Sahi
Well-Known Member
தேவையானபொருட்கள்:
முதல் நாள் இரவு ஊறவைத்த கொண்டைக்கடலை: 100 கிராம்
ஒரே சீராக வெட்டிய கத்திரிக்காய்: 2
ஒரே சீராக வெட்டிய வாழைக்காய்: 1
வெங்காயம் பொடியாக நறுக்கியது: 2
தக்காளி பொடியாக நறுக்கியது:2
புளிக்கரைசல்: சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு: தேவையான அளவு
மஞ்சள் தூள்: ½ ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள்: 5 டேபிள் ஸ்பூன்
கடுக: 1 ஸ்பூன்
எண்ணெய்: தாளிக்க
கறிவேப்பிலை: சிறிதளவு
கொத்தமல்லி: சிறிதளவு
தேங்காய், பூண்டு, சோம்பு வைத்து அரைத்த விழுது: சிறிதளவு
செய்முறை:
ஊறவைத்த கொ.கடலையை குக்கரில் 5 விசில் வைத்து வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் வாழைக்காய், கத்தரிக்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். காய் வெந்ததும், ம.தூள், மி.தூள், உப்பு, கொண்டைக்கடலை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடிப்போட்டு வேகவைக்கவும். அதனுடன் புளிக்கரைசல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கொண்டைக்கடலை புளிக்கூட்டு ரெடி.
இது கலந்த சாதத்திற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.