AMP - 18

Advertisement

laksh14

Well-Known Member
Hii... Frds & siss... AMP 18 epi pottachu... Padithuvittu comments kodukka marakkadhinga... Happy Reading...:):):)




அத்தியாயம் - 18

உருகியதே எனது உள்ளம்...
பெருகியதே விழிவெள்ளம்...
விண்ணோடும் நீதான்...
மண்ணோடும் நீதான்...
கண்ணோடும் நீதான்...
வா...

காலை விரைவாகவே ஆதி கிளம்ப.. அவனுக்கு தோசை வார்த்து கொடுத்தாள் இளா... அவனும் உண்டுவிட்டு வாசல்வரை சென்றவன்... மீண்டும் இளாவிடம் வந்து "இங்க பாரு எங்கயும் வெளியே போகாத... இன்னும் ரெண்டு நாளைக்கு தான்.. அதுக்கப்புறம் நீ எங்க கூட்டிபோக சொல்றியோ அங்க போகலாம்... ஓகே.." என்று ஆதி பத்தாவது முறையாக சொல்ல... இளாவுக்கு சப்பென்றானது... "இத சொல்லதான் வேகமா வந்தீங்களா.. ம்ம்ம்.. நான் எங்கேயும் போகமாட்டேன்.. இது சத்தியம் சத்தியம்..." என்று ஆக்ஷனோடு சொன்னவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமொன்று வைத்தவன்.. "ஏய்.. மிச்சத்த இவ்னிங் வந்து குடுக்கிறேன்டி லாலீபாப்..." என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டான்... இளா சிரித்துக்கொண்டே இதர வேலைகளை பார்க்க சென்றாள்...

ஆதியும் விஷ்வாவும் இரண்டில் ஒரு டெக்ஸ்டைல்ஸ் சென்று சிசிடிவியை செக் செய்ய... அங்கே எதர்ச்சையாக வந்த தாஸ் இவர்கள் இருவரையும் கண்டு மறைந்தவன்... அவர்களை கண்காணிக்க ஆரம்பித்தான்.. ஆதியின் கையில் இருந்த பட்டனின் புகைப்படம் மற்றும் உருவபுகைபடத்தை கண்டவன் அதிர்ந்தான்.. "என்னோட போட்டோ இவன்கிட்ட எப்படி போச்சி.. ஒருவேல நான் தான் கொலைகாரன்னு தெரிஞ்சிடுச்சா... இப்போ என்ன பன்றது.. எப்படியும் இந்த சிசிடிவில என் முகம் பதிவாயிருக்கும்.. நாம உடனே இந்த ஊரவிட்டு கிளம்பியாகனும்.." என்று வீட்டிற்கு கிளம்பினான் தாஸ்...

ஆனால் இவனுக்கு முன்னாடியே.. போலீஸ் அவன் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்தது... ஆம் ஆதிதான் அவன் வீட்டில் ட்ரக்ஸ் இருப்பதாக ராஜனிடம் சொல்லி போலீசை அவன் இல்லாத நேரமாக பார்த்து அனுப்ப சொன்னான்... பெண்களின் கொலை சம்பந்தமாக எதாவது எவிடன்ஸ் கிடைக்குமா என்று... ஆனால் ஆதி எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆதாரங்கள் கிடைத்தது.. தாஸ் அவன் வீட்டிற்கு செல்ல... அப்பார்ட்மெண்ட் வாசலில் போலீஸ் வண்டி நிற்கவும் அவனுக்கு சந்தேகம் வர.. கேப் அணிந்துகொண்டவன் மெதுவாக அவன் ப்ளாட்டின் அருகே நின்று எட்டிப்பார்க்க... மேஜை மீது ட்ரக்ஸ்,அபின் போன்ற பலவகையான போதை பொருட்கள், பல பெண்களின் அபாசமான புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய லாப்டாப்.. என அடுக்கிவைக்கப்பட்டிருந்தது... இவைகளை கண்டவனின் முகம் ரௌத்திரம் அடைய... அங்கிருந்து வெளியே சென்றவனின் மொத்த கோபமும் ஆதியின் மீது இருக்க... வேகமாக திட்டம் தீட்டியவன்... அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்...

இளா மதிய உணவு தயாரித்துகொண்டிருக்க மொபைல் ஒலிக்கவும் எடுத்து பார்த்தவள் புது நம்பராக இருக்க.. "எடுக்கலாமா வேண்டாமா..." என்று யோசித்தவள்.. அட்டண்ட் செய்து காதில் வைத்தாள்... "டாக்டர் நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து
பேசுறேன்.. நீங்க ட்ரீட்மெண்ட் பன்னிட்டுருந்த குழந்தைக்கு ரொம்ப சீரியஸ்ஸா இருக்கு... சீக்கிரம் டாக்டர் உங்கள வர சொன்னாங்க.." என்று ஒரு பெண் சொல்ல... இளா சற்றும் யோசிக்காமல் இன்னும் "பதினைந்து நிமிடத்தில் அங்கே இருப்பேன்..." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்... அப்பார்ட்மெண்ட் வாசலில் ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் ஏறிப்போனாள்.. போகும் வழியில் ஆதியின் நினைவு வர.. போன் செய்ய அது நாட் ரீச்சபுல் என்று வரவும்.. "இப்போ என்ன பன்றது.. அவர்வேற வெளியே எங்கயும் போகவேணான்னு சொன்னார்... ம்ம்ம்.. சரி ஹாஸ்பிட்டல் போய்ட்டு கால் பன்னலாம்..." என்று முடிவெடுத்தாள்.. (கொஞ்சம் யோசித்து இருக்கலாம் இளா... சீப் டாக்டர் ஏன் தனக்கு போன் பன்னவில்லை அல்லது அவர் நம்பர் என்னிடம் இருக்கிறது என்பதையும் மறந்தாள்...)

ஆட்டோ யாரும் இல்லாத ஒரு இடத்தில் நிற்க.. அதுவரை ஆதிக்கு போன் ட்ரை பன்னிக்கொண்டிருந்தவள்... நிமிர்ந்து பார்க்க... அவள் முகத்தில் மயக்கமருந்து தெளிக்கப்பட அப்படியே மயங்கி சரிந்தாள்... அப்போது ஒரு கார் வர அதில் இருந்து இறங்கிய தாஸ் அவளை அப்படியே தூக்கியவன் ஆட்டோகாரனிடம் "ம்ம்ம்.. இதுக்கான பணம் உன்ன தேடிவரும்.." என்று சொல்லிவிட்டு காரின் பின் சீட்டில் அவளை கடத்திவிட்டு வண்டியை எடுத்தான்... தாஸ் ஏற்கனவே இளாவின் நம்பரை ஹாஸ்பிட்டலில் ஒரு நர்சிடம் எமர்ஜென்சி என்று பொய் சொல்லி வாங்கி வைத்திருந்தான்... இப்போதுகூட பெண் குரலில் அவளிடம் பேசியது இவனே...

இது எதுவும் தெரியாத ஆதி.. சிசிடிவியை ஆராய்ந்து கொண்டிருக்க... அவனின் போன் ஒலிக்கவும் அட்டண்ட் செய்ய... "ஆதி நாம்ம நினைச்ச மாதிரி எல்லா எவிடன்சும் அவன் வீட்ல இருந்து எடுத்தாச்சி... ஆனா அவன் இன்னும் இங்க வரல... எல்லாரும் ரவுண்டப் பன்ன ரெடியா இருக்காங்க..." என்று அருண் சொல்ல... "கொஞ்ச நேரம் வெயிட் பன்னிபாருங்க... இன்னும் அரமணி நேரத்துல நான் அங்க இருப்பேன்..." என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தவன் மிஸ்ட்கால் மெசேஜ்ஸ் இளாவிடமிருந்து வந்திருப்பதை பார்க்க... "ம்ம்ம்.. இவ எதுக்கு இத்தன தடவ கால் பன்னிருக்கா... ம்ம்ம் சரி எப்படியா இருந்தாலும் இப்போ வீட்டுக்கு தான் போகப்போறோம்.. அப்ப கேட்டுக்கலாம்..." என்று நினைத்துக்கொண்டு வேலையில் ஈடுபட்டான்...

சிசிடிவி ஆதாரமும் கிடைக்க... ஆதியும் விஷ்வாவும் ராஜனிடம் போனில் தகவல் சொல்லிவிட்டு.. அப்பார்ட்மெண்ட்டிற்கு புறப்பட்டனர்...
வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் தாஸின் வீட்டை நோக்கி செல்ல... ஆதியின் போன் ஒலிக்க அட்டண்ட் செய்ய... "என்ன ஆதி என்ன புடிக்க எல்லா ஆதாரமும் கிடச்சிடுச்சு போல.." என்று எகத்தாளமாக ஒரு ஆணின் குரல் கேட்கவும்... ஆதிக்கு புரிந்துவிட்டது இது தாஸ்தான் என்று... "ஏய் ப்ளடி பாஸ்டர்ட்... எங்கடா போய் ஒளிஞ்சிருக்க... உன்ன கொல்லாம விடமாட்டேன்டா.." என்று ஆதி கர்ஜிக்க.. அவனோ சிரித்தவன் "டேய்.. உன்னால என்ன ஒன்னும் பன்னமுடியாதுடா... அப்படியும் எதாவது பன்னனா... உன் பொண்டாட்டி உனக்கு முழுசா கிடைக்கமாட்டா..." என்று தாஸ் சொல்ல.. "என்னடா சொல்ற.." என்ற ஆதியின் குரலில் சிறு நடுக்கம்.. "ம்ம்ம்... உன் பொண்டாட்டி இப்போ என் கஸ்டடிலதான் இருக்கா.. ஏற்கனவே அவ மேல எனக்கு.." என்று சொல்ல வந்தவனை "நிறுத்துடா.." என்று ஆதி சுற்றுப்புறம் பாராமல் கத்த... விஷ்வா "என்னாச்சிடா.." என்று கேட்க... யார் கேள்விக்கும் பதில் சொல்லாதவன் வேகமாக படி ஏறி தன் வீட்டு கதவை தட்ட.. ஹரிஷ் வீட்டில் இருந்து வெளியே வந்த பாட்டி.. "இளா ஹாஸ்பிட்டல் போறதா என்கிட்ட சொல்லிட்டு தான் போனா.. ஏதோ குழந்தைக்கு சீரியஸ்னு ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வந்ததா சொன்னா... என்னாச்சி தம்பி..." என்று அவர் பதட்டத்துடன் கேட்க... யாருக்கும் பதில் சொல்லாமல் வீட்டின் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்தான்.. "ஏன்டி இப்படி பன்ன... காலையில அவ்வளோவாட்டி சொன்னேனே..." என்று மனதில் நினைத்தவன்... விஷ்வாவிடம் "விஷ்வா... இ..இளாவ அவன் தூக்கிட்டான்டா.." என்று சொல்ல.. "ஆதி... இது நீ சோர்ந்து போகற நேரம் இல்ல நிதானமா யோசி..." என்று விஷ்வா சொல்ல... "ம்ம்ம்.. ஓகே டா... இப்ப அவன்கிட்ட இருந்து மறுபடியும் கால் வரும்.. அதுக்குள்ள அருண்கிட்ட அவன் ரூம்ல இருந்து எடுத்த ஆதாரத்தை எல்லாம் இங்க கொண்டு வர சொல்லு..." என்று ஆதி சொல்ல... "ம்ம்ம்.. ஓகே..." என்று விஷ்வாவும் அப்படியே செய்தான்...

ஆதி நினைத்ததுபோல் தாஸ் போன் செய்தான்... "இங்க பார் ஆதி.. நீ என்ன ரொம்ப டார்ச்சர் பன்னிட்ட.. எனக்கு என்னுடைய லாப்டாப் மட்டும் வேணும்... அதுவும் நீதான் எனக்கு அத கொண்டு வந்து தரணும்... நீ மட்டும்... அதுக்தப்புறம் தாராளமா உன் பொண்டாட்டிய கூட்டிட்டுபோ..." என்று தாஸ் சொல்ல... "ம்ம்ம்.. ஆனா அதுக்கு முன்னாடி.. என் வைப்ப நான் பார்க்கணும்.." என்று ஆதி சொல்ல.. தாஸ் சிரித்தவன் "உன் பொண்டாட்டி மேல அவ்ளோ பாசமோ.. ம்ம்ம்.. வெயிட்பன்னு உனக்கொரு வீடியோ அனுப்பறேன்..." என்று சொல்லிவிட்டு மயக்க நிலையில் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டு இருந்தவளை வீடியோ எடுத்து அனுப்பினான்..

வீடியோவை பார்த்த ஆதியின் மனம் நொறுங்க... அவனுக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்தான் விஷ்வா.. தாஸிடம் இருந்து மறுபடியும் போன் வர.. அவசரமாக எடுத்த ஆதி... "டேய்.. அவள ஒன்னும் பன்னிடாதடா..." என்று சொல்ல.. "நான் எதுவும் பன்னாம இருக்கனும்னா... நான் சொன்ன மாதிரி லாப்டாப் எடுத்துகிட்டு xxx இந்த இடத்துக்கு வா... மறுபடியும் சொல்றேன் நீ மட்டும் தான் வரணும்... போலீஸ் எதாவது ஃபாலோ பன்றாங்கன்னு தெரிஞ்சது... உன் பொண்டாட்டி உனக்கு உயிரோட கிடைப்பா.. ஆனா வேற மாதிரி..." என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்...

"ஆதி அவன் சொன்ன இடத்துக்கு போக குறஞ்சது இரண்டு மணிநேரமாகும்..." என்று விஷ்வா சொல்ல... "ம்ம்ம்... நான் கிளம்பறேன்.. இராஜன் சார்கிட்ட சொல்லி... நான் இப்ப போற ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பன்ன சொல்லு... நான் அங்க போன இருபது நிமிஷம் கழிச்சி அவங்கள அந்த இடத்துக்குள்ள வரசொல்லு..." என்று ஆதி சொல்ல.. "நானும் உன்கூட வரேண்டா..." என்று விஷ்வா சொல்ல.. "வேணா விஷ்வா.. எப்படியும் இங்கருந்து ஒரு ஆள் என்ன பாலோ பன்னுவான்.. அப்புறம் இளாவுக்கு தான் பிரச்சனையாகும்.." என்று ஆதி சொல்ல... "ஓகேடா... பாத்துப்போ... வரும்போது இளாவோடவா..." என்று சொல்லி விஷ்வா ஆதியை அணைத்து விடுவித்தான்... ஆதியும் அவ்விடத்திற்கு விரைந்தான்...

இளா லேசாக கண்ணை திறக்க.. அவளின் முன் தாஸ் நின்றுகொண்டிருந்தான்... "யா..யார்ரா நீங்க.. ஏன் எ..என்ன கடத்திட்டுவந்தீங்க..." என்று குழைந்த குரலில் அவள் கேட்க... "ம்ம்ம்.. உன் புருஷனப்போய் கேளுடி.." என்று அவளின் தலைமுடியைபிடித்து தாஸ் சொல்ல... "ஏய்... வலிக்குதுடா... இரு என் ஆதுகிட்டையே சொல்றேன்..." என்று சொன்னவளின் கன்னத்தில் ஒரு அரைவிட்டவன்.. "டேய்... இவளுக்கு இன்னொரு டோஸ் போதமருந்து கொடுங்கடா..." என்று அடியாட்களிடம் சொல்லிவிட்டு சென்றான் தாஸ்...

வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆதி "லாலீபாப்... உனக்கு எதுவும் ஆகாம நான் பாத்துபேன்டி... நீ அங்க தைரியமா இரு.. நான் இருக்கறவரைக்கும் உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்... அந்த பாஸ்டர்ட உயிரோட அங்கேயே சமாதிகட்றேன்..." என்று மனதில் நினைத்துக்கொண்டே சென்றான்...

- தொடரும்...
nyc ud mam....lollipop epadi poi das kita maatikitalae
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top