மை டியர் டே(டெ)டி - 12

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
அடுத்த நாள் காலை, நிலா கொஞ்சம் உதவி செய்ய, யு ட்யூப் நிறைய உதவி செய்ய, நிலாவின் அன்னையாக மாறிக்கொண்டிருந்தான் மாறன்.

"அடியேய். இது கண்ணு மேல போடுறது டி. இது லிப்ஸ்டிக் இல்லை டி" என்றான் மாறன், ஐ ஷேடோ (eye shadow) வை லிப்ஸ்டிக் என்று நினைத்து அவன் உதட்டில் பூச வந்த நிலாவிடம்.

"எதுவா இருந்தா என்ன. பிங்க் கலர்ல இருக்குல்ல. பூசிக்கோ" என்றாள் நிலா அடாவடியாய்.

"நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு. நானே பண்ணுறேன்" என்று அவளை ட்ரெஸ்ஸிங் டேபில் மீது அமர வைத்து விட்டு, அவனாகவே ஒப்பனை செய்துக்கொண்டிர்ந்தான்.

"இளா. உனக்கு எப்படி மேக்கப் பண்ண தெரியும். அதுவும் பொண்ணுங்க மாதிரி?" என்று நிலா கேக்க,"எனக்கென்ன தெரியும். நேத்து நைட் தான் நீ தூங்குனதுக்கு அப்பறம் வீடியோ எல்லாம் பார்த்துக் கத்துக்கிட்டேன்" என்றான் மாறன்.

முழு ஒப்பனையும் முடித்துவிட்டு, மாறன் திரும்ப, "ஹே. செம ஃபிகரா இக்கப்பா நீ!" என்றாள் நிலா.

" என்னது? ஃபிகரா? இந்த வார்த்தை எல்லாம் எங்க இருந்து குட்டி இளா கத்துக்கற நீ? " என்று மாறன் கண்டிப்பாய் கேட்க," என்ன இப்படி கேக்கற இளா. போன வாரம் பார்க் போனப்போ நீ தான ஒரு பொண்ணை பார்த்து, 'வாவ். வாட் அ ஃபிகர்'ன்னு சொன்ன. அப்போ நான் ஃபிகர்க்கு அர்த்தம் கேட்டப்போ. 'அழகா இருக்க பொண்ணை அப்படி தான் சொல்லுவோம்'ன்னு சொன்னியே! " என்றாள் நிலா.

"அட கடவுளே. இனிமேலாவது இவ முன்னாடி இது மாதிரி வார்த்தையெல்லாம் பேசக் கூடாது" என்று நினைத்துக்கொண்டவன் காதோரத்தில் ஒலித்தது யாரோ சொன்ன வரிகள். 'குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுகிறார்கள்'.

"சரி இனிமே அந்த வார்த்தை யூஸ் பண்ண கூடாது" என்று அவன் சொல்ல,"சரிரிரிரிரி... பண்ணல" என்றாள் நிலா."குட் கேர்ள்" என்று மாறன் நிலாவின் தாடையை பிடிக்க, "ரொம்ப கொஞ்சாத. டைம் ஆச்சு ஸ்கூல் போக. அதுக்காகத் தான் உடனே சரி சொன்னேன்" என்றாள் நிலா.

"சரி போலாம்" என்று மாறன் சொல்ல, கிளம்பினர் இருவரும். வாசல்வரை சென்ற மாறன், வாசலைத் தாண்டாமல் நிற்க,"என்ன நிக்கற. வா.. " என்று இழுத்தாள் நிலா.

"நான் இங்கேயே நிக்கறன். நீ போய் வெளிய காரிடர்ல யாராவது இருக்காங்களா பாரு. யாரும் இல்லைன்னா சொல்லு அப்பறம் நான் வரேன்" என்று மாறன் நிலாவிடம் சொல்ல, "சரி பாக்கறேன்" என்றவள், 'டடான்... டடான்... ட டன்ட டன்ட டன்ட ட்ன்ட டான்' என்று ஜேம்ஸ் பாண்ட் மியூசிக்கை பாடிக்கொண்டே இவர்கள் வாசல் தாண்டிச் சென்றாள். இவர்கள் ஃப்ளோர் காரிடரின் இருபக்கமும் பார்த்தவள், "யாரும் இல்லை" என்றாள் சைகையில்.

"அப்போ சரி" என்று சொல்லிட்டு மாறன் ஒரு காலை வெளியே எடுத்து வைக்க,"அய்யோ ஆன்ட்டி. இங்க பாருங்களேன். ஒரே நைட்ல பொண்ணா மாறிட்டார். வந்து பாருங்க. மாயம் இல்லை. மந்திரம் இல்லை. மேக்கப் மட்டுமே!" என்று நிலா திடீரெனக் கத்த, "அய்யய்யோ!" என்று பதறியவன் எகிறி குதித்து மீண்டும் அவர்கள் ஃப்ளாட்ற்குள் போய் நின்றுவிட்டான்.

இவன் எகிறி குதித்த வேகத்தை பார்த்துக் கொல்லெனச் சிரித்தவளை, முறைத்துக்கொண்டு நின்றான் அவன்.

"இளா! இங்க யாருமே இல்லை. நான் சும்மா அப்படி கத்துனேன்" என்று அவள் வாயை மூடிக்கொண்டு சிரிக்க, "நீயே அப்பார்ட்மெண்ட் முழுக்க பரப்பிடுவ போல" என்று அவள் வாயைப் பொத்தி குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு ஓடினான்.

அவன் தூக்கிக்கொண்டு ஓடச் சிரித்துக்கொண்டே சென்றவள், கிரொண்ட் ப்ளொர் சென்றதும், கார் பார்க்கிங்கில் நின்றிருந்த நான்கு பேரைப் பார்த்து, "காப்பாத்துங்க. காப்பாத்துங்க. என்னைக் கடத்திட்டு போறா. காப்பாத்துங்க" என்று கத்த, "கொழந்தையை யாரோ தூக்கிட்டுப் போறாங்க..." என்று கூச்சல் போட்டுக்கொண்டே மாறனை துரத்திக்கொண்டு ஓடினர் அவர்கள்.

"அடியேய் குட்டிச்சாத்தான். நானே ஓட முடியாம ஓடிக்கிட்டு இருக்கன். நீ வேற ஏன் டி" என்று நிலாவிடன் கேட்டவன், "அய்யய்யோ. இவங்க வேற உண்மை தெரியாம துரத்துறாங்களே!" என்று புலம்பிக்கொண்டே ஒடினான்.

அந்த நால்வர் போட்ட கூச்சலில் இன்னும் நால்வர் இவர்களைப் பிடிக்க துரத்த, அனைவரும் மடக்கி பிடித்தனர் மாறனை.

அவனைச் சுத்தி நின்றுக்கொண்டவர்கள்," யார் கொழந்தையை தூக்கியிருக்க தெரியுமா? மரியாதையா கொழந்தையை விட்டுடு. இது மட்டும் அவ அப்பா மாறனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?" என்று ஒருவர் கேட்க, "அடேய். அந்த மாறனே நான் தான் டா!" என்றான்.

"என்னது மாறனா?" என்று உற்றுப் பார்த்தவர்கள், "ஆமாம் மாறன் தான்" என்று இளித்தனர்.

"நான் ஸ்ட்ரக்சரை பார்த்துமே யோசிச்சேன்" என்று ஒருவர் சொல்ல,"ஆமா? எதுக்கு இந்தக் கெட்டப்?" என்று ஒருவர் கேட்க,"ஆனாலும் பார்க்கச் செமயா இருக்க" என்றான் மற்றொருவன்.

"அடேய். நாலு பேர் நாலு விதமா தான் பேசுவாங்கன்னு நீங்க இப்ப ப்ரூவ் பண்ண அவசியம் இல்ல. போய் வேலையா பாருங்க யா" என்று அவர்களைத் துரத்திவிட்டவன், நிலாவை பார்த்து,"புள்ளையா நீ. தொல்லை" என்றான். ஆனால் அவளோ வாயை மூடிக்கொண்டு இன்னும் சிரித்துக்கொண்டிருந்தாள்.

இருவரும் ஒரு வழியாய் பள்ளிக்கு வந்து சேர, அந்த நேரம் பார்த்து விழா நடந்த இடத்தில் ஒலிப்பெருக்கி,

" மீச பியூட்டி., இவன் தில்லாலங்கடி பார்ட்டி..
நாட்டி லூட்டி., இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி..

ப்ளேட்ட மாத்தி., க்ளாமர் ஏத்தி.,
இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி..
மாஸ்சுகாட்டி. இப்ப சல்வார் ஆச்சு டா வேட்டி.."

என்று ரெமோ படப் பாடலைப் பாடிக்கொண்டிருக்க, "செம டைமிங் சாங் இல்ல இளா!" என்று நிலா குதிக்க, மாறனோ,"ஐயோ இதுக்கு மேல என்ன என்ன செய்யப் போறாங்களோ?" என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

இருவருமாக இறங்கி விழா நடக்கும் இடத்திற்கு வர, நிலாவின் தலைமை ஆசிரியை ஜெசிக்கா இவர்களை நோக்கி வந்தார்.

வந்தவர் மாறனின் கோலத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "மாறன்???" என்று கேள்வியாய் நோக்க, நிலாவோ,"இது ஒன்னும் மாறன் இல்லை" என்றாள் முறைத்துக்கொண்டே.

ஜெசிக்கா மாறனை பார்க்க, "ப்ளீஸ்... ப்ளீஸ்" என்றான் அவன் கண்களாலே. அதிலே புரிந்துக்கொண்டவர், நிலாவிடம் திரும்பி, "அது மாறன் இல்லைன்னு எனக்குத் தான் தெரியுமே! மாறன் வரலையான்னு கேட்டேன்" என்று சமாளித்தார் ஜெசிக்கா.

"நீங்க அம்மாவைத் தான கூப்பிட்டு வரச் சொன்னீங்க. இப்ப எதுக்கு மாறனை கேக்கறீங்க?" என்று நிலா முறைக்க, "தெரியாம கேட்டுட்டேன் மேடம். போய் மிசஸ். மாறன் பெயரைக் கேம்ஸ்க்கும் ரெஜஸ்டர் பண்ணிடுங்க" என்று நிலாவிடம் சொல்லிவிட்டு செல்ல, அவனை இழுத்துச்சென்று அனைத்து போட்டிகளுக்கும் ரெஜிஸ்டர் செய்துவிட்டு, அவள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய அழைத்துச் சென்றாள்.

நண்பர்களிடம், "பாத்தீங்களா. இவங்க தான் என் அம்மா" என்று காட்ட, "ஆஆஆ" என்று வாயைப் பிளந்தனர் அவளது குட்டி நண்பர்கள். பின்னே! ஆறடி உயரத்தில், அழுத்த அழுத்த அழுந்தாத ஆர்ம்ஸ் கொண்ட அம்மா அவர்கள் யாருக்கும் இல்லையே.

"நிலா. உங்க அம்மா செம ஸ்டாங்கா இருக்காங்க பார்க்கவே. பாரு ஆர்ம்ஸ் எல்லாம் எப்படி ஸ்ட்ராங்கா இருக்கு" என்று அவள் தோழன் ஒருவன் மாறனின் ஆர்ம்ஸை அழுத்த, "ஆமாம்பா!" என்று ஆமோதித்தனர் அவளின் மற்ற நண்பர்கள் அனைவரும்.

நிலாவுக்கோ ஒரே பூரிப்பு. முகம் முழுக்க பல் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாள்.

"ஆனா! இது என்ன? அங்க மம்மிக்கு கை கால் எல்லாம் நிறைய முடி இருக்கு. எங்க அப்பாக்கு தான் இப்படி இருக்கும்" என்று ஒருவன் சொல்ல, "ஆமாம்பா. இங்க பாரேன். மீசை, தாடி கூட முளைத்து ஷேவ் பண்ண மாதிரி இருக்கு" என்றான் மற்றொருவன்.

'இதுக்கு என்ன சொல்லிச் சமாளிக்க?' என்று ஒரு நிமிடமே யோசித்தவள், அடுத்த நொடி,"அது ஒன்னும் இல்லைப்பா. இந்த 'அமேசான் காடுகளில் மட்டும் கிடைக்கும் அறியவகை மூலிகை செடிகள் கொண்டு செய்த எண்ணெய் இருக்குல்ல. சொட்டை மண்டையில அதைத் தடவினா கூட முடி வளருமே! எங்க அம்மா ஆர்வக்கோளாறுல அந்த எண்ணெய் உடம்பு முழுக்க தடவி ஆயில் பாத் பண்ணிட்டாங்க. அதான் நிறைய முடி" என்று நிலா அடித்துவிட,"அச்சச்சோ!" என்று மாறனுக்கு கோரஸாக கிட்டியது அந்த வாண்டுகளின் அனுதாபங்கள்.

முதல் போட்டி, 'சாக்குப்போட்டி' என்று அறிவிப்பு வர, "அட! இந்தக் கவுனே எனக்குச் சாக்கு மாதிரி தான் இருக்கு. இதுக்கு மேல ஒரு சாக்கா?" என்று தான் அணிந்திருந்த கவுனை பார்த்தான் மாறன்.

எப்படியோ அந்தச் சாக்குப்போட்டியில் வென்றாலும், குதித்து குதித்து வந்ததில் தலைமேல் செட் பண்ணி வைத்த விக் கழண்டு விழுந்துவிட்டது.

"ஹேய். என்னப்பா. உங்க மம்மி மண்டையில முடியே இல்லை. ஆதான் நீங்க முடி வளருரதுக்கு 'அமேசான் காடுகளில் மட்டும் கிடைக்கும் அறியவகை மூலிகை செடிகள் கொண்டு செய்த எண்ணெய்' வச்சிருக்கீங்க தான? அதைப் போட்டுமா முடி வளரல?" என்று நிலாவின் தோழி கேட்க, "அதைத் தான் எங்க அம்மா உடம்புக்கு தேய்ச்சி குளிச்சிட்டாங்கல்ல. அதுலயே காலி ஆகிடுச்சுப்பா. மண்டைக்கு தேய்க்க எண்ணெயே இல்லை" என்று சமாளித்தாள் நிலா.

சாக்குப்போட்டி, ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் மாறன் கலக்கிவிட்டான் என்றாலும், சமையல்போட்டி, கோலப்போட்டி, ஹார் டிரெஸ்சிங் போன்ற போட்டிகளில் செம சொதப்பல்.

இன்றைய நாளிற்கான 'சூப்பர் மாம்' பட்டம் யாருக்கு என்று அறிவிப்பதற்காகத் தலைமை ஆசிரியே மேடைமீது ஏற, நகத்தைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நிலா.

அவளைப் பார்த்த மாறன், "குட்டி இளா. நகத்தைக் கடிக்கக்கூடாது" என்று வாயில் இருந்து கையை எடுத்து விட, "யோவ் இளா. செமயா சொதப்பிட்டு இப்ப வந்து நகைத்தை கடிக்க வேணாம் சொல்லுற. அப்ப உன்னைக் கடிக்கவா" என்று விட்டாள் குதறிவிடுவது போல் சீறினாள் நிலா.

அதற்குள் இன்றைய நாளின் சூப்பர் மாம்மாக வேறு ஒருவரை அறிவிக்க, அவளைப் பாவமாய் பார்த்தவன், "நான் என்ன பண்றது பேபி" என்றான்.

"சரி விடு. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்" என்று நிலா சொல்ல,"என்னது? அடுத்த வருஷமுமா?" என்று வாயைப் பிளந்தான் மாறன்.

அதற்குள் தலைமை ஆசிரியை மேடையில், "ஒவ்வொரு வருஷமும் நம்ப அன்னையர் தினம் அன்னைக்கு சில போட்டிகள் வைத்து, அதில் சிறப்பாகச் செயல்படும் ஒரு குழந்தையோட அம்மாவுக்கு 'சூப்பர் மாம்' அவார்ட் கொடுப்போம். ஆனா, இன்னைக்கு, இன்னோரு அவார்ட் கொடுக்கப்போறோம். 'பெஸ்ட் மாம்'. இந்த அவார்டை வாங்கிக்க 'இளநிலா வோட மாம். ஸ்டேஜ்க்கு வாங்க" என்று அழைக்க மேடைக்குச் சென்றான் மாறன்.

அவன் கையில் அந்த அவார்டை கொடுத்ததும் அவை எங்கும் கரகோஷம்.

"இந்த அவார்ட் எதுக்குன்னு குழந்தைங்களுக்கு புரியாட்டியும். இங்க இருக்க ஆசியர்களுக்கும். மற்ற பெற்றோர்களுக்கும் கண்டிப்பா புரியும்ன்னு நினைக்கிறேன்.

இளநிலா. இவர் உன்னோட அப்பாவா.. சாரி சாரி அம்மாவ இருக்க நீ ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்" என்று தலைமை ஆசிரியர் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லி மேடையை விட்டுக் கீழே இறங்கினான் மாறன்.

நிகழ்ச்சிகள் முடிந்து நிலா அவள் நட்பு வட்டத்துடன் விளையாடிக்கொண்டிருக்க, தலைமை ஆசிரியை அறைக்குச் சென்றான் மாறன்.

"வாங்க மாறன்" என்று இன்முகத்துடன் வரவேற்றவரிடம், "நன்றி மேம்" என்றான் மாறன். "எதுக்கு?" என்று ஜெசிக்கா கேட்க, கையில் வைத்திருந்த அவார்டை உயர்த்தி காட்டினான். அதற்குச் சிரித்த ஜெசிக்கா, "யூ டிசர்வ் இட்" என்றார்.

"அம்மா இல்லாத பொண்ணுன்னு நிலாவை ஸ்கூல்ல சேர்த்தப்போ கொஞ்சம் அனுதாபம் இருந்துச்சு. ஆனா, இப்போ பொறாமையா இருக்கு. அம்மா இல்லாத குறையே தெரியாம பாத்துக்கற உங்கள மாதிரி ஒரு அப்பா எனக்கு இல்லையேன்னு. நெஜமாவே நீங்க நிலாவுக்கு கிடைச்ச வரம்" என்று ஜெசிக்கா தொடர, "ம்ம். ஆனா, இப்போ அம்மா இல்லைன்னு ஏங்க வச்சிடுவேனோ'ன்னு பயமா இருக்கு" என்றான் மாறன்.

"ஏன்? அப்டி யோசிக்கற அளவுக்கு என்ன ஆச்சு?" என்று ஜெசிக்கா கேட்க, "நான் ஆஃபிஸ் விஷயமா பத்து நாள் US போக வேண்டி இருக்கு. அவளைக் கூட்டிட்டு போக முடியாது. வேற யார் கிட்டயாவது விட்டுட்டு போகணும். அங்க எல்லாம் சரியா இருந்தா பரவால்ல. இல்லைன்னா அப்புறம் ரொம்ப கஷ்டமா போய்டும் அவளுக்கு. அவ பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட அவளை விட்டு இருந்ததில்லை. என்னைக் கட்டி பிடிச்சிக்காம தூங்கி அவ பழகுனதே இல்ல இதுவர. எங்க நான் விட்டுட்டு போனா, 'அம்மாவாது இருந்திருக்கலாம்'ன்னு தோணிடுமோன்னு பயமா இருக்கு" என்று மாறன் சொல்ல,

"கூல் மாறன். கூல். எப்படியும் நல்லா பாத்துப்பாங்க உறுதியா தெரிஞ்சவங்க வீட்ல தான் நீங்க விடப் போறீங்க. இருந்தாலும் அவ கண்டிப்பா உங்கள மிஸ் பண்ணுவா தான். ஏன்னா, தினமும் உங்க கிட்ட பேசி, உங்கள கட்டி பிடிச்சி, உங்க அணைப்புலே இருந்து பழகிட்டால...

ஆனா... நீங்க ஒன்னு பண்ணுங்க. அவளுக்கு ஒரு டெடி பியர் வாங்கி குடுங்க" என்று ஜெசிக்கா சொல்ல, சிரித்தான் மாறன்.

"என்ன சிரிக்கறீங்க?" என்று ஜெசிக்கா கேட்க, "அட போங்க மேம். பக்கத்து கண்ணாடியைத் திருப்புனா, எப்படி டா என் ஆட்டோ ஓடும்?'ன்னு கேக்குற மாதிரி தான் நானும் கேக்கணும். டெடி வாங்கி குடுத்தா, எப்படி என்னை மிஸ் பண்ணாம இருப்பா?" என்று கேட்டான் மாறன்.

"அட சிரிக்காதீங்க மாறன். நிஜமா தான் சொல்றேன். மென்மையான பொம்மைகளை இயல்பாவே குழந்தைங்க அவங்க நண்பர்களா தான் பார்ப்பாங்க. இன்னும் சொல்லணும்'ன்னா மனுஷங்களா பாவிச்சு பார்ப்பாங்க. அவங்க கற்பனைக்கேற்ப அந்தப் பொம்மையை அண்ணன், தம்பி, நண்பன்'ன்னு உறவு ஏற்படுத்திக்குவாங்க. சில நேரம் பொம்மையை அவங்க குழந்தையா நெனச்சி, நம்ப அவங்களுக்கு பண்றதெல்லாம், அந்த பொம்மைக்குப் பண்ணுவாங்க. இது குழந்தைகளோட இயல்பு.

நீங்க என்ன பண்ணுங்க, ஒரு பொம்மை வாங்கி குடுத்து, 'இந்தப் பொம்மை நான் தான்'ன்னு சொல்லுங்க. கண்டிப்பா அவ உங்கள மிஸ் பண்றது குறையும்" என்று ஜெசிக்கா சொல்ல, அதைப் பற்றி யோசிக்க தொடங்கினான் மாறன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்
ஹா ஹா ஹா
அன்னையர் தினம் செலிபரேஷன் சூப்பரோ சூப்பர்
குழந்தையைக் கடத்திட்டு போறாளா மாறி(றன்?)
குட்டி நிலாவை யாராவது கடத்த முடியுமா?
ஹா ஹா ஹா
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,
மாறன் சூப்பர் மாம் தான்,
இளா சேட்டையெல்லாம் ரொம்ப ரொம்ப cute,
டெடி வாங்க போறயா டாடி (y)
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
வாவ்...சூப்பர்....இப்டி தான் டெடி நிலா கைக்கு வருதா...ஆனா அந்த டெடி டாடி ஆகுறதுக்கு மீ வெயிட்டிங்...குட்டி எப்பியா இருக்கே...கொஞ்சம் பெரிசு பன்னலாமே....

பரவால...குழந்தைகளைத் தவிர மத்தவங்களுக்கு அது மாறன்னு தெரிஞ்சிருக்கே...எப்பிடி...
 

Kamali Ayappa

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்
ஹா ஹா ஹா
அன்னையர் தினம் செலிபரேஷன் சூப்பரோ சூப்பர்
குழந்தையைக் கடத்திட்டு போறாளா மாறி(றன்?)
குட்டி நிலாவை யாராவது கடத்த முடியுமா,?
ஹா ஹா ஹா

Adhaane.. Namba nilaava yaarum kadatha mudiyaadhu.. Mikka nandri banu maa
 

Kamali Ayappa

Well-Known Member
சூப்பர்,
மாறன் சூப்பர் மாம் தான்,
இளா சேட்டையெல்லாம் ரொம்ப ரொம்ப cute,
டெடி வாங்க போறயா டாடி (y)

Thanks sis... Aamaa.. Teddy ku seekaram daddy post kuduka porom
 

Kamali Ayappa

Well-Known Member
சூப்பர்,
மாறன் சூப்பர் மாம் தான்,
இளா சேட்டையெல்லாம் ரொம்ப ரொம்ப cute,
டெடி வாங்க போறயா டாடி (y)

Thanks sis... Aamaa.. Teddy ku seekaram daddy post kuduka porom
 

Kamali Ayappa

Well-Known Member
வாவ்...சூப்பர்....இப்டி தான் டெடி நிலா கைக்கு வருதா...ஆனா அந்த டெடி டாடி ஆகுறதுக்கு மீ வெயிட்டிங்...குட்டி எப்பியா இருக்கே...கொஞ்சம் பெரிசு பன்னலாமே....

பரவால...குழந்தைகளைத் தவிர மத்தவங்களுக்கு அது மாறன்னு தெரிஞ்சிருக்கே...எப்பிடி...

Thanks sis.. Perusaa poda try panren kandippaa..

Paiyan ponnu vesham poattaa kandupidikaadha alavukkaa periyavanga irupaanga..
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அமேசான் காடுகளில் கிடைக்கும் மூலிகை எண்ணெயா?
கைக்கு போட்டதாலே தலைக்கு போதவில்லையா?
ஐ ஷேடோக்கு பதிலா பிங்க் லிப்ஸ்டிக்கா?
ஹா ஹா ஹா
இளநிலாவின் சேட்டைகள் சூப்பர்
அப்போ இப்போத்தான் மாறன் டெடி பேர் வாங்கப் போறானா?
அப்போ அமெரிக்கா போகும் மாறன் இனி திரும்ப வர மாட்டானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top