இதயம் இடம் மாறியதே 10

Advertisement

Indira75

Active Member
வடிவாம்பாள் அனைவரிடமு
பேசவேண்டும் என்று கூறியதும் மீண்டும் அனைவரும் அமர்ந்தனர். டிவாம்பாள் ராஜலிங்கத்திடம் சென்று மாமா, நீங்க போயி செத்த படுக்க ரீங்களா என்றதும், அவர் சரி என்க, அவரை அழைத்து போய் துணி மாற்ற வைத்து படுக்க வைத்துவிட்டு அறைக்கதவை மூடிவிட்டு வந்தார்.

வந்தவர் சோபா வில் அமர்ந்தபடி நல்ல படியா எங்க கடமையை முடிச்சுட்டோம். எனக்கும் அய்யனுக்கும் ஒரு ஆசை இருக்கு கண்ணு, என்று சொல்லி உலகநாதனை பார்க்க, அவர் என்னம்மா நீங்க என்னனு சொல்லுங்க, அதை நாங்க கண்டிப்பா நிறைவேற்றுவோம் மா என்று சொன்னபடி, என்ன விசு என்க, கண்டிப்பாங்க?
சொல்லுங்க என்றார்.

அய்யன் நல்லா இருக்கும் போதே தேன்மொழி க்கு ஒரு கண்ணாலம் பண்ணி பார்க்கணும நு ஆசைபடராங்க. அவளுக்கு இன்னும் ரெண்டு வருசம் கழிச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணி இருந்தோம். அதான் உங்க முடிவு என்னனு என்று தயங்கினார்.

அம்மா நான் முதல்லயே சொன்னேன் உங்ககிட்ட, சீக்கிரமா தேனுக்கு கண்ணாலம் பண்ணிடலாம்னு, ஆனா நீங்க தான் அவ பேச்சை கேட்டு அவளை படிக்க சென்னைக்கு அனுப்பி வச்சிங்க. அதனால் உங்க முடிவில் எனக்கு சந்தோசம் தான் மா என்றார் உலகநாதன்.

விஸ்வநாதன் ஆமாங்கம்மா, மூன்று வருசம் முடிஞ்சுது, ஒரு வருசம் தான் பாக்கி. அதனால் இப்ப பார்க்க ஆரம்பிச்சா எப்படியும் ஒரு ரெண்டு மூணு மாசம் ஆயிடுங்கம்மா. நல்ல மாப்பிள்ளையா , நம்ம தேனுக்கு பிடிச்ச மாதிரி, அவளை நம்மளை விட நல்லா பார்துக்கிறவரா இருக்கணும்.

வடிவாம்பாள் சந்தோசத்துடன் தலையை
ஆட்டியவர், எனுங்க மாப்பிள்ளை நீங்க எதுவும் சொல்லல என்க, அத்தை நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோசம் தாங்க என, சரிங்க, தேனு கல்யாணத்துக்கு எப்படியும் கார்த்தி வருவான். கார்த்தி வந்ததும் அவனுக்கும் தாமரைக்கு நிச்சயம் பண்ணிடலாம். அவன் போயிட்டு மறுபடி 10 மாசம் கழித்து வரும்போது அப்போ கார்த்திக்கும் தாமரைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம் என்றவர் அதுக்குள்ள தாமரை உம் படிப்பை முடிசூடும் என்றவர்,இல்லன்னா என் பேரன் ஒத்துக்க மாட்டான். என்ன சொல்ற பூங்கொடி என்க, பூங்கொடி சந்தோசத்துடன் சரிங்கம்மா அப்படியே பண்ணிடலாம், என்க மணிமாரனின் முகம் புன்னகையில் விரிந்தது.

நாளைக்கு காலைல ஜோஸ்யற வர சொல்லியிருக்கிறேன். அவர் வரட்டும், தேன் மொழி ஜாதகத்தை குடுத்து பாத்துட்டு அப்புறம் தரகரை வர சொல்லலாம். என்றவர் தமிழிடம், கோமதியிடம் இதை பற்றி பேசியவர் , சித்ராவின் வளைகாப்பு பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர். . அம்மா அப்போ நானும் அவரும் புறப்படுகிரோம் என பூங்கொடி கிளம்ப, என் கண்ணு ரெண்டு நாள் இருந்துட்டு போலாம் இல்ல என, இல்லைங்கம்மா, அங்க அத்தை தனியா அல்லாடிட்டு இருப்பாங்க. சித்ரா வளை காப்புக்கு வரும்போது ரெண்டு நாள் முன்னாடியே வர்ரேன்ங்க என்றாள். மணிமாறநும் அனைவரிடமும் விடை பெற,

தமிழரசி முருகா என்றழைக்க, அவன் கூடை நிறைய புதிதாக பறித்த காய் கறிகள் மற்றும் கீரை, தேங்காய் மூட்டை என கார் ல் ஏற்ற, பூங்கொடி மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள். பூங்கொடி யம் ஒரு பெரிய விவசாய குடும்பத்திற்கு தான் வாழ்க்கை பட்டிருந்தஆர். எனினும் தன் தாய் வீட்டில் இருந்து செல்லும் காய்களில் ருசி அதிகம் ஏனெனில் அதில் அவர்களின் அன்பும் பாசமும் உள்ளது அல்லவா.

இங்கு எல்லாம் இப்படியிருக்க இந்த விசேசங்களின் மையக் கருவான நாயகி தேன்மொழி என்ன செய்ய போகிறாள் என பார்ப்போம்.

அங்கே கல்லூரியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அரவிந்தன் தான் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான். பிஸ்தா கிரீனில் சிறிய கோடு போட்ட சட்டையும் , கறுப்பு நிற பேண்ட் அணிந்து கம்பீரமாக காட்சியளித்த படி மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தான். இந்த நான்கு மாதங்களில் அவன் கல்லூரியின ஒரு ஹீரோ வாகவே மாறிவிட்டான். மாணவிகள் மட்டும் அல்ல மாணவர்கள் கூட அவனின் கம்பீரத்தை ரசிக்க ஆரம்பித்தனர். அவன் வகுப்பு எடுக்கும் விதத்தில் அவனிடம் மயஙகி இருந்தனர். அரவிந்தன் sir கிளாஸ் என்றாலே 100% அட்டெண்டன்ஸ ஆனது. மாணவர்களிடம சற்று லகுவாகவே நடந்து கொள்பவன், மாணவிகளிடம் சற்று எட்டியே நின்றான். சந்தேகங்களை கூட வகுப்பில் கேட்டால் மட்டுமே பதில் அளிப்பான். மற்ற நேரங்களில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
தாமரை, அரவிந்தன் கூற கூற நோட்ஸ் எடுத்துக் கொண்டு வந்தவள், சற்றே திரும்பி பார்க்க தேன்மொழி எதுவும் எழுதாமல் கன்னத்திற்க்கு கை கொடுத்து அரவிந்தனயே வைத்த கண் பார்க்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். சற்றே திடுக்கிட்டு தாமரை அவளை தொட்டு எழுதுமாறு சைகை செய்ய எதுவும் பேசாமல் எதோ இன்றே அவன் மறைந்து விடுவான் போல அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்ளை கவலையாக பார்த்தாள் தாமரை. இது இன்று நேற்றல்ல, என்று அவன் முதல் நாள் தங்களை கடிந்து கொண்டானோ , அன்றிலிருந்து இப்படிதான் நடக்கிறது. இது சரியாகிவிடும் என்று பார்த்தால், நாட்கள் ஆக ஆக அதிகமாகி கொண்டு போகிறது. தேன்மொழி இப்பொழுது மிகவும் அமைதியாகி விட்டாள்.அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கேட்டாலும் சற்றே புன்னகைத்து ஒன்னும் இல்ல என்று சொல்லி விடுகிறாள். ஆனால் அவள் அவளாக இல்லை. அவளை எப்படி அணுகுவது என்று தெரியாமல் தாமரை கவலைபட்டாள். ஏனெனில் தேன்மொழி தேவையில்லாமல் எதாவது பிரச்சனையில் மாட்டி க்கொண்டால், அவ்வளவுதான், தாமரையை உண்டு இல்லை என்று செய்துவிடுவான் கார்த்திக்.அவர்களின் குடும்பத்திற்கும் தாமரை தான் பதில் சொல்ல வேண்டும் .

இன்று ஹாஸ்டலுக்கு சென்றதும் இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தபடி தாமரை சிந்தித்துக் கொண்டே நோட்ஸ் எழுதிக் கொண்டு இருந்தாள்.

வகுப்பு முடிந்து மணி அடித்ததும், ஓகே கைஸ் சீ யூ டு
Tomorrow, என்று சொல்லியவாறு மேசையில் இருந்த புத்தகத்தை எடுத்தவாரு திரும்பியவன் சட்டென்று எப்போழுதும் போல் தற்செயலாக பார்ப்பது போல தேன்மொழி இன் மேல் ஒரு நொடி பார்வையை வீசி, சட்டென்று திரும்பி சென்றான். அவன் பார்ப்பான் என்று உள்ளுணர்வு சொல்லியதில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மொழி, அவனின் நொடி நேர பார்வையை கண்டதும் அவள் உடல் சிலிர்த்தது. அவன் காதலாக பார்த்தாநா அல்லது கல்லயும், மண்ணயும் போல பார்த்தாநா என எதுவும் மண்டயில் பதியவில்லை. அவன் பார்த்து விட்டான்.இந்த பார்வை ஒன்றே மறுநாள் காலை அவன் வரும் வரை அவளை உயிர்ப்புடன் இருக்க செய்யும் மூச்சு காற்றாக இருந்தது.

தேன்மொழி க்கு தன் மனது தெரிந்தே இருந்தது. அவள் அரவிந்தனை காதலிக்கிறாள். ஆனால் அவளின் மழை துளி போன்ற பரிசுத்தமான காதலை அவன் ஏற்றுக் கொள்வானா, இல்லையா, அவன் யார், அவன் குடும்பம் எது? முதலில் அவனிடம் சொல்லி அவன் சம்மதித்தால் மட்டுமே , தன் வீட்டில் இதை பற்றி பேச முடியும். இது எல்லாம் நடக்குமா, நடக்காதா என ஒரே குழப்பமாக இருந்தது. யாருடனும் இதை பகிர பயமாக இருந்தது. தாமரயிடம் சொன்னாள், அவ்வளவு தான். நடுங்கி விடுவாள். ஏனெனில் அவளுக்கு தன் அண்ணனை கண்டு அவ்வளவு பயம். பயத்தில் எதாவது உளறி விட்டாள் , இப்பொழுதே படிப்பிற்கு சுபம் போட்டு வீட்டிற்க்கு அழைத்து சென்று விடுவர். அதனால் அரவிந்தனின் மனதை தெரிந்து கொண்டு பிறகு தாமரையிடம் சொல்லலாம் என அவள் அமைதி காத்தாள். ஆனால் என்ன ஆனாலும சரி அரவிந்தன் மட்டுமே தன் வாழ்க்கை என முடிவு செய்து வைத்திருந்தாள்.காதல் ஒன்று மட்டும் வந்துவிட்டால் அதற்கு பிறகு காதலிப்பவர் களுக்கு மற்ற எதுவுமே முக்கியமாக தெரிவது இல்லை. அதற்கு தேன்மொழி மட்டும் விதி விலக்கா என்ன?

வகுப்புகள முடிந்து தாமரையும் தேன்மொழி யம் ஹாஸ்டல் க் வந்தனர். Refresh செய்து காபி குடித்துவிட்டு அறைக்கு திரும்பினர்.

அது வரை அமைதியாக இருந்த தாமரை, மொழி உன்கிட்ட கொஞ்சம் பேசணும என்றால்.
என்ன தாமரை, சொல்லு என வாய் கேட்டாலும் அவள் என்ன கேக்க போகிறாள் என்பதை மனம் உணர்ந்தே இருந்தது.
மொழி, என்கிட்ட மறைக்காமல் உண்மைய மட்டும் சொல்லு, நானும் கொஞ்ச நாளாய் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். நீ எப்பவும் போல இல்ல.
எப்ப பார்த்தாலும் எதோ சிந்துச்சுட்டு, ஒழுங்கா சாப்பிடறது இல்ல, தூங்கரது இல்ல, எப்பவும் குழப்பமாகவே இருக்கிற, அரவிந்தன் sir கிளாஸ் வந்தாலே நீ தன்னிலை மறந்து நடந்துக்கிற. உன் மனசுல என்ன இருக்கு தயவு செய்து உண்மைய மட்டும் சொல்லு please என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
மிரட்டி யோ அல்லது அதட்டியோ கேட்டிருந்தால் அதே குரலில் பதில் சொல்லி விட்டு போய்விடலாம். ஆனால், தன் வருங்கால அண்ணியாக, தன் உயிர் தோழி யாக , தன் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கேட்கும் தாமறையிடம் மறுப்பாக எதுவும சொல்லாமல் அவளை பார்த்துக்கொண்டு இருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய துவஙகியது. மொழி என்னடி, என்ன ஆச்சு? என்று பதறி போனால் தாமரை.அவளை சிறிது நேரம் பதற விட்டு அழுது முடித்தவள் இடம் தண்ணீரை நீட்டினாள். சிறிது அருந்தி விட்டு, அவளை தயக்கததுடன் பார்த்தவள், தாமரை தயவு செய்து என்னை ஏன், எதுக்கு, எப்படின்னு எதுவும கேட்காதே. எனக்கே இதுக்கான பதில் கிடைக்கல. நானும் இதயே தான் என் மனசுக்குள்ளே கேட்டுட்டு இருக்கிறேன்.

ஆனால் உண்மை என்னன்னா நான் அரவிந்தன் sir ஐ உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். என் மனசு முழுதும் அவர் தான் இருக்காரு. இது
அவருக்கே தெரியாது. இது நிறைவேறுமா? இல்லையா எனக்கு எதுவுமே புரியல. ஆனால் என் உடம்பில் இருக்கிற ஒவ்வொரு செல்லும் அவரை பத்தி மட்டும் தான் நினைக்குது. யோசிக்குது. என்னோட காதலை எப்படி நிறைவேத் திக்க போறேன்னு எனக்கு தெரியல. ஆனால் இனி எனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது அரவிந்தனோட மட்டும் தான் என்று கூறியவள கதறி அழ தொடங்கினாள். புலி வருது, புலி வருது என்று கடைசியில் புலி வந்தே விட்டது என்ற நினைவில் தாமரை மயக்கம் போடாத குறையாக நின்று இருந்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top