UVVP 08

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் - 8

“ ஏன் பண்றான் ?, எதுக்கு பண்றான் ?, எதை மறைக்க முயற்சி பண்றான்? கொஞ்சம் குடைச்சலான கேஸ் தான், எல்லாரும் DCP -தலையை உருட்ராங்க..."

"என்னவாம்?",

"அமைச்சரோட விசுவாசிங்க, என்ன காரணத்துக்காக கைது-ன்னு கேட்டு டார்ச்சர்.. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சி அவரோட ஆள் மாறாட்டத்தை வெளில சொல்ல வேண்டாம்னு ப்ரெஷர்.."

"இந்த பிரச்சனை போதாதுன்னு, விசாரணை பண்ணும்போது விநாயகம் வேற மயக்கமாயிட்டாரு.., இன்னிக்கு செஷன் போதும்-னு முடிச்சு, அவருக்கு மெடிக்கல் எயிட் கொடுத்துட்டு, இப்போதான் ரகோத்தமன் சார் வீட்டுக்கு போறார்.."

"ம்ம். கஷ்டம்தான்", சிறிதே பெருமூச்சுடன்...மாயா...

"பின்ன DCP -ன்னா சும்மாவா?, அவன் சமாளிப்பான்", என்றான் ஷிவா, நண்பனை தெரிந்தவனாய்....

"க்கா.., ஒரு கப் காபி...",

"இப்போ என்னடா காஃபி ?"

"க்கா.. ப்ளீஸ் , ரொம்ப டையர்டு ..உன் ஸ்பெஷல் பில்டர் காஃபி குடிச்சா, ரிலாக்ஸா இருக்கும்..",

"ம்க்கும்.. ஐஸ் வைக்க ஆரம்பிச்சிட்டான்... இவ போடற கழனி தண்ணி காபிக்கு இவ்வளவு பில்டப்பா? டேய் , காபி, வேணும்-னு நேரா கேளேன்-டா", பாதி வாய்க்குள்ளும், மீதி முணுமுணுப்பாயும் ஷிவா கூற....

"அங்க என்ன முணுமுணுப்பு?", மாயா..

கணேஷை பார்த்து "நம்மள கிண்டல் பண்ணலைன்னா உங்க மாமாக்கு தூக்கம் வராது",

"இருங்க .. வந்து வச்சுக்கிறேன்" , என்று ஷிவாவை முறைத்தவாறே.... கிட்சனை நோக்கி நகர.... ஆண்கள் இருவரும் பேச்சை தொடர்ந்தனர்..

"எப்டிடா, என்னேரமும் .. இந்த பாசமலர் சீரியலை ஓட்டறீங்க ?," ஷிவா கணேஷை கலாய்க்க...

சிரித்தபடியே சத்தமாய் , "அக்கா, மாமாக்கு எதோ சந்தேக...ம்ம்ம்ம்ம் ", முடிக்கும்முன் அவன் வாயைப் பொத்தி இருந்தான், ஷிவா.

"டேய்... விடுடா.விடுடா.... அவ அடி தாங்க முடியாதுடா", என சிரித்தான் ஷிவா.

"அந்த பயம் இருக்கட்டும்.. ", என கணேஷ் பதிலுக்கு ஷிவா காலை வார... மாயா காபியுடன் வந்து,

"இந்தாடா", "உங்களுக்கு...", இருவருக்கும் கொடுத்து தானும் ஒரு கப் எடுத்துக் கொண்டாள் .., அவனுடன் பேசுவதற்கு ஏதுவாக .. சோபாவில் சாய்ந்தமர்ந்தாள்.... [காபிக்கு ....கம்பெனி .....]

" கணேஷ் .. வாசுமாமா, ஒரு ஆபர் சொன்னார்.. ராஜன் டிவி விலைக்கு வருது. வாங்கலாமா?-ன்னு. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா? பண்ண முடியுமா?"

"நீங்க என்ன சொல்லறீங்க?", ஷிவாவிடமும் கேட்டாள் .

"எனக்கு தெரிஞ்சதை நான் சொல்றேன்", என்ற ஷிவா, " இப்போதைக்கு நம்ம நாட்டுல சானெல்ஸ் ரொம்ப அதிகம், ஆனா ஒரு சில நியூஸ் சானெல் தவிர, மத்ததெல்லாம் வேஸ்ட்.., நாம பொழுது போக்கா கொடுத்தாலும், செய்தியா கொடுத்தாலும், அது பார்க்கறவங்களை பாதிக்கணும். என்ன பண்றதுன்னு நீங்க முடிவு பண்ணுங்க.. இது ஒரு பார்வையாளனா என் suggestion."

"ஒரு பிஸினெஸ்மேனா சொல்லணும்-னா , அந்த டிவி யோட spectrum வேலிடிட்டி, அவங்க லைசென்ஸ் தகவல்கள், எவ்ளோ ரூபாய்க்கு டெலி -கம்யூனிகேஷன் -க்கு பேங்க் காரண்டீ குடுத்துருக்காங்க?, இதெல்லாம் தெரிஞ்சுக்கோ..., அப்பறம் , அவங்க டிமாண்ட் என்ன?, நம்மளால எப்போ முழு வீச்சு -ல டெலிகாஸ்ட் பண்ண முடியும்?, இதுவும் ஒர்க்-அவுட் பண்ணிட்டு சொல்லுங்க"

"அப்பா, உன் பேர்-ல வாங்கறதா இருக்காரு, உன் அக்கவுண்ட்-ல பணம் இருக்கா பாக்கணும், இல்லன்னா மொபிலைஸ் பண்ணிடலாம்...", இடைவிடாது பேசிக்கொண்டிருந்தவனை,

"ம்ம்ம்ம்ம்... நைஸ்...", காபியின் சுவையில் ஆழ்ந்திருந்த கணேஷின் குரல் கலைக்க,

"ம்ஹும்... க்ரோர்ஸ் கணக்குல இன்வெஸ்ட்மென்ட் பத்தி பேசிட்டு இருக்கேன்... இவன் காபி-ல இருக்கான்.."

"மாமா, அதெல்லாம் உங்க தலைவலி... ப்ரொக்ராம்ஸ் , டெலிகாஸ்ட்டிங் அதை மட்டும் என்கிட்டே விட்டுடுங்க... எப்போ ஆரம்பிக்க முடியும்னு இந்த கேஸ் முடிஞ்ச உடனே சொல்றேன்.., ஓகே ?"

"டேய், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? ஆமா .. உனக்கு ஏன் இந்த கேஸ்-ல , இவ்வளவு இன்ட்ரஸ்ட் ?, நம்ம வேலை என்னன்னு தெரியுமில்ல?, மக்களுக்கு உண்மையை, நடந்ததை வெளிச்சம் போட்டு காண்பிக்கறது தான்..., நம்ம பெர்சனலா எல்லா விஷயத்திலும் இன்வால்வ் ஆக முடியாது அண்ட் கூடாது கூட , எனக்கென்னவோ இந்த கேஸ்-ல நீ அதிகமா தலையிடறதா தோணுது", சொன்ன மாயாவை இடையிட்டு..

"அக்கா... என்ன சொல்ல வர்ற?,", சொன்னவனின் முகம் வெகு சீரியஸ்...,

"நடக்கிறத பாத்து... எழுத இங்க நிறைய பேர் இருக்காங்க... , மத்தவங்க மாதிரி சென்சிட்டிவான டாபிக் எடுத்துட்டு ... டிபேட் - நடத்தி ... இதுவா இருக்குமோ?, அதுவா இருக்குமோ? -ன்னு ரவுண்ட் டேபிள்-ல உக்காந்து, காலாட்டிட்டு மிக்ஸர் சாப்டுட்டே விவாதிக்க சொல்றியா?, ",

"டேய்....", என்றவளை குறுக்கிட்டு...

"தெரியும்... , துப்பறியறது போலீஸ் வேலைன்னு சொல்ல வர்ற.. அதான?" என்றவன் .....

" அக்கா... சாட்சியும் ஆதாரமும் இருந்தாதான்......", தீர்க்கப்பார்வையுடன் அழுத்தமாய் ...."போலீஸ் அரஸ்ட்-டே செய்ய முடியும்.. தெரியுமில்ல?, அதுவும் தீர்ப்பு எழுதறவரை சாட்சிகள் பல்டி அடிக்காம இருக்கணும்..அதைவிட முக்கியம் உயிரோட இருக்கணும்... இப்போ இந்த விநாயகம் கேஸ் எடுத்துக்கோ... இவரை ஆள் மாறாட்ட கேஸ் -ல தான் புக் பண்ணி இருக்கணும் , கூடவே ,. சைல்ட் ட்ராபிக்கிங்-ல புக் பண்ண முடியும், ஆனா ஆள் மாறாட்டம் வெளில தெரியகூடாதுன்னு ஆளுங்கட்சி பிரஷர், சைல்ட் ட்ராபிக்கிங்-க்கு ஆதாரமே இல்ல.. .”

"ம்ஹ்ம்.. இப்போ நம்ம நாட்ல இருக்கிற கிரைம் ரேட்டுக்கு , இன்னும் நாலு பங்கு போலீஸை அப்பாயிண்ட் பண்ணனும்.. அப்படியே பண்ணினாலும், அவங்க அரசியல்வாதிகளுக்கு பந்தோபஸ்துகெல்லாம் போயி.. பொதுக் கூட்டம், மறியல் - க்கு போயி .... மிச்சமிருக்கிற நேரத்துல இதையெல்லாம் கண்டுபுடிக்கறதுக்குள்ள.... இன்னும் எத்தனை குழந்தைங்க காணாம போவாங்களோ ?, சும்மா விட்ர சொல்றியா, சொல்லு..." என்றான் வேகமாக...

இதுதான் கணேஷ்... வேகமானவன்... மாயாவைவிட.. மிக வேகமானவன் ...ஒரு விஷயம் இவன் கண்ணுக்கு தவறென்று தெரிந்தால்.. மிக சாதுர்யமாக அதை வெளிக்கொணர்வான்... அதேயே நுனிப்புல்லாய் மேய்ந்து, மீடியாவின் பாராட்டை பெறுவதைவிட , அத்தவறை வேரோடு பெயர்த்து களையும் வரை ஓயமாட்டான்...

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?, கோவை அவிநாஷி ரோட்-ல செத்துப் போனாங்களே, அந்த மூணு பொண்ணுங்க... அதை கோர்ட் விசாரிச்சு தீர்ப்பு சொன்னது.. எப்போவும் கோர்ட் ஆக்டிவிட்டீஸ் ரிப்போர்ட் பண்ற பரசுராம் அன்னிக்கு லீவ்... வேற ரிப்போர்ட்டர்ஸ் யாரும் இல்லாததால நானே போனேன்.. ", என்று நிறுத்திய கணேஷ் ....

அலைபேசியில் சில பட்டன்களை அமுக்கி... " கேளு.. ரெக்கார்ட் பண்ணிருக்கேன்..இதுதான் அந்த தீர்ப்பு", என்று ஒளிபரப்பினான் ...

"எதிர்பாராமல் கரியமில வாயு காருக்குள் சென்றதால்...ஓட்டுனரையம், அதில் பயணித்த சிறுமிகளையும் நிலைகுலைய வைத்து மரணம் சம்பவித்துள்ளது. வாகன பராமரிப்பில் நிகழ்ந்த அலட்சியமே, இவ்விபத்து ஏற்பட முக்கிய காரணம்.. எனவே பெற்றோர்கள், காப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளுமாய் .. நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்படுகிறது..", என்று நீதிபதி முடிக்க......

ஒரு பெண்ணின் அலறல்....ரெக்கார்டிங்-ல் தொடர்ந்தது..

"டேய்... நீங்கல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடா ... உங்க காசுக்காடா நான் இவ்வளவு பாடுபட்டேன்?, என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்டனே? திருச்சி மண்ணச்ச நல்லூர் - ல இருந்த என் பொண்ணு ஏண்டா கோயமுத்தூருக்கு வந்தா? உன்காசு எம்பொன்னை தருமாடா?", என்று கதற, பதிவை நிறுத்தியவன்....

"இது மேகலை-ன்னு ஒருத்தங்களோட கதறல்.... இவங்க பொண்ணுக்கு 14 வயசு, கார்-ல செத்துப்போன மூணு பொண்ணுங்கள்-ல ஒரு பொண்ணோட அம்மா. ..",

கேட்கும்போதே மாயா, ஷிவாவின் மனம் கணத்தது...

"இவங்க பக்கத்துல பாலா-ன்னு ஒருத்தங்க....உயிர்ப்பில்லாத கண்ணோட, வெறுமையாய் ... தீர்ப்பை கேட்டுட்டு இருந்தாங்க.... அவங்க பொண்ணும் விக்டிம்...., அவங்க பேசவே இல்ல... ஒரு பார்வைதான்.... "என்னை பேட்டி எடுத்து காசு பாக்கிற கூட்டம் தானே நீ ?, "ன்னு . செருப்பால அடிக்கிறா மாதிரி இருந்தது, அந்த பார்வை...

"என்னால அதுக்கப்பறம் நிம்மதியா தூங்க முடில... மூளை எல்லாம் அவங்க பார்வையும் கதறலும் மட்டும் தான் நிக்கிது... என்ன பண்ண சொல்ற?, அதான் அந்த கேஸை தோண்ட ஆரம்பிச்சேன்... அப்பறம் நடந்தது எல்லாம் உனக்கும் தெரியும்.. அந்த பொண்ணுகளுக்கும் இந்த விநாயகத்துக்கும் என்ன தொடர்பு? -ன்னு தெரியணும் ..இதோட டேட்டா-வை ஷானு ஆரம்பத்தில இருந்தே கலெக்ட் பண்ணினது ரொம்ப யூஸ்ஃபுல்.. விநாயகத்தை தவிர, வெளில எவனோ இருக்கான்...அவனை பிடிக்கணும், யூனிஃபார்ம் போட்டுட்டு தான் துப்பறியனும்-னு இல்லக்கா.., இது நான் இருக்கிற சமூகத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமை..", இடைவெளி விட்டவன்... "இப்பவும் விட்டுடுன்னு தான் சொல்ல போறியா?", என்று நிறுத்தினான்.

அவன் சொன்ன செய்திகளை சற்று நேரம் உள்வாங்கியவள்.. பெருமூச்செடுத்து, " நாளைக்கு காலைல லாக்கர்-லேர்ந்து கன்(துப்பாக்கி) எடுத்து தர்றேன். safety -க்கு வச்சுக்கோ..", என்று கூற....

அவளின் அனுமதியை புரிந்தவனாய்... முறுவலித்தான்...

சில நொடிகளுக்கு பின்.." உனக்கு மட்டுமில்லடா.. எனக்கும் நாடு மேல அக்கறை இருக்கு.. பட் , நீ என் தம்பி , அதனால உம்மேல... அக்கறை கொஞ்சம் அதிகமா இருக்கு.. காலைல வந்து சேர்..", என மாயா கூற...

"தாங்க்ஸ்க்கா", என்றவன் .. "அக்கா... ஒரு விஷயம் ", என்று தயங்கினான்...

"சொல்லுடா",

"அது வந்து.. நான் ஷானு-கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்-னு இருக்கேன் ", திக்கி திணறி முடித்த கணேஷ் பதின்பருவ விடலைப்பையனை போலிருந்தான்.....

மாயாவும், ஷிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்... சிரிப்பை மனதுள் அடக்கி, "டேய் .. இது பர்மிஷனா இல்ல, இன்பர்மேஷனா?",என மாயா வினவ...

சிவந்திருந்த முகத்துடன், "அது நீ சொல்ற பதில்-ல இருக்குக்கா... நீ எஸ் சொன்னா... பர்மிஷன் கேக்கறதா வச்சுக்கோ...நோ சொல்றதா இருந்தா, இன்பர்மேஷன்-ன்னு வச்சுக்க..."..

"அடப்பாவி", என்று ஷிவா சிரிக்க...

"நீ ஓவர் ஸ்மார்ட் தாண்டா....", என்ற மாயா சிரிப்பில் இணைந்தாள்..

சட்டென கிட்ட வந்து மாயாவின் கை பிடித்து "ரொம்ப தேங்க்ஸ் க்கா ", சிறிது வெக்கத்துடன்...

"போடா லூசு.." என்று அவன் தலை கலைத்தாள்...

"ஓகே டைம் ஆச்சு...பை.. நாளைக்கு பாக்கலாம் ..குட் நைட், மாம்ஸ் .. குட் நைட் ", என்றவாறே சென்றான்..

^^^^^^^^ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ^^^^^^^^^

பீடத்தி லேறிக் கொண்டாள் -- மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.

நாடித் தவம் புரிந்து -- பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு -- கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக் -- கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்து கன்னி -- வேடத்தில் ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் -- காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் -- ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப -- வீடொத் தினிமைசெய்து
வேடத்தில் சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா(பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச் சிவனுடலை -- நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி லரசியிவள் -- பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் -- காத லிரதியிவள்
பண்ணி லினியசுவை -- பரந்த பொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா


- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top