அனலும் மழையும் 4

Advertisement

Lakshmi N

Writers Team
Tamil Novel Writer
hi everybody here is epi 4......thanks for your likes and comments...the comments will be a energy for writers i really feel that...
images (2).jpg Ram

images (4).jpg januimages.jpg arjun download.jpg subha.....ok va friends...







அத்தியாயம் 4:



காலையில் இருந்தே ஒருவித பரபரப்புடனும் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் இருந்தார் பார்வதி. ஜானுவின் அறைக்கு சென்ற பார்வதி,



ஜானு , ஜானு,,,,,ஜானுமா எழுந்திரி மா ......ஜானு....

ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன மா



டைம் ஆச்சுமா அண்ணண நீ தான் கூப்பிட பொவனு சொன்ன தானே

என்னது டை ஆச்சா......டைம் என்ன மா,,,,,,



மணி 5 மா... எழுந்து குளிக்க போ........என்னடி சொல்லிக்கிட்டே இருக்கேன் என்ன மொறைகுற......



மா உன் அன்பு தொல்லைக்கு அளவே இல்லையா? அண்ணண் வரப்போர டைம் 12 அதுக்கு அப்பறம் பார்மாலிட்டீஸ்முடிய 1 மணி நேரம் ஆகும் அதுக்கு ஏன் மாஆஆஆஆஆஆஆஆஅ இப்ப வந்து எழுப்புர......நானே வரேன் நீ வந்த .......................அப்புறம் பாத்துக்கோ.....என்று மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள்.

வெள்ளிக்கிழமை காலை எழுந்ததில் இருந்து இருந்த பரபரப்புடனும்,இனம் புரியாத கலக்கத்துடனும் தனது வேலைக்கு கிளம்பினாள் சுபா.

ஒருவழியாக ஜானுவை கிளப்பி 11 மணிக்கே விமான நிலையத்திற்கு அனுப்பிவைத்தார். செல்லும் வழி முழுவதும் தாயை பற்றி குறைகூறிகொண்டெ வந்தாள். அணைத்திற்கும் புன்னகை மட்டும் பதிலாக வந்தது தந்தையிடமிருந்து.



ஜானகியும் சிவபிரகாசமும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமானமும் வந்து பயணிகளும் வர ஆரம்பித்தனர்.அப்பொழுது,”அப்பா அண்ணா.....”
ஆமா ,ராம் கூட வரான்....அர்ஜுன் சொல்லவே இல்ல.
எப்போதும் போல் இப்போதும் ராமின் கம்பீரத்தில் மயங்கி நின்றாள்.

ராம் பார்பதற்கு .....ஆறடி உயரம்.....அழகிய புருவம்.....ஆப்பிள் போலே இருப்பானே .........அது போல் இருப்பான். கோதுமை நிறம், அளவான உடற்கட்டு. பெர்ஃபெக்டா இருப்பான்.



ராம் பார்வதியின் தம்பி மகன். ராமிற்கு 10 வயதாகும் போது ஒரு கார் விபத்தில் தாய் தந்தை இறந்துவிட அவனின் மொத்த பொறுப்பும் சிவபிரகாசம் தானே முன் வந்து எடுத்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அர்ஜுனை போல் தான் அவனையும் நடத்துவார். தன் மகளுக்கு ராமின் மேல் ஈர்ப்பு இருப்பதை அறிந்து அதையும் நிறைவேற்றினார்.



அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். லேசாக குறும்பு தலை தூக்க கைகளை விரித்துக்கொண்டு அவளை நோக்கி வேகமாக சென்றவன் பின்னால் நின்ற சிவபிரகாசத்தை “மாமா ..... என அணைத்து ஆசிபெற்றான். அதே நேரம் ஜானுவும் விழி விரித்து ஒருவித நாணத்துடன் அவனை தான் பார்த்தாள் அவன் தன் தந்தையிடம் போகவும் தனையே நொந்துகொண்டு திரும்புகயில்.....அவன் பின்னே வந்த அர்ஜூன், தங்கையிடம்

இந்த ராம் ரொம்ப பேட் பாய் இல்ல ஜானு.....என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்து
,”அப்பா....”சினுங்களோடு திரும்பியவள் தந்தையும் ராமும் சிரிப்பதை பார்த்து கோபமாக வெளியே சென்றாள்.
ராம் அவளை சமாதானம் செய்ய கிளம்ப, “உன் வேலையே இது தான் போடா...”கேலி பேசினான் அர்ஜுன்.”நீயும் இதுக்கு தான் மச்சான் வந்துருக்க...”என்று ஜானுவை பின் தொடர்ந்தான். நால்வரும் பேசிக்கொண்டே வீடு வந்தனர். அர்ஜுனை பார்த்ததும் பார்வதி கண்களில் நீர் மல்க வரவேற்றார்.

தாயை கண்டதும் , அவர் கலங்குவது பிடிக்காமல் தாயை கட்டிக்கொண்டான். அவரும் பேச வார்தைகளின்றி அமைதியாய் இருந்தார்.

சிறிது நேரம் இதை பார்த்துகொண்டிருந்த ராம் பின், நான் திரும்ப us ஏ போரென் இதெல்லாம் யாரும் கேக்க மாட்டிங்கலா....இந்த வீட்ல எனக்கு மதிப்பில்ல .....அப்பறம் ......ம்ம்ம்ம்ம்ம் சை அவசரத்துக்கு தமிழ் டக்குனு வர மாட்டேங்குது......என்று வராத கண்ணீரை ஜானுவின் துப்பட்டாவில் துடைத்துக் கொண்டிருந்தான்.

அதை பார்த்து அனைவரும் சிரிக்க ...பார்வதியின் அருகில் வந்து இப்படி இருந்தாதான் சூப்பர் அத்தை...எங்களுக்கு பசிக்குது so, அதுக்கு வழி பன்னுங்க

இதோ ரெடியா இருக்கு சாப்பிட்டு அதுக்கு அப்பறம் ரெஸ்ட் எடுங்க என்று அனுப்பிவைத்தார்.



திங்கள்கிழமை கம்பெனியில் பொறுப்பேற்பது என்றும், ஜானுவின் பிறந்த நாளும் அன்று தான் என்பதால் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் எதிர்பாராதது சுபா அங்கு வருவாள் என்பது.

இரவு 12 மணி ,”ஜானு,,,ஜானு... ஏய் எழுந்திருடி...”

ஏன் இப்படி கத்துர ..என்று தூக்கத்தில் எழுந்தவள்.......ஏய் நீ எப்படி உள்ள வந்த ராம் யாராவது பார்த்தா என்ன பண்றது. யாரும் பார்க்கதுக்கு முன்னாடி போ...நா சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ என்ன பண்ற?

ஒ கே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், மை டியர் ஸ்வீட்டி,உன் கையை குடு,

எதுக்கு?

குடேன்,”அவள் குடுத்ததும் கையில் வைத்திருந்த பரிசை அவளிடம் கொடுத்து அப்புறமா பார் சரியா...அவளும் “ம்ம்ம்..” எனவும், அவளை நெருங்கி நின்று,” ஜானு நோ மட்டும் சொல்லாத“,என சொல்லிக்கொண்டே கன்னத்தில் முதல் முத்தமொன்றை வைத்தான். அவள் அதிர்ந்து பார்க்கையில் நானும் நல்ல பையன் தான்மா...என்றான் அப்பாவியாய்.
அவன் சொன்னவிதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது...அதை பார்த்துகொண்டே வந்த வழியே வெளியே சென்றான்.


கடந்த மூன்று நாள்கலாக இருந்த பரபரப்பு இன்று சற்று கூடியது போல் தொன்றியது சுபாவிற்கு, புது m.d வருவதால் முன்னதாகவே சென்று இருக்கையில் அமர்ந்தால். வேலையில் கவனம் செல்லவில்லை. தனது m.d ஜீவாவிற்கு போன் செய்து தான் புது m.d- க்கள் பொறுப்பேற்றவுடன்,உடம்பு சரியில்லாததால் லீவு எடுத்துக்கொள்வதாகச் சொன்னாள். ஜீவாவும் சரி என்றான்.

10 மணிக்கு உங்க எல்லாரையும் கான்பிரன்ஸ் ஹால் வரச்சொன்னாங்க மேடம்...,”பியூன் சொல்லிச்சென்றான். அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

முதலில் உள்ளே வந்த ஜீவா, “ஹாய் பிரண்ட்ஸ் இப்ப என்னுடைய பாட்னர்ஸ் அதாவது உங்க புது MD-ஸ் இரண்டு பேரயும் உங்களுக்கு அறிமுக படுத்துறேன்.” ராமும், அர்ஜூனும் உள்ளே வந்ததையோ, அர்ஜுன் அவளையே பார்த்ததையோ தனக்குள்ளே உலன்றுகொண்டிருந்த சுபா கவனிக்கவில்லை. அவள் கவனிக்கவில்லை என்பதை அவனும் உணர்ந்தான்.

ஹீ ஸ் MR. ராம் அண்ட் ஹீ ஸ் MR. அர்ஜுன். “பெயர்களை கேட்டதும் தூக்கத்தில் இருந்து விழித்தவளை போல் விழித்தவள் பார்வயை சுழலவிட்டாள், அது அர்ஜுனின் மீது நிலைகுத்தியது, மூச்சு விடவும் மறந்தவளாக அமர்ந்திருந்தாள் சுபா. அர்ஜுனும் “முதலில் குழப்பம், திகைப்பு, கோபம், ஆனந்தம் இருதியில் பயம் என விதவிதமான பாவனைகளை கண்களில் காட்டியவளை கவனித்தான். அவனும் கண்களில் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தான். அதற்கு பிறகு மறந்தும் வெளியே வரும் வரை இருவரும் மற்றவரை பார்க்கவி ல்லை. ராமும் இதை கவனித்து சிறு கவலை பிறந்தது.

தனது இருக்கைக்கு வந்தவள் ஜீவாவிற்கு அழைத்து தான் கிளம்பியதை அறிவித்தாள். மூன்று நாள்கலாக இருந்த பரபரப்பு சற்று குறைவதை உணர்ந்தவள் வீட்டிற்கு சென்றாள்.

அர்ஜுன், ராம், ஜீவா மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்த போது ஜீவாவின் தொலைபேசி அழைத்தது. எடுத்தவுடன். “சரி நீங்க கிளம்புங்க.....” போனை வைத்தவுடன், “யாரு...”அர்ஜுன் படபடப்புடன். “நம்ம சுபத்ரா தான் அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம் அது தான் லீவு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க...” எனவும்.”நினைச்சேன்...” என்றான் அர்ஜுன். அதன் பிறகு தொழில் சம்பந்தமாக பேசிவிட்டு வேலையை கவனித்தனர். அர்ஜுன் இதை எதிர்பார்த்ததால் அமைதியாக இருந்தான்

வீட்டிற்கு சென்றால் தன் தாய்க்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் கோவில், ஆசிரமம் என்று சென்றுவிட்டு மாலையில் எப்போதும் போல் வீட்டிற்குள் நுழைந்தாள், அப்பொழுது தான் ஜானு வந்து அவர்கள் வீட்டில் நடக்கும் விருந்திற்கு அழைத்துவிட்டு சென்றிருப்பதாக கூறி அவசியம் அதற்கு செல்ல வேண்டும் என மாலதி கூறிவிட்டார். அவர் அதிகம் வெளியே வர விரும்பாதவர் ஆதலால் விருப்பம் இல்லை என்றாலும் அவருக்காக் அதற்கு உடன்பட்டாள். அபியையும் அழைக்க தன் அறைக்கு வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள், அபி தன் தந்தையின் புகைப்படத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். ஒரு நிமிடம் கண்மூடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டவள் அபியை அழைத்து, தானும் கிளம்பி தன் தாயுடன் ஜானுவின் வீட்டிற்கு சென்றாள்.



வீட்டின் அழகை ரசித்துக்கொண்டே தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள். காம்பவுண்டின் உள்ளே நுழைகையில் ஜானு எதிரே வந்து வரவேற்று அழைத்துச்சென்றாள். அங்கு பெரிய தொழில் அதிபர்கள் எல்லாம் வந்து இருந்தனர். அவளுக்கு சங்கடமாகிவிட்டது தான் இருக்கும் மன நிலையில் அங்கு இருக்க முடியவில்லை அதனால் தாயையும் குழந்தையும் ஒரிடத்தில் விட்டுவிட்டு தோட்டத்தில் சென்று அமர்ந்தால்.

அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அபி, அந்த பக்கம் வந்த அர்ஜுனை கண்டதும், “அப்பா..... “என கால்களை கட்டிக்கொண்டாள்.

அர்ஜுனும், ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், பின்பு அர்ஜுன் அபியை தூக்கிக் கொண்டு,” உன் பெயர் என்ன .....” “அபிதா”, “சரி என் பெயர் தெரியுமா? “ஒஒ அத்தூன்(அர்ஜுன்),” அர்ஜுனும், ராமும் திகைத்தனர்.

ராம் “ பாப்பா... நீ யார் கூட வந்த...”என்றான். “அம்மா கூத அப்பும் பாத்தி கூத” அக்குழந்தையின் மழழை தெவிட்டாத இன்பமாய் இருந்தது அவனுக்கு தன்னை அப்பா என்று அழைத்ததைக்கூட மறந்து, அக்குழந்தை யார் என அறிய முற்படாதவனாய் இருந்தான்.அதற்குள் ராம்.”உன் அம்மா எங்கே...” என்றான். ”அதோ...” தோட்டத்தில் இருந்த பெண்ணை கைகாட்டியது குழந்தை. ராமும், அர்ஜுன் அபியை தூக்கிக் கொண்டும் தோட்டத்திற்கு சென்றனர். அந்த பெண்ணை பார்த்ததும் அர்ஜுனின் கோபத்தை அவன் முகம் கூறியது, இருந்தாலும் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு சென்றான்.

அம்மா...என அழைத்த தன் மகளை பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள். யாரை பார்க்கத்துணிவின்றி இருந்தாளோ அவனை குழந்தையுடன் பார்த்ததும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

அம்மா....அப்பா பாரு நாந்தான் கண்துபித்தேன் இல்லப்பா..... என சொந்தத்துடன் அவன் தோள் சாய்ந்துகொண்டாள் மகள்.

அவன் கண்கள் இமைக்கவும் மறந்து அவளையே பார்த்தது....................................


அனல் அடிக்கும்.......................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top