அனலும் மழையும் 2

Advertisement

Lakshmi N

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ..........2nd epi pottuten....padichuttu eppidi irukkunu sollunga .....ennaku comments and like potta ellarukkum thanks a lot ....really i feel very good at tat moment thanks for your welcome and encouragement..... thanks for silent readers also........konjame konjam lentha potturukennu ninaikuren....neenga padichuttu sollunga ......





அத்தியாயம் 2

சுபா தனது வேலையை முடித்துக் கொண்டு india கிளம்பி சென்றாள். விமான பயணத்தின் போது பழைய நினைவுகள் இன்பமாய் இனிக்கவும் துன்பமாய் தகிக்கவும் செய்து கொண்டிருந்தது. அதிலிருந்து இப்பொழுது தான் மீண்டு வந்ததாய் நினைத்தால் ஆனால் இதையெல்லாம் பார்க்கும் பொழுது பீனிங்க்ஸ் பறவை போல் நினைவுகள் மீண்டும் உயிர்த்தெழுவதை தடுக்க முடியவில்லை.... அதே நெரம் அவனது நிலையும் அது தான்.

Chennai-பண்நாட்டு விமான நிலயத்தில் தரை இறங்கியது விமானம். விமான நிலயத்திலிருந்து வெளியெ வந்து நேராக வீட்டிற்கு சென்றவள் காலிங் பெல்லை அலுத்தி விட்டு நின்றாள்.
மாலதி...... அவர் தான் அவளின் அம்மா,
கதவை திறந்த உடன் “அம்மா எப்படி இருகிங்க அபி எப்படி இருக்கா? பாத்து 15 நாள் ஆச்சு. I miss you a lot ma. என்றாள் குழந்தயாக”
மகளை இப்படி பார்த்து 3வருடங்கள் ஆகிவிட்டது என்று என்னியவர் மறந்தும் வாய் திறந்து சொல்லவில்லை. சொன்னால் மீண்டும் தன் கூட்டிற்குள் ஒடுங்கி விடுவாளொ என்ற பயம் ஒருபுறம், விடை தெரியாத வினாக்கள் ஒருபுறம் மனதை அழுத்த,

புன்னகையுடனே அவளுக்கு தகுந்த பதில் கொடுத்தார்.
அதே நேரம் உள்ளறையில் "அபி..."எழும் ஒசை கேட்க தன்னை பெற்றவளிடமிருந்த கவனத்தை தான் பெற்றவளிடம் திசை மாற்றினாள்.
குழந்தையும் அவளை கண்டுகொண்டதாய் “அம்மா...” என்று வந்து கட்டிகொண்டது.
குழந்தையுடன் சிறிது நேரம் விளையடியவள் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக சீக்கிரமாக உணவு உண்டு விட்டு குழ்ந்தைகும் கொடுத்து ஓய்வு எடுக்க தன் அறைக்கு அழைத்து சென்றவள்குழந்தையுடன் சேர்ந்து அப்படியே உறங்கி விட்டாள்.



சென்னையின் காலை நேர பரபரப்பில் இருந்து சற்றே தனித்து இருந்தது போல் அமைந்ததிருந்தது அந்த வீடு….. இல்ல மாளிகை. ( ம்ம்ம்ம்............. நீங்களே பாருங்க பா)

இரண்டு தலைமுறை முன்பே மனை வாங்கி கட்டிய வீடு. வேளச்சேரியில் மூன்று தலங்களை கொண்டது.
சுற்றிலும் காலை நேர உடற்பயிற்சிக்கு ஏதுவான வகையில் அமைந்தது.
பக்கவாட்டில் அனைத்து பூ வகைகலும் அமைந்திருந்தது. பார்பதற்கு பூங்காவை போல் இருந்தது.
சற்று தொலைவில் சிறு ஊஞ்சல் மழை பெய்தாலும் நனையாவண்ணம் அமைக்கபட்டு அதன் அருகில் சிறு குடில் ஒன்றில் ஒரு வட்ட மேசையும் சுற்றிலும் கசையரயும் போடபட்டு இருந்தது.

ஒரே நேரத்தில் மூன்று கார்களை நிருத்தும் அளவு கொண்ட போர்டிக்கோ, உள்ளே பார்தால் வரவேற்பு அறை, அதனை ஒட்டி அலுவலக அறை…கீழ் தளத்தில் சமையல் அறை, டைனிங்க் ஹால், மிகப்பெரிய ஹால், இரண்டு படுக்கை அறை.

இரண்டாம் தளம் 4 படுக்கை அறை வசதி கொண்டது 2 எதிர் எதிராக அமைவது போல் இருக்கும்
நடுவில் படிக்கட்டுகள் 2 பக்கமும் பிரிவது போல் வரும்.
ஏறும் மாடி சுவற்றில் பல ஓவிய கலைஞர்களின் ஓவியம் இடம் பெற்றிருக்கும்.

மூன்றாவது தளம்….அதன் பக்கம் சுத்தம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது அதை பயன்படுத்தும் நபரால்….(போக போக புரியும்…….ஆள் வந்த ஒடனே 3 தளம் பத்தி சொல்ரேன் பா…..அவன் அடிப்பான் மீ பாவம்…..)

காலை நேரம் அந்த மாளிகையில் காபி மணமும், பக்தி மணமும் கலந்து வீசி கொண்டிருந்த வேளை…தொலைபேசி மணி அடித்தது….வீட்டின் கடைகுட்டி சிங்கம்( அப்படித்தான் சொல்ல சொன்னாங்க) வந்து போனை எடுத்து பதில் கொடுத்து வைத்து விட்டது. அடுத்த நொடி மாளிகையே அதிர……

“அம்ம்ம்ம்மாமாமாமா............................என்று அலறிய மகளை கண்டு கோபத்துடன் வந்தார் பார்வதி. ஏண்டி இப்படி கத்துற நா இங்க தானே இருக்கேன்.

நா சொல்லப்போற விசயத்த கேட்டிங்க என்ன விட அதிகமா கத்துவிங்க என்றாள் மகள் ஜானகி.

பார்வதி,”அப்படி என்னடி விசயம் சூரியன் மேற்கு பக்கமா உதிக்க போகுதா என்ன”?

Mom கிட்டத்தட்ட அப்படித்தான்........... சரி சரி முறைக்காதே. என்று தாயிடம் வெள்ளைக்கொடி காட்டிய ஜானகி.

இந்த Chennai மாநகரத்தின் தொழில் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன், மாளிகையில் மாகாராணியின் சொல்படி நடக்கும் மிகச் சிறந்த ராஜாவாகிய திருவாளர் சிவபிரகாசம் அவர்களின் மூத்த குமாரனும் திருமதி பார்வதி தேவி சிவபிகாசத்தின் செல்ல புத்திரனும், இந்த மாளிகையின் இளவரசி ஜானகி தேவியின் ஓரே தமையனுமகிய இளவரசர் அர்ஜுனன் தனது 3 ஆண்டு அமெரிக்க வாசத்தை முடித்துக் கொண்டு வரும் வெள்ளிக்கிழமை india திரும்ப உள்ளார். டம் டம் டம் டம்.....என பழமையின் புதுமையாய் அறிவித்தாள்.

இந்த செய்தி உன்மையில் ஆச்சர்யம் தான். ஏன்னெனில் இது வரை தாய் நாட்டிற்கு தாயை பார்க்க கூட வர மாட்டேன் என்று இருந்தவன் இப்பொழுது வருகிறான் என்றால் ஆச்சர்யம் தானே?

ஏய் நீ பொய் சொல்லல தானே? என்று பாவமாய் கேட்ட பார்வதியை பார்த்து சிரித்து விட்டார் சிவபிகாசம்.
மகள் முறைப்பையே பதிலாக குடுக்க சற்று அமைதியனார்.

உங்களுக்கு என்ன பாத்த எப்படி தெரியுது ம்ம்ம்? நீங்க நம்புனா நம்புங்க இல்லாட்டி வர அன்னைக்கு பாத்துகோங்க.... நா போய் காலேஜ் கிளம்புறேன். என்று மாடியில் இருந்த அவள் அறைக்கு சென்றாள்.

அனலடிக்கும்........................
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்டோரியின் தலைப்பில்
"அனலும் மழையும்"-ங்கிறதுக்குப்
பதிலாக "அனழும் மழையும்"-ன்னு
போட்டிருக்கீங்க, லட்சுமி N டியர்
அப்டேட்டிலும் நிறைய எழுத்துப்
பிழைகள் இருக்குப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top