என்னில் நிறைந்தவளே - 30 (final)

Advertisement

D

Dora

Guest
Yenaku thonuratha solren story nalla irunthuthu but heroin ku matum romba importance kudutha mathiri iruku heroku konjam importance kuduthu iruntha innum nalla irukum nu na feel panren
 

Sharmiseetha

Well-Known Member
S
என்னில் – 30

கார் தருணின் வீட்டில் வாயிலை அடைய அவர்களின் வருகையை தருண் முன்பே தெரிவித்திருந்ததால் அவர்களை வரவேற்க அனைத்தும் ஆயுத்தமாகி கொண்டிருந்தன.

காரை நிறுத்திய தருண் தேவியை உறக்கத்திலிருந்து எழுப்பினான்

தேவியும் விழித்து பார்க்க கார் ஒரு பங்களாவின் முன் நிற்க கேள்வியாய் தருணின் முகம் பார்க்க அவனோ இறங்கு வானதி எல்லாம் பிறகு சொல்கிறேன் என உரிமையாக கலைந்திருந்த அவளின் முடிகளை சரி செய்தான்

தருணும், தேவியும் காரிலிருந்து இறங்க அவர்களை வரவேற்க முதலாய் பூங்கோதை நின்றிருந்தார் அவரினுடனே அமரும், சரண்யாவும் நின்றிருந்தனர் மற்றவர்கள் இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை போன்று அவரவர் வேலை பார்க்க சென்றுவிட்டனர் ஆனால் தருணின் அத்தைகள் மட்டும் யார் அவள் தருணை உருகி உருகி காதலிக்க வைத்தவள் என்று பார்க்க காத்திருந்தனர்

தருண் அன்னையிடம் விரைந்து சென்று அம்மா என அனைத்து கொண்டான் அவரோ “தருண் நல்லா இருக்கியா எங்க என்னுடைய மருமகள் வினவ”

இறங்கியதிலிருந்து அந்த வீட்டையும் அதன் சுற்றுபுறத்தையும் ஆராய்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த தேவியின் கை பற்றி தன் அன்னையின் முன் நிறுத்தினான்

பூங்கோதை “வா மா” அழைத்து இருவரையும் சோடியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல மனதில் குழப்பத்துடன் தருணுடன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்

பூங்கோதை “பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்ததும் சரண்யா நீ தேவியை தருணின் அறைக்கு அழைத்து செல்”என்றார்

தேவி தருணை பார்க்க அவனோ போ என கண்ணசைக்க அவளும் அங்கிருந்து சென்றார்

அத்தைகள் “என்ன பா தருண் இவள்தான் உன்னுடைய மனைவியா பார்க்க அப்படி ஒன்றும் அழகா இல்லையே இவளையா நீ காதலித்து மணந்து கூட்டி வந்தாய்”

தருண் “அத்தை அழகு என்பது முகத்தில் இல்லை மனதில் உள்ளது அப்படி பார்த்தல் என்னுடைய வானதி மிகவும் அழகானவள்” என்றுவிட்டு நகர்ந்தான்

அமித் “அண்ணா நீ அநியாயத்திற்கு இப்படி மாற கூடாது. வந்ததிலிருந்து என்னை கண்டு கொள்ளவே இல்லை” என குற்ற பத்திரிகை வாசிக்க

தருண் “ஏன்டா நீ வேற தொல்லை பண்ற நானே அவளிடம் ஒன்றும் சொல்லாமல் அழைத்து வந்துவிட்டேன் அனைத்தும் தெரிந்தால் எப்படி எடுத்து கொள்வாள் என்ற பயத்தில் இருக்கேன்”

அமித் “எப்பா என அண்ணன் நீயே இப்படி பயப்படுகிறாய் அண்ணி என்ன அவ்ளோ டெரர்ரா”

தருண் “அவளுக்கு கோபம் வந்தது என்றால் எதிரில் உள்ளவரின் கன்னம் பழுத்திடும் டா”

பூங்கோதை “இப்படி ஒரு பெண் தான் வேண்டும் உங்களை அடக்கி வைக்க என்ன செய்ய என்னுடைய இரண்டாவது மருமகள் சாதுவாக இருக்கிறாள்”

அமித் மனதில் உனக்கு தெரிந்தது அவ்ளோதான் மா மொத்த ஆட்டத்தையும் என்னிடம் இல்ல காட்டுவா என செல்ல ராச்சசி என அவளை திட்டினான இல்லை கொஞ்சினான என தெரியாத வண்ணம் நினைத்து வைத்தான்

பூங்கோதை “என்னடா செலையாட்டம் நிற்கிற போ கல்யாண வேலையை பாரு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது என்றுவிட்டு தருணிடம் நீ சென்று தேவியை பாரு அவளுக்கு புது இடம் நீயும் உடன் இல்லை என்றால் சிரமபடுவாள்”

தருண் தனது அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய பெட்டின் மீது அமர்ந்திருந்த தேவி யார் என பார்க்க வந்தது தருண் என்றதும் மனதில் உதித்துள்ள கேள்விகளுக்கு இவனிடம் மட்டுமே விடை கிடைக்கும் என எண்ணி தேவி பேச எத்தனிக்க

அதற்குள் தேவியின் அருகே வந்த தருண் அவளை பேசவிடமால் அவளை நிறுத்தி அணைத்து கொண்டான் பின் என்னால் இன்னும் நம்பவே முடியலை வானதி நீ என்னுடைய மனைவியாக நமது அறையில் இருப்பதை என்றான்

தேவியும் அவனின் அணைப்பில் கட்டுண்டு அப்படியே நின்றிருந்தால் நேரம் ஆக அவனுடைய அணைப்பு இறுகுவதை கண்டு அவனிடம் இருந்து விலகி அமர்ந்து இது உங்க வீடா விஜய்

தருண் “வானதி கோவப்படாமல் நான் சொல்வதை முதலில்கேள் பின் உன்னுடைய மனதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்”

தேவி மவுனமாக இருக்க அதையே சம்மதமாக எடுத்து கொண்டு தனது அம்மா அவளின் பேட்டியை கண்டுவிட்டு இவனிடம் தேவி தனக்கு மூத்த மருமகளாக வேண்டும் என்பது முதல் அவளை கண்டு அவன் விரும்பியது வரை அனைத்தையும் சொன்னவன் தன்னுடைய தொழில் பற்றியும் அதில் அவனுடைய வளர்ச்சி அதற்கு அவனுக்கு உறுதுணையாக நிற்கும் தம்பி பற்றியும் சொல்லி முடித்தான்

தருண் அனைத்தையும் சொல்லி தேவியின் முகம் நோக்க அவளோ அழுது கொண்டிருந்தாள் அதை கண்டவன் தேவியின் அருகே மண்டியிட்டு தரையில் அமர்ந்து அவளுடைய கண்ணீரை துடைத்து வானதி உன்னிடம் எல்லாவற்றையும் மறைத்தது தவறு அதை ஒத்துகொள்கிறேன் அதற்காக நீ என்ன செய்ய சொன்னாலும் செய்கிறேன் ஆனால் என்னை விட்டு மட்டும் சென்றுவிடதே என அவளின் கன்னங்களை தனது இரு கைகளினால் தங்கி கொண்டு கூறினான்

அவளின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டிருக்க தருண் “ப்ளீஸ் வானதி அழாதே நீ அழுவது எனக்கு கஷ்டமாக உள்ளது அவளை சமாதான படுத்த”

தேவியோ அவனை கட்டிக்கொண்டு தேங்க்ஸ் விஜய் and லவ் யு விஜய் என அவனின் தோலில் முகம் புதைத்து அழுது கொண்டே சொன்னாள். அவள் கூறியதை கேட்டதும் தருணின் மனம் அமைதியடைந்து மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தது

தருணும் அவளின் அணைப்பை இறுக்கி தேவி உனக்கு என்மீது கோவம் இல்லை தானே நான் உன்னிடம் உண்மையை மறைத்ததற்கு

தேவி அவனிடமிருந்து விலகி அவனின் அருகே கீழே அமர்ந்து அவனின் கைகளை பற்றி கொண்டு “இல்லை விஜய் என வாழ்க்கையில் நீங்கள் வந்ததை நினைத்து மகிழ்கிறேன்”

தருண் “சரி வா வானதி அம்மாவை சென்று பார்த்துவரலாம் நீ என்ன செய்கிறாய் என பார்க்கவே வந்தேன் இப்பொழுது போகலாம்”

தேவியும் தன்னை சரிபடுத்தி கொண்டு தருணுடன் தனது அத்தையை பார்க்க சென்றாள்

பூங்கோதையின் அறையில் நுழைந்த உடனே விரைந்து சென்று தேவி அவரை கட்டி கொண்டு தேங்க்ஸ் அத்தை என்றாள்

பூங்கோதை “எதற்கு இவள் தேங்க்ஸ் சொல்கிறாள் என்று தருணிடம் வினவ”

தருண் “எல்லாவற்றையும் இப்பொழுதான் சொன்னேன் மா அதற்கு இந்த நன்றி”

பூங்கோதை “என்னடா மா இதுக்கு யாராவது நன்றி சொல்வாங்களா அப்படி பார்த்தால் இவனை திருமணம் செய்து என்னை இவனிடம் இருந்து காப்பாற்றியதற்கு நான் உனக்கு முதலில் தேங்க்ஸ் சொல்லவேண்டும் தினமும் இவர்கள் செய்யும் அடாவடிகளில் இருந்து காப்பாற்றியதற்கு”

தருண் “மா உங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே அமித்தின் திருமணத்தையும் நீங்க பார்க்கவில்லை நானும் உங்களிடம் சொல்லாமல் திருமணம் செய்துகொண்டேன்”

பூங்கோதை “வருத்தம் இல்லையென்று சொல்லமாட்டேன் இருந்தாலும் என மகன்களுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்ததில் சந்தோஷம்”

தேவி “எனக்கு பிடிக்கவில்லை”

பூங்கோதை தேவியை பார்க்க தருண் “என்ன வானதி பிடிக்கவில்லை”

தேவி “என்னுடைய திருமணம் அந்த வீட்டில் நடந்தது பிடிக்கவில்லை என்று விட்டு பின் தனது அத்தையின் புறம் திரும்பி அத்தை நான் சிறுவயதில் இருந்து என்னுடைய பிறந்த நாளை கூட கொண்டாடியதில்லை எனக்கு என்று இதுவரை எதையும் செய்து கொண்டதுமில்லை

என்னுடைய திருமணமாவது விமர்சையாய் நடக்கணும் என நினைத்தேன் சில வருடங்களாக அதுவும் நடக்காது என்றிருந்தேன்

எனக்கும், தருணுக்கும் நீங்களே பத்திரிக்கை அடித்து அனைவரையும் அழைத்து முறைபடி திருமணம் செய்து வையுங்கள் அத்தை என்றாள்

பூங்கோதை தருணை பார்க்க தருண் “உங்க விருப்பம் மா”

பூங்கோதை “சரி டா உன்னுடைய ஆசைப்படியே திருமணம் செய்யலாம்”

தேவி “தயங்கி அத்தை இந்த தாலி”

அது உன்னுடைய கழுத்திலே இருக்கட்டும் உங்கள் திருமணம் முடிந்ததும் அதை கோவிலில் சேர்த்துவிடலாம்

இரண்டு மாதங்கள் சென்றது தருணுக்கும் தேவிக்கும் அவளின் விருப்பபடியே மண்டபத்தில் விமர்சையாக திருமணம் நடந்தது. அய்யர் மந்திரம் ஓத தருண் தேவியின் கழுத்தில் மீண்டும் மங்கள நாணை கட்டினான்

அவர்களை சுற்றி நின்று தருணின் அம்மா,தம்பி,சரண்யா,அனிதா,ரமேஷ் என அனைவரும் அச்சத்தை தூவ சொந்தங்கள் வாழ்த்த அவர்களின் இருமனம் இணைந்த திருமணம் நடந்தேறியது நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.

நிறைந்து நின்றாள்.

Hai friends என்னுடைய முதல் story முடித்துவிட்டேன் எல்லாரும் படித்து விட்டு எப்படி உள்ளது என சொல்லுங்க பா இதுவரை உங்களுடைய நேரத்தை ஒதுக்கி படித்து வர்களுக்கு என்னுடைய நன்றி comments,like போட்டவர்களுக்கும் தேங்க்ஸ் and friends full ஆ முடித்து விட்டேன் இப்பொழுதாவது படித்துவிட்டு மட்டும் போகும் silent readers அப்படியே போகாமல் நிறை,குறைகளை சொல்லுங்கள் friends and தேங்க்ஸ் to all
Super story sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top