிடம் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி கூறி அதற்கான அவள் தரப்பு பார்வையை அறிந்து கொள்வான்.
*****
உண்மையான அன்பிற்கு இடம் பொருள் என்று எதுவுமே இல்லை. இதயம் துடிக்கும் இடைவெளியோ மின்னல் வெட்டும் இடைவெளியோ மட்டுமே போதும் அது தோன்றுவதற்கு.

காதல் தோன்றும் தருணம் யாரும் அறிவதில்லை தான். ஆனால், காதலில் விழுந்தவர் யாரைக் கேட்டாலும் அவர்கள் காதலை உணர்ந்த தருணத்தைக் கூறிவிடுவர். அத்தகைய தருணம் புகழுக்கும் வாய்த்தது.

ஒரு முறை அவனுக்கு வந்த ஒரு நபரின் காதல் பற்றிய கடிதத்தைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தான் புகழ்.

அவர் மிகவும் ஏழையான குடும்பத்தை சார்ந்தவர்; குடும்பமே அங்கே இருக்கும் வயல்களில் கூலி வேலை செய்தே பிழைப்பை நடத்துகிறது. அவ்வாறே இவரை படிக்க வைத்ததும். தற்போது அவர் ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்தாலும், தன் படிப்பிற்காகவும் குடும்ப செலவிற்காகவும் வாங்கிய கடனை அடைக்க வேண்டும். அதன் பின் தான் சேமிப்பு எல்லாம். அவர் ஊரில் உள்ள ஒரு பெண்ணையே அவர் காதலிக்க, அந்த பெண் அதனை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. ஆனாலும், அவள் செய்கைகள் இவரை காதலிப்பது போலவே இருந்தது. அவர் அந்த தைரியத்தில் அந்தப் பெண் வீட்டில் பெண் கேட்டு நிற்க, அவர்கள் மறுத்துவிட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், அவன் குடும்ப சூழ்நிலை. பெண்ணும் எதுவும் மறுப்பு கூறவில்லையாம். தற்போது அந்த பெண்ணிற்கு வேறிடம் பார்த்து திருமணமும் முடித்துவிட, தன் காதல் தோல்வி கதையை கடிதத்தில் வரைந்திருந்தான் அந்த ஒருதலை/இருதலை காதலன்.

இதனைக் கேட்டதும் மகிழ் முதலில் சொன்னதோ, “பாவம் அந்த அண்ணா! ஆனாலும் அந்த பொண்ணு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். கொஞ்ச காலம் மட்டும் இழுத்து பிடிச்சு சேமிச்சு வெச்சு கடனை அடைச்சா அது முடிஞ்சதும் நல்லாவே வாழலாமே! அது மட்டும் இல்லாம, தோட்ட வேலை செய்றவங்கன்னு சொல்றீங்க. அவங்களுக்கு சில சமயம் காய்கறி, பழம் எல்லாம் சம்பளத்துக்கு பதிலா தருவாங்க இல்ல. காய்கறி செலவு மிச்சம். விக்குற விலைவாசிக்கு அது ஒரு வகைல லாபம் தான?” என்று அவள் கேட்க, அதனைப் படித்த புகழ் சிறிது நேரம் பேசவே இல்லை.

மகிழ் எதையும் வேறு கோணத்தில் சிந்திப்பவள் என்று அவன் அறிந்திருந்தான் தான். ஆனால், அவளது இத்தகைய பதிலில், எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் அதில் இருக்கும் நன்மையை காணும் அவள் குணத்தில் தன் இதயத்தை அவளிடம் இழந்து காதலில் விழுந்தான் புகழ்.

கடைசியில் மகிழ் புகழிடம் தனக்கு என்ன வேண்டும் என்று நினைத்தாளோ அது நிகழ்ந்தே விட்டது.

ஆனால்!

ஆங்கிலத்தில் ‘STAR-CROSSED LOVERS’ என்று ஒரு சொல் உண்டு. அதாவது, வாழ்வின் கடைசி வரை அவர்களை துரதிஷ்டம் துரத்த, கடைசிவரை சேராமலேயே போன காதலர்களை அவ்வாறு குறிப்பிடுவர். நம் ஊரில் அம்பிகாவதி-அமராவதியை குறிப்பிடுவது போல. பிரிந்தவர் காதல் மட்டுமே உலகம் நினைவில் கொள்ளும்.

புகழ்-மகிழின் காதலும் உலகம் நினைவில் கொள்ளும் லிஸ்டில் சேருமா? அல்லது அவர்களும் அவர்கள் கொண்டாடும் வகையாக மாறுமா?

காத்திருந்து பார்ப்போம்!
 
ChitraPurushoth

New Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

அடுத்த பகுதியுடன் வந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். சென்ற பகுதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 11
View attachment 6090

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top