unnil naaa thozhiyae...!!!-2

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 2வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
two-girls-hugging-in-a-field-by-Sally-Kate-Photography.jpg
அந்த பிரபலமான காலேஜில் உள்ளே நுழையும் போது வந்த தூக்கத்தை போ என்று விரட்டி அடித்து விட்டு பஸ்ல இருந்து இறங்கி தங்களுடைய அரட்டை அடிக்கும் இடத்தில் வந்து அமர்ந்தால் தேன்மொழி..அப்படியும் நான் போகமாட்டேன் என்று வந்த கொட்டாவியை கையால் அடித்துக்கொண்டிருந்த தேன்மொழியை பார்த்துக்கொண்டு வந்த தேவி ,காலங்காத்தால என்னடி உனக்கு தூக்கம் இரவு முழுவதும் என்ன உன் ஆளுக்கூட கடலை போட்டியா” என்றவளை பார்த்து “ஆமா அப்படியே 20 பேரு லைன்ல நிக்கிறாங்க என்ன லவ் பண்ண ஏன்? காலங்காத்தால வந்து இல்லாத ஆளுகூட வச்சு ஓடுற” என்று முறைத்துக்கொண்டு சொன்னாள் ஹனி.சரிமா ஓட்டலமா தாயே... நேற்று என்ன சொன்னாங்க நம்ம மும்பை பயணத்தை பற்றி உங்க ஹ.ச்.ஓடி என்ற ரம்யாவை பார்த்த ஹனி அது என்ன உங்க ஹ.ச்.ஓடி...அவரு உனக்கு ஹ.ச்.ஓடி தான் மறந்துவிடாதே மகளே என்ற ஹனியை பார்த்து...அட போடி...உனக்கு தெரியாது...ஒரே ஒரு நாள் சொல்லாம லீவு போட்டுட்டேன்...அதுக்கு அவரு ஏன் சொல்லாம லீவு போட்டிங்க ஒரு டிஸிப்ளின் இல்லையானு சொன்னாரு அதுக்கு நான் சாரி சார்னு சொன்னேன்..ஹனி,சரி அதுக்கு என்ன இப்ப என்றவளை பார்த்து ரம்யா முதலா முழுசா சொல்லுறத கேளு. ஹனி, சரி சொல்லு. ரம்யா,”என்னோட ஸ்டுடென்ட் சாரி சொல்லுறது எனக்கு பிடிக்காது...உங்களோட சாரி எனக்கு தேவையும் இல்லை..இந்த சேர்ல வந்து உக்காந்து பாருங்க அப்பதான் தெரியும்,ப்ளீஸ் அண்டர்ஸ்டென்ட் மீ”னு சொல்லிட்டு சரி “உங்களுக்கு நான் புனிஷ்மென்ட்ல கொடுக்கல சரியா, உங்க அறிவை வளர்த்துக்கிறதுக்காக நாளைக்கு நம்ம பாடத்துல இருந்து ஏதாவது ஒரு பகுதியை மட்டும் நீங்கள் உங்க ப்ரெண்ட்ஸ்க்காக சொல்லிதரனும் ஓகே என்று சொல்ல, நானும் சரினு சொல்லிட்டேன்”...”ஒருநாள் லீவு போட்டதுக்கு இன்னிக்கு 1 மணி நேரம் க்ளாஸ் எடுக்கணும்” என்றவளை பார்த்து ஹனி, ஏண்டி அப்பவே அவர எந்திரிக்க சொல்லி நீ அந்த சேர்ல உக்காந்து பார்த்துருக்கலாம்ல என்றவளை பார்த்து நான் ஏதும் பேசாம இருந்ததுக்கே அவரு 2 மணி நேரம் க்ளாஸ் எடுத்தாரு இதுல நான் ஏதாவது பேசிருதா என்ன ஆகியிருக்கும் என்னுடைய நிலைமை என்றவளை பார்த்து சிரிக்க அப்பொழுது ஸ்ரீ, தேவி, சுதா அனைவரும் வர,ஹைய் ஹனி,ரம்யா என்றவங்களை பார்த்து ஹாய் பிரெண்ட்ஸ் இன்னிக்கு உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்ற ஹனியை பார்த்து,என்ன ஹனி நாம்ம மும்பை போறதுக்கு ஓகே சொல்லிட்டாங்களா காலேஜ்ல என்றவளை பார்த்து,அதலாம் இல்ல அதுக்கு பர்மிஸ்சன் கிடைக்க டைம் ஆகும் என்றால் ஹனி.அப்புறம் என்ன குட் நியூஸ்னு சொல்லு என்றாள் புவனா. அது இன்னிக்கு நம்ம ரம்யா 1 மணி நேரம் க்ளாஸ் எடுக்க போறாலாம்.ஏண்டி ரம்யா உனக்கு இந்த ஆசை என்ற தேவியை பார்த்து ஆமா எனக்கு ஆசை உங்களுக்கு கிளாஸ் எடுக்கணும்னு அந்த வளர்ந்த கெட்ட ஹ.ச்.ஓடி சார் தான் எடுக்க சொன்னார் என்று கடுப்புடன் சொன்னவளை பார்த்து அப்ப நாங்களாம் நல்லா என்ஜாய் பண்ணலாம் அப்படித்தான என்ற ஹனியை பார்த்து, ரம்யா,கொன்னுடுவேன் மரியாதையா நான் நடத்துற வகுப்பை கவனிக்கணும் இல்லைனுவை கேள்வி கேட்பேன் பார்த்துக்கோ என்று மிரட்டலாக சொல்ல அதே சமயம் நித்தி வந்தாள்.




ஹாய்...நித்தி...என்று தேன்மொழி பஸ்ல இருந்து இறங்கி தங்களுடைய இடத்திற்க்கு வந்த நித்தியை பார்த்து கூற, இதற்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று கூறி விட்டு முறைத்து கொண்டு வந்தாள் நித்தியா ....இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தேவி,சுதா,ஸ்ரீ,ரம்யா அனைவரும் உங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கூறிக்கொண்டு வகுப்பிற்கு சென்றனர்..... என்ன அங்க முணுமுணுப்பு எதுவாக இருந்தாலும் என் முகத்தை பார்த்து பேசு என்ற ஹனியை பார்த்து ஆமா நாங்க பேசிட்டாலும் நீங்கா பேசுவிங்களாக்கும் என்று முறைத்துக்கொண்டு கொண்டு சொன்னாள் நித்தி.



நித்தியா முறைப்பதை பார்த்த தேன்மொழி காலைல எழுந்து குளிச்சு பஸ்ல ஏறி ஒரு மணி நேரம் பயணம் பண்ணி இங்க காலேஜ்க்கு என் கூட சண்டை போடாத வாரியா..? என்று கேட்டவளைப்பார்த்த நித்தியா...அதற்கும் முறைக்க... தேன்மொழி, என்னை பார்த்த மட்டும் எப்படிதான் உனக்கு தெரியுமோ..... என்றவளை பார்த்த நித்தி உனக்கு என்ன பார்த்த எப்படிதா தெரியுமோ...என்று சண்டைய போடுக்கொண்டே க்ளாஸ்க்கு வந்தனர்.... இதனை பார்த்த மத்த ப்ரெண்ட்ஸ் இவங்களை முறைக்க....காலங்காத்தால ஆரம்பிச்சுட்டீங்களா என்று சொன்ன தேவியை பார்த்து நாங்க என்ன பண்ணோம் என்று ரெண்டு பேரும் சொல்ல... எல்லாரும் தலையில் அடித்து கொண்டனர்...எல்லாரும் அவங்க அவங்க இடத்தில் வந்து உக்கார்ந்தனர். முதல் வகுப்பிற்கு வந்த வீராசாமி சார்ரா பார்த்து இந்த சிடுமூச்சி சித்தப்பாவை யாரு இங்க கூப்பிட்டது... என்று சுதா சொல்ல....வந்த வீராசாமி போன கிளாஸ்ல என்ன பார்த்தோம் என்று கேள்வியா கேட்க....நாம பயபுள்ளைங்க நோட் திருப்ப ஆரம்பிச்சுட்டாங்க(ஆனா அந்த நோட்ல ஒன்னு இல்ல..ஏன்னா நாம்ம வீரா எப்பயும் வாய்ல வடை சுடுற ஆளு...நோட்ஸ் ல தரமாட்டாரு)…. நித்தியாவா எழுப்பி கேள்வி கேட்க அவள் பின்னால் திரும்பி பதில் கேட்க எங்களுக்கு தெரியாது என்று சொல்ல...பக்கத்தில் இருந்த ஹனி சிரிக்க.... இதை பார்த்த வீரா தேன்மொழி அக்கா எழுந்து பதில் சொல்லுங்க என்று சொல்ல...தேன்மொழி நிற்க...அடுத்தடுத்து சுதா,தேவி,புவனா, ரம்யா..என்று அனைவரையும் நிற்க வைத்து விட்டு வீரா சாரில் உக்கார்ந்து கொண்டார்....நித்தி காலைல விட சண்டைய மறுபடியும் துவங்கினால்...உனக்கு என்னதான் பிரச்சனை என்ற நித்தியை பார்த்து தேனு உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்க.. நேற்று ஏன் எனக்கு வாட்ஸாப்ல லேட்டா பதில் அனுப்புற என்று கேட்க ...நான் தூங்கிட்டேன்ல...என்று சொன்னால் ஆனால் நித்தி என கூட பேசணும் என்றாள் மட்டும் உனக்கு தூக்கம் வரும்....காய்ச்சல் கத்திரிக்காய் எல்லாம் வரும் என்றால்(அடச்சீ இதல்லாம் ஒரு ப்ரோப்லேம் அப்படின்னு நீங்க சொல்லுறது எனக்கு கேட்கிறது இத விடவும் இவங்க பிரச்சனை பண்ணுவாங்க அத பின்னாடி பார்ப்போம்) ஹனி, என்ன பார்த்தா மட்டும் சண்டை போடு..மத்த யாரை பார்த்தாலும் 32 பல்லையும் காட்டு என்று சொன்னால்... அங்க என்ன சத்தம் நிக்கிறது பனிஷ்மெண்ட்ல இதுல பேச்சு வேறயா...ம்ரெண்டு பேரும் வெளில போங்க என்று வீரா சொல்ல விட்டா போதும் என்றுசெல்ல. ஒண்ணுமே தெரியாத பச்சை பிள்ளைங்க மாதிரி போறத பாரு ரெண்டும் என்று தேவி சொல்ல,ஆனால் நம்ம க்ளோஸ்க்கு வர யாருக்கும் நாம பேசுறதுல கண்ணுக்கு தெரியாது. இன்னும் 20 நிமிடம் நிக்கணுமா என்று சுதா அழுதுகொண்டு நின்றாள்., நித்தி மற்றும் ஹனி அவர்கள் வகுப்பிற்கு இரண்டு வகுப்புகள் தள்ளி உள்ள படிக்கட்டில் அமர்ந்து எப்படா வெளில வருவோம் இருந்துச்சு என்று சொன்ன நித்தியை பார்த்து ஹனி,அப்ப நீ என்கூட பேசுனது அந்த ஆளு நம்மளா வெளிய போக சொல்லனும் னு தான்..,நித்தி,இல்ல பேபி...நிஜமாவேதான் அப்ப கேட்டேன்.ஹனி,பொய் சொல்லாத போதும் நிறுத்து.நித்தி, ஆமா இப்ப நான்தான உன்கூட சண்டை போட்டுக்கிட்டு இருத்தேன்,என்ன அபப்டியே என் பக்கம் திருப்புர.ஹனி, எங்க உரிமை இருக்கோ அங்க தான சண்டை போடா முடியும் என்றுசொல்ல இத சொல்லியே எவ்வளவு வருசத்துக்கு என்ன ஏமாற்ற போற என்ற நித்தியை பார்த்து ஹனி,நான்ல யாரயும் ஏமாற்றல அதுதான் உண்மை என்று சொல்ல.பெல் அடித்தது. போகலாம் வா நித்தி என்று சொல்லி விட்டு ஹனி முன்னால் செல்ல,சில அடிகள் எடுத்து வைத்தவள் என்னடா இவளை காணும் என்று பார்க்க அவள் அதே இடத்தில் அமர்ந்திருக்க , நித்தி வா அடம்பிடிக்காத என்று சொல்லி அவளை இழுத்துக்கொண்டு போனாள். இதுல வீராசாமி கிளஸ்ஸா ம் முடிச்சுட்டுச்சு……

அடுத்தடுத்த வகுப்புகள் முடிய ,கடைசி 3 வகுப்புகள் நித்தியா தூங்கி கொண்டு இருக்க தேன்மொழி, நித்தியாவுக்கும் சேர்த்து நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தால், அப்பொழுது தடபுடலன எழுந்த நிந்தி ரம்யாவை பொலந்து கொண்டிருப்பதை பார்த்த ஹனி ஏன் அவளை அடிக்கிற என்று கேட்க நித்தி, இந்த புல்டோஸ்சர் என் மேல தண்ணியை உத்திருச்சு என்று கத்த அனைவரும் சிரிக்க,கடைசியில் ரம்யா நித்தியாவை அடிக்க.. ஹனி நித்தியவைஅணைத்து கொண்டால்..... பெல் ரிங் சத்தத்தில் அனைவரும் கிளம்ப...சுதா கூட பேசிக் கொண்டே நித்தி டாடா சொல்லாம்ல் போக...,இங்க வேதாளம் முருங்கை மரம் ஏறியது. வீட்டிற்க்கு வந்த ஹனி நித்திக்கு போன் போட,அங்கு நித்தி மித்திரன் கூட சண்டை போட அங்கு வந்த பார்வதி,அடிகழுதைகளா இது என்ன வீடா இல்ல சத்திரமா,போய் அமைதியா படிக்கிற வேளையை பாருங்க என்று கோவமாக சொல்ல இல்ல அம்மா மித்திரன் என்று சொல்ல வந்த நித்தியை பார்வதி முறைக்க இருவரும் அமைதியாகி விட்டனர். அப்பொழுது மறுபடியும் அடித்த போனை எடுத்து ஹலோ செல்லம் என்று நித்தி சொல்ல ஹனி,ஏய் கொய்யால,எருமைமாடு, எந்தன தடவை போன் போடுரது போனை எடுக்க மாட்ட நாயே,ஒரு டாடா கூட சொல்லாம போய்டு இப்ப வந்து செல்லம் நோல்லம் அப்படினு வந்து சொல்லிக்கிட்டு இருக்க. நித்தி,கொஞ்சம் மூச்சி விட்டு பேசு மச்சி....... ஹனி,நீ பண்ண தப்ப சொன்னா ஒவரா பேசுற....நித்தி,யாரு??? நானா நீ டாடா சொல்லாம போய்டு என்னை சொல்ரியா.. ஹனி,நீதா நான் இல்ல. நித்தி, நீதா நான் இல்ல ஹனி, நீதா நித்தி,ஆமா நான்தான் தப்பு மன்னிச்சுகோங்க போதுமா...என்று சொல்ல, ஹனி,உங்க மன்னிப்பு ஒன்னு வேண்டா..என்று சொல்லி போனை வைத்தாள்..... நித்தி,அம்மா......... என்று கத்த , ஏன்டி கத்துற என்று கேட்டுக்கொண்டு வந்த பார்வதியை பார்த்து,அம்மா, ஐ அம் பாவம் ,எனக்கு பசிக்குது சோறு போடு அம்மா சோறு...... சோறு....... என்ற நித்தியிடம்,முதல போய் அங்க இருக்குற துணிய மடி அப்பதான் சோறு.... சோறு.... என்று பார்வதி சொல்ல ,நித்தி அங்குகிடந்த துணியை தூக்கி ஏறிய,பார்வதி தோசை கரண்டியை ஏறிய,அடியாத்தாடி என்று நினைத்துக்கொண்டு துணியை மடிக்க ஆரம்பித்தாள்.


அனைவரையும் துயில் அழைக்க நிலா தனது ஒளியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது..மறுநாள்காலையில் நிலா ஓய்வு எடுக்க சூரியன் மேகங்களுக்கிடையில் பிறந்தது...

ஏய் தேணு மணி ஏழாகுது எழுந்திரிடி,ராத்திரி முழுவதும் அந்த போனையே பாக்க வேண்டியது,காலையில போர்வையை இழுத்து போட்டு தூங்க வேண்டிது,இப்ப எழுந்திரிக்க போரியா இல்லையா.....என்ற சுமதியை பார்த்து ஏன் அம்மா காலையிலே உன் திருக்குறளை ஆரம்பிச்சுட்டியா என்று ஹனி சொல்ல. அவளை பார்த்து சுமதி முறைக்க,ஹனி ,இல்ல அம்மா...... ஒரு மாறுதலுக்காக ராமாயணத்துக்கு பதிலா திருக்குறள்ணு சொன்னேன்.சுமதி,நீயொல்லாம் திருந்தவே மாட்டா,உன் கூட தான நித்தி படிக்கிறா அவள பாரு ஆறு மணிக்கு உனக்கு ஆறு தடவை போன் போட்டா நீ என்னனா இப்பதான் எழுந்து என் கூட வாய் பேசிக்கிட்டு இருக்கா ,போ முதல குளி, அப்புறம் அந்த புள்ளைக்கு போன் போட்டு என்னனு கேள் என்று சொன்னவரை பார்த்து சிரித்துக்கொண்டே காலேஜிக்கு கிளம்பி தயாராகி பேருந்தில் ஏறி காலேஜிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது பேருந்து ஒரு இடத்தில் நின்று விட்டது.ஏன் என்று அனைவரும் பார்க்க ரோட்டில் ஒரே கூட்டமாகவும் ,தரையில் அங்காங்கே இரத்தம் இருந்ததையும் பார்த்து கலங்கிய தனது மனதுக்கு ஆறுதல் சொன்னால் ஹனி,ஆனால் அடுத்து சில நேரத்தில் அவளுக்கு யார் ஆறுதல் சொல்வார்களோ......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top