Advertisement

பாரதிப்பிரியன்

Profile posts Latest activity Postings About

  • தமிழ் வார்த்தைகள் அறிவோம்

    யானை குறித்த தமிழ் தகவல்கள்

    1. யானைக்கன்று ( யானை குட்டி)
    @ கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி

    2. யானைத் துதிக்கையின் பெயர்
    @ தொண்டை, தொண்டலம், சுண்டை

    3. யானை முன் காலின் பெயர்
    @ காத்திரம்

    4. யானை பின் காலின் பெயர்
    @ அபரம்

    5. யானை தந்தத்தின் பெயர்
    @ எயிரு,

    இனிய காலை வணக்கங்கள்
    B
    bavi1308
    பயனுள்ள வார்த்தைகள்..அன்னை தமிழின் அருஞ்சுவை சுவைப்போம்..நன்றி...
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    அனைவருக்கும் வணக்கம். இங்கு பதிவிடப்படும் தமிழ் வார்த்தைகள் நிறைய பேருக்கு பயன் தரும் என்று முழுமையாக நம்புகின்றேன். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். தமிழின் சுவையை நம் பிள்ளைகள் அவர்கள் தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இது ஒரு சிறிய முயற்சியாக இது அமையட்டும். ஆதரிக்கும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...
    நதிகள் அறிவோம் 2

    1. துங்கா
    2. பத்ரா
    3. கோதாவரி
    4. கிருஷ்ணா
    5. நர்மதை
    6. தபதி
    7. சீலம்
    8. சட்லஜ்
    9. சிந்து
    10. பிரமம்புத்ரா

    இனிய காலை வணக்கம்
    நதிகள் அறிவோம்!!??
    காவிரி-பொன்னி
    பாலாறு
    தென்பெண்ணை
    நொய்யல்
    ஆன்பொருநை - அமராவதி
    சிறுவாணி
    கோதயாறு
    மணிமுத்தாறு
    தாமிரபரணி
    சுள்ளியம் பேரியாறு - பெரியாறு
    பவானி
    சண்முகா நதி
    கோசலையாறு
    வசிஷ்டர் நதி

    இனிய காலை வணக்கம்
    அன்புடன் பாரதிப்பிரியன்
    குயவன் கை
    நிறைந்த மண்ணாய்
    நம் பிள்ளைகள்....
    எப்படியும் வனையலாம்....??!!
    குயவனாய் இருந்து
    ஆரோக்கியமான
    தைரியமான
    பிள்ளைகளை வனையுங்கள்....
    நாளைய சமுதாயத்தின்
    நம்பிக்கை நட்சத்திரமாக
    நல்லெண்ண தீபங்களாக
    உருவாக்கி வையுங்கள்....
    சுடர்விட்டு ஒளியெழுப்ப
    பகலவனாய் ஆக்குவோம்...

    இனிய காலை வணக்கம்
    பாரதிப்பிரியன்
    அன்புள்ள வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம். கலங்கரை கோபுரம் என்னும் வரலாற்று சிறுகதை இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ளது. வாசித்துப் பாருங்கள். ஒரு மாற்றத்திற்காக குடும்ப நாவல், காதல் கதைகள் அறைக்குள் இருந்து வெளியே வந்து, இந்த கதையையும் வாசித்துப் பாருங்கள். கிரேக்க மணிமகுடம் என்னும் வரலாற்றுத் தொடர், தமிழ் நாவல் எழுத்தாளர்கள் தளத்தில் 12 பாகங்கள் வெளிவந்து உள்ளது. அதிரடியான கதைக்களம். மகிழ்வோடு வாசியுங்கள்.
    "மகிழ்வான காலை
    மனமெங்கும் பொங்கும்
    மனிதநேய பேரலை...
    மானுடம் வெல்ல
    மனித மொழி தேவை
    மறந்துபோன
    மன்னிப்பை ...
    மனதில் வளர்ப்போம்
    நாளைய தலைமுறைக்கு
    அன்பை கற்றுத் தருவோம்".....
    இனிய காலை வணக்கம்
    தமிழ் நாவல் எழுத்தாளர் குழுமத்தில் கதை போட்டியில் பங்கேற்று உள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ஒன்றாக இணைந்து தமிழ் பேரழகியை நாம் நம் எழுத்துக்களால் அணி செய்து உள்ளோம். பங்கேற்க முடியாதவர்கள் தயாராக இருங்கள் அடுத்த போர்க்களத்தில் நம் திறமையை காட்டலாம்... அன்புடன்
    பாரதிப்பிரியன்
    ஆனந்தம் பொங்க
    அயர்ச்சி நீங்க
    ஆத்மாவில்
    அன்பு
    அலையலையாய் வீச
    அன்புடன் வாழ்த்துகின்றேன்
    புலர்ந்திருக்கும் புது நாளில்
    அர்ப்பணித்து பணியாற்ற
    ஆசை கொள்கின்றேன்...
    இனிய காலை வணக்கம்
    "மாநாக்காவாரம், நாகதீபம், பூர்வக்குடிகள், கடாரம், ஸ்ரீவிசயம், பெகு, மஞ்சள் மேனியும், கருப்பு தேகமும் கொண்ட மனிதர்கள், மனித நேயமுள்ள பேரரசன், நறுமண பிசின் கட்டி, இந்திரா முனை" இதையெல்லாம் குறித்து அறிய வேண்டுமா? "கலங்கரை கோபுரம்" சிறுகதை வாசியுங்கள். உங்கள் தலைமுறைக்கு, சொல்லிக்கொடுக்க நிறைய விஷயம் இதில் உள்ளது....

    நன்றியுடன்
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    நாவாய் என்பது, கப்பல். தமிழர்கள் நாவாய் என்ற சொல்லை கப்பலுக்கு பயன்படுத்தினர். தமிழகம் சார்ந்து பலநாடுகளுக்கும் வாணிபம் செய்தவர்கள், மரக்கலன் என்ற சொல்லை பயன்படுத்தினர். அழகுத் தமிழின் வார்த்தைகள் நிறைய நம்மால் நடைமுறையில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பது வருத்தமாக தான் உள்ளது. கற்றுக்கொள்ளுங்கள் நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கலாம். சரிதானே!!!??
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    புரியாத வார்த்தைகள் என்பதை விட, தெரியாத வார்த்தைகள் என்பது சரி. தெரியாத வார்த்தைகளை கேளுங்கள்... சொல்லிக் கொடுக்க தயாராக உள்ளேன். புதிய வார்த்தைகளை பயன்படுத்துவதன் நோக்கமே கற்றுக்கொடுக்க தான்
    B
    bavi1308
    கண்டிப்பாக... கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்..
    ஞாயிரை ஞாயிறு
    உதிக்கச் செய்த
    ஞாலத்தின் காலை....

    மாநிலமே இன்று
    வீட்டுச் சிறையில்....

    வயிற்றின் பசியும், வலியும்
    மட்டும் இங்கே
    பொதுவுடமை பேசுகின்றது

    உணவின்றி உழலும்
    உங்கள் அடுத்திருப்பவனை
    உணர்வோடு நினையுங்கள்

    இன்றோரு நாள் மட்டும்
    உணவை வீணாக்காது சேமியுங்கள்
    பிறருக்கு உதவுங்கள்

    இனிய காலை வணக்கம்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top