P6 இதயக் கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Will come with the epi tomorrow.

என்ன காலையிலேயே புருஷனும் பொண்டாட்டியும் பாட்டு கச்சேரி நடத்திட்டு இருக்கீங்க போல என்றபடி விக்ரம் உள்ளே வர... சோபாவில் வெற்றிக்கு அருகில் நெருக்கமாக உட்கார்ந்து இருந்த ஆதிரை பதறி எழுந்தவள், விக்ரமை வரவேற்றாள்.

விக்ரமைப் பார்த்ததும் தான் இன்று தாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே போக வேண்டிய வேலை வெற்றிக்கு நினைவு வர... “ஆதி, சீக்கிரம் எங்களுக்கு டிபன் எடுத்து வை... நாங்க வெளியப் போகணும்.” என்றவன், உடை மாற்ற அறைக்குள் சென்றான்.

“ஒன்னும் அவசரம் இல்லை... நேரம் இருக்கு.” என்ற விக்ரம் டிவியை போட்டு நியூஸ் சேனல் வைத்துகொண்டு பார்க்க ஆரம்பித்தான்.

ஆதிரை பூரிக்கு மாவு பிசைந்து உருளை மசால் செய்து வைத்திருந்தாள். அதோடு கேசரியும் இருக்க... அடுப்பில் எண்ணெய் காய வைத்து பூரி சுட ஆரம்பித்தாள்.
****************************************************************************************************************

“உன்னோட பிறந்த நாளை அவன் மறக்கிறதாவது. இது நம்பும் படி இல்லையே...”

“ஆமாம் நான் எங்க மறக்கிறது. அது தான் ரெண்டு நாள் முன்னாடி இருந்து இப்பவரை எனக்கு பிறந்தநாள்ன்னு இவ பத்து தடவைக்கு மேலேயே சொல்லிட்டாளே...” என வெற்றி சிரிக்க...

“பேசாதீங்க... என் பிறந்தநாளுக்கு நீங்க ஒண்ணுமே கொடுக்கலை...” என்றாள் அதிரை கோபமாக.

“என்னடி என்னையே கொடுத்திட்டேன் இதுக்கு மேல என்ன வேணும்? புடவையா? நகையா? என்ன வேணும் சொல்லு.” வெற்றி கேட்க, விக்ரம் சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்.

“ஆமாம் என்னையே கேளுங்க. பொண்டாட்டி பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம்ன்னு எல்லாம் இல்லை... சின்னதா ஒரு பரிசு கொடுத்திருந்தா கூட சந்தோஷமா இருந்திருக்கும்.”

“அருண் சின்ன பையன் அவன் வயசுக்கு... ஒரு வாழ்த்து அட்டை செஞ்சு கொடுத்தான். நீங்கதான் ஒண்ணுமே கொடுக்கலை. ஒரு பூ கூட வாங்கிக் கொடுக்கலை.” ஆதிரை சொல்ல...

“அவன் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்குத்தானே ஆதி.” என்றான் விக்ரம்.

“நீங்க ஒன்னும் உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம்.”

“ஒரு புடவை எடுத்தாவது கொடுத்திருக்கலாம்.” என்றார் ஜோதி மகன் நிஜமாகவே மருமகளுக்கு எதுவும் வாங்கவில்லை என நினைத்து.
****************************************************************************************************************
“வெற்றி ஆதிரை பேர்ல சொத்து வாங்கி இருக்கார். நீங்க இதுவரை என் பேர்ல ஒரு குண்டுமணி இடமாவது வாங்கி இருக்கீங்களா?”

“என் பேர்ல இருந்தா என்ன உன் பேர்ல இருந்தா என்ன? நான் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்கும் நம்ம பொண்ணுக்கும் தான்.”

“இதை ஒன்னு சொல்லி எப்பவும் ஏமாத்துங்க.”

“உனக்கு எதுவுமே வாங்கி கொடுத்தது இல்லை. நீ போட்டிருக்க நகை எல்லாம் உங்க அப்பா வீட்ல இருந்து கொண்டு வந்ததா?”

“எங்க வீட்டு நிலைமை தெரிஞ்சு தானே காதலிச்சிசீங்க. எனக்கு அறிவு இருந்திருக்கணும். நான் ஒழுங்கா எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளையை கட்டி இருந்தா இந்த பேச்சு எல்லாம் கேட்க வேண்டியது வருமா?”

“ஏன் கட்டியிருக்க வேண்டியது தானே?”

“உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா... உங்களோட பழகிட்டு வேற ஒருத்தனை எப்படி கல்யாணம் பண்ண முடியும்?”

“ஓ... அந்த அறிவு இருந்தா சரிதான்.”
 

banumathi jayaraman

Well-Known Member
அட மருமகளுக்கு ஜோதிம்மா சப்போர்ட் பண்ணுறாங்க
எதுக்கு உன் பேர்ல சொத்து வாங்கணும், வனிதா?
உன் பிறந்த வீட்டுக்கு தூக்கிக் கொடுப்பதற்கா?
முதலில் உன் கணவன் மகளுக்கு ஒழுங்கா சோறாக்கிப் போட்டு ஒரு நல்ல குடும்ப இஸ்திரியாக நீ நடந்து கொள், வனிதா
சொத்து மட்டுமில்லை தன்னைப் போல எல்லாம் உன்னைத் தேடி வரும்

விக்ரம் வீட்டில் அவளைப் பெண் கேட்டது ஆதிரைக்கு தெரியுமா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Nice Precap

அடடா இந்த வனிதா திருந்துற ஜென்மமா தெரியலையே...
கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும் புருஷனை புரிஞ்சிக்காம இப்படி பேசிக்கிட்டு இருந்தா எப்படி???
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா வனிதா நல்ல பேசுறாளே....... இவன் சும்மா இருந்தால் கூட பேசி பேசி வாங்கி கட்டிப்பா போல........
அடுத்தவங்களை பார்த்து பார்த்து வாழணும்னு ஆசைப்பட்டால் வாழ்க்கை நரகம் தான்........
மாமியார் இவ்ளோ கொட்டி கொட்டி இருக்கும் போதே இப்படி பேசுறா.....
மாமனார் சொன்னதும் காதில் விழுந்திருக்குமே.......

ஆதிரைக்கு பிறந்த நாள் பரிசு சொத்தா???
மாமியார் என்ன குடுத்தாங்க :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top