Vinnodu vilayadum vennilave-1

Advertisement

Tamilsurabi

Writers Team
Tamil Novel Writer
குளித்து இடைவரை நீண்ட கூந்தலை துவட்டியடி கண்ணாடி முன் வந்து அமர்ந்தாள் திவ்யமதி.

நிலவென ஒளிர்ந்த முகமும் மான்விழியும் பவள இதழும் பளிங்கு உடலும் ஏதோ வானுலகிலிருந்து இறங்கி வந்த தேவதை போலிருந்தாள் அவள்.

பின்னிருந்து இரண்டு வலிய கரங்கள் அவள் சிற்றிடையை இறுக்கமாக பற்றின.அதில் சிலிர்த்த அவள்,

"சித்து! விடுங்க கால வேளைல இது என்ன?"

அவள் கழுத்தில் முகத்தை வைத்து வாசம் பிடித்த அவன்,

"மதி! இப்படி குளிச்சிட்டு கமகமன்னு வந்தா நா எப்படி சும்மா இருக்கறது?"

"சித்து! உங்களுக்கு ஆபிஸ்க்கு லேட் ஆயிடுச்சு..யாரோ ஃபாரின் டெலிகேட்ஸ்யோட மீட்டிங்குன்னு சொன்னீங்கள்ல! கிளம்புங்க சீக்கிரம்"

"முடியாது...நா உன்ன விட்டு போக மாட்டேன்! உனக்கு அப்புறம் தான் ஆபிஸ் மத்ததெல்லாம்"

"ப்ளீஸ் சித்து!நா சொன்னா கேப்பீங்கதானே!இப்ப நல்ல புள்ளையா ஆபிஸ் போவீங்களாம்... திரும்பி வந்தப்புறம் பெரிய ட்ரீட்டே கொடுப்பேனாம் டீல் ஓகேயா?"

கண்கள் மின்ன,

"நிஜமா! அப்படின்னா சரி...இப்பத்திக்கு ஒரு பப்பி குடுத்துடு!நா கிளம்பறேன்.."

"பப்பியும் இல்ல குப்பியும் இல்ல கிளம்புங்க நீங்க"

"ப்ளீஸ்டா மதி ஒன்னே ஒன்னு"என கெஞ்சி கொஞ்சி அதை பெற்றுக் கொண்டே சென்றான் அவன்.

துடிக்கும் இதழை கடித்தபடி கண்ணாடியால் முகம் பார்த்த திவ்யா அதில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

ஆம்!அதில் தெரிந்த வெற்று நெற்றியும் கழுத்தும் அவள் துர்பாக்கிய நிலையை பறைசாற்றின.இதுவரை கண்டதெல்லாம் கனவா?......இல்லை அது அவள் கணவன் உயிரோடு இருந்தபோது நடந்தது.உடலும் உயிருமாக வாழ்ந்த அவர்கள் வாழ்வு வெறும் கனவானது.அவள் கணவன் சித்தார்த் இறந்து அன்றோடு இரண்டு வருடங்களாகிறது.

பிஸ்னஸ் விஷயமாக காரில் ஹைதராபாத் சென்றவன் திரும்பி வந்தது சுற்றப்பட்ட துணி மூட்டையாக.வேகமாக வந்த லாரி மோதியதால் நொறுங்கிய காரிலிருந்த அவனும் டிரைவரும் உரு தெரியாமல் சிதைந்திருந்தனர்.

அடையாளம் காட்ட அழைக்கப்பட்ட திவ்யா அதன் கோரத்தில் மயங்கி விழுந்தாள்.மயக்கம் தெளிந்து அவளால் சரியாக அடையாளம் காட்ட முடிந்தது அவள் கணவன் எப்போதும் கழுத்தில் அணிந்திருந்த அவனின் லாக்கெட் செயின்.சிதைந்திருந்தாலும் அதை அடையாளம் காட்ட முடிந்தது அவளால்.

காரியமெல்லாம் அவனின் சித்தப்பா தணிகாசலமே பார்த்துக் கொண்டார்.அவரை தவிர சித்தார்த்துக்கு நெருங்கிய சொந்தமென்று சொல்ல வேறு யாரும் இல்லை.

பதிமூன்று வயதில் பெற்றோரை அடுத்தடுத்து இழந்த அவன் படித்து பட்டம் பெற்று தந்தையின் சிறிய பிஸ்னஸ்ஸை விரிவுபடுத்தி இன்று இந்தியாவிலேயே டாப் டென்களில் ஒன்றாக அதை திகழுமாறு செய்திருந்தான்.ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியம் தான் அவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

அவன் இறந்து பத்து நாட்களுக்கு பிறகு அவனின் வக்கீல் ராஜரத்தினம் அவனின் உயிலை படித்து சொல்ல அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தார்.

அவள் கேட்டதின் பேரில் சித்தப்பா தணிகாசலமும் வந்திருந்தார்.தம்மோடு அவரின் ஒரே மகன் மதனையும் அழைத்து வந்திருந்தார்.அவர் மேல் எத்தனை மரியாதை இருந்தாலும் திவ்யாவிற்கு அவர் மகனை கண்டாலே பிடிப்பதில்லை.பின் என்ன!ஒரு மாதிரியான சிரிப்பும் கெட்ட பார்வையும் இருக்கும் அவனை தவிர்க்கவே விரும்பினாள்.ஆனால் தணிகாசலம் வரும் போதெல்லாம் தம் மகனையும் அழைத்துக் கொண்டே வந்தார்.

அனைவரும் வந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட வக்கீல் உயிலைப் பிரித்து படித்தார்.அதில் இருந்தது இதுதான் சித்தார்த் தன் திரண்ட சொத்துக்களைத் தனக்கு பிறகு தன் மனைவி திவ்யமதியின் பெயருக்கு எழுதியிருந்தான்.ஆனால் அவைகளை விற்கவோ அல்லது தானம் கொடுப்பதற்கோ அவளுக்கு உரிமையில்லை.அதில் வரும் வருமானம் மட்டுமே அவள் உபயோகிக்க முடியும்.

உயிலில் இருந்தவைகளைக் கேட்ட திவ்யா கண்ணீர் விட்டாள்.அவளுக்கு அந்த சொத்து சுகம் எதுவும் வேண்டாம்.. அவன்தான் வேண்டும் என அவள் நெஞ்சம் கதறியது.முதலில் அவைகளை வேண்டவே வேண்டாம் என்றாள் அவள்.

ஆனால் அவன் அரும்பாடுபட்டு வளர்த்த பிஸ்னஸ்ஸை அப்படி விட கூடாது என்றும் அவளே அதை இனிமேல் முன்னின்று நடத்த வேண்டும் என வக்கீல் அவளை வற்புறுத்தினார்.

முதலில் மறுத்த அவள் பின்பு அவர் கூறுவதிலிருந்த உண்மையை உணர்ந்தாள்.

சித்தார்த்திற்கு அவன் தந்தை தொடங்கிய அந்த பிஸ்னஸ் மீது உயிர் என்பது அவள் அறிந்ததே.அதனால் துடிக்கும் இந்த வேதனையை மறக்க பிஸ்னஸில் இடுபடத் தொடங்கினாள்.

முதலில் சிறிது தடுமாறினாலும் சித்தார்த் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த அவனின் சிப்பந்திகளின் உதவியோடு போக போக அதில் வெற்றி காணத் தொடங்கினாள்.

இந்த இரண்டு ஆண்டுகளில் திறமையான இளம் பெண் தொழிலதிபர் என அனைவராலும் புகழப் பெற்றாள்.

அன்றும் ஒரு தொழிலதிபர் கூட்டத்திற்காக புறப்பட்டவள் பழைய நினைவுகளிள் ஆழ்ந்து கண்ணீரில் கறைந்தவளை அவளின் மொபைல் ஒலி நடப்பிற்கு கொண்டு வந்தது.

"சொல்லுங்க மேனேஜர் சார்...ஆ...நா கிளம்பிக்கிட்டே இருக்கேன்... இன்னும் அரைமணில அங்கே இருப்பேன்...சரி...சரி.."

லேசான ஒப்பனையோடு கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவையில் புறப்பட்டு தங்கள் காரில் கூட்டம் நடக்கும் இடத்தை சென்றடைந்தாள்.

கூட்டம் முடிந்து பப்பே முறை உணவை தட்டில் பறிமாறிக் கொண்டு ஒதுக்குபுறமான இடத்தில் அமர்ந்து அதை உண்டாள்.உண்டு முடித்து கை அலம்பிய போது அவள் மொபைல் ஒலித்தது.திரையில் தெரிந்த வினோத்தின் பெயரை பார்த்தவள் சிறு புன்னகையோடு பதில் பட்டனை அழுத்தினாள்.வினோத் அவளின் உயிர் நண்பன்.சிறு வயது முதல் பள்ளி கல்லூரியில் அவளோடு ஒன்றாகப் படித்தவன்.மேற்படிப்பிற்காக அவன் அமெரிக்கா சென்ற பின் இருவரின் தொடர்பும் விட்டு போனது.நான்கு வருடங்களுக்கு பிறகு அவனோடு பேச போவது அவளுக்கு பல நாட்களுக்கு பிறகு சந்தோஷத்தைக் கொடுத்தது.

"ஹலோ வினு! எப்படிடா இருக்க? இப்பதான் என் நினைப்பு வந்ததுதா? இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கியா?அம்மா சுஜி எல்லாம் எப்படி இருக்காங்க?ஏன்டா ஒண்ணுமே பேச மாட்டேங்கற குரங்கு"

"நீ உன்னோட கேள்வி கணைகள நிறுத்தினாதானே நா பேச முடியும்...திவி நீ கொஞ்சம் கூட மாறலடி அதே பட படா பட்டாசு தான்..."

"அத விடு நா கேட்டதுக்கு பதில சொல்லுடான்னா என்னெ கலாய்க்கறான் மாங்கா"

"சரி சரி... ஒண்ணு ஒண்ணா சொல்றேன்...நா சூப்பரா இருக்கேன், அமெரிக்காலேந்து நேத்திக்குதான் வந்தேன், அம்மா சுஜி எல்லாம் நல்லா இருக்காங்க.... அதெல்லாம் சரி நீ எப்படி இருக்க? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே?! அந்த சாடர் பாக்ஸ் போன் பண்ணப்போ சொன்னாளே!உன் உயிர் நண்பன் நான்... எனக்கு ஒரு வார்த்த சொல்லாத கல்யாணம் பண்ணிக்கிட்டே...சரி போகுது...உன் ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு...உன் பக்கத்தில இருந்தா அவருகிட்ட போன் கொடு...அவருகிட்ட உன்ன பத்தி கொஞ்சம் சொல்லி புண்ணியத்தை கட்டிக்கறேன்"

"..........."

தாங்கமாட்டாமல் அழத் தொடங்கினாள் திவ்யா.

"ஏய் திவி!ஏதுக்குடி அழற....? சொல்லிட்டு அழுடி.... என்னாச்சு?"

"அவரு....அவரு...என்னெ விட்டுட்டு போய்டாருடா வினு.... இரண்டு வருஷமாச்சு... ஆக்ஸிடென்ட்ல....."

வெடித்து சிதற தொடங்கும் அழுகையை சுற்றுப்புறத்தை மனதில் கொண்டு அடக்கிய திவ்யா லேசாக விசும்பினாள்.

"திவி!"

"அழாத திவி!சே நடந்தது தெரியாம கிறுக்குதனமா கேட்டு உன்ன அழ வச்சுட்டேன்"

இதற்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட திவ்யா,

"விடுடா நீ தெரியாமதானே கேட்ட!சரி அதெல்லாம் விடு...நா நாளைக்கு வீட்டுக்கு வரேன்...அப்ப பேசலாம்..சரி வக்கட்டுமா"

"சரி திவி! நாளைக்கு கண்டிப்பா வரணும் சரியா?பாய்!"

"பாய்!"என்று போனை அழுத்தியபடி திரும்பிய திவ்யா யார் மேலோ பலமாக மோதினாள்.

"சாரி சாரி தெரியாம....."வார்த்தைகள் அந்தரத்தில் நின்றன... கண்கள் பெரிதாகி மூச்சு நின்றுவிடும் போலானது.எதிரில் நின்ற ஆறடி உயர மனிதனை அதிர்ச்சியோடு பார்த்த திவ்யா தன் நினைவிழந்து வேரறுந்த மரம் போல் நிலத்தில் விழுந்தாள்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தமிழ்சுரபி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
திவ்யமதியின் மீது, மோதியது
அவளோட கணவன், சித்தார்த்
தானே, தமிழ்சுரபி டியர்?
ஹைதராபாத் விபத்தில்,
சித்தார்த் இறக்கவில்லை-ன்னு
நினைக்கிறேன் பா
சொத்துக்காக, தணிகாசலமும்
மதனும், இந்த விபத்தை
உண்டாக்கினார்களா?
தணிகாசலம் சித்தப்பாவின்
மகன் மதன், திவ்யமதிக்கு
ஏதாவது பிரச்சனைகள்
கொடுப்பானோ, தமிழ் டியர்?
 
Last edited:

MeenaTeacher

Well-Known Member
Really a different kind of story Mam..a happily married woman, then a widow meeting someone is really a courageous one Mam

All the very best, I will definitely support this story:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top