இடைவெளி அதிகம் இருக்கையில் தீண்டவே விரல்களுக்கு தயக்கம் வந்துவிடுகிறது.
முதல் ஸ்பரிசம் போல் தயங்கி தயங்கி மீண்டும் தொட்ட என் எழுதுகோலும் விரல்களும் இன்று உற்சாகம்மிக கொள்கிறது.
தேனின் தித்திப்பை முதல் முறை சுவைக்கும் பச்சிளம் குழந்தையாகியிருக்கிறது மனம், வெகு நாட்கள் கழித்து விரல்கள் கொண்ட உற்சாகத்தால்.
படிப்பது நமக்காக, ஆனால் எழுதுவது என்பது பிறருக்காக என சமீபத்தில் கேட்ட இந்திரா சௌந்தர்ராஜன் வார்த்தைகளுக்கு ஏற்ப