sithara vaiththa sempaavaiyaal - 04

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
04


“ஹோஓஓஓஓ” இருகைகளையும் வாயருகே வைத்து உதடு குவித்து கூவியவர்களின் சத்தத்தில் ஒரு கணமேனும் அதிர்ந்து தான் போயினர் அங்கிருந்த ஆசிரியர்கள். அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையை கடந்திருந்தனர் சிட்டுக்குருவியாய் சுற்றித்திரிந்த மாணவர்கள் அத்தனை பேரும்.

இன்றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது. கடைசி பரீட்சையையும் எழுதி முடித்து விட்டனர். இனி உட்கார்ந்து படிக்க வேண்டியதில்லை என்ற எண்ணமே அவர்களுள் இன்பத்தின் ஊற்றினை சுரக்க அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் அத்தனை மாணவர்களும்.

இனி அவர்கள் உல்லாச வானில் சிறகடித்து பறக்கலாம் என்ற எண்ணத்தின் களிப்பு ஒவ்வொரு மாணவியர்களின் முகத்திலும் அப்பட்டமாய் பிரதிபலித்தது. இத்தனை நாள் அவர்கள் பட்ட கஷ்டம் இன்றுடன் தீர்ந்து போனதில் எக்ஸாம் ஹாலை அதகளப்படுத்திக் கொண்டிருந்தனர்.


“வேணாம் மச்சி வேணாம் இந்த செமெஸ்டர் எக்ஸாமு...
ஆது ரிசல்ட் வரும் போது நம்ம கவுக்கும் குவாட்டரு...
கடல போல படிப்பு ஒரு சால்ட் வாட்டரு...
ஆது கொஞ்சம் கரிக்கும் போதே நாம தூக்கி போடணும்...
பிரெண்ட மாதிரி பிட் அடிச்சா டார்ச்சர் இல்லடி...
நாமும் படிச்சிட்டு பண்ணா ஜீன்ஸு அவுளும்டி...
கண்ண கலங்க வைக்கும் டீச்சர் வேணாம்டி...
நமக்கு பிட் பேப்பர் தூக்கி போடும் ‘நண்பி’ போதும்டி...”



மேசையில் தாளம் போட்டவாறே ஷாஷி பாட உடன் சேர்ந்து கை தட்டி ஆர்ப்பரித்த அத்தனை பேரும் உரத்த குரலில் பின் பாட்டு பாட ஆரம்பித்தனர்.

ஆசிரியர்களின் முறைப்பை பெற்றாலும் அதை நினைத்து வருந்தும் நிலையில் யாரும் இல்லாததால் தங்களது கடைசி நாளை பெரும் கொண்டாட்டமாய் கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

இடையில் ஆடிப்பாடி ஓடி மகிழ்ந்து களைத்துப் போய் அமர்ந்திருந்தவர்களுக்கு அத்தனை நேரம் இருந்த உற்சாகம் சற்று வடிவது போலவே இருந்தது. இன்னும் சில மணித்துளிகள் அதன் பின்பு சந்திக்கும் வாய்ப்பு என்பது சற்று அரிது தான். கிட்டத்தட்ட பதினோரு ஆண்டு பழக்கம் ஒரு பரீட்சையின் முடிவில் சிதறிப்போனது.

“இன்னிக்கு கடைசி நாள்... இதுகப்ரம் எப்போ பார்ப்போம்னு கூட தெரியாதில்ல...” சொல்லும் போதே அந்த பெண்ணின் கண்கள் கலங்கிப் போனது.

அனைவருள்ளும் அந்த எண்ணம் தான் ஆனால் வெளிகாட்டாமல் உள்ளுக்குள் அடைத்து வைத்திருந்தனர். தன் சோகத்தால் தன் நண்பர்கள் வருந்தி விடக்கூடாது என உள்ளுக்குள் அடைத்து வைத்தது ஒரு மாணவியின் பேச்சில் சீறிக் கொண்டு வெளியில் வந்தது. அனைவரது கண்களிலும் கண்ணீரின் சாயல்.

“அதெல்லாம் பார்த்து பேசலாம் செல்லம் நீ உன் வாட்சாப் நம்பர மட்டும் கொடு நீ எந்த மூலைல இருந்தாலும் நான் போன் பண்ணி உன்னைய கலாய்க்கிறேன்” ஷாஷி சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.

அனைவரது முகத்திலும் புன்னகையின் சாயல். அவர்களது வகுப்பு மாணாக்கள் வட்டமாய் கூடி அமர்ந்திருந்தனர். ஒருவரது முகத்தை மற்றவரால் இலகுவாக பார்க்க முடிந்தது. பார்க்கும் போது அந்த முகங்களில் தெரிந்த தவிப்பையும் சிரிப்பையும் ஒருங்கே காணமுடிந்தது.

“இப்போ எதுக்கு எல்லாரும் உலகமே அழிஞ்சாட்டம் சேட் வயலின் வாசிக்கிறீங்க... இப்போ நான் எமோசனல் ஆகிற மூடிலே இல்ல, கடைசி நாள்னாலே பிரிவொன்றை சந்திந்தோமும் மனசே மனசேயும் தானா ஏன் பிரிஞ்சு போனா நாம பழகின நாட்களும் நம்மா பிரெண்ட்ஷிப்பும் இல்லாம போய்டுமா... சுத்த ஹம்பக் அவங்க படம் ஹிட் ஆகணும்னு கடைசில பாட்டு போறாங்க அதுக்காக நாமளும் பிரியும் போது அதே பாட்ட பாடிட்டு சோகமாத்தான் பிரிஞ்சு போகணும்னு யாரும் சொல்லல... நாம மறக்கவே முடியாதளவுக்கு இந்த நாள் இருக்கணும் பின்னாடி திரும்பி பார்க்கும் போது நம்ம முகத்தில சிரிப்பு வரணும் அழுகை வரக்கூடாது...” எமோசனல் ஆகக்கூடாது என்றவளே இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு விட்டாள்.

“செல்லம்... வை பேபி... வை பீலிங்க்ஸ்மா...” உதடு பிதுக்கி ஷாஷியை கிண்டலடித்தாள் ஷிக்கு.

“ஓடிப்போய்டு இல்ல கொன்னேபுடுவேன்...” தன்னை கிண்டலடித்தவளை புன்னகையுடன் அதட்டியவள் மறுகணம் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி இறுக்கிக் கொண்டாள். ஒரு கரம் ஷிக்குவின் கரத்தை அழுத்தமாய் பற்றியிருக்க மற்றது பாலாவின் பிடியில் அழுத்தமாய் சிக்கி இருந்தது.

மூவரும் வெளியில் உற்சாகமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் பெரும் சோகமே மையம் கொண்டிருந்தது. அது அவர்கள் பிடியின் அழுத்தத்தில் அழகாய் வெளிப்பட்டது.


விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று!

பிரியும் வரை தெரியாது பாசம் எவ்வளவு ஆழம் என்று!


இத்தனை நாட்களில் அது அவர்களுக்கு புரிந்து இருந்தாலும் இன்று அது இன்னும் அழுத்தமாய் புரிந்தது அவர்களுக்கு. இனி வாழ்க்கை முறையே மாறிவிடும். மூவருக்கும் மூன்று விதமான கனவு.

மென்மையுடன் தயக்கமும் கொண்ட பாலாவிற்கு சிறு வயது முதலே வக்கீல் ஆகவேண்டும் என்பதே லட்சியம்... கனவு... அதை ஒருவித வெறி என்று கூட சொல்லலாம். ஆர்ப்பாட்டத்தின் மறுவடிவாய் இருக்கும் ஷாஷிக்கு ஆசிரியர் ஆவதே வாழ்நாள் லட்சியம்... கலகலப்பாய் சுற்றி திரியும் ஷிகாவின் கனவோ மருத்துவம்... மகப்பேறு மருத்துவராவதே அவள் இலக்கு.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் மூவரும் மைதானத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த கல்மேடை அவர்களை நட்புடன் வரவேற்றது. அருகருகில் அமர்ந்து கொண்டனர். கோர்த்த கைகள் இன்னும் விலகியிருக்கவில்லை. அவர்கள் நட்பின் ஆழத்தை போல் அழுத்தமாய் பின்னிப்பிணைந்து இருந்தது.

முதல் நாள் பள்ளியில் அவர்கள் மூவரும் அறிமுகமாகிக் கொண்டதே இந்த மைதானத்தில் தான். இதே கல்மேடையில் தான் அமர்ந்திருந்தனர். மூவரும் மூன்று விதமான யோசனையுடன்.

சிறுவயது பாலா கண்களில் மிரட்சியுடன் தன் வயதொத்தவர்களை பார்த்திருக்க அதே கல்மேடையில் அமர்ந்திருந்த ஷிக்கு தனக்கு தெரிந்த யாரையும் காணவில்லையே என சலிப்பில் அமர்ந்திருக்க அவர்களுக்கு நேர்மாறாய் யாரை தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனும் ஆர்வத்துடன் ஒவ்வொருவரையும் கூர்மையாய் தன் குண்டு விழிகளால் அளந்து கொண்டிருந்தாள் ஷாஷி.

அன்று அவர்கள் மனதில் பூத்த சிறு பூ இன்று மணம் வீசும் மலர்த்தோட்டமாய் உருமாறி இருந்தது. பள்ளியின் ஒவ்வொரு சுவற்றிலும் அவர்களின் கடந்த கால நினைவலைகள்.

பாடவேளையில் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாய் வெளியில் வந்து பள்ளி தோட்டத்தில் தேசிக்காய் திருடி அதை எச்சில் ஊற உண்ட நாட்கள்...

பரீட்சை அறையில் விடை தெரியாமல் விழி பிதுங்கி யாருமறியாமல் பிட் அடித்த கள்ளத்தனமான நாட்கள்... அதை ஆசிரியரிடம் கூற முயன்ற மாணவர்களுக்கு பிட் பேப்பரை காட்டி தங்கள் வழிக்கு கொண்டு வந்த ஜோரான நாட்கள்...

பள்ளி விழாக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்த நாட்கள்... அதற்காய் ஆசிரியரிடம் திட்டு வாங்கிய கொடுமையான நாட்கள்... அதிபருக்கு பயந்து ஓடி ஒளிந்த திகிலான நாட்கள்...

ஜூனியர் மாணவர்களை கலாய்த்து அனுப்பிய கலகலப்பான நாட்கள்... சீனியர் மாணவர்களிடம் அசிங்கப்பட்ட கடுப்பான நாட்கள்... பள்ளி வாசலில் நின்று சைட் அடித்த ரகசிய நாட்கள்... காதல் கடிதம் நீட்டிய வெளி மாணவர்களை ஓட ஓட விரட்டிய தில்லான நாட்கள்...

இப்படி வரிசை கட்டிக்கொண்டு செல்லுமலவிளான எத்தனையோ நாட்கள் அவர்கள் மூவரின் வாழ்க்கையிலும் கடந்து சென்றிருக்கின்றன... அவர்கள் பழக ஆரம்பித்த இந்த பதினோரு வருடங்களும் அவர்கள் வாழ்க்கையின் பசுமையான நாட்கள் தான்... மறக்க முனைந்தாலும் நினைவு பெட்டகத்தில் அழகாய் ஒட்டிக்கொண்ட நாட்கள்...

பழைய நினைவுகளில் தங்களை தொலைத்தவர்கள் எங்கோ வெட்கத்துடன் இசைமீட்டிய புல்லினத்தின் ஓசையில் நிகழ்காலத்திற்கு திரும்பினர்.

அதை நினைத்தபடியே அருகிலிருந்த சித்தியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பாலாவின் வழியை மரித்தான் அவன். அவளை நிழலாய் தொடர்ந்து கொண்டிருந்தவன்... அவளின் காதலுக்காய் காத்திருப்பவன்... அவளின் அழகை ரசிக்காமல் குணத்தை கொண்டு அவள் மேல் பித்தானவன். இன்று தன் பித்தத்தை தெளிய வைக்க அவளிடம் காதலை யாசகமாய் கேட்டு வந்திருந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனை பார்த்து மனதினுள் பொறுக்கி என்று அர்ச்சனை செய்தவள் இன்று அதை சொல்லமுடியாமல் அவனை திகைப்புடன் பார்த்திருந்தாள்.

அன்று மனிதர்களின் மனதை படிக்க தெரியாதவளாய் இருந்தாள் இன்று அதை தெளிவாய் புரிந்து கொள்ளும் அளவிற்கு தன்னை செப்பனிட்டிருந்தாள். வக்கீல் ஆவதற்கு தேவையான திறமைகளை இப்போதே கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுள் விதைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் கண்களில் இருந்த நேர்மை அது வெளிப்படுத்திய காதல்... அதை புரிந்து கொள்ள முடிந்தது...

அதே நேரம் இதே காதல் பார்வையால் அவள் தகுதியற்ற ஒருவனை ஏறிட்டதும் பெண்ணவள் நினைவில் வந்து கலங்க செய்தது. அன்று அனுபவித்த அதே வலி இன்றும் சற்று குறைவில்லாது அவள் நெஞ்சத்தை தாக்கியது. அவனை மறக்கத்தான் நினைக்கிறாள் ஆனால் ஏதோ ஒரு வகையில் அவன் நினைவு அவளுள் கனன்று கொண்டு தான் இருக்கின்றது... மறக்க முடியாமல் அவனை மீண்டும் நினைவு படுத்தும் விதமாய்...

தன் மனம் கவர்ந்தவளை கண்களால் ஆசைதீர பருகியவனின் பார்வை அவள் முகத்தை தாண்டி கீழிறங்கவில்லை.. பெண்ணவள் மனமறியாமல் அவளை பார்வையால் கூட தீண்ட விரும்பவில்லை அந்த ஒருதலை காதலன்...

ஒன்றரை வருடத்திற்கு முன்பு அவள் பள்ளி வாசலில் ஆசைதீர பார்த்தது தான் அதன் பின்பு இன்று தான் அவளை முழுமையாய் பார்க்கிறான். இடைப்பட்ட வருடத்தில் அவளின் அழகு இன்னமும் கூடித்தான் இருந்தது. அத்துடன் கண்களில் இருந்த நேர்மையும் தைரியமும் அவள் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

அதை தான் அவன் விரும்பினான்... பெண்ணவளின் நயங்கள் வெளிப்படுத்தும் நேர்மையும் தைரியமும் தான் அவனை அவள் பக்கமாய் சுண்டி இழுக்கின்றது. பாரதி கண்ட புதுமை பெண்ணாய் அன்று இருந்ததை விட நிமிர்வாய் நின்றவளின் தோற்றம் அவனுள் சொட்டு சொட்டாய் இறங்கியது. அதில் அவன் காதல் மனம் பெண்ணவளை நினைத்து பெருமை கொண்டது.

அத்தனை நேரம் பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை எடுத்து அவள் முன் புன்னகையுடன் நீட்டினான். அவள் படிப்பிற்கு தன்னால் இடையூறு வரக்கூடாதென இடைப்பட்ட நாட்களில் விலகி இருந்தவன் அவள் பரீட்சை முடிவடைந்து விட்டது என்பதை கேள்விப்பட்டவனாய் அவள் முன் தோன்றி இருந்தான். தன் காதலை வார்த்தையில் வடிப்பதற்காய்...


*****


அதே நேரம் தன் முன் நின்றவனை வெட்கம் பாதி தயக்கம் பாதி என இரண்டும் கலந்த கலவையான பார்வை பார்த்தவண்ணம் தடதடக்கும் இதயத்துடன் நின்றிருந்தாள் ஷிகா.

இத்தனை நாள் தூரத்தில் பார்த்து ரசித்து தனக்குள் நிரப்பிக் கொண்டவன் இன்று தன் கண் முன் நிற்பதை நம்பமுடியாத பிரமிப்பும் அவள் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது. நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசித்தால் எந்தளவுக்கு மகிழ்வோமோ அப்படி ஒரு மகிழ்ச்சியில் தான் திளைத்திருந்தாள்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அவள் முன் நின்றிருந்த ஆர்யன் அவள் பார்வையில் கசிந்த காதலில் செய்வதறியாது தவித்தான். அவன் அவளை பார்த்தது ஒரு கலை நிகழ்ச்சி ஒன்றில் தான். அவனின் கல்லூரியில் தான் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தான் ஷிகாவும் ஒரு போட்டி நிகழ்ச்சிக்காய் சென்றிருந்தாள்.


அந்த நாள் இருவரது மனக்கண்ணிலும் விரிந்தது.


“நல்லாத்தான் ப்ராக்டீஸ் பண்ணியிருக்கேன் ஆனாலும் ஒருமாரி டென்ஷனா தான் இருக்கு....” என உதட்டை குவித்து மூச்சிழுத்து விட்டாள் ஷிகா.

அவளை பார்த்து சிரித்த ஷாஷி “ஏதோ இப்போ தான் முதல்வாட்டி போறமாறியே சீன் காட்டுறியே மை டியர் ஷிக்கு...” கலாய்க்க,,

“அதானே இத்தோட நாலாவது தடவையா போற இப்போ என்ன டென்ஷன்... நீ கவலையே படாத ஷிக்குங்கிற உன் பெயர கேட்டாலே எல்லாரும் சிக்கி சின்னாபின்னமாகி போய்டுவாங்க... சோ டோன்ட் வொர்ரி...” பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி பாலா அவளை வார அங்கு வெடிச்சிரிப்போன்று கிளம்பியது.

அதற்குள் தலைமை ஆசிரியர் போட்டிக்காக செல்பவர்களை அவசரமாய் வரும்படி அழைக்க தோழிகளின் வாழ்த்தோடு புறப்பட்டு சென்றாள் ஷிகா. அவளோடு இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட பத்து மாணவர்களும் சென்றனர்.

காலை ஒன்பது மணியளவில் அந்த கல்லூரியினுள் நுழைந்தவர்கள் மதியம் ஒரு மணியளவில் தான் தங்கள் நிகழ்ச்சிகள் முடிந்து ஓய்வாய் அமர்ந்திருந்தனர். இன்னும் சில மணித்துளிகளில் ரிசல்ட் அறிவிப்பதால் அதை பெற்றுக் கொண்டே செல்வோம் என ஆசிரியர்கள் உரைத்திருக்க வெட்டியாய் அமர்ந்திருந்த மாணவர்கள் ஆசிரியர்களின் கடுமையான சொற்பொலிவாற்றலின் பின் அந்த கல்லூரியை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர்.

அவர்களை போல் வேறு பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள் அங்கிருந்த ஆடிடோரியத்தினுள் செல்வது கண்டு இவர்களும் கூட்டமாய் உள்ளே நுழைந்தனர்.

“மச்சி நீ பாடித்தான் ஆகணும் தங்கச்சிய நினைச்சாவாது பாடித்தொலடா... உன் கிட்டார் கூட ரெடியா இருக்கு...” கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கிணங்க ஆர்யனின் தோழன் ஆதர்ஸ் நண்பனை பெரும்பாடு பட்டு கரைக்க முதலில் கரையாதிருந்தவன் தன்னவளை நினைவு படுத்தவும் கிட்டாரை கையில் ஏந்திக் கொண்டு மேடையேறி விட்டான்.

அவனது கல்லூரி மாணவர்கள் ஆர்யன் மேடையோரவும் கத்தி கூச்சலிட்டு அவனை ஆரவாரப்படுத்த அவர்களை பார்த்து கையாட்டி சிரித்தவன் கண்களை மூடி தன்னவளை கண்முன்னே கொண்டு வந்தான்.

அவள் தன் முன்னே நிற்பது போல் கற்பனை செய்து கொண்டவனின் கைகளில் கிட்டார் உயிர்பெற அவனிதழ்களில் இசை உயிர்பெற்றது.

மது அவளை நினைத்து மது அருந்தாமலே போதையானவன் மதி மயங்கிப்போய் பாட ஆரம்பிக்க அவன் கண்கள் தன்னவள் நிற்பதாய் கற்பனை செய்து கொண்ட இடத்தில் அவன் தன்னை பார்த்து பாடுவதாய் எண்ணி உள்ளம் தடுமாற அவனையே விழியகலாமல் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் ஷிகா.


“கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கேயோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே”



அன்று அவன்பால் தடுமாறியவளின் உள்ளம் இன்னும் அவள் கட்டுக்குள் வரவில்லை. அது எப்போதோ அவனிடம் சரணடைந்து விட்டது. அதை எண்ணிப் பார்த்தவள் அவனை காதலுடன் நோக்கினாள்.

அவனோ தன்னவளிடம் வேறு ஒருத்தியை காதலிப்பதாய் கூறிக்கொண்டு அவளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் அவள் பின்னால் நாய்க்குட்டியாய் செல்லும் நெஞ்சத்தினை தடுக்கும் வகையறியாது செய்வதறியாது நின்று கொண்டிருந்தான்.

அன்று மதுபாலாவின் வார்த்தைகளில் அடிபட்ட உள்ளத்துடன் அங்கிருந்து புறப்பட்டவன் தான் அதன் பின்பு அவளை பார்க்க முயற்சிக்கவில்லை. தன்னால் தன்னவள் உயிர் உருகுவதை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவன் வேண்டுமென்றா அதையெல்லாம் செய்தான்... அவளுக்காகத்தானே... அவளுக்காகத்தான் அவளை விட்டு விலகியிருக்கிறான்..

அதை யாரிடமும் அவன் சொல்லப்போவதில்லை. அவளிடமும் கூட.. அவன் மரணிக்கும் போது அதுவும் அவன் காதல் நெஞ்சத்தோடு மண்ணோடு மண்ணாய் மக்கிப்போய்விடும்...

மனதினுள் வேறு ஒருத்தியை நினைத்திருப்பவனுக்கு இப்பவையாளின் பார்வை சங்கடத்தை மூட்டியது. முன்பென்றால் இவளின் ஆர்வப்பார்வையில் இவளிடம் கடலை வறுக்க ஆரம்பித்திருப்பான். ஆனால் இப்போதிருப்பது மதுபாலாவின் காதலால் மட்டுமே உயிர்படைபவன். வேறு பெண்ணின் பார்வை கூட தன்னில் விழுவதை அவன் விரும்வில்லை.

அவன் இப்படியே இருந்துவிட முடியாது தான். இருந்து விடவும் அவன் குடும்பத்தில் விடமாட்டார்கள் தான். அதற்குள் காலம் என்ன செய்யுமென்று யாரறிவார் என்பதால் இப்போதைக்கு அவன் அதை பற்றி யோசிக்கவில்லை.

ஆனால் இந்த பெண்... இவளை என்ன செய்வது என புரியாமல் முதலில் குழம்பியவன் இறுதியில் அவளை சந்தித்து பேச முடிவு செய்து இதோ ஒருவழியாய் அவளை சந்தித்தும் விட்டான்.

ஆர்யனின் நண்பனான ஆதர்ஸின் வீட்டின் அருகினில் தான் ஷிகாவின் வீடும் அமைந்திருந்தது. தினமும் நண்பனின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவளின் பார்வை தன் மேல் படிவதை பார்த்து முதலில் கண்டுகொள்ளாமல் விட்டவன் நாளாக ஆக அவள் பார்வையில் வழிந்த காதலில் நண்பனின் வீட்டிற்கு வருவதை கூட நிறுத்தி விட்டான்.

ஆனால் விதி மீண்டும் அவர்களை சந்திக்க வைத்து அவள் காதலை அவனுக்கு புரிய வைத்திட முனைய அதற்கு மேல் பொறுமைகாக்க முடியாமல் நண்பனின் வீட்டிற்கு வந்தவன் தன் பைக் சத்தத்தில் வெளியில் வந்தவளை பேச வேண்டும் என அங்கிருந்த பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான். முதலில் தயங்கியவள் பின்பு ஒத்துக் கொண்டாள்.


*******


அன்னையும் தந்தையும் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க அவளின் செல்லத்தம்பி மாலைநேர வகுப்பு சென்றிருக்க வீட்டில் தனியாக இருக்க முடியாமல் பாட்டியின் வீட்டிற்கு கிளம்பினாள் ஷாஷி.

இரண்டு தெரு தள்ளி பாட்டியின் வீடு அமைந்திருக்க மாலை நேரத்து மதிமயங்கும் காற்றினை சுவாசித்துக் கொண்டு இறுதி நாள் பள்ளியின் நினைவும் அதனுடன் கூடிய தன் தோழிகளின் நினைவும் எழ உள்ளுக்குள் எட்டிப்பார்த்த கவலையை வெளிக்காட்டாமல் உல்லாச நடையுடன் சென்றவளின் நடை பாதியில் தடைப்பட்டது அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து.

காதில் கடுக்கன்... கழுத்தில் விதவிதமான சங்கிலி... முள்ளம்பன்றியின் மயிர்கால்கள் போல் சிலுப்பிக் கொண்டிருந்த தலைமுடி பாதி பிய்ந்து தொங்கிய பேன்ட்.. என கிட்டத்தட்ட ரௌடிகளின் தோற்றத்தில் நின்றிருந்தவர்களின் கைகளில் பாதி புகைப்பட்ட நிலையில் இருந்த சிகரட்.

தோழிகளின் யோசனையூடே நடந்து வந்ததில் அவர்களின் அருகில் நெருங்கி இருந்தாள். முதலில் கவனியாதவள் புகையின் நெடியில் தான் நிமிர்ந்து நோக்கினாள். இவளையே வைத்த கண் வாங்கமால் வெறித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளுக்குள் சிலீரிட்டது. பயத்தில் கண்கள் கலங்கியது. கண்ணீர் துளி கன்னத்தில் இறங்காமல் இமைசிமிட்டி சரி செய்து கொள்ள முயன்றாள். பீதியில் கைகால்கள் நடுங்கின. நிற்க கூட திராணியற்றவளாய் தன் முன் நின்றிருந்தவர்களை பார்த்தவளின் மனமோ இங்கிருந்து எப்படி செல்வது என்பதை வேக வேகமாய் சிந்தித்தது.

ஆள்நடமாட்டமில்லாத தெரு. உரத்த குரலில் கத்தினாலும் யாரும் வரமாட்டார்கள். அவளுக்கிருந்த பயத்தில் சத்தம் போட்டு கூப்பாடு போடும் நிலையிலும் அவள் இல்லை. தேவையில்லா நேரத்தில் வாய் கிழிய பேசுபவள் இன்று தேவையான நேரத்தில் பேசாமடந்தையாய் சிலையாய் சமைந்து நின்றாள்.

ஆளில்லாத தெருவினுள் சிகரட்டில் கலந்த போதையை முகர்ந்து கண்கள் சொருக போதையில் நின்றிருந்தவர்கள் தங்கள் முன் நின்ற பூப்போன்றவளை கசக்கி முகர துடிக்கும் வண்டாய் காமவெறியில் அவளை பார்த்தனர்.

அவர்களின் பார்வை தன் உடலில் அசிங்கமாய் வலம் வருவதை அருவருப்புடன் பார்த்தவளுக்கு அங்கிருந்து நகர சொல்லி மனம் கட்டளையிட அதை செயற்படுத்த முடியாமல் கால்கள் வலுவிழந்து தோய்ந்து கொண்டிருந்தது.

அதில் அச்சத்தோடும் அருவருப்பில் தகிக்கும் உடலின் பாரத்தை தாங்கமுடியாமலும் செய்வதறியாமல் நின்றிருந்தவளின் தோளின்மேல் படிந்தது ஒரு கரம்.


“காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேருமோ
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் இளமையின் தனிமையை நீ மாற்று எந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே..”



சிதறும்...
 

Keerthi elango

Well-Known Member
School life epayume vera level than...yaralayume ethalayum atha eedu katta mudiyathu...happiest life na athuthan...enaku en school life nyabagam vanthuduchu...Thanks sis...Keep rockingggg dr...
 

kayalmuthu

Well-Known Member
Bala thane mathubala
Konjam confuse aguthu sis
Appuram shiha sushi rendu name confused
Full name easy than irukku
Sorry sis this is my opinion
Sorry
Very nice ud
 

mila

Writers Team
Tamil Novel Writer
விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று!

பிரியும் வரை தெரியாது பாசம் எவ்வளவு ஆழம் என்று!
algana varigal
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top