அத்தியாயம் – 2

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 2
1980…

சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெரு...

பொன் மாலைப் பொழுது என்பது இது தான் போலும். மார்கழி மாத கூதக் காற்று வீச, ஊடல் கொண்ட காதலியை தழுவிச் சீண்டும் காதலன் போல், உடலை தீண்டிச் சென்றது.அத்தீண்டலை ஓர் நொடி கண் மூடி ரசிக்கத் தான் செய்தாள், சிவகாமி.

உற்றவன் தீண்டலும் இப்படித் தான் இருக்குமோ என்ற எண்ணம் வந்துமோத, வஞ்சனை இல்லாமல் இந்த வெட்கம் கிட்ட மனதை, திட்டத் தான் தோன்றியது.

என்ன செய்தாலும் மனம் மன்னவனிடம் மண்டியிட, அந்தக் கோபத்தை, மச்சு வீட்டு மாடியில் உள்ள செடியிடம் காட்டிக் கொண்டு இருந்தாள்.

அவ்வப்போது தோழியைப் பார்த்துக் கொண்டே பூ தொடுத்துக் கொண்டு இருந்த பொன்மொழி, சிவகாமி பூவை காம்புடன் கிள்ளாது, அதன் கிளையையும் ஒடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, பதறித் தான் போனாள்.

“அடிப்பாவி! நான் வச்ச முல்லை, போச்சு போச்சு அடியேய்! சிவா...!” பதறிக் கொண்டு ஓடி வந்தவள், சிவகாமியின் கைகளைப் பற்றி அவளை முறைத்து நிற்க,

தனது கைகளைப் பற்றிய தோழியை யோசனையாகப் பார்த்தவள்,

“என்னடி”

“என்ன என்னடி? நான் வச்ச முல்லை” மேல் மூச்சு வாங்கப் பேசியவளை ஏற இறங்கப் பார்த்து

“அதுக்கென்ன இப்போ?”

“அதுக்கு என்னவா? திரும்பிப் பாருடி கைய”

“என்ன சொல்லுறா இவ”முணுமுணுத்தவாறே திரும்பிப் பார்த்தவளுக்கு, தூக்கி வாரிப் போட்டது.

“ஐயோ!” என்றவள் தனது தவறை உணர்ந்து அசடு வழிய நிற்க, அவளது கோலம் கண்டு சிரிப்பு வரப் பார்த்தது தோழிக்கு.

“சாரிடிம்மா நான் பார்க்களை”

“உன் நினைப்பு இங்க இருந்தாத் தானே பார்க்க”

“ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்லை”

“சும்மா புழுகாத, மாமி”

“சரி. எல்லாம் அந்த மீசைக் காரன் நினைப்பு தான். போதுமா!”

“இம்புட்டு ஆசை வச்சுக்கிட்டு, அந்த மனுஷனை ஏன்டி பாடாப் படுத்துற. இத்தனை நாள் வெளி ஊருல இருந்த சரி. இப்போதான் சொந்த ஊருக்கே வந்துட்டியே, அவுங்களை பார்க்கலாம் தானே!”

“போதுமே! என்னை என்ன மழுமட்டைனு நெனைச்சேளோ? நான் யாரையும் பார்க்கிறதா இல்லை.” கண்ணில் நீர் பெறுக, கத்திய அவளை, பதறி அணைத்துக் கொண்டாள், பொன்மொழி

“சரி சரி விடு. நான் எதுவும் பேசல அழாத”

“நான் ஒன்னும் அழலை. நான் தைரியமான பெண். அழ மாட்டேன், எங்க மாமியாட்டம்.”

“அது சரி. புருஷன் வேணாம். ஆனா, அவுங்க அம்மா மட்டும் வேணுமோ?”

“இன்னொரு முறை அவரைப் பத்தி பேசாதே!” என்றவள் கையில் உள்ள பூக்களைத் தரையில் இறைத்து விட்டுச் சென்று விட்டாள் போகும் தனது தோழியை வேதனை பொங்க பார்த்துக் கொண்டு இருந்தாள், பொன்மொழி.

தானாக ஒரு பெருமூச்சு எழுந்தது.

அவளும் என்ன செய்வாள்? பாவம், முழுதாக ஆறு ஆண்டுகள் வனவாசம் தான். பெற்ற தாய் தகப்பன் இருந்தும், கட்டிய கணவன் இருந்தும், தனித்து வாழ்ந்து வருகிறாள். ஆறுதல் என்றால், அது அவளது வேலையும் தோழியும் தான்.

ஆம், சிவகாம சுந்தரி இப்பொழுது அரசு மேல் நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். அவளது நெருங்கிய தோழியும் தமிழ் ஆசிரியராக அதே பள்ளியில் வேலை செய்கிறாள். இருவருக்கும் பத்து ஆண்டுகள் நெருங்கிய நட்பு என்பதால், சிவகாமி வாழ்க்கையில் நடந்தவை அனைத்தும் தெரியும்.

மூன்று ஆண்டுகள் மயிலாடுதுறையில் தற்காலிகமாகப் பணியில் இருந்தவர்கள், தற்போது அரசு வேலை கிடைத்து சொந்த ஊருக்கே வந்து விட்டார்கள்.சிவகாமி வந்து ஒரு மாதமாகியும் அடுத்த தெருவில் பிறந்தகம் புகுந்தகம் இரண்டும் இருந்தும், யாரையும் பார்க்க அவள் அனுமதிக்கவில்லை.

சிவா என்று வந்து நின்றவர்களை வஞ்சனை இல்லாமல் திட்டி தீர்த்துவிட்டாள்.

பசுவாக இருந்த பிள்ளை சீறும் பெண் புலியாக நிற்க, பேச வந்த அனைத்தும்,வந்த வழியே அடித்துப் பிடித்து ஓடியது.

****
சுந்தர் பட்டர் இல்லம்....

வயது முதிர்ந்து இருந்தாலும், கழுத்தில் உள்ள ருத்ராட்சமும் கையில் உள்ள வெள்ளிக் காப்பும், அவரது நிலையான உடல் வாகும், அவரது வயதை சற்று குறைத்துத் தான் சொன்னது.

வழமை போல, சிவ பூஜை முடிந்து அக்கடா என்று அமர்ந்தவரை பார்த்துக் கொண்டே, கையில் உள்ள காபியை நீட்டினார் கண்ணாம்பா, அவருக்குக் குறையாத இளமையுடன்.

“இந்தாங்கோ”

“ஹ்ம்ம்...” என்றவாறே காபியை வாங்கிப் பருகியவரை எரிச்சலாகப் பார்க்க...

“என்ன அப்படி பார்த்துண்டு இருக்க? வயசு போச்சுடி. இதெல்லாம் நல்லா இல்லை.”

“ஆசை தான்! பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி ஓடினானாமே! பேச்சுக்கு வாங்கோ..... உங்க மகள் பண்ணுறது சரியா?”

“மகள்” என்ற வார்த்தை சொல்லும் போதே, அழகான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது, அந்தத் தகப்பனிடம்.

“என்ன சிரிப்பு இது?”

“கர்வமான சிரிப்பு கண்ணு.” குழைந்து அழைத்து, அவரை என்ன செய்தால் தகும் என்று யோசிக்க வைத்து விட்டார், சுந்தர் பட்டர்.

“நீங்க அவளுக்குக் கொம்பு சீவி விடுறேள்! இது சரியில்லை. ஒழுங்கா அவ ஆத்து மனுஷாள் கூட ஒத்து வாழச் சொல்லுங்கோ! பாவம் மருமகன் மறுகிப் போறார்.”

“அவர் செய்தது சரியா?”

“அப்போ! நீங்க செய்தது சரியா..?”

“ப்ச் போடி!”

“உண்மையச் சொன்னா, கோபம் வரத்தான் செய்யும்.” மனைவியின் பேச்சைக் கண்டு கொள்ளாதவர், மகள் புகழ் பாடத் தொடங்கிவிட்டார்.

“என்னமா இருக்கா தெரியுமா, கண்ணாம்பா? பசங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறச்ச பார்த்தேன். அந்தச் சிவகாம சுந்தரியே தான்டி...! நூல் புடைவை கட்டிண்டு நாகரிகமா வந்தா தெரியுமோ....! கையில என் அம்மா போடுவாளே அரக்கு வளையல், அதுவும் பெரிய நாச்சி அம்மாவோட காப்பும் இருந்தது. என்னமா பேசுறா தெரியுமா? நேக்கு பூரிச்சுப் போயிடுத்து.”

கண்ணில் கனவு மின்ன அவர் சொல்ல, கோபம் தான் வந்தது.
“ரொம்ப மெச்சிக்காதேள்! நீங்க பூரிச்சுப் போற மாதிரி உங்க பொண்ணு பேசலை. நன்னா நாக்கை பிடிங்குற மாதிரி கேட்டு, திட்டி அனுப்பி வச்சுருக்கா.”

“அவ பேசுனது பிழை இல்லை.”

“சரி பிழை நம்ம தான்... மருமன் என்ன செய்தார்?”

“அவர் பண்ணதும் பிழை தான்.”

“ஏன் சொல்ல மாட்டேள்? நம்ம ஆத்துப் பொண்ண படிக்க வச்சு, வயிறு நிறைய வச்சு, கண்ணனுக்கு நிறைவா வச்சவாளை, நன்னா குத்தம் சொல்லுங்கோ!”

“குத்தமில்லடி. ஆனா, அவர் மேல் ஆதங்கம் இருக்கு. நானும் என் பொண்ணும் அவரைத் தானே நம்பி இருந்தோம்!”

“இப்போ வரைக்கும் அவர் அதைக் காப்பாத்திண்டு தான் இருக்கார். மருமகனாக மட்டும் இல்லை. நமக்குப் பிள்ளையாவும் இருக்கார். நல்ல மனுஷாளை நோகச் செய்யாதேள்! சொல்லிட்டேன்.” என்றவர் வேகமாக அடுக்களைக்குள் சென்று விட்டார்.

செல்லும் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டவர். மீண்டும் கண் மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டார், அதே புன்னகையுடன்.

1967 முதல் 1980 வரை, அதாவது இந்தப் பதிமூன்று ஆண்டுகள், தங்கள் வாழ்வில் மறக்க முடியாத மாற்றத்தை தோற்றுவித்து விட்டது.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எத்தகைய உண்மை.

முடிய கண்களுக்குள் நடந்தவை அனைத்தும் காட்சியாக………..

*
அங்கே பெரிய நாச்சி வீட்டில்.........
தங்கைகள் மற்றும் தம்பிக்கும் வெகு சிறப்பாகத் திருமணம் முடித்து விட்டனர், அம்பலத்தானும் பெரிய நாச்சியும். அவரவர்களுக்குத் தோளுக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்து நிற்க, மூத்த மகன் மட்டும் தனித்து நிற்பது, மனதை வதைக்கத் தான் செய்தது.

திண்ணையில் அமர்ந்து பருப்பை உலர வைத்துக் கொண்டு இருந்த பெரிய நாச்சியிடம் வந்தார், சிவநேசன். அம்பலத்தானின் நெருங்கிய தோழன். ரத விதியில் பூஜை சாமான்கள் கடை வைத்திருக்கிறார்.

"என்ன ஆச்சி? எப்படி போகுது பொழுது?"

“யாரு சிவநேசனா வா! வா! அதுக்கு என்ன சாமி? நல்லாத்தேன் போகுது. சிறுசுங்க எல்லாம் ஆட்டம் கட்ட நான் கூத்து பாக்குறேன். அதுலே என் பொழுது போகுது.”

“ஏன் ஆச்சி?வெசனப் படாதீக! அதான் தங்கச்சி இங்க வந்துடுச்சே. இனி எல்லாம் நல்லதே நடக்கும்.”

“எனக்குச் சாத்தியப்படல”

“உங்க வாயால அப்படி சொல்லாதீக, ஆச்சி.”

“என்னை... என்ன பண்ணச் சொல்லுற சாமி? அவ வந்து ஒரு மாசம் போச்சு. நம்மூட்டு ஐயனார் திரும்பிக் கூடப் பார்க்கல. அதுமட்டுமா வழமையா கடைக்கு அந்தப் பக்கம் போறவூக. இரண்டு தெரு சுத்திப் போறாக. இந்தக் கூத்த என்னன்னு நான் சொல்ல.”

“அது சரி” என்று ஒப்புக்கொண்டவர், மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றார்.

“உள்ளார எங்க வூட்டு ராசா ஊசல் ஆடுறாக! நீயும் போ! உன்கூட தான் சோடி போட முடியும்.” என்றவரிடம்,

இனி வாய்க் கொடுத்தால், அவரது கோபம் பல் மடங்கு பொங்கக் கூடும் என்று எண்ணியவர், அம்பலத்தானைப் பார்க்க விரைந்தார்.
கண்கள் மூடி ஊஞ்சல் ஆடியவரை பார்த்தவாறே வந்த சிவநேசன்,

“அடியேய்! மாப்புள! இது தான் இளமை ஊசல் ஆடுறதோ?”

அவரது கேள்வியில் குறும்பு கொப்பளிக்க, வாய் கொள்ளப் புன்னகையுடன் கண்களை திறந்தவர் தனது இடது காலை இன்னும் உந்தி ஆடியவர்,

“இல்லையா பின்னே!” என்று ஒரே போடாகப் போட, பலமாகச் சிரித்தார், சிவநேசன்

“அங்கன ஆச்சி புலம்பிட்டு இருக்காக. இங்க நீ கனவுல இருக்க. என்ன தான் செய்தி?”

“எல்லாம் நல்ல செய்தி தான்.”
“அது மாதிரி தெரியலையே! தங்கச்சி வந்து ஒரு மாசம் ஆச்சு. நீ முகத்தைக் கூடப் பார்க்கலன்னு ஒரே பிராடு கொடுக்குது.”

“ஹா... ஹா... ஹா... வேற என்ன சொன்னா உன் தங்கச்சி?”

“உனக்காகத் தூது போன என்னை துவைச்சு அனுப்பி விட்டுருச்சு.”

“அடி பலமோ!”

“பலமோ பலம். அண்ணனா, எப்போ வேணாலும் பார்க்க வரலாமாம். மீசைக் காரனுக்கு தூது வரக் கூடாதாம்.”

“அது சரி”

“இனி ஒரு ரூவா கூட, அவூக அப்பன் ஆத்தாக்கும் செய்யக் கூடாதாம். செஞ்ச வரை போதுமாம்.”

“ஓ! சம்பாத்தியம் பேசுதோ.” முகத்தில் கடுமை கூடியது அம்பலத்தானுக்கு.

“அது என்ன பேசுதோ? நமக்குத் தெரியாது சாமி. இனி நான் உனக்குப் பரிஞ்சிக்கிட்டு போனா, என் உசுருக்கு உத்தரவாதம் இல்லை. இனி நீயாச்சு, உன் சம்சாரமாச்சு.”

“ஹ்ம்ம்...”

“என்ன ஹ்ம்ம்? நீ பண்ண காரியமும் தப்பு தான், மாப்புள!”

“சரி.”

“பண்ணிக்கிட்டு இருக்குற காரியமும் தப்பு தான்.”

“அதுவும், சரி தான்.”

“நக்கல் பண்ணாத மாப்புள. தங்கச்சி ஒரே அழுக. அந்த பொன்மொழி புள்ள வீட்டுக்கு வந்து, என் பொஞ்சாதி கிட்ட சொல்லிட்டு, அதுவும் அழுகுது. ஒரு முடிவெடு.”

“எல்லாம் எடுத்தாச்சு.” என்றவர் சிவனேசிடம் நெருங்கி, அவரது காதில் ஏதோ மூணு முணுக்க, நெஞ்சைப் பிடித்து கொண்டு சாய்ந்து விட்டார், மனிதர்.

அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த சுப்ரமணியன் (நாச்சியின் இளைய மகன்) சிவநேசன் நெஞ்சை பிடிப்பதை பார்த்து “ஐயோ! என்ன! என்ன ஆச்சு?” என்று பதறிக் கொண்டு வந்தான்.

அவனது பதற்றத்தைப் பார்த்து, இன்னும் சிரித்து வைத்தார், அம்பலத்தார். தனது தமையனின் சிரிப்பை ஆச்சரியமாகப் பார்த்த சுப்ரமணியன், பின்பு தெளிந்தவனாக சிவநேசனிடம்,
“அண்ணே! என்ன ஆச்சு?”

“இன்னும் என்னடா ஆகணும்? உங்க அண்ணனும் அண்ணியும் அடிக்கிற கூத்து, தாங்க முடியலைடா சாமி!”

சிவநேசன் சொல்வதைக் கேட்டவாறே சிரித்து கொண்டே வந்த சுப்பிரமணியனின் மனைவி வாசுகி, “அக்கா, ரொம்ப நல்ல மாதிரி. ரொம்ப மென்மை. எங்க அத்தானும் அப்படி தான் அண்ணே!”

“யாரு உங்க அக்காவும் அத்தானும்.. நான் இதை நம்பனும், போம்மா அந்தாண்ட! ஐயர் ஆத்து மாமி, அராத்து மாமியா இருக்கு. பேசப் போனா அடி வெளுக்குது!

இங்க அம்பலத்தான் ஒரு மார்கமான அடாவடிக் காரனா இருக்கான். நான் உங்க ஆட்டைக்கே வரல சாமி. இதோ பார், போடுறேன் ஒரு கும்புடு, பெரிய நாச்சி குடும்பத்துக்கு!” என்றவர் கேலியாகப் பேசிவிட்டு, திரும்பி பார்க்காமல் செல்ல,

அம்பலத்தான் குரல் அவரைத் துரத்தியது..

“டேய்! மாப்புள! நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போவே!”

“உன் திசைக்கே வரல சாமி! மீசைக் காரனை நம்பக் கூடாதுனு தங்கச்சி அப்பவே சொல்லுச்சு.” என்ற சிவநேசன் பேசி கொண்டே செல்ல,அவரது செயலில் வெடித்துச் சிரித்தனர், மூவரும்.

அவர்களது சிரிப்பொலியை கேட்டுக் கொண்டே கை வேலை செய்து கொண்டு இருந்தார், பெரிய நாச்சி கண்ணில் நீருடன்.

வாழ்வில் என்ன முடிவு கொண்டாலும், வெற்றிக் கொள்ளும் அவருக்கு, அம்பலத்தான் திருமண முடிவு அவர் வாழ்க்கையில் பெரிய சறுக்கல் தான்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
என்ன செய்ய போறாங்க
அம்பலமும் சிவகாமியும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top