பிரிவு : இன்பத்துப்பால், இயல் : களவியல், அதிகாரம் : 112. நலம்புனைந்துரைத்தல், குறள் எண்: 1111 & 1116.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

பொருள் :- அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!.
 

Sasideera

Well-Known Member
குறள் 1116:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

பொருள் :- அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
காதலின் நலத்தை கூட்டி சொல்வதாக அமைந்த இந்த அதிகாரத்தில் அனிச்ச மலரின் மென்மையிலும் மென்மையான பெண் தன்னை வீழ்த்துகிறாள் என்றும், அவளது கண் மலர் பலர் கண்டு வியக்கும்படி உள்ளது என்றும், உடல் முறிந்துவிடும் முத்தமும் வெறி கூட்டும் வாசணையும் வேல் போன்ற கண்ணும் மூங்கில் போன்ற தோளும் அவளுக்கு என்றும், அவளின் கண் அழகால் குவளையும் தலை கவிழும் என்றும், ஓசை கேட்டு முறியும் கழுத்து என்றும், அவளின் முகமும் நிலவும் பார்த்த மீன் கலக்கம் அடைந்தது என்றும், நிலைவை போல் குறை பெண்ணுக்கு இல்லை என்றும், நிலவும் ஒளிவிட வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலவே என்றும், மலர்ந்த கண் போல் முழுமையாக தோன்று நிலவே என்றும், அனிச்சமுத் அன்னத்தின் இறகும் பெண்ணின் பாதத்திற்கு வலி உண்டாக்கும் என்றும் உரைக்கிறார்.
பெண்ணின் அழகைக் கற்பனை கலந்து மிகைப்படுத்திப் பேசுவது நலம் புனைந்துரைத்தலாகும். புணர்ச்சியின்பம் பெற்றதால் அளவில்லா மகிழ்ச்சியடைந்த தலைவனுக்குத், தான் நெருக்கமாக உணர்ந்த, காதலுக்குரியவளின் உறுப்பு நலன்கள் அவனது உள்ளத்தில் மேலோங்கி நிற்கின்றன. உணர்ச்சிப் பெருக்கோடு, தன் நெஞ்சோடு பேசுவது போலவும், மலர், நிலவு இவற்றை விளித்து அவற்றுடன் விளையாட்டாக உரையாடுவது போலவும், அவளது அழகைக் கொண்டாடுகிறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top