தேவியின் திருமுக தரிசனம் டீசர்.

Advertisement

ஹாய் நட்புக்களே,
எல்லோரும் நலமா. மற்றுமொரு கதையுடன் வந்துவிட்டேன் அதில் இருந்து ஒரு சில நிகழ்வுகளை மட்டும் இங்கே பதிவிடுகிறேன். கதையின் முதல் அத்தியாயம் இன்று இரவுக்குள் பதிவிடபடும். அடுத்தடுத்த அத்தியாயங்களை விரைவில் கொடுக்க முயற்சிக்கிறேன். உங்களின் ஆதரவை வேண்டி இதோ கதையின் டீசர்:


"அது ரொம்ப வெய்ட்டா.. இருக்குமே என்னோட பட்டுவால தூக்க முடியாதே" என உதட்டை பிதுக்கி பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினான் ராகவன்.

"நா ஸ்ட்ராங் மாமா பாத்தியா என்னோட ஆம்ஸ் எப்டி இருக்குன்னு" என கண்கள் மிளிர கையை மடக்கி காட்டினாள் குழந்தை.

"ஏய் வாலு கையே வெண்டைக்கா சைஸ்ல தான் இருக்கு. இதுல ஆம்ஸ் வேற இருக்குன்னு கட்டுற" என சிரித்தவன்,
"பைக் வரை நானே தூக்கிட்டு வரேன் எப்படியும் ஸ்கூலுக்குள்ள நீ தானே தூக்கிட்டு போகணும்" என்று புத்தகங்கள் அடங்கிய பையை வாங்கி கொண்டு,

"சரிம்மா நா போய் விட்டுட்டு வந்துடுறேன்" என சாரதாவை பார்த்து கூறிய ராகவன் பதறி போனான்.

"என்னம்மா இப்போ எதுக்கு கண்கலங்குறீங்க" என குரலில் பதட்டத்தை நிரப்பி தணிவாக கேட்டவன் குழந்தையை பார்க்க,

சாரதாவையும் அவனையும் என்னவோ ஏதோ என்ற ரீதியில் பார்த்து கொண்டிருந்தது.

"சுபா குட்டி நீங்க கீழ போய் வெய்ட் பண்ணுங்க மாமா வந்துடுறேன்" என அவளை அனுப்பி விட்டு "சொல்லுங்க எதுக்கு அழுகுறிங்க?" என கேட்டான் ராகவன்.

"என்னனு சொல்றது இப்டி ஒரு புள்ளைக்கு அவளோட அப்பன பாக்க கொடுத்து வைக்கலையே" என்று மூக்கை சிந்தியவர்,
"இந்த உலகத்துல எந்த மூலையில இருக்கிறானே தெரியல. அவகிட்ட கேட்டா அதை பத்தி பேசவே கூடாதுன்னு சொல்றா. மீறி கேட்ட வீட்ட விட்டு போயிருவேன்னு மிரட்டுறா, இந்த பிஞ்சு முகத்த பாக்கும் போது பாவமா இருக்குடா" என சேலை தலைப்பால் சாரதா கண்களை துடைத்து கொள்ள,

"ப்ச் விடுங்கம்மா அவளோட பிடிவாதம் தான் தெரியுமே? அவளுக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லட்டும் அதுவரைக்கும் நாம எதுவும் கேக்க வேணாம்".

"ஆமா இப்டி சொல்லி சொல்லியே அஞ்சு வருஷம் ஓடிப்போயிருச்சு அவளுக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சு அப்பா எங்கன்னு கேட்டா என்னனு சொல்றது? ஒருத்தர் முகத்தை ஒருத்தர் சங்கடத்தோட பாத்துகிட்டு முழிக்க வேண்டியது தான்" என்றார் கோபமாக.

"அப்டி ஒரு விஷயம் நடக்கும் போது பாத்துக்கலாம். இன்னொரு முறை இந்த மாதிரி பாப்பா முன்னாடி அழாதீங்க.நா அவள விட்டுட்டு வந்துடுறேன்" என கூறிவிட்டு சென்றான் ராகவன்.
-------------

"நா சொன்னா நீ தப்பா எடுத்துக்க கூடாது வருணா அந்த தம்பி ரொம்ப நல்ல பையனா தெரியிறான், பாப்பா கிட்ட கூட நல்ல விதமா பழகுறான் பேசுறான்" என்று தயக்கத்துடன் மெல்ல விஷயத்தை ஆரம்பித்தார் சாரதா.

"அதுக்கு?" என்று பார்வை இடுங்க அவரை எறிட்டவள் அடுத்து கூறிய செய்தியில் சற்று திடுகிட்டுத்தான் போனாள் வருணா.

"ம்மா என்ன பேசுறீங்க யோசிச்சு தான் பேசுறீங்களா? அவர் கூட போய் ச்சே எப்டிம்மா" என்றாள் ஆவேசமாக.

"ஏன் அந்த தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடி என்னமோ உலகத்துல யாருமே செய்யாத விஷயத்தை செய்ய சொல்ற மாதிரி பேசுற. உனக்கு ஒரு துணையா மட்டுமில்லாம, பாப்பாவுக்கும் அப்பா கிடைச்ச மாதிரி இருக்கும்"என்றார் வேகமாக.

அவரின் பேச்சு அவளுக்குள் அருவருப்பை ஏற்படுத்த, விசுக்கென எழுந்தவளுக்கு ஆத்திரத்தை கட்டுபடுத்த முடியவில்லை "எனக்கு துணை வேணும்ன்னு நா கேட்டேனா இல்ல பாப்பா அப்பா வேணும்ன்னு கேட்டாளா?.
உங்களுக்கு நா இங்க இருக்குறது பாரமா இருந்தா சொல்லிருங்க எங்கயாவது போயிடுறேன்!" என ஆத்திரமும் அழுகையுமாக கூறினாள் வருணா.

"என்னடி இப்படியெல்லாம்... பேசுற? உன்ன பாரமா நினைப்பேனா நீ தனியா இருந்து கஷ்டப்படுறத பாக்க முடியல. என்னோட காலம் முடியிறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்.

உனக்கு நல்லது நடக்காம கல்யாணம் பண்ண மாட்டேன்னு உன்னோட அண்ணே சொல்றான் அவனுக்கும் வயசு ஏறிட்டு இருக்கு அதை அவனும் புரிஞ்சுக்க மாட்டிங்கிறான் நீயும் பிடிவாதம் பண்ற உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல நான் தான் கிடந்து தவிக்கிறேன்" என்று ஆதங்கத்தோடு அழுகையை வெளிப்படுத்தினார் சாரதா.

"இப்போ ரவிக்கு என்னடி குறைச்சல் அவன கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கென்ன கஷ்டம்".

"கஷ்டம் தான் ம்மா மனசார ஒருத்தர விரும்பி கல்யாணம் பண்ணி ஒரு மாசம் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் ஒரு யுகம் வாழ்ந்ததா திருப்தி பட்டுட்டு இருக்கேன் ம்மா. சந்தர்ப்ப சூழ்நிலையால இப்ப வரைக்கும் பிரிஞ்சு இருக்குற எனக்கு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கிறது கஷ்டம் தான்" என்று வெறுமையாய் உரைத்தவள்,

"ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல சட்டுன்னு தூக்கி எறிஞ்சிட்டு எனக்குன்னு ஒரு வழிய பாத்துட்டு போறதுக்கு, ஒரு மாசம் அவர் கூட குடும்பம் நடந்திருக்கேன் அதுவும் சந்தோஷமா. அவர மறந்துட்டு வேற ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கு சொல்றிங்க? அவர் கூட நா வாழ்ந்ததுக்கான அடையாளமா என்னோட குழந்தை இருக்கா, அதுவே போதும்.

அவள வளர்த்துகிட்டே என்னோட வாழ்க்கைய ஓட்டிருவேன் தயவு செய்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தாதீங்க இந்த பேச்சை இப்டியே விட்ருங்க ம்மா. அண்ணனோட கல்யாணத்துக்கு என்னைக்கும் நா தடையா இருக்க மாட்டேன், ஒருவேளை நா இங்க இருக்குறது தான் அவரோட வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்கு தடையா இருக்குன்னா நா இங்க இருந்து போயிடுறேன் யாருக்கும் பாரமாவோ சங்கடத்தையோ கொடுக்க எனக்கும் விருப்பமில்லை" என்று தீர்க்கமாக கூறியவள் "என்னோட மனச காயப்படுத்தாமா முதல இங்க இருந்து போங்கம்மா" என்று எரிச்சலை காட்டினாள் வருணா.

"நா வாயவே திறக்க கூடாது ஏதாவது சொன்னா இதை சொல்லிரு. போறேன் நா வாங்கிட்டு வந்த வரம் அப்டி பொத்ததுக சந்தோஷமா இருக்குறதை பாக்க இந்த ஜென்மத்துல எனக்கு கொடுப்பினை இல்லை" என்று மூக்கை உறிஞ்சி கொண்டே நகன்றுவிட்டார் சாரதா.

அவர் சென்றதும் கதவை சாத்தியவள் அக்கதவில் சாய்ந்தபடி சரிந்து அழத் தொடங்கினாள்.

"ஏன் இப்டி பண்ணிங்க அபி உங்களுக்கு நா என்ன பாவம் பண்ணேன். எனக்கு துரோகம் பண்ண எப்டி உங்களுக்கு மனசு வந்துச்சு உங்கள போய் உயிரா நினைச்சு உருகி உருகி காதலிச்சு கல்யாணம் பண்ணி உங்க விருப்பம் தான் என்னோட விருப்பம்னு வாழ்ந்தேனே என்ன ஏமாத்த உங்களுக்கு எப்டி மனசு வந்துச்சு உங்க கூட வாழ்ந்த நாட்களை நினைச்சாலே கேவலமா அருவருப்பா இருக்கு" என்று புத்தகத்தில் பதுக்கி வைத்த அவன் புகைப்படத்தை எடுத்து வைத்து கண்ணீரில் கரைந்தாள் வருணா.
--------
தயங்கியபடி விஷயத்தை கூறலானன் ரிஷி "உன்னோட இந்த வாழ்க்கைக்கு நானும் ஒரு விதத்துல காரணம் தான் நந்து. என்னோட பங்களிப்பு தான் இதுல அதிகம்" என்றவனை அசராது பார்த்தான் அவன்.

"எனக்கு எல்லாமே தெரியும் ரிஷி" என்று உணர்ச்சியற்று கூறியவன் "அவ்ளோ தானே இப்போ கிளம்பலாமா?" என்று கேட்டுவிட்டு விறுவிறுவென படியிறங்கி சென்றான் அபி நந்தன்.

"என்ன தெரியுமா?" என்று திகைப்பை காட்டியவனின் வாய் தானாக முணுமுணுக்க, அதிர்ச்சியின் பிடியில் சிக்கி மீள முடியாமல் உறைந்து போய் நின்றிருந்தான் ரிஷி.

நொடியில் சுதாரித்து கொண்டவன் விறுவிறுவென படிகளில் இறங்கி அவன் முன்னால் சென்று நின்று மூச்சு வாங்க "உனக்கு தெரியுமா? ஏன் என்கிட்ட முன்னாடியே அந்த விஷயத்தை பத்தி கேக்கல. இப்டி ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்கவே இல்லையே ஏண்டா?. யார் சொன்னாங்க? உனக்கு எப்டி தெரியும்? விஷயம் தெரிஞ்ச பிறகும் என்மேல உனக்கு கோபம் வரலையா?" என அவன் தோள்களை பற்றி உலுக்கி வேதனையில் பற்றி எறிந்த மனதை அணைக்க முடியமால் அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுக்க,

உணர்ச்சியற்ற புன்னகை சிந்தியவன் "எனக்கு உன்மேல கோபம் வரல ரிஷி. பாவம் நீ என்ன பண்ணுவ உன்னோட தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சு அந்த மாதிரி பண்ணிட்ட உன்னோட இடத்துல நா இருந்திருந்தாலும் சுயநலமா தான் யோசிச்சிருப்பேன்" என்றான் நிதானமாக.

"உன் மேலயோ இல்ல உன்னோட தங்கச்சி என்னோட சித்தி மேலயோ எனக்கு துளி கூட கோபம் இல்ல நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன விட்டு மொத்தமா போனாளே அவ மேல தான் கோபம் வருத்தம் எல்லாமே.

நா திரும்பி வர்ற வரைக்கும் எனக்காக வெய்ட் பண்ணி என்கிட்ட கேட்டுட்டு அது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுகிட்டு போயிருக்கலாம். இல்லையா எனக்கு கால் பண்ணி கேட்டுருக்கலாம்" என்றவன் "அவ்ளோ தான் அவ என்மேல வச்ச நம்பிக்கை" என்று விரக்தியான புன்னகை சிந்தினான் அபிநந்தன்.

"அவள பத்தி என்கிட்ட யார் என்ன சொல்லிருந்தாலும் துளி கூட நம்பியிருக்க மாட்டேன் ரிஷி.
ஏன்னா" என்று நிறுத்தியவனின் குரல் கமரியது.

குரலை சீர் படுத்தி கொண்டு "அவள நா காதலியா மனைவியா பாத்ததை விட, என்னோட அம்மாவோட ரூபமா தான் அதிகமா பாத்தேன். மறுபடியும் எனக்கு அம்மாவோட அன்பு கிடைச்சுருச்சுன்னு சந்தோஷபட்டேன். ஆனா, எல்லாத்தையும் பொய்யாக்கிட்டு போய்ட்டா.

என்ன பத்தி கொஞ்சம் கூட கவலை படாம, அவ இல்லன்னா நா என்ன ஆவேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம மொத்தமா என்ன விட்டு போய்ட்டா" என்று குரல் தழுதழுக்க பேசியவனின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்து கன்னத்தில் உறவாடியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top