அனலும் மழையும் 7

Advertisement

Lakshmi N

Writers Team
Tamil Novel Writer
HAI MAKKALE VANTHUTEN 7 EPI YODA......THANKS FOR ALL YOUR LIKES AND COMMENTS....THANKS FOR SILENT READERS......THANK YOU SO MUCH ONCE AGAIN.....ENJOY WITH TODAY EPISODE. THANK YOU....:):):)



அத்தியாயம் 7:



என்னாச்சு ஏன் இரண்டு பேரும் எதுவும் பேசாம இப்படி பாக்குரிங்க…( அப்பா பல்பு எரியுது பா)



அவன், “ அதுவா முததடவை நீ வர இல்ல அதான் பூரணிய ஆரத்தி எடுக்க சொல்லாமா வேண்டாமானு யோசிக்கிறேன்.”( பார்ட நக்கல எங்க ஆள பத்தி தெரியல மாமு)



ஆமா நீங்க ஏன் இத பூரணிக்கிட்ட சொல்லனும் , உங்க வேலை தான் முடிஞ்சுடுச்சே…..



இப்பவாது கேக்கனும்னு தோனுச்சே…சந்தோஷம்………அதுவா “நாந்தான் இந்த வீட்டோட ஓனர். அதாவது இதோ இந்த பூரணி இருக்காள அவளோட ஒரே அண்ணண்”. என்றான் ( ஹா ஹா எல்லாரும் ஹீரோனுதானே நினச்சிங்க அவ்ளோ சீக்கிரம் காமிப்பேனா…..)



அவள் எண்ணபோக்கை புரிந்து கொண்டு, “ இங்க நீயும் பூரணியும் தான் இருக்க போரிங்க, நான் என் பிரண்ட்ஸோட தங்கிப்பேன்.”



டேய் கிரிஷ் அவள உள்ள விடு மொதல்ல ….என்றால் பூரணி.( பாவம் புள்ள….)

சுபாவிற்கு , எப்படியோ நம்மள விட்டா போதும் என்றெண்ணினாள்


சரி நான் கிளம்புரேன் எனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு, பூரணி நீங்க ரெண்டு பேரும் வாங்க இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க. என்று கூறி கிளம்பினான்.( படிக்கிற பையனா:oops::oops:)


சுபாவிற்கு பூரணியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. அதற்கு முன் தன்னுடைய உடைமைகளை தனக்கென்று ஒதுக்கிய அறையில் வைத்துவிட்டு முன் சோபாவில் பூரணிக்காக காத்திருந்தால்.


தன் அண்ணணை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவள் சுபாவின் இருக்கைக்கு எதிர் புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தால்.


சற்று நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர்கள், குடும்பத்தைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள், சுபா அவளை பற்றி கூறிய உடன், பூரணி


“ என் குடும்பம் கொஞ்சம் பெரியது…..அதாவது கூட்டுக்குடும்பம். எங்க வீட்ல நாந்தான் எல்லாருக்கும் செல்லம், காலைல வந்தது என் அண்ணா. என் பெரியப்பா பையன். எங்க பெரியப்பாவுக்கு அண்ணா மட்டும் தான் ….அதே மாதிரி எங்க அப்பாவுக்கு நான் மட்டும் தான். எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு அப்பா..ரெண்டு அம்மா. உங்க சார் எங்களுக்கு சொந்தம் அவ்ளோ தான். உன்ன பத்தி சித்தப்பா ரொம்ப சொல்லித்தான் வீட்ல பெர்மிசன் வாங்கினார். எனக்கும் ஓகேனு தோனுச்சா அதான்….” என்றால்.( அப்பா இதுக்காக் எவ்ளோ நேரம் வெயிட் பன்றது மா..... அவங்க அப்பா அம்மா டீடெல்ஸ் பின்னாடி வரும் சோ பிளீஸ் திட்டாதிங்க பா…)



ஒஒஒ என்று மட்டும் சொன்னால் சுபா….( அவ தான் பேசவிடலையே)



அது மட்டும் இல்ல என் அண்ணாக்கு ரெண்டு பிரண்ட்ஸ் சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருப்பாங்க. எங்க அண்ணாவும் அவர் ப்ரண்டு ஒருத்தரும் அங்க யுனிவர்சிட்டியில் பார்ட் டைம்மா கிளாஸ் எடுக்றாங்க. அவங்க நமக்கு கிளாஸ் எடுக்கவும் சான்ஸ் இருக்கு….என்று கேட்ட தகவல் கேக்காத தகவல் என அனைத்தையும் சுபா பேசுவதற்கு இடம் அளிக்காமல். பேசிக்கொண்டேயிருந்தாள். ( வாத்தியாரா :rolleyes::rolleyes:)



விட்டால் பேசிக்கொண்டே இருப்பாள் என பயம் கொண்ட சுபா” பூரணி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டிரஸ் எல்லாம் அடுக்குரேன் …இன்னைக்கு மட்டும் நீ தனியா சாப்பிடு என்னைய எழுப்ப வேணாம்.” என்று கூறி தாயிடம் பேசியவாரே அறைக்கு சென்றாள். (பேச்சில நம்மள மிஞ்சிருவா போலயே….)



அவளையே பார்த்துக்கொண்டிருந்த பூரணி தொளை குலுக்கியவாரே தன்னுடைய கைபேசியில் மூழ்கிவிட்டால்.



சுபாவிற்கு தெரியாத ஒன்று அந்தஸ்தில் ஒரே அளவு கோலில் இருந்ததால் மட்டுமே இப்பொழுது இங்கு இருக்கிறாள். அதே நேரம் பூரணியை பற்றியும் தான் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது என்றும் கடைசிவரை அறியபோவதில்லை. இதில் ஏற்படும் இழப்புகள் அதிகம் அவளுக்கு மட்டுமே.



இரண்டு அறை கொண்ட அந்த பிளாடில் ஒரு ஆங்கில பாடல் காதை கிழிக்கும் அளவுக்கு ஒடிக்கொண்டிருக்க( கத்திக்கொண்டிருக்க) “ ஊர்ல எல்லாம்.... சாமி பாட்டு இல்லைனா சுப்ரபாதம் போட்டுத்தான் எழுப்பிவிடுவாங்க…ஆனா இவன் மட்டும் தான் இத கத்தவிட்டு எழுப்புரான். இவனும் கமிட் ஆக மாட்டான் அடுத்தவனையும் கனவு கான விட மாட்டான்.” என்று திட்டிக்கொண்டே தினமும் இது தான் வழக்கம் போல் எழுந்து குளிக்க சென்றான்.( யாருனு தெரியுதா….கவனிங்க பா தம்பி வாய்ல இருந்து கமிட் ஆகலைனு வரலையே சோ அப்பவே அப்படி.......)


குளிக்கச் சென்றவன் வேலைக்குசெல்ல தயாராகி வெளியில் வந்து டைனிங் டேபிலில் இருந்த காலை உணவை உண்டவன் “ டேய் ராம் உனக்கு இந்த காஞ்சி போன பிரட்டும் பாலும் தான்டா….உன் தலயெழுத்த யாராலும் மாத்த முடியாது….ஒரு சின்ன பையன கனவு கான விட மாற்றான்…..வாய்க்கு ருசியா சமைச்சி போட மாற்றான் …..என்ன கொடும சரவணா இது……”



“ஏன் டா சத்தம் போடுர” என்றபடி வந்தவன் ( இது யாருனு தெரியுதா….) நம்ம அர்ஜூன்.



“யாரு நான் சத்தம் போடுரேன் …….ஏன் டா இந்த ஊருக்கே கேக்குர மாதிரி நீ பாட்டு போட்டு சத்தம் வைப்ப ஆனா நான் பேசினா மட்டும் சத்தமா….எந்த ஊரு நியாயம் டா”



பேசாம சாப்பிடுரியா இல்ல எல்லாத்தையும் எடுத்து வைக்கவா” என்றவுடன்

ஆத்தி வச்சாலும் வச்சுருவான்…..என மனதில் எண்ணியவன் “ எங்க அம்மா சாப்பிடும் போது பேசகூடாதுனு சொல்லிருக்காங்க” என எதுவுமே நடக்காதது போல் கூறிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றான்.



ஏன் டா, இந்த கிருஷ்ணனுக்கு எந்த ரூம் கொடுக்கரது,” ராம்



இருக்குரது ரெண்டு ரூம் அதனால சாய்ந்தரம் வந்து உன்னோட திங்ஸ எடுத்து என் ரூம்ல வச்சுரு. அவனுக்கு உன் ரூம கொடுத்துருவோம்.



நன்றிடா நண்பா எங்க அவன் கூட என்ன ஷேர் பண்ண சொல்லிடுவியோனு நினச்சேன்…….ஆன எனக்கொரு டவுட் டா எப்படி டா அவன் இன்னொருத்தங்களுக்கு உதவி பண்ண போனான். அது தான் ஆச்சிரியம் என்னால இன்னும் நம்ப முடியல.


“டேய் அவன் தங்கச்சிக்காக போயிருப்பான்……,” அர்ஜூன்

“என்னவோ அவன என்னால நம்மோட சேத்துக்கவும் முடியல நம்பவும் முடுயல... அவன் காரியவாதி டா…நீ தான் அப்போ இருந்தே அவன கூட வச்சுருக்க..அவனால நமக்கு ஏதும் சேதாரம் இல்லாம இருந்தா சரி ” ராம்

“ நீ ரொம்ப யோசிக்குர டா…..அவன் விஷயத்துல நம்ம தலயிடல அதே மாதிரி நம்ம விஷயத்திலயும் அவனும் தலயிடமாட்டாண், சோ டென்சன் ஆகாம கிளம்பு நான் இன்னைக்கு லீவு நாளைக்கு யுனிவர்ஸிட்டிக்கு போகனும் சோ பிரிப்பேர் பண்ண போரேன்.”


சரி மச்சான் சாய்ந்தரம் பாக்கலாம்” என்று கிளம்பினான்.


ஆனால் இருவரும் அறியவில்லை சேதாரம் மிகப் பெரியது என்றும்…. அறியும் போது எல்லாம் அவர்கள் கையை விட்டு போய்ருக்கும் என்றும்….அதை சரி செய்ய நான்கு நீண்ட நெடிய வருடம் ஆகும் என்றும்…..



மழை பெய்யும்…………
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, சுபாவின் பணம், அந்தஸ்து
பார்த்துத்தான் பூரணி பேமிலி
சுபாவை தங்களுடன் சேர்த்துக்
கொண்டார்களா?
அடப்பாவிகளா?
அப்போ பூரணியின் அண்ணன்
கிரிஷ் ஹீரோ இல்லையா?
அட ராமா?
சரி, ராம் and அர்ஜுன் இருவரில்
யாரு ஹீரோ?
இருவரில் யாரை சுபா லவ்
பண்ணுவாள்?
இல்லை, மேரேஜ் பண்ணுவாளா?
இதிலே பூரணி வில்லியாவாளா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா........
காலேஜுக்கு டைம் ஆச்சு-ன்னு
கிரிஷ் சொன்னதும் படிக்கிற
புள்ளை-ன்னு நம்ம சுபா
நினைச்சுட்டாளே?
இந்த சுபாப் புள்ளைக்குத்தான்
எம்புட்டு அறிவு?
அதான் சிகாகோவுக்கு
சிக்கி சின்னாபின்னமாக
வந்திருக்கோ, லட்சுமி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top