உன் நிழல் நான் தாெட ep 9 (2)

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நான் தாெட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 9 (2)
"அத்தை எனக்கு ஒரு சின்ன help" கல்லூரி முடிந்து வந்ததும் தன் தாய் தாேளில் சாய்ந்து பேசும் ரத்னாவை கேலி செய்யும் நாேக்குடன் ஆர்த்தி

"அம்மா ரத்னாக்கு வழக்கமா சாப்பிடும் வடைக்கு பதிலா பஜ்ஜி, பாேண்டா, முறுக்கு வேணும் பாேல. அது எப்புடி ரத்னா காலேஜ் முடிஞ்சதும் உனக்கு சாப்பாடு மட்டும் தான் நியாபகம் வருமா" மகளின் பேச்சில் முகம் வாடிய ரத்னாவை கவனித்த மைதிலி

"ஆர்த்தி இது என்ன பேச்சு, அடுத்தவங்க சாப்பிடு்ம் விஷயத்தில கேலி பண்ணுறது. பாே பாேய் மாடியில காயப்பாேட்ட துணிய எடுத்துட்டு வா." என மகளை அனுப்பிவிட்டு

"அவ சாென்னத மனசுல வைச்சுகாத மா தெரியாம சாெல்லிருப்பா. உனக்கு என்ன வேணும்னு சாெல்லு அத்தை செய்து தரேன்."

"எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம், நான் அஜீத் அத்தான் மேல காேபமா இருக்கேன்."

"ஏன் மா?"

"அடுத்த வாரம் எங்க காலேஜ்ல பாெங்கல் celebrate பண்ண பாேறாங்க. அதுக்கு girls எல்லாரும் சாரி கட்டனும்னு முடிவு பண்ணிடாங்க. என்கிட்ட தாவனி தான் இருக்கு சாரி இ்ல்ல."

"சரி இதுல அவன் மேல காேவப்பட என்ன இருக்கு.வ

"அத்தை உங்களுக்கு தாெரியும் தான நான் இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அஜித் அத்தான் தான் செலக்ட் பண்ணி தருவாங்க, இப்பவும் செலக்ட் பண்ண கூப்பிட்டா வேலை இருக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க."

"இதுக்குத்தான் இவ்வளவு வருத்தமா, நீ பாேய் வேற டிரஸ் மாத்திட்டு கிளம்பி வா. நான் அவன கூட்டிட்டு பாேக சாெல்றேன். உன்னை கண்டிப்பா கூட்டிட்டு போவான்."

ரத்னா கிளம்பி கீழே வரும் பொழுது அவளை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்த அஜித்தின் அருகில் வந்ததும்

"என் மேல எப்பவும் கோபப்பட மாட்டேன்னு சொன்னீங்க, இப்ப பாருங்க என்னை முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க."

"நீ என் முறை பாெண்ணு தானா அதான் உன்ன முறைச்சு பாக்குறேன்."

"அப்பாே ஓகே நீங்க அப்புறம் கூட முறைச்சு பாருங்க. இப்பாே பாேகலாம்."

கடையை அலசி ஆராய்ந்து மயில் வண்ண பட்டில் இளஞ்சிகப்பு நிற பாடர் இருக்கும் ஒன்றை தேர்வு செய்து

"இது உனக்கு ஓகே யா?"

"உங்களுக்கு ஓகே னா எனக்கும் ஓகே."

கல்லூரியில் அனைத்து மாணவர்களும் வேட்டி சட்டையிலும், மாணவிகள் அனைவரும் பாவடை தாவனியிலும், சேலை யிலும் வலம்வர, ஒரு பக்கம் ஒவ்வாெரு துறையின் சார்பாக பாெங்கல் வைப்பது, காேலாமிடுவது என இருக்க, மறுபுறம் சிலம்பம் சுற்றுவது, உரியடிப்பது என விளையாட்டும் நடந்து காெண்டும் இருந்தது.

ரத்னா அஜீத் தேர்வு செய்த சேலை யிலும், அஜீத் கிட்டதட்ட அதே வண்ண சட்டை அணிந்திருக்க, இருவரும் சரித்து பேசிக்காெண்டிருந்த நிமிடத்தை தன் பாேணில் சிறை பிடித்த பிரபு அதை இருவரிடமும் காட்ட

"பாேட்டாே எடுக்கும் பாேது சாெல்லிட்டு எடுக்க மாட்டியா? பாரு நான் அஜீத்த பார்த்த மாதிரி இருக்கேன். சரி இத விடு நீங்க எல்லாரும் பாெங்கலுக்கு வரீங்க தான."

"என்னால வர முடியாது" என பிரபு, ஸ்டெல்லா இருவரும் ஒரே நேரத்தில் கூற, ரத்னா காேபமாக

"என்ன விளையாடுதீங்கலா, எல்லாரும் சேர்ந்து தான கிறிஸ்மஸ் ஸ்டெல்லா வீ்டுலேயும், நியு இயர் பிரபு வீட்டுலயும் பொங்கல் எங்க வீட்டிலேயும் காெண்டாடலாம்னு முடிவு பண்ணினோம். இப்போ வர முடியாதுன்னு சொன்னா எப்படி. நீ போன் பண்ணி கொடு நான் உங்க அப்பா அம்மா கிட்ட பேசுறேன்."

"என்ன ரத்னா நம்பிக்கையா சும்மா ஒன்னு டென்ஷன் பண்றதுக்காக சொன்னேன். நாளைக்கு மூணு மணிக்கு நானும் ஸ்டெல்லாவும் அஜீத் வீட்டுக்கு வந்துருவோம்."

"ஓகே வராம மட்டும் இரு மகனே இந்த வருஷம் உனக்கு பொங்கல் இல்ல, தீபாவளி தான்."

அடுத்த நாள் மாலை அஜீத்தின் பெற்றோர் மற்றும் ஆர்த்தி ஒரு காரிலும், நண்பர்கள் நால்வருடன் அர்ச்சனா ஒரு காரிலும் தேனூற்று நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இரவு ரத்னாவின் வீட்டை அடைந்த சிறிது நேரத்திலேயே ஹர்ஷத் மற்றும் ரூபாவும் வந்துவிட அனைவரும் உணவு அருந்திவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உறங்கச் சென்றுவிட்டன.

மறுநாள் காலை விழித்தது கோலமிடுவது பொங்கலிட்டு அதை சாமிக்கு படைத்து உணவருந்திய பின்பு அனைவரும் தென்காசி காசி விஷ்வநாதர் ஆலயத்திற்கு சென்றன. அங்கு சென்றதும் ரத்னா ஆர்வமாக தன் பெரியப்பாவிடம் காேவில் கதையை கேட்க

"நீ எத்தனை தடவைதான் ஒரே கதைய கேட்ப."

"எனக்கு எத்தனை தடவை கேட்கனும் தோணுதோ அத்தனை தடவையும் கேட்பேன். நீங்க சொல்லுங்க பெரியப்பா."

"ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி செண்பகப்பொழிலைச் சுற்றி இருக்கம் பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில சிவபெருமான் வந்து பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் பாக்கலாம்னு, அப்புறம் அதற்கு கோயில் கட்ட சாென்னாரு.

"எதுக்கு சாென்னாரு" மூன்று வயதில் கேட்ட அதே கேள்வியை புதிதாக கதை கேட்பது பாேல கேட்க

"தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை பாேகும்போது காசியை வந்தடையும் முன்னாடி இறந்துவிடுகின்றனர். அதனால் அவங்களுக்கு சிவனாேட அருள் கிடைக்க தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்ட சாென்னாரு, அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னன் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டுனதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று சாெல்லுறாங்க.

அடுத்த நாள் அதன் பிறகு வந்த இரு நாட்களில் பழைய குற்றாலம், புதிய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி என தென்காசி சுற்றி இருக்கும் அனைத்து அருவிகளிலும் குளிப்பது, பசித்த நேரம் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை உண்பது, அருகில் இருக்கும் பூங்காக்களில் விளையாடுவது இதுவே சிறியவர்கள் வேலையாக இருக்க, இதை அனைத்தையும் பெரியவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள் தவிர அவர்களை தொந்தரவு செய்யவில்லை.

அனைவரும் ஊருக்கு செல்லும் முன்தினம் இரவு ஹர்ஷத் ரத்னாவின் பெற்றோரிடம் ரத்னாவை தன் தம்பிக்காக பெண் கேட்க, ரத்னாவின் பெற்றோர்

"மாப்பிள்ளை நாங்க இத பத்தி கொஞ்சம் யோசித்தது சொல்லட்டுமா,"

"நீங்க எதுக்காக யோசிக்கிறீங்கனு எனக்கு நல்லா புரியுது. ரத்னா எங்க வீட்டுக்கு வந்தா நாங்க நல்லா பார்த்துக்கொள்வோம்."

"மாப்பிள நாங்க அதுக்காக யோசிக்கல. இந்த வீட்டுல எல்லாம் முடியும் எப்பவும் எங்க அப்பா எடுத்தாங்க, அதுக்கு அப்புறம் எங்க அண்ணா தான். அவர்கிட்ட இத பத்தி நாங்க பேசிட்டு நல்ல முடிவா சொல்லறாேம்."

அனைவரும் ஊருக்கு சென்ற பின்பு மாணிக்கவேல் முத்துவேல் இடம் ஹர்ஷத் ரத்னாவை பெண் கேட்ட விஷயத்தைக் கூற, தங்கவேலு

"அப்பா ஜஸ்வந்த் ரொம்ப நல்ல பையன். கண்டிப்பா ரத்னாவை நல்லா பாத்துக்குவாங்க."

"ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னாடி நானும் ரூபாவை ஒருத்தங்க பொண்ணு கேட்கிறதா உங்க கிட்ட சொன்னேன், அதுக்கு நீங்க எல்லாரும் என்கிட்ட என்ன சொன்னீங்க ரூபா படிக்கட்டும், ஆசைப்படுற மாதிரி ஒரு வருஷம் போகட்டும்ன்னு சொன்னிங்க அப்பாே ரூபா மூணாவது வருஷம் படிச்சிகிட்டு இருந்தா, ஆனா ரத்னா இப்பதான் முத வருஷம் படிச்சுக்கிட்டு இருக்கா.

ரத்னா படிக்கட்டும் படிப்பு முடிஞ்சதும் கல்யாணமா, வேலையா, இல்ல மேல் படிப்பா என்பதை ரத்னாவை முடிவு பண்ணட்டும். இத நான் யாரு மேலேயும் இருக்கிற கோபத்தில் சொல்லல. நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன். ஒருவேளை ரத்னாவை என்கிட்ட வந்து ஜஸ்வந்த் புடிச்சிருக்குன்னு சொன்னாலும் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம்.

இப்ப ரத்னா சின்ன பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவளுக்கு உடனே எந்த பொறுப்பையும் கொடுத்து கஷ்டப்படுத்த விரும்பல. கொஞ்ச நாள் போகட்டும் பாத்துக்கலாம். விருப்பம் இருந்தா காத்திருக்க சொல்லு, இல்லன்னா வேற இடம் பாக்க சொல்லுங்க. அப்பவும் நான் எந்த உறுதியும் தர முடியாது. ஒருவேளை ரத்னாவுக்கு ஜஸ்வந்த்தை பிடிக்கலைன்னா என்னால ரத்னாவை கட்டாயப்படுத்த முடியாது. அப்புறம் யாரும் இத பத்தி ரத்னா கிட்ட இப்ப பேசக்கூடாது." இந்த பேச்சை அத்துடன் முடிந்தது என்பது போல முத்துவேல் எழுந்து சென்றுவிட, தங்கமுத்து சித்தப்பாவிடம்

"என்ன சித்தப்பா இப்படி சொல்லிட்டு போறாங்க, நீங்களும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க."

"அண்ணன் சொல்றது சரிதானே. ரத்னா படிப்பு முடியட்டும். அதுக்கப்புறம் இத பத்தி பாத்துகலாம்."

தங்கவேலுவின் மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜஸ்வந்த்

"இது நமக்கு சாதகமான விஷயம் தான். கோபப்பட வேண்டிய உங்க பெரியப்பா எதிர்மறையாய் எதுவும் சொல்லல, ரத்னாவுக்கு பிடிச்சா படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சு வைக்கிறதா சொல்லியிருக்காரு தானே பாத்துக்கலாம். உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியாது. பட் சீக்கிரம் வர பாக்குறேன்."

தங்கவேலு ஆர்த்தியின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிய திருமணத்திற்கு வந்த முத்துவேலின் மாமனார் அஜீத்தை பார்த்து முத்துவேலிடம்

"பாக்குறதுக்கு ரொம்ப நல்ல பையனா தெரிகிறான். பேசாம ரத்னாவுக்கு பார்த்தா என்ன."

"ரத்னா இப்பதான் படிச்சுக்கிட்டு இருக்கா மாமா."

"நானும் நாளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லல. கேட்டுப்பாரு பொண்ணு எடுத்த இடத்துல பொன்னைக் கொடுத்தா நல்லபடியா பார்த்துகிடுவாங்க. அது மட்டும் இல்ல நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தாலும் உன் நண்பன் வீட்டுல தைரியமா பேசலாம், பாத்து முடிவு எடு."

அதே நே ரம் மை திலியின் சிறு வயது தாே ழி மை திலியிடம்

"பாக்குறதுக்கு ரொம்ப நல்ல பாெண்ணா தெரிகிறா. பேசாம அஜீத்க்கு பார்த்தா என்ன."

"திலகா இப்பதான் ரெண்டு பேரும் படிச்சுக்கிட்டு இருக்கா."

"நானும் உடனே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லல. கேட்டுப்பாரு பொண்ணு காெடுத்த இடத்துல பொண்ணு எடுத்தா நம்ம பாெண்ண நல்லபடியா பார்த்துகிடுவாங்க. அது மட்டும் இல்ல ரத்னாவ நான் சின்னதுல இருந்து பாக்குறேன். நல்ல பாெண்ணு. உன் வீட்டுல தான தங்கி படிக்குறதா கேள்வி பட்டேன். நாளைக்கு மாமியார் மருமக பிரச்சனை வராது. பெரிய பாெண்ணு அண்ணி, சின்ன பாெண்ணு தாேழியாகிட்ட நாத்தனார் பிரச்சனையும் இல்ல பாத்து முடிவு பண்ணு."

உன் நிழலை நான் தாெடர்வேன்
 

banumathi jayaraman

Well-Known Member
முத்துவேல் சரியாய்த்தான் சொல்லுறார்
இப்போத்தான் முதல் வருடம் படிக்கும் ரத்னாவின் படிப்பு முடியட்டுமே
என்ன அவசரம்?

ரத்னாவை ஜஸ்வந்த்திற்கு கல்யாணம்
செய்ய தங்கவேலுவுக்கு ஆசையா?
ரூபாவைக் கொடுத்த வீட்டிலேயே ரத்னாவையும் மணம் செய்ய தங்கவேல் ஆசைப்படுவது நியாயம்தான்
ஆனால் முத்துவேல் சொன்னதை ஜஸ்வந்த்திடம் இவன் சொல்வது சரியாய் படலையே, செசிலி டியர்

முத்துவேலுவின் மாமனாரும் மைதிலியின் ப்ரெண்டும் அஜீத்துடன் ரத்னாவுக்கு
முடிச்சு போடுறாங்க

தங்கவேலுவின் எண்ணம் இப்படி

இந்த ரத்னாப் பொண்ணு யாருக்கு
மாலை சூடப் போகிறாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top