Advertisement

பாரதிப்பிரியன்

Profile posts Latest activity Postings About

  • என்னுடைய " என் உயிரின் உயிரான மனைவிக்கு" (மனைவிக்கு கணவனின் கடிதம்) இரண்டாம் பாகம் பொழுது போக்கு பகுதியில் பதிப்பித்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி
    என்னுடைய புதிய தொடர் " என் உயிரின் உயிரான மனைவிக்கு " ( மனைவிக்கு கணவன் எழுதும் கடிதம்) 2 ம் பாகம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி
    என்னுடைய புதிய குறும் தொடர் ஒன்றை "என் உயிரின் உயிரான மனைவிக்கு" எனும் பெயரில் பொழுது போக்கு பகுதியில் பதிவிட்டு உள்ளேன். இது ஒரு கணவன் மனைவிக்கு எழுதும் கடிதத்தின் தொடர்ச்சி.... வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி
    அழகிய தமிழ் அறிவோம்:

    1. சிகரம் - உச்சி; முகடு
    2. சிகை - தலைமயிர்
    3. சிரம் - தலை
    4. சிரசு - தலை
    5. சிங்கம் - அரிமா
    6. சிங்காரம் - ஒப்பனை; அழகு
    7. சிசு - குழந்தை; சேய்
    8. சித்தப்பிரமை - மனமயக்கம்
    9. சிகிச்சை - மருத்துவம்
    10. சித்தாந்தம் - கோட்பாடு

    இனிய காலை வணக்கம்
    அழகிய தமிழ் சொற்கள் அறிவோம்

    வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

    சாந்தம் - அடக்கம்
    சாந்தி - அமைதி
    சாரம் - சாறு; பிழிவு
    சாராம்சம் - சாறு; பிழிவு
    சாத்தியமான - இயலக்கூடிய
    சாம்ராஜ்ஜியம் - பேரரசு

    இனிய காலை வணக்கம்
    அன்புள்ள வாசகர்களே, எழுத்தாளர்களே வணக்கம். என்னுடைய வேடந்தாங்கல் தொடரின் 6ம் சிறகு இன்று விரிந்துள்ளது. உங்களின் ஆதரவை கோருகின்றேன். வாசியுங்கள் உங்கள் நண்பர்கள், உறவுகளுக்கும் பகிருங்கள். நன்றி.பாரதிப்பிரியன்
    அழகிய தமிழ் அறிவோம்

    தமிழ் இலக்கியங்கள் குறித்த தகவல்கள்

    1. எட்டுத்தொகை:
    @ நற்றிணை
    @ குறுந்தொகை
    @ ஐங்குறுநூறு
    @ பதிற்றுப்பத்து
    @ பரிபாடல்
    @ கலித்தொகை
    @ அகநானூறு
    @ புறநானூறு

    2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
    @ நாலடியார்
    @ நான்மணிக்கடிகை
    @ கார் நாற்பது
    @ களவழி நாற்பது
    @ இன்னா நாற்பது
    @ இனிய நாற்பது
    @ ஐந்தினை ஐம்பது
    @ ஐந்திணை எழுபது.
    @ திருக்குறள்
    @ திணை மாலை நூற்றம்பது
    @ திரிகடுகம்
    @ ஆசாரக்கோவை
    @ பழமொழி நானூறு
    தொடரும
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம்

    விலங்குகள் குறித்த தமிழ் தகவல்கள்:

    1. உடும்பின் பெயர்: தடி, முசலி, கோதா,

    2. முயலின் பெயர்: சசம்

    3. பாம்பின் பெயர்:
    அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம்.

    இனிய காலை வணக்கம்
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம்

    1. கிளியின் பெயர்கள்:
    சாரு, அரி, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம், சுவாகதம், அவந்திகை

    2. இறகின் பெயர்:
    சிறகு, சதனம், வாசம், சிறை, பிஞ்சம், கூரல், பக்கம், பறை, சதம், தூவி, தோகை, பத்திரம், குரல், கூழை, இறை.

    3. பறவைக் குஞ்சின் பெயர்:
    பிள்ளை, பார்ப்பு

    இனிய காலை வணக்கம்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top