உன் நிழல் நான் தாெட ep 21 (1)

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தொடர்வேன்
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 21

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!


போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!


தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!


ரத்னாவை மண்டபம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை என்றதும் அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்தனர். கிருஷ்ணசந்திரன் அர்ச்சனாவை அழைத்து

"ரத்னா உன்கூட தான இருந்தா, அப்படி இருக்கும் பொழுது ரத்னா காணாம போனாது உனக்கு எப்படி தெரியாம இருக்கும்." அதுவரை அழுது காெண்டிருந்த அர்ச்சனா,

"இல்லப்பா எனக்கு தெரியாது, என் கூட தான் இருந்தா. அப்போ போன் ஒன்னு வந்துச்சு, நான் பேசிக்கிட்டு இருக்கும்பொழுது அம்மா கூப்பிடவும் நான் வெளியே வந்தேன்.

திரும்பி ரூம்க்கு வந்து பார்க்கும் பொழுது ரத்னா காணோம். நானும் அவ வேற எங்கயாவது இருப்பான்னு தான் நினைச்சேன்."

அடுத்ததாக மண்டபத்து காவலாளியிடம் விசாரிக்க அவரோ நான் சரியாக கவனிக்கவில்லை என்று கூற, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.

"அப்பா வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்க நேரமில்லை, எப்படி இருந்தாலும் ரத்னா ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. நீங்க முதல்ல தாத்தா-பாட்டி அம்மாவ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போங்க. இத நான் பாத்துக்குறேன்."

"வீட்டு பொண்ணு காணாம போய் இருக்கா, எப்படிடா பயப்படாம வீட்டுக்கு போகமுடியும். அவங்க எல்லாரும் வீட்டுக்கு போகட்டும் நம்ம தேடி பாத்துக்கலாம்."

தாத்தா பாட்டி வீட்டுப் பெண்கள் தவிர அனைவரும் ரத்னாவை தேடி அந்த இரவில் அலைந்து கொண்டிருந்தனர். அஜீத்திற்கு சந்தேகத்துக்கு இடமின்றி இது யார் செய்திருப்பார் என்பது தெரியும். ஆனால் எங்கு இருப்பார்கள் என்பதே தெரியாது. பிரபுவுக்கும் ஒரு யூகம் இருந்தது,

"ஒருவேளை ரத்னாவை கடத்தியது...." பேச ஆரமித்த பிரபுவை தடுத்து, அடிக்குரலில்

"இங்கே பேச வேண்டாம் பிரபு. அவங்க வீட்ல போய் பேசிக்கலாம் டா." என கூற, இதை கவணித்த கிருஷ்ணன்,

"என்னடா பிரபு ஏதோ கடத்தல் அப்படின்னு சொல்றான், நீ அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்ற, இங்கு என்னதான் நடக்குது."

"அப்பா கவலைப்படாதீங்க விடியும் பொழுது ரத்னா பத்திரமா நம்ம வீட்டில இருப்பா. எங்களுக்கு ரத்னா இப்ப எங்க இருக்கான்னு தெரிஞ்சாகணும், நான் இப்பாே பாே றே ன், நீங்க என்ன பண்ணனம்னு பாே ன் பன்றே ன்.

ஒருவழியாக அஜீத் அனைவரையும் சமாளித்து, நேரே சென்று கிளம்பி சென்று நின்ற இடம் ராபர்ட்டின் வீட்டிலேயே, இந்நேரத்தில் அனைவரையும் எதிர்பார்க்காத ராபர்ட்

"ஹாய் அஜீத் என்னாச்சு நீ இப்பாே வீட்டுக்கு போகாம இங்க ஏன் வந்திருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா, சொல்லியிருந்தா நானே காலையில வந்திருப்பேனே." என கேட்க, அஜீத் உணர்ச்சி மறத்த குரலில்

"ரத்னா எங்கன்னு தெரிஞ்சிகிட்டு அவளை கூட்டிட்டு போகலாம்னு வந்தோம்."

"வாட் ரத்னா ரத்னாவுக்கு என்ன ஆச்சு அவளை தேடி எதுக்காக என்னுடைய வீட்டுக்கு வந்திருக்கீங்க." என கேட்டுக்கொண்டே இருக்கிறது சத்தம் கேட்டு கீழே வந்த ஸ்டெல்லா

"என்ன ஆச்சு அஜீத் எதுக்காக இப்போ இங்க வந்திருக்கீங்க."

"நாங்க இங்க பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை ரத்னா எங்க இருக்கிறான்னு எனக்கு இப்பவே தெரியனும்." என வார்த்தைகளில் உஷ்ணம் தெறிக்க அஜீத் பேச

"அவர் காணாம போன அதுக்கு எங்க கிட்ட வந்து கேட்டா எங்களுக்கு எப்படி தெரியும் தெரியும்."

"நல்லா தெரியும், ரத்னா இப்ப எங்க இருக்கான்னு இங்க வந்து கேட்டா மட்டும் தான் தெரியும்." அஜீத்தின் கோபத்தை உணர்ந்த ராபர்ட் ஸ்டெல்லா திரும்பி

"ஸ்டெல்லா ரத்னா உன்கிட்ட எதுவும் சொல்லிட்டு போனாலா, அத கேட்பதற்காக தான் ரெண்டு பேரும் இங்க வந்திருக்காங்களா." என கேட்க பிரபு வேகமாக முன்வந்து

"நாங்க வந்தது ஸ்டெல்லா கிட்ட கேக்குறதுக்கு இல்லை உங்ககிட்ட. ரத்னாவை எதுக்காக நீங்க நீங்க கடத்துனீங்க. இப்போ ரத்னாவை எங்க வச்சு இருக்கீங்க."

________________________________________________________________________


மயக்கம் தெளிந்து எழுந்த விழித்த ரத்னாவிற்கு தான் எங்கு இருக்கிறோம் என்பது புரியாத பொழுதும், தான் எதிர்பார்த்த மாதிரியே கடத்தப்பட்டு இருப்பது புரிந்தது.

நிதானமாக தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்வையை செலுத்த யாரும் இல்லாத இடத்தில் தான் கட்டி வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். இருந்தும் தனக்குள் எழுந்த பயத்தை கட்டுப்படுத்திக்கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அமர்ந்திருந்த ரத்னாவிடம் வந்த இருவர்

"என்னம்மா பொண்ணு உனக்கு மயக்கம் தெரிஞ்சிடுச்சா."

அவர்கள் இருவரையும் ஒரு பார்த்த ரத்னா பேசாமல் மௌனம் சாதிக்க,

"பாருடா திமிரை நாம கடத்தி வைத்திருக்கிறது தெரிஞ்சும் எப்படி உட்கார்ந்து இருக்காரு."

"ஆமாண்டா இதுக்கு முன்னாடி எத்தனையோ பேரை கடத்தி இருக்காேம், அவங்க எல்லாம் ஒன்னு கதறி அழுவாங்க இல்ல, நம்ம கிட்ட பேரம் பேசுவாங்க, இல்லன்னா நான் யார் தெரியுமா என்று மிரட்டுவார்கள். இது என்னன்னா இப்படி பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உக்காந்து இருக்கு." என்று பேச ரத்னா அப்பொழுதும் வாய் திறந்தால் இல்லை.

"சரி நமக்கு என்ன என்னமோ செஞ்சுட்டு போறா, இருடா இவளுக்கு மயக்கம் தெளிஞ்சு சொல்லிட்டு வரேன்." என்று கூறி நகர்ந்து தொலைபேசியில் ரத்னா மயக்கம் தெளிந்து அதை தெரியப்படுத்த, அந்தப்பக்கம் என்ன கூறினார்கள் இவன்

"சரி அப்படியே செய்கிறேன்." எனக்கு ஒரு விட்டு ரத்னாவிடம் வந்து தன்னிடமிருந்த பத்திரத்தை நீட்டி

"இங்க பாரு பொண்ணு ஒழுங்கு மரியாதையா இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுட்டா நாங்க உன்னை எந்த சேதாரமும் இல்லாமல் அனுப்பி விடுவோம். இல்ல நான் கையெழுத்து போட மாட்டேன் அப்படின்னு நீ மொரண்டு புடிச்சா, முழுசா வீடு போய் சேர மாட்ட." என கூற அவன் கையில் இருந்த வெற்று பத்திரத்தை பார்த்த ரத்னா

"முடியாது." என ஒற்றைச் சொல்லில் பதிலளிக்க அருகில் நின்றவன் கரம் அடுத்த நொடி ரத்னாவின் கண்ணத்தை பதம் பார்த்தது.

"என்னடி நெனச்சிட்டு இருக்க பொறுமையா உன் முன்னாடி பேசினால் எங்கள பார்த்தா உனக்கு இளிச்சவாயன் மாதிரி தெரியுதா. இப்ப மட்டும் நீ இதுல கையெழுத்து போடலைன்னா உன் உயிர் உன் கிட்ட இருக்காது." அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த ரத்னா

"என் உடம்பிலிருந்து உயிர் போயிட்டா அப்புறம் யார் வந்து இந்த பத்திரத்தில் கையெழுத்து போடுவா."

அடி வாங்கிய பின்பும் ரத்னா திமிராக பேச வெகுண்டு எழுந்த ஒருவன் மறு கன்னத்திலும் ரத்னாவை அடிக்க ரத்னா கீழே விழுந்து தன் சுய நினைவை இழந்தாள்.

"டேய் இதுக்கு மேல அடிச்ச செத்து போய்ட போறா."

"உயிர் போனலும் கையெழுத்து போட முடியாதுன்னு சாெல்றா, உயிருக்கு மேலான ஒன்னு போயிட்ட." என கூறி சிரிக்க மற்றொருவன்

"சரியா சொன்னடா, குட்டி நல்லா சோக்கா தான் இருக்கு. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இப்படி ஒன்னு கிடைக்கிறது கஷ்டம் தான். எப்படியும் இவ சாகத்தான் போறா, அதுக்கு முன்ன நாம அனுபவிச்சா ஒண்ணும் தப்பு இல்ல."என கூறி ரத்னாவின் மீது கையை வைக்க செல்ல, அவன் கைகளோ அந்தரத்தில் அப்படியே நின்றது.

அவன் மேற்கொண்டு முன்னேற முடியாமல் தவிக்க அருகில் வென்றவன்,

"என்னடா ஆச்சு அசையாம அப்படியே நிற்கிற."

"என்னன்னு தெரியல டா, என் கையை யாரோ பிடிச்சு இருக்கிற மாதிரி இருக்கு."

அடுத்த நொடி அவன் கீழே சுருண்டு விழுந்தான். தன் நண்பன் கீழே விழுந்ததும் அவன் அருகில் சென்று அவளை பார்க்க முயல அடுத்தவனை யாரோ தலைமுடியை பிடித்து மேலே இருப்பது போல உணர,

"யாருடா அது யாரு," என கத்த அவன் முடியை பிடித்து இழுத்த ஜஸ்வந்த் சுவரோடு சுவராக அவன் தலையை மோத அவனும் மயங்கி கீழே விழுந்தான்.

கீழே விழுந்த இருவரையும் அங்கிருந்த ஜஸ்வந்த் ஆன்மா அப்புறப்படுத்திவிட்டு, ரத்னாவின் அருகில் செல்ல, ரத்னா மெல்லிய முனகலுடன் எழுந்து அமர்ந்தாள்.

ரத்னா விழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்க யாரும் இல்லை. எழுந்துநின்ற ரத்னா சென்று பழையபடி நாற்காலியில் அமர்ந்து கொள்ள ஜஸ்வந்த் ரத்னாவின் அருகில் வந்து

"நீ எங்க இருந்து போயிடு இங்கே இருக்கிறது உனக்கு நல்லது இல்லை." என கூற கண்ணை மூடி ஆழ்ந்த மூச்சு எடுத்த ரத்னா

"என்னால இங்க இருந்து இப்போ போக முடியாது. இன்னையோட இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியாம நான் இங்க இருந்து போக போறது இல்லை." என தன் மனதுக்குள் பேசிக் கொண்டு அமர்ந்து விட, ஜஸ்வந்த் ஆன்மாவோ

"ஓகே ரதி இன்னைக்கே இந்த பிரச்சனைக்கு எல்லாத்தையும் நான் முடித்து வைக்கிறேன். இப்ப எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் வேற யாரும் முக்கியம் இல்லை. எப்போ உன்னை கொலை பண்ற அளவு இறங்கி வந்தார்களோ இதுக்கு மேல அவங்களை நான் சும்மா விடப்போவதில்லை. மனுஷங்க எல்லோரும் நல்லவங்க இல்லன்னு நீயும் தெரிஞ்சுகிறது தான் உனக்கு நல்லது." என கூறி ரத்னாவின் அருகில் காவலாக நின்றது.

_______________"____________________________________!________________


"ரத்னா எங்க இருக்குறன்னு உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனா உங்க பொண்ணு ஸ்டெல்லாக்கு நல்ல தெரியும்." என அஜீத் ஒவ்வொரு வார்த்தைகளையும் நிறுத்தி நிதானமாகப் பேச அதைக்கேட்ட ஸ்டெல்லா, ஒரு நொடி திகைத்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு

"அது எனக்கு எப்படி தெரியும், ரத்னா என்கிட்ட எதுவும் சொல்லவே இல்ல. அன்னைக்கு ரத்னா சென்னை கிளம்பும் போது கூட நான் உதவி பண்றேன்னு சும்மாதான் சொன்னேன். அதை கூட உடனே உன்கிட்ட நான் சொல்லிட்டேனே.

அதுக்கப்புறம் நான் ரத்னா கிட்ட பேசவே இல்லை. இன்னைக்கி ரிசப்ஷன்ல பார்த்த போது கூட விஷ் பண்ணிட்டு நான் கிளம்பிட்டேன்." என கூற வேகமாக அவளது கழுத்தை பிடித்து உயர்த்திய அஜீத்

"என்ன பாத்தா உனக்கு முட்டாள் மாதிரி இருக்கா நீ சொல்ற எல்லாத்தையும் நம்பிக்கிட்டு சரி சரின்னு தலையாட்டுவேன்னு நினைச்சுட்டியா." அஜீத் கை ஸ்டெல்லாவின் கழுத்தில் இருப்பதை கண்ட பிரபு ராபட் இருவரும் அஜீத்தின் கையிலிருந்து ஸ்டெல்லாவை பிரித்து எடுக்க ராபர்ட்

"என்ன நெனச்சிகிட்டு இருக்குற அஜீத் எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட வீட்டுக்கு வந்து என் பொண்ணு இப்படி ட்ரீட் பண்ணுவ." என கூற பிரபு

"உனக்கு என்னடா ஆச்சு எதுக்காக ஸ்டெல்லா கழுத்துல கைய வைக்க. எதுவாயிருந்தாலும் ரத்னாவை கடத்தின இந்த ஆளுகிட்ட விசாரிக்க வேண்டியது தானே."

"வாய மூடுடா நீ நினைக்கிற மாதிரி அங்கிள் ஒன்னும் ரத்னாவை கடத்தல. இதுவரைக்கும் எங்க வாழ்க்கையில் நடந்த எல்லா பிரச்சனைக்கும் ஒரே காரணம் இந்த ஸ்டெல்லா மட்டும்தான்." என்று கூற அதை நம்ப முடியாமல் பிரபு ராபர்ட் இருவரும் அதிர்ந்து நின்றனர்.

தன்னைப்பற்றி அஜீத்திற்கு தெரிந்துவிட்டது என்பதை புரிந்து காெண்ட ஸ்டெல்லா தலைகுனிந்து நின்றாள்.


________________________________________________________________________


மற்றொருபுறம் மண்டபத்தில் இருந்து வெளியேறிய தங்கவேலு ஹர்ஷத் இருவரும் ரத்னாவை தேடி புறப்பட, தங்கவேல் ஹர்ஷத்திடம்

"ரத்னா எங்க இருக்கான்னு இப்போதைக்கு சாெல்ல ஒருத்தரால மட்டும் தான் சொல்ல முடியும்."

"என்ன சொல்ற யாருக்கு தெரியும் அதை சொல்லு."

"ரூபா." திடுக்கிட்டு திரும்பிய ஹர்ஷத்

"ரூபாக்கு தெரிஞ்சா எதுக்கு அத மண்டபத்துக்கு சொல்லல அதுமட்டுமில்லாம அந்த நேரத்துல ரத்னாவை காணோம்னு அவளும் தேடிட்டு இருந்தா. அப்படி இருக்கும்பொழுது ரூபாவுக்கு தெரியும்னு நீ எதை வச்சு சொல்ற."

கடத்தினவர்களுக்கு தெரியாதா ரத்னா எங்க இருப்பான்னு."

"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசத.", என தன் மனைவியை பற்றி குற்றம் சுமத்தியது பிடிக்காமல் ஹர்ஷத் பேச

"நான் சென்றது உண்மைதான், எனக்கு ரூபா குணம் தெரியும் இந்த அளவுக்கு போவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல."

"வேலு தேவையில்லாம ரூபா பத்தி தப்பா பேசாத."

"உங்களுக்கு அவர் மனைவி ஆகுறதுக்கு முன்னாடியே என்னுடைய அக்கா. அப்படி இருக்கும் பொழுது நான் எதுக்காக அவளைப் பத்தி தப்பா பேசணும்."

"எந்த ஆதாரத்தை வச்சி ரூபா ரத்னாவை கடத்தினாள்னு நீ நினைக்கிற. எதனால உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு."

"ஜஸ்வந்த் கொலை பண்ணின ஒருத்தருக்கு ரத்னாவை கடத்துவது ரொம்ப பெரிய விஷயம் கிடையாது" சாதரணமாக வேலு கூறினாலும் அதன் அழுத்தம் உஏ்மையை உணர்த்தவே செய்தது.

____________________________________________________________________________

"என்ன ஸ்டெல்லா அதிர்ச்சியா இருக்கா, எப்படி நம்ம எல்லாத்தையும் பாத்து பாத்து கவனமா செஞ்சோம் அப்படி இருந்தும் இவனுக்கு எப்படி உண்மை தெரிஞ்சுக்கணும் பாக்குறியா.

எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் தப்பு பண்ணும் போது தன்னை அறியாமலேயே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவான். அப்படி ஒரு தப்பை நீ பண்ணுன. அதுதான் உன்னை எனக்கு காட்டிக்கொடுத்துருச்சி."

"அஜீத் திஸ் இஸ் யூர் லிமிட் என் பொண்ண பத்தி இதுக்கு மேல தப்பா ஒரு வார்த்தை நீ சொன்ன அடுத்த நிமிஷம் உன்னுடைய உடம்பில் உயிர் இருக்காது."

"நான் ஒண்ணும் தப்பா சொல்லல இதுவரைக்கு எங்க வாழ்க்கையில் நடந்த எல்லா பிரச்சினைக்கும் காரணம் உங்க பொண்ணும், ரத்னா அக்காவும் தான்.

இப்போ ரத்னா எங்க இருக்கிறான்னு உங்க பொண்ணு சொல்லலைன்னா எங்கிட்ட இருக்குற எல்லா ஆதாரத்தையும் நான் போலீஸ் கிட்ட கொடுக்க வேண்டியதா இருக்கும். அப்போ உங்க பொண்ணு தான் காலம் முழுக்க கம்பி எண்ண வேண்டியது தான் இருக்கும்."

_____________________________________________________________________________

தங்கவேலு கூறியதை நம்ப முடியாமல் கண் கலங்கி நின்ற ஹர்ஷத்

"நீ சொல்றது உண்மையாக இருக்காது. நான் எந்த அளவு என்னுடைய தம்பி மேல பாசம் வச்சு வளர்த்தேனோ, அதே அளவு பாசம் ரூபா என் தம்பி மெல்ல வச்சிருந்தா. அப்படி இருக்கும் பொழுது எதுக்காக ஜஸ்வந்த்தை கொலை பண்ணனும்.

அதே மாதிரி ஒருநாள்கூட ரூபா ரத்னா பத்தி பேசாம இருந்தது இல்லை. அந்த அளவு ரத்னா மேல உயிரா இருந்தா, அப்படிப்பட்டவ ரத்னா உயிரை எடுக்க போறான்னு நீ சொல்ற."

"நான் இப்போ உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை கொஞ்ச நாளுக்கு முன்னாடி வேற யாராவது என்கிட்ட சொல்லியிருந்தா அவங்கள கண்டிப்பா கொலை பண்ணி இருப்பேன். ஆனா இந்த விசயம் முழுசா நானா விசாரிச்சுட்டு தெரிஞ்சிக்கிட்ட உண்மை. எனக்கூறிவிட்டு தன் செல்போனில் இருந்த வீடியோவை காட்ட அதில் ஜஸ்வந்தை ரூபா கொலை செய்த காட்சி ஒளிபரப்பாகியது.
___ மகள் ஸ்டெல்லா. காதலித்து திருமணம் செய்து காெண்டவர்களின் வாழ்வின் வசந்தகாலத்தில் மலர்ந்த மலர்தான் ஸ்டெல்லா. ஒரு விபத்தில் நன்சி உயிருக்கு பாேராடிக்காெண்டிருக்க பணம் இல்லாத கரணம் அவரின் உயிரை குடித்துவிட, அன்றிலிருந்து பணத்தின் பின்னால் தன் ஓட்டத்தை ஆரம்பித்த ராபட் தன் மகளுக்கு பணத்தை வழங்கிய அளவு பாச வழங்க தவறிவிட்டார்.

ஆரம்பத்தில் பாசத்திற்காக ஏங்கித் தவித்த ஸ்டெல்லா பின்பு தனக்கு தனிமையை பழகிக் கொண்டாள். பள்ளிக்காலத்தில் விடுதி வாசத்தை அனுபவித்த ஸ்டெல்லா, கல்லூரி நாட்களில் தன் தந்தையுடன் இருக்க வேண்டும் போராடி கோயம்புத்தூரில் இருக்கும் கலைக் கல்லூரியில் சேர்ந்தாள்.

சேர்ந்த இடத்தில் ரத்னாவின் நட்பு அவள் மனதில் காயங்களுக்கு அருமருந்தாக இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அது தந்தையின் பாசத்தை நிரப்பவில்லை.

அஜீத் ரத்னாவின் நண்பனாக பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து கவனமெடுத்து செய்ய அது அனைத்தும் ஸ்டெல்லாவின் மனதில் ஒரு உயர்ந்த இடத்தை அஜீத்திற்கு வழங்கியது.

கல்லூரிக்குள் ரத்னா ஸ்டெல்லா இருவருக்கும் எந்த பிரச்சினை என்றாலும் அஜித் அதை சரி செய்ய அதுவரை தனிமையை அனுபவிக்க ஸ்டெல்லாவிற்கு அஜீத்தின் அருகாமை தேவைப்பட்டது.

பொங்கலன்று ராபர்ட் ஸ்டெல்லாவின் நிலை உணர்ந்து அதன் பின் வந்த நாட்களில் தன் மகள் மீது பாசத்தை பொழிய இவை அனைத்திற்கும் அஜீத் தான் காரணம் என அவன் என்னிக்காெண்டாள்.

அஜீத் தன்னோடு இருந்தால் மட்டுமே தன் வாழ்வு முழுமை அடையும் என நினைக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் அஜீத்தை காண்பதற்காக மட்டுமே கல்லூரி சென்றார்.

அனைவரும் சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்கும் போதும் ஸ்டெல்லா கவனம் அஜீத் மீதே இருந்தது. இருந்தும் மற்ற மூவரும் இதை என்றும் கவனித்ததே இல்லை.

இரண்டாவது வருடம் அனைவரும் கல்வி சுற்றுலா செல்லும் நேரம் பிரபு காரணமின்றி ஒவ்வொரு நேரமும் தன்னை தனியே அழைத்து வருவது, அஜீத்திடம் பேச விடாமல் செய்வது என்று இருக்க அவள் கோபப்பட்ட

"பிரபு எதுக்காக இப்படி பண்ற சும்மா சும்மா எதுக்காக என்ன தனியா கூட்டிட்டு வர எல்லாரும் சேர்ந்து வருவதில்லை உனக்கு என்ன பிரச்சனை."

"ஐயோ ஸ்டெல்லா தயவுசெஞ்சு என்ன தப்பா எடுத்துக்காத அந்த ரெண்டு லூசும் தனியா கொஞ்ச நேரம் இருந்தா தான் இருக்கு அவங்க காதலை அவங்க உணர்வு வாங்கனும்னு நினைச்சா, இதுவரைக்கும் எதுவும் நடக்கல." என பிரபு புலம்ப

"யாருக்கு.. யார் யாரை காதலிக்கிறார்." என புரியாமல் கேட்க

"அஜீத் ரத்னாவை காதலிக்கிறான்.வ

"நீ என்ன சொல்ற!" தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் ஸ்தம்பித்து நின்று ஸ்டெல்லா

"நீ சொல்றது உண்மையா."

"நான் எதுக்காக பொய் சொல்ல போறேன் இந்த மக்கு பையன் ரெண்டு வருஷமா ரத்னாவை கரெக்ட் பண்ண முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறான். மனசுக்குள்ள இருக்கின்ற காதலை வெளியே சொல்ல தெரியல. சாெல்லாமாமனசுல இருக்குறதை எப்படி ரத்னாவால் புரிஞ்சிக்க முடியும். என்று கூறிவிட்டு நகர்ந்துவிட

அதன் பிறகு வந்த நாட்களில் ஸ்டெல்லா இருவரையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அஜீத் மட்டுமே ரத்னாவை காதலிப்பதையும் ரத்னாவுக்கு இதுவரை காதல் என்ற உணர்வு வராத அதையும் சரியாக கவனித்த ஸ்டெல்லா, அதன் பின்பு தனது திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தாள்.
"தான் அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி அதன்மூலம் ரத்னாவிற்கு எந்த சூழ்நிலையிலும் அஜீத்தின் மீது காதல் தோன்றாது பார்த்துக்கொண்டாள்.

மூன்றாவது வருடம் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின்போது பிரபு எடுத்த போட்டோக்களில் வைத்து தனக்கு சாதகமானவைகளை செய்ய ஆரம்பித்தாள்.

இதில் அவளே எதிர்பாராத ஒன்று ரூபாவின் உதவி அவளுக்கு கிடைத்தது. அவள் திட்டத்தை முதலில் கண்டுபிடித்த நபர் ரூபவதி ஆனால் ரூபவதி ஸ்டெல்லா உடன் இணைந்து செயல்பட அனைத்தும் இருவரின் திட்டத்தின்படி நடந்தது.


தன்னிடமிருந்த ஆதாரத்தை ராபர்ட் முன்பு வைத்த அஜீத்

"உங்களுக்கு இது எந்த அளவு கஷ்டத்தை கொடுக்கும் என்று எனக்கு நல்லா புரியுது ஆனா இதுதான் உண்மை உங்க பொண்ணு நீங்க நினைக்கிற அளவு நல்லவ இல்ல." என கூற ராபர்டோ இடிந்து போய் அமர்ந்துவிட்டார் சில வினாடிகள் கழித்து எழுந்து வந்து

"ஸ்டெல்லா ரத்னா எங்கு இருக்கிறான் சொல்லு."

"நான் சொல்ல மாட்டேன். அந்த ரத்னாவால் மட்டும்தான் எனக்கு என்னுடைய அஜீத் கிடைக்காமல் போயிட்டான்." என வெறி பிடித்தவள் போல் கத்திய ஸ்டெல்லா, அஜீத்தின் முன் வந்து நின்றது

"நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு உனக்கு தெரியுமா. எனக்கு புடிச்ச எல்லாமே உன்னால மட்டும்தான் எனக்கு தர முடியும், நீ என்னுடைய வாழ்க்கையில் இருந்தா மட்டும் தான் நான் சந்தோஷமா இருப்பேன்.

உன்னால மட்டும் தான் எனக்கு என்னுடைய அப்பா திரும்ப கிடைத்தார், அப்படி இருக்கும்பொழுது உன்னை எப்படி என்னால அந்த ரத்னாவுக்கு விட்டுக் கொடுக்க முடியும், முடியாது.

என்னால அந்த ரத்னாவுக்கு உன்னை விட்டுக்கொடுக்க முடியாது, உயிரோடு இருந்தா மட்டும் தானே அவ உன்னை தேடி வருவ அவன் அதான் நான் இப்போ முடிவு பண்ணிட்டேன் அந்த ரத்னா உன்கூட மட்டும் இல்ல உயிரோடவே இருக்க கூடாதுன்னு.

நீ எனக்கு வேணும், எனக்கு மட்டும் தான் வேணும். எனக்கு கிடைக்காத நீ வேற யாரு கூடவும் யாருக்கும் கிடைக்கக்கூடாது. உன் நிழலை ஒருத்தர் தொட வேண்டும் என நெனச்சா கூட அவங்களை நான் உயிரோட இருக்க விடமாட்டேன்." என

கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரி போல் ஸ்டெல்லா பேசிக்கொண்டிருக்க, ராபர்ட் அஜீத் பிரபு மூவரும் எவ்வளவு பேசியும் ஸ்டெல்லாவிடமிருந்து ரத்னா இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை.

"நீங்க மூணு பேரும் எவ்வளவு கேட்டாலும் நான் சொல்ல போறது இல்ல இந்நேரம் ரத்னா உயிர் அவள விட்டு ரொம்ப தூரம் போயிருக்கும்." எனக்கூறிவிட்டு பயங்கர சிரிக்க தன் ஆத்திரத்தை அதுவரை கட்டுப்படுத்திய ராபர்ட் தன் மகளை பிடித்து உலுக்கி

"நீ எல்லாம் என் பாெண்ணுன்னு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு. உன்னால எப்படி எல்லாம் மாறி ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ண முடியுது.

நான் உன்கிட்ட மனசுவிட்டு பேசுவதற்கும் உன் கூடவே அதிக நேரம் இருக்கிறது காரணம் ரத்னா மட்டும்தான். ரத்னா வந்து என்கிட்ட உனக்காக பேசினா.

நீ எந்த அளவு எனக்காக என்னுடைய அன்புக்காக ஏங்கி இருக்கிறேன்னு சொன்னா. உனக்கு என்னுடைய அன்பு மட்டும் தேவை என்னுடைய பணம் உனக்குத் தேவையில்லை என்று புரியவைத்தா.

அவ உன் நட்புக்கு உண்மையா இருந்தா, உனக்கு உன்னுடைய அப்பாவை திரும்ப கிடைக்க வச்சா. ஆனா நீ பதிலுக்கு அவளுக்கு என்ன செய்து இருக்க, அவளுடைய வாழ்க்கையை அவகிட்ட இருந்து பறிக்க பார்க்கிறேன். எனக்கூறிவிட்டு தன் மகளை பிடித்திருந்த கையை உதறிவிட்டு அஜீத் புறம் திரும்பி

"நீ கவலைப்படாத அஜீத் இன்னும் கொஞ்ச நேரத்துல ரத்னா எங்கிருந்தாலும் கண்டுபிடித்து உன்னுடைய முன்னால நிப்பாட்டுறேன்." என கூற , ஆவேசமாக அவர் முன் வந்த ஸ்டெல்லா

"அப்பா உங்களுக்கு நான் வேணும்னு நினைச்சா அந்த ரத்னாவுக்கு நீங்க உதவி பண்ண கூடாது. ஒருவேளை ரத்னாவுக்கு உதவி பண்ணா என்ன நீங்க பாக்குறது இதுதான் கடைசி தடவையாக இருக்கும்." என எச்சரிக்கை

"இந்த மாதிரி பொண்ணு பெத்ததுக்கு நான் வருத்தப்படுகிறேன் ஒருவேளை இதுதான் உன்னை பாக்குறதுக்கு கடைசி தடவையா இருந்துச்சுன்னா அதுக்கு நான் நிச்சயமாக வருத்தப்பட போறது இல்ல."
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
ஹர்ஷானு நினைத்தால் அது ரூபா என்றதும் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்.ரத்னா மேல் உள்ள பொறாமை காரணமா?இல்லை சொத்து தனக்கு மட்டுமே வேண்டும் என்ற எண்ணம்??ஸ்டெல்லா பற்றி லைட்டா டவுட் இருந்தது.
One side லவ் இருக்குமோ என்று..அது கரெக்ட்டா போச்சு.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
செசிலி வியாகப்பன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி ரூபாவா?
நான் ஹர்ஷத்-ன்னு நினைச்சேன்
போன அப்டேட்லதான் ஸ்டெல்லா மீது
டவுட் வந்தது
அஜீத்தை இவள் லவ் பண்ணியிருப்பாளோன்னு
அதே மாதிரியே ஸ்டெல்லாவும் இருந்திருக்காள்
ராபர்ட் நல்லவர்
நான்தான் அவரைத் தப்பா நினைச்சுட்டேன்
ரத்னாவைப் பற்றி கவலையில்லை
அரூபமாய் இருக்கும் ஜஸ்வந்த் எப்படியும் அவளைக் காப்பாற்றுவான்னு தெரியும்
 
Last edited:

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹர்ஷானு நினைத்தால் அது ரூபா என்றதும் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்.ரத்னா மேல் உள்ள பொறாமை காரணமா?இல்லை சொத்து தனக்கு மட்டுமே வேண்டும் என்ற எண்ணம்??ஸ்டெல்லா பற்றி லைட்டா டவுட் இருந்தது.
One side லவ் இருக்குமோ என்று..அது கரெக்ட்டா போச்சு.
Mmm enna panna ellam vidhi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top