அல்வா பேமஸ் திருநெல்வேலி

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
திருநெல்வேலி சீமை

எனக்கு மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான ஊர் அது... சின்ன வயசுல லீவ் விட்டதும் பொட்டியை கட்டிட்டு மொதோ ஆளா கிளம்பி ஊருக்கு போய்டுவோம்...

திருநெல்வேலின்னா அல்வா எவ்வளவு பேமஸோ அதைவிட பேமஸ் நெல்லையப்பரும் காந்திமதி அம்மாளும்...

நிறைய சிறப்புகள் உண்டு இந்த கோவிலுக்கு... மூன்று பிரகாரங்கள் கொண்டது இக்கோவில்... ஏழிசை தூண்கள் இக்கோவிலின் ஒரு சிறப்பு, ஒரு நாணயத்தை எடுத்து அந்த தூண்களில் லேசாய் தட்டினால் நாமும் கேட்போம் சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களை...

முன் காலத்தில் மூங்கில் காடுகளாய் இருந்த இடத்தில் தான் தலம் அமைந்திருக்கிறது தற்போது... அதன் ஒரு பகுதி கோவிலில் இன்றளவும் நம்மால் பார்க்க முடியும். தல விருட்சமாய் அது கோவிலின் உள்ளே உள்ளது.

கோவில் தோன்றிய வரலாறு...
----------------------------------------
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

அப்படி வெட்டுப்பட்ட அந்த லிங்கமும் கோவில்ல இன்னமும் இருக்கு... கோவில்குள்ள ஒரு பிள்ளையார் சன்னதி ஒண்ணு இருக்கு, அதுக்குள்ள போயிட்டு வர்றது முடியாத காரியம், வழி ரொம்பவும் குறுகலானது. பிள்ளை வரம் வேண்டிக்கிட்டு அந்த வழியா உள்ள போய் வெளிய வந்தா குழந்தை வரம் கிட்டும் அப்படிங்கறது ஒரு ஐதீகம்...

இன்னும் சின்ன சின்ன சுவராசியங்கள் கூட கோவில்ல இருக்கு, பெரிதாய் கோலம் போட்டு தரையில் வட்டமாய் கொஞ்சம் மேலேழும்பி இருக்கும்... அதுல நம்மோட உள்ளங்கை இரண்டும் கொஞ்சம் தள்ளி தள்ளி வைச்சுட்டு மனசுல எதையாச்சும் நினைச்சு வேண்டிக்கிட்டு கண்ணை மூடிக்கணும், கொஞ்ச நேரம் கழிச்சு தான் கண்ணை திறந்து பார்க்கணும்... அப்போ நாம நினைச்சது நடக்கும் அப்படின்னா நம்மோட இரண்டு கையோட கட்டை விரல் இரண்டும் ஒண்ணா சேர்ந்திருக்கும்... நான் அப்படி கை வைச்சு அதெல்லாம் செஞ்சிருக்கேன், சின்ன வயசுல தான்...

நெல்லையப்பர் கோவில்ல இருந்து திருச்செந்தூர் கோவில்க்கு ரகசிய வழி இருக்கறதாவும் அது இப்போ மூடப்பட்டதாவும் கேள்விபட்டிருக்கேன்... நானறிந்த வரை எனக்கு தெரிந்த தகவல் தான்...

அப்புறம் இருட்டுக்கடை அல்வாக்கு வருவோம், மாலை ஆறு மணிக்கு மேல தான் அந்த கடை திறக்கும், கோவில் வாசல்ல உள்ள அந்த கடையில சுடசுட செய்யற அந்த அல்வாவை வாழையிலைல கட்டி தருவாங்க சாப்பிட, அடஅடஅட என்னா ருசி என்னா ருசி... அதுக்கு ஈடுயிணையே இல்லை போங்க...

எங்களுக்கு எல்லாம் அங்க சிறந்த பொழுதுபோக்கு இடம் ஒண்ணு இருக்குன்னா அது சயின்ஸ் சென்டர் தாங்க... சாயங்காலம் கொஞ்சம் கொறிக்க தேவையானது எல்லாம் எடுத்திட்டு அங்க போய் தான் எங்க பொழுது போகும்... ஆன்னு வாயை பிளந்துட்டு அதெல்லாம் பார்த்து ரசித்தது ஒரு காலம்...

எங்க ஆச்சி வீடு இருந்தது சிந்துபூந்துறை, அழகான பூக்கள் நிறைந்த வனமா அது ஒரு காலத்துல இருந்ததால அந்த பெயர் வந்ததா கேள்வி...
தாமிரபரணி ஆறு, குறுக்குத்துறை முருகன் கோவில்ன்னு இன்னும் பல சிறப்புகள் உண்டு...

குற்றாலம், பாபநாசம், மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார், அகத்தியர் அருவி, காரையார் டேம், மணிமுத்தாறு இப்படி நிறைய இடங்கள் சொல்லிட்டே போகலாம்...

திருநெல்வேலியை சுற்றி நிறைய சிவன் கோவில்களே, குற்றாலநாதர், வட காசிக்கு இணையான தென்காசி விஸ்வநாதர், சங்கரன்கோவில் சங்கரன், கோமதியம்மாள், பாபநாசநாதர், உலகம்மை, நெல்லையப்பர், காந்திமதியம்மாள்...

அழகிய வைணவ கோவிலும் இங்கு உண்டு... அது திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில், இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார்...

முத்துக்கு பெயர் போன இடமான தூத்துக்குடி கூட எங்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தது தான்... தூத்துக்குடி கடலை சுற்றி நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு, இயற்கை துறைமுகம் மிகப்பிரசித்தம் இங்கு... இங்க மக்ரூன், பொரிச்ச பரோட்டான்னு ரொம்ப பேமஸ் அயிட்டம் எல்லாம் இருக்குங்க...

இன்னும் நெறைய இருக்குங்க... நம்ம மக்கள் எல்லாம் நான் விட்டதை தொடர்வாங்கன்னு நான் இதோட நிருத்திக்கறேங்க...
 

buvik

Well-Known Member
சங்கரன் கோவில்ல கோமதி அம்பளோட "ஆடித் தபஸு " கண் கொள்ளா காட்சி. அங்க கோவில்ல புத்துலேர்ந்து மண் எடுத்து வந்து வீட்ல வைச்சுகிட்டு..பூச்சி கடிக்கு தடவிகிட்டா விஷத்தை எடுத்திடுமுனு சொல்லுவாங்க.
Ama siss...andha mannu eduthu vanthu thadavu vanga and also aadi masam thabasuku kodi ethitu kovil 108 round suthuvanga....
 

abimaa

Well-Known Member
Alwa, aruva, courtallam. Nellaiyappar temple, soodikolambu,border kadai, sankarankoil temple,papanasam temple,agastiar aruvi, manjolai, nabathirupathi,alangulam barota, yaegapata schools, enga ooru slag "YAELAI INGA VA LA", makka, naeraia iruku.vanga plagalam vanga enga orukku
 

Mathi Thilak

Active Member
அது புகுந்த வீடு...

நான் பிறந்தது ராஜபாளையத்தில்...

சொந்தங்கள் அனைவரும் திருநெல்வேலியில்... லீவ் எல்லாம் அங்க தான் கழியும் சோ பிடித்த ஊர் திருநெல்வேலி...
என்னோட புகுந்த வீடு இராஜபாளையம் பிறந்த ஊர் திருநெல்வேலி
 

Mathi Thilak

Active Member
எங்க ஊர் பெயருக்கும் ஒரு கதை இருக்கு ஒரு விவசாயி நெல்லை காயப்போட்டுட்டு சிவன் கிட்ட நான் வர வரைக்கும் நெல்லை பார்த்துக்கோப்பான்னு வேண்டிட்டு வெளியூர் போய்ட்டாராம் அவர் மாலை திரும்பி வரும் போது ஊர்ல நல்ல மழை பெய்திருந்ததாம் ஆனால் அவர் நெல்லை காயப்போட்ட இடம் மட்டும் வேலி போட்ட மாதிரி நனையாம காய்ந்திருந்ததாம் அதனால் நெல்லை காத்த சிவன் நெல்லையப்பர் என அழைக்கப்படுகிறார் எங்க ஊர் திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது
 

Lav. S

Well-Known Member
மக்ளே ன்னு mostly கூப்பிடுறது கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தான் ஆதிமா. may be கன்னியாகுமரி மாவட்டத்து பார்டரில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அப்படி கூப்பிடலாம். திருநெல்வேலி ன்னு சொன்னாலே "லேய் " தான். இதில் என்ன ஆச்சரியம் னா பெண்பிள்ளைகளையும் "லேய்...இங்க வா ல" ன்னு தான் கூப்பிடுவாங்க...
எங்க அப்பா என்னை ஏலே னு தான் கூப்பிடு வாங்க .
எங்க அப்பாவுக்கு சொந்த ஊர் கடையநல்லூர்
 

Lav. S

Well-Known Member
திருநெல்வேலி ஊரை பற்றிய postஐ இப்போ தான் யா பார்க்கிறேன்...
இவ்வளவு நாள் எப்படி miss பன்னேன் னு தெரியல...
என் அப்பா பிறந்த ஊர் கடையநல்லூர், அம்மாக்கு இடைகால்....
பட் நான் born n brought up in Chennai தான்...
ஒவ்வொரு லீவுக்கும் பெரியப்பா (அப்பாவோட அண்ணா) வீடு கடையநல்லூர் தான்...
பெரியம்மா (அம்மாவோட அக்கா) சங்கரன்கோவில்... சோ கொஞ்ச நாள் சங்கரன்கோவில் கொஞ்ச நாள் கடையநல்லூர் இப்படி தான் எங்க summer vacation போகும்... மறக்கவே முடியாத நாட்கள்...
பார்டர் கடை பரோட்டா இல்லாமல் எங்க நாட்கள் விடியவே விடியாது...
 

Suvitha

Well-Known Member
திருநெல்வேலி ஊரை பற்றிய postஐ இப்போ தான் யா பார்க்கிறேன்...
இவ்வளவு நாள் எப்படி miss பன்னேன் னு தெரியல...
என் அப்பா பிறந்த ஊர் கடையநல்லூர், அம்மாக்கு இடைகால்....
பட் நான் born n brought up in Chennai தான்...
ஒவ்வொரு லீவுக்கும் பெரியப்பா (அப்பாவோட அண்ணா) வீடு கடையநல்லூர் தான்...
பெரியம்மா (அம்மாவோட அக்கா) சங்கரன்கோவில்... சோ கொஞ்ச நாள் சங்கரன்கோவில் கொஞ்ச நாள் கடையநல்லூர் இப்படி தான் எங்க summer vacation போகும்... மறக்கவே முடியாத நாட்கள்...
பார்டர் கடை பரோட்டா இல்லாமல் எங்க நாட்கள் விடியவே விடியாது...
இடைகால்,கடையநல்லூர் இரண்டு ஊருக்குமே நான் போயிருக்கிறேன்.
பார்டர் கடை பரோட்டா மை சன்ஸ் ஃபேவரைட்...
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
திருநெல்வேலி ஊருக்கு உள்ள சிறப்புக்கள் சொல்லிலடங்கா..அதுலையும் அந்த ஊர் தமிழ் அவ்வளவு அழகா இருக்கும்..

என்ன‌ ரொம்ப பிரமிக்க வச்சது பூ கணக்குக் தான். முளம் போட்டு பூ தர மாட்டாங்க, எண்ணிக்கையில தான், 100 பூ ன்னு கிடுகிடுன்னு எண்ணற அழகிருக்கே..அடடா..

குடிசை தொழில்ன்னு அங்க பீடி சுத்து வாங்க, எவ்வளவு பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிப்பாங்க..

எனக்கு பிடிச்ச எங்க ஊரு நெல்லை தமிழில் சில

அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
ஆச்சி - வயதான பெண்மணி
கொண்டி - தாழ்ப்பாள்
பைய - மெதுவாக
சாரம் - லுங்கி
கோட்டி - மனநிலை சரியில்லாதவர்
வளவு - முடுக்கு,சந்து
வேசடை - தொந்தரவு
சிறை - தொந்தரவு
சேக்காளி - நண்பன்
தொரவா - சாவி
மச்சி - மாடி
கொடை - திருவிழா
கசம் - ஆழமான பகுதி
ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)
துஷ்டி - எழவு (funeral)
சவுட்டு - குறைந்த
கிடா - பெரிய ஆடு (male)
செத்த நேரம் - கொஞ்ச நேரம்
குறுக்க சாய்த்தல் - படுத்தல்
பூடம் - பலி பீடம்
அந்தானி - அப்பொழுது
வாரியல் - துடைப்பம்
கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
இடும்பு - திமிறு (arrogance)
சீக்கு - நோய்
சீனி - சர்க்கரை (Sugar)
ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
நொம்பலம் - வலி
கொட்டாரம் - அரண்மனை
திட்டு - மேடு
சிரிப்பாணி - சிரிப்பு
பாட்டம் - குத்தகை
பொறத்தால - பின்னாலே
மாப்பு - மன்னிப்பு
ராத்தல் - அரை கிலோ
சோலி – வேலை
சங்கு – கழுத்து (சங்க அறுதுருவேன்)
செவி – காது
மண்டை – தலை
செவிடு – கன்னம்
சாவி – மணியில்லாத நெல்,பதர்
மூடு – மரத்து அடி
குறுக்கு – முதுகு
வெக்க - சூடு, அனல் காற்று
வேக்காடு - வியர்வை
ஏச்சு- திட்டு
சீனி- சக்கரை
மதினி - அண்ணி
Enga aachi indha words use panni na ketruken
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top