4. நாடியடி நீ எனக்கு

Advertisement

Kavya Narasimman

New Member
அவனும், இவளை பாத்த ஒடனே பியூஸ் போய்ட்டான், எதுவுமே பேசாம அவளை பாத்துட்டு இருந்தான். ஆமா உனக்கு இங்க என்ன வேலை, இன்டெர்வியூக்கு வந்துருக்கியா.....

உள்ள வா உன்னை கவனிச்சுக்கறனு மனசுக்குள்ளயே திட்டீட்டு போனா ...

இவன் இந்த கம்பெனிக்கு வந்தது சும்மா கம்பெனியை பாக்க, ஆனா அவ இன்டெர்வியூ அட்டென் பண்ண வாந்தியான்னு கேட்டதும், அவனும் சேரி போய் அட்டென் பண்ணுவோம்னு அவ பின்னாடியே போனான்...

தேவ் ஒன்னும் சாதாரண ஆள் இல்லையே. அதனால மொதல் ஆளா செலக்ட் ஆகிட்டான். ஆனா பைனல் ரவுண்டு கேள்வி நான்தான் கேப்பேன்னு சம்மந்தமே இல்லாம ஆஜர் ஆனா அந்த பொண்ணு. அவளும் எப்படி எப்டியோ கேள்வி கேட்டா இவன் டக்கு டக்குனு பதில் சொல்லிட்டான்.

இது அவளுக்கு கொஞ்சோம் கடுப்பேத்துச்சு வேணும்னே ஜி கே வை கேக்க ஸ்டார்ட் பண்ணிட்டா. அவனும் அவளுக்கு சளிக்காம பதில் சொன்னான். இதுக்கு மேலயும் கேள்வி கேக்க முடியாதுனு அவ மூளை சொன்னதால, சேரி எப்படியும் இங்க தான வேலை செய்ய போற அப்ப உன்னை கவனிச்சுக்கறன்னு விட்டுட்டா.

இவனுக்கு என்னனு புரியல எந்த பொண்ணு மேலயும் இப்படி ஒரு உணர்வு வந்தது இல்லையேன்னு அவனுக்கே குழப்பமா இருந்துச்சு....

அப்பன்னு பாத்து அந்த பொண்ணுக்கு ஒரு அழைப்பு வர... ஹலோ மல்லிகா ஹியர்.... அந்த பேர கேட்ட ஒடனே அவனுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு...

அவளையே பாத்துட்டு இருந்தான் வெச்ச கண்ணு வாங்காம... ஹலோ மிஸ்டர் என்னனு அவ கேட்கவும் இவன் ஒடனே மல்லினு அவனை அறியாம சொல்ல...

அவன் அடுத்து எதுவுமே பேசாம ஐ லவ் யூனு சொன்னான்.

ஒரு நிமிஷம் அவளுக்கு என்ன நடந்துச்சுனே தெரியல.... பிறகு சுய நினைவிற்கு வந்தவள்....

ஹே ஆர் யூ மேட் . ஹொவ் டேர் யூ டு ஸ்பீக் லைக் திஸ். கெட் அவுட் ஃபிரம் மை கம்பெனி.

ஹே சில் (chill).

வேற யாரவது லவ் பன்றியா. லுக் உன்கிட்ட அதெல்லாம் சொல்லணும்னு அவசியம் இல்லை. செக்யூரிட்டி, இவனை மொதல்ல வெளிய அனுப்புங்க. மேடம் அது வந்து, என்னங்க, என்ன யோசிக்கிறீங்க,

அது வந்து சார்...

இவனுக்குலா என்ன மரியாதை, ஏன் உங்களுக்கு தெரிஞ்ச பையனா. அய்யோ அம்மா இல்லை... அது வந்து ... மேடம் தம்பி தான் சக்கரவர்த்தி சார் பையன் தேவ் சக்கரவர்த்தி.

இதை கேட்டது அவளுக்கு என்ன சொல்லறதுன்னே தெரியல... ஒரு மாறி சங்கட்டமா ஆயிருச்சு அவளுக்கு....

ஆனா அவனோ கனவுலகத்துல இருந்தான்....

அய்யயோ இது தெரியாம இப்பிடி பேசிட்டனே என நினைத்தவல்... சேரி நீங்க போங்க. ஹலோ சாரி...

எதுக்கு...

இல்லை நான் இதுக்கு முன்னாடி உங்களை பாத்தது இல்லை அதான்....

சேரி பரவால்ல விடு, நான் எதுவும் தப்பா எடுத்துக்கல என புண் முருவலுடன் கூறினான் ..









அடுத்தடுத்து வந்த நாட்கள்ல இவங்க நட்பாய் பழக ஆரம்பிச்சுருந்தாங்க. அடிக்கடி வெளிய போறது, பார்ட்டிக்கு போறதுன்னு....

இவங்க நெருக்கத்தை பாத்துட்டு இவங்க ரெண்டு பேரோட வீட்லயே கல்யாணம் பன்னி வெக்கலாம்னு முடிவு பண்ணாங்க.

மல்லிகா கிட்ட கேட்டதும், அவ பெருசா எந்த எதிர்ப்பும் கட்டல. கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. அதுவே தேவ்க்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

அவகிட்ட கேட்டதுக்கு, தெரியாத யாரையோ கல்யாணம் பண்றதுக்கு தெரிஞ்ச உன்னை கல்யாணம் பண்ண எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. இவளோட இந்த பதில் அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாவே இருந்துச்சு.

அடுத்தடுத்து நிச்சியதார்தம், நலுங்குன்னு, இப்ப நாளைக்கு கல்யாணம். கல்யாணம் பூஞ்சோலைல, ரிசப்ஷன் சென்னைலனு முடிவு பண்ணிருந்தாங்க.

கல்யாணம் முடுஞ்ச கையோட சென்னைக்கு எல்லாரும் பிலைட்ல வந்துட்டாங்க. வந்ததும் வீட்ல கொஞ்சம் சம்பிரதாயம் முடுச்சுட்டு, வரவேற்புக்கு கெளம்புனாங்க. அத ஒரு 7 ஸ்டார் ஹோட்டல்ல அரேன்ஞ் பண்ணிருந்தாங்க எல்லாமே தேவ் தான் தேர்வு பண்ணான்..மல்லிகாக்கு அதுவே ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிருச்சு.


ஒரு வழியா, எல்லாம் முடுஞ்சு நைட் பொன்னும், மாப்பிள்ளையும் முதல் இரவுக்கு ஏற்பாடு பண்ணாங்க. மொதல்ல தேவ் ரெடி ஆகி உள்ள இருந்தான். மல்லிகா அவனை ரொம்ப காக்க வெக்காம உள்ள வந்தா..

வந்த ஒடனே, தேவ் தப்பா எடுத்துக்காத, எனக்கு செம டயர்டா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. அவனுக்கு தான் புஸ்ஸுன்னு போயிருச்சு.

அவனும் இது தான் நடக்கும்னு எதிர் பாத்தான். அப்றம் அவனும் வேற வழி இல்லாம தூங்கிட்டான்.

அடுத்த நாள் கண் முழுச்சு பாக்கும் போது அவ பக்கத்துல இல்லை, கீழ போயிருப்பானு இவனும் பிரெஷ் ஆகி கீழ போய்ட்டான்.

அவளை அந்த காட்டன் சாரீல பாத்ததும் ச்ச ஆச பட்டது இவ்ளோ கிட்ட இருந்தும் அனுபவிக்க முடிலயேன்னு ஒரு ஏக்கம்.

அந்த அன்னைக்கு இரவ எதிர் நோக்கி காத்திருந்தான். அவனோட காத்திருப்ப வீணாக்காம அவளும் உள்ள வந்தா.

வந்ததும், என்ன பத்தி என்ன நெனைக்குறீங்க...

ஏன் இப்பிடி ஒரு கேள்வி ....

சும்மா தான் சொல்லுங்க....

ரொம்ப நல்ல பொண்ணு, குறிப்பா சொல்லனும்னா நான் எதிர் பாத்த ஒரு பொண்ணு தான்.

இல்லை கண்டிப்பா இல்லை, நீங்க நல்ல ஒரு வில்லேஜ் பொன்னதான தேடுனீங்க ஆனா நான் அப்படி இல்லையே.

ஹலோ வில்லேஜ்னா இந்த கூற புடவை, மஞ்சள் பூசி, தல நெறையா பூ வெச்சுருக்கணும்னு அவசியம் இல்லை. அவ மாடர்ன் ட்ரெஸ்ஸே போட்டாலும் அது மத்தவங்க கண்ண உறுத்த கூடாது. எத்தன சொத்து இருந்தாலும், தனக்கு கீழ வேலை பாக்கறவங்கள மதிக்கணும்.

சிபிள்ளா சொல்லனும்னா நீ அந்த செக்யூரிட்டி கிட்ட மரியாதையா பேசின மாறி, உனக்கு கீழ வேலை செய்யறாங்கன்னு நீ தரக்குறைவா பேசல, இது ஒன்னே என்னை உன்கிட்ட ரொம்ப அதிகமா நெருங்கி வர வெக்குது.

நல்லாதான் பேசுறீங்க.....

சேரி தூங்கலாமா மல்லி...

ஏன் தூக்கம் வருதா...

அப்படி இல்லை உனக்கு டயர்டா இருக்குமேன்னு தான்.....

அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் உங்க கிட்ட சொன்னானா .



அப்போ....

ம்ம்ம்ம்

அவ்ளோதான். அவங்க அவங்களோட வாழ்க்கையை ஆரம்புச்சுட்டாங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top