உன் நிழல் நான் தாெட ep 20

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தொட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 20

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ

திடங்கொண்டு போராடு பாப்பா.

அதிகாலையில் வழக்கம்போல தூக்கம் கலைந்து எழ முயற்சி செய்த ரத்னா, தான் இருக்கும் நிலை கண்டு முதலில் திகைப்படைந்தவள், இரவு நடந்த எல்லாம் ஞாபகம் வர சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

தன் அருகில் சீரான மூச்சுடன் தலையணையில் முகம் புதைத்து தூங்கிக்கொண்டிருந்த அஜீத்தின் முகத்தை பார்த்த ரத்னா மனதுக்குள்

'நல்லவன் மாதிரி இருந்துகிட்டு பண்ற எல்லாம் அயோக்கியத்தனம்; இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்கே, மாயக்காரன் டா நீ.'

மலர்ந்த புன்னகையுடன் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்து வந்த பின்னும் அஜீத் உறங்கிக் கொண்டிருக்க, ரத்னா அவனருகில் சென்று தன் முடியில் இருந்து வழியும் நீரை முகத்தில் தெளித்தாள்.

தன் முகத்தில் தெளிக்கப்பட்ட நீரின் ஈரத்தை உணர்ந்து பதறி எழுந்து அமர்ந்த அஜீத் தன் கண்முன் அழகு பதுமையாக வெட்கப்பட்டு நிற்கும் மனைவியை நம்ப முடியாது பார்த்தான்.

நான்கு வருட கனவு இது....

என்றாவது ஒருநாள் தான் நினைத்தது நடக்கும் என்று நினைத்த அஜீத்திற்கு, இன்று தன் காதல் வாழ்க்கை தொடங்கியதை நினைத்து அவன் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தான்.

"குட் மார்னிங் மை டியர் அத்தான்" என்று ரத்னா கூற இன்னும் நம்ப முடியாதவனாய் அவளை விட்டு பார்வையை நீக்காமல், ஏன் இமைகளையும் அசைக்காமல் பார்த்திருந்தான்.

"ரத்னா..."

அஜீத்தின் குரல் தாபத்தோடு ஒலிக்க, கட்டிலிலிருந்து சில பல அடிகள் தள்ளி நின்று கொண்ட ரத்னா

"என்ன அத்தான்."

அவளின் எச்சரிக்கை செயலில் கண்டுகொண்ட அஜீத் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எழுந்தான். சிறுபிள்ளைத்தனமான அவனது செயலில் ரத்னாவின் இதழ்களில் தானாகவே புன்னகை அரும்பியது.

புன்னகை முகமாக நின்ற ரத்னாவை நோக்கி தன் கைகளை நீட்ட, அவன் அருகில் வந்தவள் அவன் கையை தட்டி விட்டுவிட்டு அவனது கன்னத்தில் தனது இதழ்களை அழுத்தமாக பதித்துவிட்டு அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள்.

ஏற்கனவே ஆச்சரியத்தில் இருந்தாலும் அவளது செயலில் ஏற்பட்ட இனிமையான அதிர்ச்சியையும் நினைத்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

"பரவாயில்ல அஜீத் காதலை சொல்லி ஒரு நாள் முடிக்கிறதுக்குள்ள இவ்வளவு பெரிய மாற்றம் உன் வாழ்க்கையில."

கீழே வந்த ரத்னா ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, விரைவாக சமையலறையில் நுழைந்து கொண்டாள்.

புள்ளி மானாய் துள்ளி வந்த மருமகளை கண்ட மைதிலி தனக்குள் புன்னகைத்தார்.

"ரத்னா இப்போ உடம்பு பரவா இல்லையா மா"

"ம்ம் இப்பாே ஓகே அத்தை."

"எதுக்காக சீக்கிரமே கீழே வந்த, காபி சாப்பிட்டுட்டு இன்னும் கொஞ்ச நேரம் நல்லா ரெஸ்ட் எடு."

"இல்லை பரவாயில்லை அத்தை நான் இங்கேயே இருக்கேன்."

"ரத்னா சொன்னா கேட்கணும், பத்து மணிக்கு மேல ஷாப்பிங் போறது, நாளைக்கு ரிசப்ஷன் அப்படின்னு ரெண்டு நாள் ஃபுல்லா பிஸியா இருந்த நீ டயர்டா ஆகிடுவ. அதனால இப்போ போய் நல்லா ரெஸ்ட் எடு, கண்ணு எல்லாம் சிவந்து போயிருக்கு, ராத்திரி சரியாக தூங்கவே இல்ல போல. போ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு." என

மைதிலி மருமகளை மீண்டும் மேலே அனுப்பி வைக்க, ஹாலில் அமர்ந்திருந்த ரத்னாவின் பாட்டி ரத்னா மேலே சென்றதும்

"இப்ப என்னத்துக்கு அவளை மேலே போகச் சொன்ன மைதிலி, பொட்ட புள்ளைக்கு விடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டு வேலையப் பாக்காம அப்படி என்ன தூக்கம் வேண்டியது இருக்கு."

"பெரியம்மா என்னதான் அஜீத் கூட ரத்னா டெல்லியில் ஒரே வீட்டில் இருந்தாலும், இவன் படிப்பு படிப்புதான் சுத்திக்கிட்டு இருந்திருப்பான். இப்போ அடுத்த வாரம் முசாேரி போயிட்ட திரும்பிவர ஒண்ணே முக்கா வருஷம் ஆகிடும்.

அதனால அவன் ஊருக்கு போகுற வரை அவங்க ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசட்டும்."

எங்கே தனது பேத்தியின் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் பாேல இந்த வீட்டில் மாறிவிடுமோ என்று அதுவரை பயந்து கொண்டிருந்த ரத்னாவின் பாட்டிக்கு, தன் மனதில் இருந்த அனைத்து சஞ்சலங்களும் மைதிலியின் பேச்சை கேட்டவுடன் மாயமாய் மறைந்து விட்டது.

"என்னமோ போ மைதிலி நீ சொல்ற அதனாலதான் அவளை நான் சும்மா விடுறேன்." என்றவர் மனதுக்குள்

'காலாகாலத்துல என் பேத்திக்கு ஒரு புள்ள பொறந்துட்டா அது போதும் எனக்கு.' என்று நினைத்துக் கொண்டார்.

குளித்து முடித்து வெளியில் வரும்பொழுது ரத்னா தன் அறையில் இருப்பதை பார்த்து

"என்ன ரத்னா கொடுத்த வாங்கிட்டு போகலாம்னு வந்தியா. நல்ல வேளை நீயே வந்துட்ட. எனக்கு கடனாளியாக இருக்கிறது பிடிக்கவே பிடிக்காது. அதனால சீக்கிரம் என்கிட்ட வந்த, நான் உன்கிட்ட இருந்து வாங்கினத வட்டியோடு திருப்பி கொடுத்துவிடுவேன்."

தன்னை ஆழ்ந்து பார்த்தபடி அருகில் வந்தவனின் பார்வையில் ரத்னா மொத்தமாக தடுமாறி போனாள். அவனின் பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் முகம் சிவந்து வேறு புறம் திரும்பிக் கொள்ள, மனம் மட்டும் குறுகுறுத்து கொண்டிருந்தது.

திரும்பி அவனை பார் என்று சொன்ன மனதை கட்டுப்படுத்திக்கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள். ரத்னாவின் இந்த செயல்கள் எல்லாம் அஜீத்திற்கு தன் காதலிற்கான பிரதிபலிப்பு என்பதை நினைக்கையில் கர்வத்துடம் புன்னகைக்க, அவள் அதை அறிந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அடுத்த நாெடி என்னவென்று யூகிக்கும் முன் ரத்னா அஜீத்தின் கரங்களில் சிறை பட்டிருந்தாள். அஜீத்தின் உதடுகள் ரத்னாவின் காதுமடல்களில் காேலமிட்டபடி,

"ஐ லவ் யூ ரத்னா."

ரத்னாவிடம் உரிமையை நிலை நாட்டும் அஜீத்தின் ஒவ்வாெரு செயலையும் தாங்கி நிற்க முடியாமல் அவன் மார்பில் புதைந்து காெண்டிருந்தவளை, அஜீத்தின் கரங்கள் இருக்கமாக விலங்கிட்டது.

முன் தினம் வரை அவர்கள் இருவர் மனதில் காதல் இருந்தாலும் சாெல்லிக்காெள்ளவில்லை. ரகசிய பார்வை பறிமாற்றம், மனதில் பட்டம்பூச்சி பறப்பதுபாேன்ற செயல்கள் இருந்தது இல்லை ஆனால் இன்று அனைத்தும் மாறிவிட்டது.

தன்னுள் புதைந்திருந்தவளை பிரித்தெடுத்து அவளின் முகத்தை நிமிர்த்தி பார்க்க முயற்சி செய்ய, அவளாே பார்வையை தரையை விட்டு அகற்றவில்லை.

"இவ்வளவு கஷ்டபட்டு உன்ன வெக்கபட வைச்சதுக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் காெடு நான் கீழ கிளம்புறேன்."

ஏனாே அதுவரை ரத்னாவின் மனதிலிருந்த மாய வலை 'ஒரே ஒரு முத்தம் மட்டும் காெடு நான் கிளம்புறேன்." என்ற அஜீத்தின் வார்த்தையில் அறுந்து விழ, செயலற்று நின்றுவிட்டாள். அவள் நிலையை உணராத அஜீத்,


"உன்ன வீட்டுல எல்லாரும் பாப்பானு கூப்பிட்டது தப்பா பாேச்சு, ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி நடுங்குற. என்ன நிமிந்தாவது பாரு நான் கீழ கிளம்பனும்." என கூற, ரத்னாவின் நினைவுகளாே

"உன்ன பேபினு கூப்பிட்டது தப்பா பாேச்சு, ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி நின்னுடே இருந்தா எப்படி. என்ன நிமிந்தாவது பாரு நான் கிளம்பனும்." என்ற ஜஸ்வந்த் நாேக்கி பயணித்தது.

"ரத்னா இவ்வளவு நேரம் உன் கண்ணுல எனக்காக வந்த இந்த ஒரு மயக்கம் இப்பாே பாேதும். பட் இன்னைக்கு நைட் இது பாேதாது. இப்பாே நல்ல தூங்கி ரெஸ்ட் எடு, நைட் கண்டிபா நீ தூங்க முடியாது." என அஜித் கூட கூற ரத்னாவின் மனதில்

"ரதி பேபி இப்பாே உன் கண்ணுல எனக்காக வந்திருக்கிற இந்த ஒரு மயக்கம் இப்பாே பாேதும் பட் நாளைக்கு இது பாேதாது. நல்ல தூங்கு நாளைக்கு தூங்க முடியாது பாே." என ஜஸ்வந்த் கோயில் கூறிய வார்த்தைகளை எதிரொலித்தது.

தந்தை அழைக்கும் குரல் கேட்டு அஜீத் கீழே சென்றதைக் கூட உணராமல், கண்களை மூடி தரையில் அமர்ந்த ரத்னாவின் கண்களில் நீர் வழிந்து வந்தது, இதயம் வெடிப்பது போல் வலித்தது.

தன் கையில் எடுத்த கடமையை முடிக்காமல் அஜீத்துடன் தன் வாழ்க்கையை தொடங்கியது தற்போது குற்றவுணர்வை ரத்னாவுக்கு கொடுத்தது.

இதுவரை ரோஜா இதழாக வருடிய நினைவுகள் அனைத்தும் கடமை நினைவு வந்ததும் முள்ளின் மீது நிற்பது போலவே ரத்னா உணர்ந்தாள். நினைவு வந்தவுடன் அஜித்தின் காதல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

'எப்படி நான் மறந்தேன். தன்னால் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்க அவனுக்கு நியாயம் பெற்றுத் தராமல் தான் சுயநலமாக நடந்து கொண்டதை நினைத்து ரத்னா வெட்கப்பட்டாள்.

வேகமாக சென்று தன் போனை எடுத்துப் பார்க்க, சைலன்ட் மோடில் போட்டு வைக்கப்பட்டிருந்த ரத்னாவின் போனில் முத்துவிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தது. அதைப்பார்த்ததும் தன்னையே நொந்து கொண்ட ரத்னா முத்துவை அழைக்க

"ரத்னா உனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே. நேத்து நான் உனக்கு எத்தன தடவ கால் பண்ணினேன், ஆனா நீ எடுக்கவே இல்ல."

"இல்லை ஏதும் பிரச்சனை இல்லை, சாரி முத்து மச்சான் என்னால் அங்கு வர முடியல நம்முடைய திட்டம் எல்லாமே என்னால சொதப்பிட்டு."

"அப்படி எல்லாம் இல்ல ரத்னா மா, நீ வரல என்றதும் பயத்தில் தான் நான் மொத போன் பண்ணுனேன். காலையில் ஐந்தரை மணி பிளைட்ல ஜஸ்வந்த் ஃபேமிலி எல்லோரும் கிளம்பி கோயம்புத்தூர் வராங்க.

இந்நேரம் எல்லோரும் கோயம்புத்தூர் ரீச் ஆகி இருப்பாங்க. நான் பஸ்ல கிளம்பி வந்துகிட்டு இருக்கேன் மா. நான் வரும்வரை நீ கொஞ்சம் கவனமாய் இரு." என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட,

ரத்னாவின் மனது வேகமாக செயல்பட ஆரம்பித்தது. பல ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை சமப்படுத்திக் கொள்வதற்கும், அர்ச்சனா ரத்னாவை கீழே அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

ரத்னா கீழே வரும் பொழுது ஜஸ்வந்த் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ரத்னா பொதுவாக அனைவரையும் வரவேற்று விட்டு மைதிலியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

அதுவரையில் ஜஸ்வந்த் வீட்டார் வரவை பிடிக்காமலும், அதை வெளிக்காட்ட முடியாமல் நின்ற மைதிலி ரத்னா தன் அருகில் வந்து நின்று கொண்டது மன நிம்மதியை கொடுத்தது.

அங்கு இருக்கும் சூழ்நிலை ஒரு இறுக்கத்துடன் இருப்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். தேவராஜ் ரத்னாவிடம்

"ரத்னா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக தான் இங்க வந்தேன்."

மனதில் பலவித கலவையான உணர்வுகள் இருந்தாலும், அதை எதையும் முகத்தில் பிரதிபலிக்காமல் ரத்னா,

"அங்கிள் நான் கூட நீங்க என்னுடைய ரிசப்ஷன்ல கலந்துகிட்டு என்ன வாழ்த்துவதற்காக வந்திருக்கிறீங்கனு நினைச்சுட்டேன்."

ரத்னாவின் குரலில் இருந்த பேதத்தை அனைவரும் உணர்ந்து இருந்தாலும் யாரும் எதுவும் பேசவில்லை. தேவராஜ் தொடர்ந்து

"என்னுடைய ஆசீர்வாதத்தை நான் ரிஷப்சன் வந்துதான் உனக்கு தரணும்னு எந்த அவசியமும் இல்ல மா. ஏன்னா அது எப்பவும் உன் கூட தான் இருக்கும். நான் இப்ப வந்தது இதை உன்னிடம் கொடுக்கத்தான்." எனக்கூறிவிட்டு சில பத்திரங்களை ரத்னாவின் கையில் தர,

அனைவரும் அது என்னவென்று பார்த்து இருக்க, அஜீத் ரத்னா அதை ஓரளவு என்ன என்பதை யூகித்து இருந்தாலும் காட்டிக்காெள்ளவில்லை.

ரத்னா அமைதியாக அதை கையில் வாங்கி அதில் எழுதி இருப்பதை படிக்க ஆரம்பித்தாள். ரத்னாவின் அருகிலிருந்த மைதிலியும் அதில் தன் பார்வையை செலுத்த, அதில் இருந்த செய்தியை புரிந்து கொண்டதும் ரத்னாவின் கையிலிருந்த பத்திரங்களை பறித்து விசிறி எறிந்தார்.

மைதிலியின் செயலை யாரும் எதிர்பாராது இருக்க கிருஷ்ண சந்திரன் தன் மனைவியை நோக்கி

"மைதிலி எதுக்காக இப்படி நடந்துக்கிற. அதுல இருக்கிற விஷயம் உனக்கு பிடிக்கலைன்னா அதற்காக இப்படித்தான் தூக்கி எறிவியா." அனைவரும் முன் தன் கணவர் தன்னை கண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மைதிலி

"அதுல என்ன எழுதி இருந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா."

"எதுவா வேணாலும் இருக்கலாம், அதனை பேசி தீர்த்துக்கணும், அத விட்டுட்டு கோபப்படக்கூடாது." இவர்கள் இருவரும் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க கீழே விழுந்த பத்திரங்களை கையிலெடுத்த அஜீத், அதைப் படித்துப் பார்த்துவிட்டு தேவராஜிடம் வந்து

"சாரி சார் இது எதுவும் ரத்னாவிற்கு தேவையில்லை."

"அஜீத் நீயாவது தயவு செஞ்சு கொஞ்சம் புரிஞ்சுக்கோ, இது எல்லாம் ரத்னாவுக்கு சேர வேண்டியது."

"நீங்கதான் புரியாமல் பேசுறீங்க, இது எல்லாம் நீங்களும் உங்க பிள்ளைகளும் சம்பாதித்த சொத்து. அப்படி இருக்க இது எப்படி ரத்னாவுக்கு சேர வேண்டிய தான் இருக்கும்."

"என்னுடைய சொத்து எல்லாமே என்னுடைய இரண்டு பையன்களுக்கு மட்டும்தான். ஹர்ஷத் பங்கு ஏற்கனவே அவருடைய பெயருக்கு மாத்திடேன். இது எல்லாம்...."

மேற்கொண்டு தேவராஜ் பேசும் முன்பு ஓரளவு விஷயத்தை யூகித்த கிருஷ்ண சந்திரன்

"இது எல்லாம் உங்களுடைய இரண்டாவது பையனுடைய சாெத்து, அதுக்கு ரத்னாவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது." எனக்கூறிவிட்டு மாணிக்கவேலிடம் திரும்பி

"சம்மந்தி நான் ரத்னாவை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரும்பொழுது சில விஷயங்களை செய்து முடிச்சிட்டு தான் கூட்டிட்டு வந்தேன். அதாவது சட்டப்படியும், சம்பிரதாய படியும் ரத்னா அஜீத் உடைய மனைவியாகவும், இந்த கிருஷ்ண சந்திரன் மைதிலி மருமகளா மட்டும்தான் இனி இருக்கணும். இதை உங்க அண்ணனுடைய சம்பந்திக்கு புரிய வையுங்க."

தான் ஒன்றை நினைத்து செய்ய அது வேறு விதமாக திரும்புவதை உணர்ந்த தேவராஜ், கிருஷ்ண சந்திரனிடம்

"நீங்க தப்பா நினைச்சுகிட்டு இருக்கிறீங்க, ரத்னா கிட்ட எந்த உரிமையையும் நாங்க எதிர்பார்க்கல, ரத்னாவ நான் என்னுடைய பொண்ணா தான் நெனச்சுக்கிட்டு இருக்கிறேன்.

அப்படி இருக்கும் பொழுது இது அவகிட்ட இருக்கணும்னு நான் ஆசைப்பட்டது எந்த விதத்துல தப்பு."

"தப்புதான் இனி இந்த உலகத்திற்கு முன்னாடி ரத்னா கடந்தகாலம் ஒரு விமர்சனத்திற்கு வருவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

அப்படி இருக்கும் பொழுது இந்த சொத்தை ரத்னா ஏத்துக்கிட்டா, எப்படி எதுக்குன்னு 1008 கேள்வி வரும் அது எங்களுக்கு அவசியமில்லை.

ஒருவேளை நீங்க தருவதை நாங்க எத்துக்கிட்ட, சாெத்துக்காக ரத்னாவ நாங்க சேத்துக்கிட்தா தான் பேசுவாங்க. எங்க கிட்ட இருக்கிற சாெத்தே என் பிள்ளைகளுக்கும் மருமகளுக்கும் பாேதும்."

"அப்பா நான் பேசிகிறேன்" என கூறிவிட்டு,

"அங்கிள் நீங்க ரத்னாவ உங்க பாெண்ணா பாக்கிறதா சாென்னீங்க, அதனால இத ரத்னாவிற்கு தர நினைச்சிருக்கலாம். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு கணவன் மட்டும்தான் மனைவிக்கு எல்லாமுமா இருந்து எல்லாம் செய்யனும்.

என்னால செய்ய முடியும் அப்படிங்கிற பாேது உங்க மூலமா மட்டும் இல்ல, ரத்னா வீட்டுல இருந்தும் எனக்கு எதுவும் தேவையில்லை." அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்காெண்டிருந்த ரத்னா

"அஜீத் அத்தான், மாமா இத நான் நான் பேசினா தான் சரியா இருக்கும்." என கிருஷ்ணன் மற்றும் அஜித்திடம் கூறிவிட்டு தேவராஜிடம்

"அங்கிள்." என அழைக்க தேவராஜ்

"உன்னோட முடிவு என்ன என்கிறது நீ 'அங்கிள்' அப்படின்னு கூப்பிட்டதிலே நான் புரிஞ்சுகிட்டேன் மா. உன்னுடைய வாழ்க்கையில் எங்களுக்கான இடம் என்ன அப்படிங்கிற உன்னுடைய அங்கிள் என்ற ஒரு வார்த்தை புரிய வச்சிடுச்சு நிச்சயமா.

இதில நான் உன்னை தப்பு சொல்ல மாட்டேன். சரிமா நீ சொல்ல வந்ததை சொல்லு."

"எனக்கு உங்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லை. ஆனால் நான் எடுக்கிற முடிவு உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க. இந்த சொத்து எதுவும் எனக்கு தேவையில்லை."

"ரத்னா இந்த சொத்து எல்லாத்தையும் நான் உன்னுடைய பேர்ல எழுதி வைக்கல. ஜஸ்வந்த் கல்யாண நடக்குறதுக்கு முன்னாலே என்னுடைய பசங்க இரண்டுபேருக்கும் சொத்த நான் பிரிச்சு கொடுத்துட்டேன்.

ஏன் எதுக்குன்னு எனக்கு காரணம் தெரியாது ஜஸ்வந்த் சொத்து முழுவதையும் உன்னுடைய பெயரில் எழுதி வச்சிருக்கான். சாே எங்களால ஒன்னும் பண்ண முடியாது.

கண்டிப்பா நீ இந்த சொத்துக்களை எல்லாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நாங்க இத எங்களுடைய முழு விருப்பத்துடன் உன்கிட்ட காெடுக்கிறாேம்."

"ஓகே அங்கிள் நான் இதை ஏத்துகிறேன்." என்று ரத்னா கூறிய பதில் அங்கிருந்த பலருக்கு விருப்பமில்லை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவரும் தெரியப்படுத்த அனைவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட ரத்னா, பின்பு அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு

"எனக்கு நிச்சயமாக பணத்தின் மீது மேல எந்த ஆசையும் இல்லை. ஆனா இந்த சொத்து இப்போ என்னுடைய பெயரில் இருக்கு.விருப்பமில்லாமல் என் பேர்ல இருக்கிற சொத்தை நான் விருப்பப்பட்டு ஒருத்தருக்கு எழுதி வைக்க தயாராக இருக்கிறேன்."

"ரத்னா இது உனக்கான சொத்து."

"இல்ல அங்கிள் எனக்கானது என்னுடைய குடும்பமும், பாசத்த காட்டுற உண்மையான உறவுகள் மட்டும்தான், அது போதும்." "அப்படின்னா இத என்ன என்ன செய்யப் போற." என பத்திரங்களை காட்ட ரத்னா

"இத நான் ஒருத்தர்க்கு எழுதி வைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்." ரத்னாவின் பேச்சை அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரூபா

"நிச்சயமாய் இது எங்களுக்கு திரும்ப வேண்டாம். எங்க ஜஸ்வந்த் எங்க கூட இல்லாத போ அவனுடைய சொத்து எனக்கு என் குடும்பத்துக்கும் தேவையில்லை."

"கவலைப் படாதீங்க அக்கா, இது யார் பெயரில் இருந்தா எல்லாருக்கும் சந்தாேஷமாே, யாரு பெயரில் இருந்தா ஜஸ்வந்த் ஆன்மா சாந்தியடையுமாே அவங்களுக்குதான் எழுதி வைக்க பாேறேன்."

'ரத்னா சொத்துக்களை வேண்டாம்' என்றதில் இரு குடும்ப உறுப்பினர்கள் அமைதியாகி விட ஆகிவிட்டனர். ஜஸ்வந்த் குடும்ப உறுப்பினர்களை தவிர. இருந்தும் ரத்னா யார் பெயரில் சொத்துக்களை எழுத போகின்றாள் என்பது ஒரு கேள்வியாக மனதில் இருந்தாலும் எவரும் அதை கேட்க நினைக்கவில்லை.

கோவை நகரின் மையத்தில் பிரதான இடத்தில் இருந்த அந்த திருமண மண்டபம் நகரின் முக்கிய பிரமுகர்களினளும், நண்பர்கள் கூட்டத்தினளும் நிரம்பி வழிந்தது.

மேடையின் மீது ரிசப்ஷனிற்க்காக ரத்னா தேர்வு செய்த பிளாக் கலர் கோட் சூட்டில் கம்பீரமாக நின்ற அஜீத் அருகில், அஜீத் தேர்வு செய்த இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவையில் தேவதையாக ரத்னா நின்றுகொண்டிருந்தாள்.

பெரும்பாலும் அங்கு வந்த கூட்டத்தினர் அனைவரும் ரத்னாவின் கடந்தகாலம் அறியாத கிருஷ்ண சந்திரன் தொழில் தொடர்புடைய நபர்களும், அஜீத் ரத்னாவின் நலனை மட்டும் விரும்பும் நண்பர்களாகவே இருந்தனர்.

ரத்னாவின் கடந்தகாலம் பற்றி எந்த ஓரு விமர்சனமும் இன்றி வரவேற்பு நிகழ்வு ஆட்டம் பாட்டம் மகிழ்ச்சி என நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

ஓரளவு கூட்டம் குறையத் தொடங்கியதும் நண்பர்கள் அனைவரும் ரத்னாவையும் அஜீத்தையும் சூழ்ந்து நின்று கேலி செய்து கொண்டிருக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த இருவருக்கு மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

'சிரி ரத்னா சிரி, இதுதான் உன் கடைசி சிரிப்பா இருக்க பாேகுது. எனக்கு கிடைக்க வேண்டியத தட்டிப்பறித்த நீ இனி சந்தோசமா இருக்கவே கூடாது.

'நாளைக்கு இதே நேரம் மணப்பெண்ணாக இருக்கிற நீ பிணமாய் இருப்ப. உன்ன சுத்தி சிரிச்சுகிட்டு இருக்கிறவங்க எல்லாம் நாளைககு கதறி அழ பாேறாங்க.' என ஒருவர் நினைக்க, மற்றாெ ருவர்,

'ரத்னா நீ இப்படி பண்ணி இருக்க கூடாது, உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு என்னுடைய வழியிலிருந்து விலக்கினால், நீ திரும்பவும் என்னுடைய வாழ்க்கையிலே கெடுக்க வந்துட்ட.

எனக்கு தேவையானது உன்ன அழித்தால் தான் கிடைக்கும்னா அதையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.' என நினைத்துக் கொண்டு இருந்தது.

ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்ததும் மீதமிருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் தொழில் துறை சார்ந்தவர்களையும் அஜீத் மற்றும் ரத்னாவின் குடும்பத்தார் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்க, கிருஷ்ண சந்திரன் மைதிலி பணம் செலுத்த வேண்டியவர்களுக்கு செலுத்திவிட்டு மண்டபத்தை காலி செய்வதற்கான மற்ற ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

எல்லா வேலைகளும் முடிந்தது வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்கும் பொழுது ரத்னாவை தேட, ரத்னா அங்கு இல்லை.

அதுவரை மகிழ்ச்சியான மனநிலையில் இருந்த அனைவரையும் ஒருவித பயம் ஆட்கொண்டது. அனைவரும் மண்டபத்தின் ஒவ்வொரு மூலையிலும் ரத்னாவை தேட, அவளாே மயக்கமான நிலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

உன் நிழலை நான் தொடர்வேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
செசிலி வியாகப்பன் டியர்
 
Last edited:

PUTHUMAIRAJ

New Member
:D:D:D.....அருமையான நாவல் மறுபடி.... மறுபடியும்.... ரத்னாவிற்கு வரும் சோதனையே உன் நிழல் நான் தொடர்வேன்.....:unsure::unsure::unsure:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
:D:D:D.....அருமையான நாவல் மறுபடி.... மறுபடியும்.... ரத்னாவிற்கு வரும் சோதனையே உன் நிழல் நான் தொடர்வேன்.....:unsure::unsure::unsure:
கருத்திற்கு நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே குழப்புறீங்களே, செசிலி டியர்
ஜஸ்வந்த்தை கொலை செய்த கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிக்கறது ரொம்பவே குஷ்டமா நோ நோ கஷ்டமா இருக்கும் போலிருக்கே
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
ரிசப்ஷனில் ரத்னாவை ரொம்பவும் அன்பாஆஆஆஆக பார்த்த இரண்டு பேர் யாரு?
அவங்களுடைய ஆளுதான் ரத்னாவைக் கடத்தி காரில் கொண்டு போறதா?
ஒருவேளை அந்த இருவரில் ஒருவர் ஸ்டெல்லாவா?
ஸ்டெல்லா அஜீத்தை விரும்பினாளோ?
அடுத்து ஜஸ்வந்துக்கு முறைப்பெண் யாராவது இருக்காங்களோ?
அந்த பெண்ணின் அப்பா ரிசப்ஷனில் இருந்தாரோ?
ரத்னாவின் பாட்டி சூப்பர்ப் பாட்டி
நல்லாவே மாத்தி யோசிச்சு பேசுறாங்கோ
ஜஸ்வந்த்தின் சொத்தை யார் பெயருக்கு ரத்னா எழுதி தரப் போறாள்?
அதுக்கு அவளை எதிரிகள் உயிருடன் விடுவார்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top