sithara vaiththa sempaavaiyaal - 02

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 02


“காலைல செம்ம தூக்கம்டி ஸ்கூலும் இல்லையா எதுக்கு வெட்டியா காலங்கார்த்தால எழுந்துக்கனும்னு தூங்கினேன்... என் அம்மாக்கு மூக்கு வேர்த்திடிச்சு... பூரிக்கட்டை பறந்து வந்து நடுமண்டைல நச்சுன்னு விழுந்திச்சு... அப்போ எழுந்தவ தான் ஐஞ்சு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம ரொம்ப வேலைவாங்கிட்டாங்கடி என்னை பெத்த அம்மா...” ஷிக்கு புலம்ப,

“அட நீ வேற உனக்காச்சும் பூரிக்கட்ட எனக்கு அம்மிக்கல்லு வந்து விழுந்திருக்கும் ஜஸ்ட்டு மிஸ்ஸு இல்ல இந்நேரத்துக்கு டெட்பாடி தான்”

“ஹா ஹா... எவ்ளோ வயசானாலும் மோர்னிங் மம்மி கிட்ட திட்டு வாங்காம வேக்கப் ஆனா அந்த நாள் நல்லாவே இருக்கிறதில்ல சோ இதுக்காக நாம பெருமைபட்டே ஆகணும் மை டியர் ஷாஷி...”

“அது என்னவோ உண்மைதான்...” ஆமோதிப்பாய் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டாள் ஷாஷி, “சரி அத விடு நைட் சீரியல் பார்த்தியா நான் பார்க்கல.. மம்மி படி படின்னு படிச்சப்றம் தான் எழ விட்டிச்சு...... என்னாச்சு ரெண்டு பேரும் இப்போவாச்சும் சேர்ந்தாங்களா... வில்லி யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா...”

“அதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்தில சேராதுடி... இதுக்குத்தான் இந்த சீரியல் பார்க்ககூடாதின்னு சொல்றது... ஒரு தடவை பார்த்தா அடுத்தடுத்து பார்க்கணும் போலவே இருக்கும்... பார்க்கலேன்னா என்ன நடந்திச்சோன்னு டென்ஷனா இருக்கும்... தொடர்ந்து பார்த்தா இவங்க எப்போ சேருவாங்க இவங்க இப்போ பிரிவாங்கன்னு கடுப்பா இருக்கும்...” மிகப்பெரிய உண்மையை வெகு சாதாரணமாய் புட்டு புட்டு வைத்தாள் ஷிக்கு. அதை கேட்டு மீண்டும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஷாஷி. தோழிகளின் உரையாடலை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாள் பாலா.

இத்தனையும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் அமர்ந்து தான் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு மர பெஞ்சில் இரண்டாவது வரிசையில் மூன்று தோழிகளும் அமர்ந்திருந்தனர். இந்த வருடம் கடுமையாய் படித்தே ஆகவேண்டும்.. இது தான் அவர்களின் முக்கியமான வருடமும் கூட.

பாலாவின் செவிகள் தோழிகளின் பேச்சில் கவனமாய் இருந்தாலும் மனமோ நில்லாமல் எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருந்தது. பழைய குப்பை கிளறப்பட்டது போல் அதை நினைக்கும் போதே நெஞ்சினுள் தடக்தடக் என ரயில் ஓடும் ஓசை. இதயம் வழமைக்கு மாறாய் வேகமாய் துடித்தது. கைகளில் சிறு நடுக்கம்.. கண்களில் சிறு கலக்கம்.

கைக்குட்டையால் முகத்தில் துளிர்த்த வியர்வை துளியை யாரும் அறியாமல் ஒற்றி எடுத்துக் கொண்டாள்.

யாரும் பார்க்கவில்லை என அவள் நினைத்திருக்க அவளையே பார்த்திருந்த அவன் கண்களுக்கு அது தப்பவில்லை. அவளை உற்று நோக்கினான். வழமைக்கு மாறாய் அவள் கண்களின் எட்டிப்பார்த்த ஒருவித பாவனை காரணமின்றி சிவந்திருந்த கன்னங்கள் அவனை யோசனைக்குள்ளாக்கியது.

அவள் வயதையொத்த மாலைநேர வகுப்பிற்கும் வரும் அவள் தோழன் தான். ஆனால் வேறு பள்ளியில் பயில்கிறான். அதனால் தானோ என்னவோ பெரிதாய் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை.

தேவைக்கு மட்டும் சில வார்த்தைகள். ஷிக்கும் ஷாஷியும் அவனிடம் நன்றாகவே பழகுவர். பாலாவிற்கு அது பழக்கமில்லை. ஒரு வித சங்கடத்துடன் கூடிய தயக்கம். அவளின் தயக்கம் உணர்ந்து அவளை சீண்டுவதிலே அவன் பொழுது போய்விடும்...

இப்போது அவள் முகத்தை பார்த்தவன் யோசனையுடன் ஷாஷியையும் ஷிக்குவையும் நோக்கினான். இருவரும் பேச்சில் மும்முரமாய் இருக்க ‘இதுகள...’ பல்லை கடித்தவன் புத்தகத்தின் ஓரத்தில் சிறு துண்டை கிழித்து அதை உருண்டையாக்கியவன் ஷாஷியை நோக்கி குறிபார்த்து எறிய அதுவோ அவளுக்கு அருகில் இருந்த பாலாவின் மேல் போய் விழுந்தது.

திடீரென தன்னில் எதுவோ விழவும் திடுக்கிட்டவள் அது புத்தகத்தின் தாள் என்பதை உணர்ந்து எங்கிருந்து வந்திருக்கும் என்பதை கணக்கிட்டவளாய் பார்வையை திருப்ப அங்கு அசடு வழிந்து தலையை தட்டிக் கொண்டிருந்த ஹர்ஷா விழுந்தான். அவள் அவனை புரியாமல் நோக்க அவனுமே அவள் மீது விழும் என்பதை அறிந்திறாததால் சிறு சங்கடத்துடன் அவளை பார்த்திருந்தான்.

அவன் முகத்தை பார்த்தவள் ‘என்ன’ எனும் விதமாய் புருவத்தை உயர்த்தினாள்.

அதை பார்த்து ஆசுவாசப்பட்டவன் அவளின் கேள்விக்கு பதிலளிக்காது அவள் புறம் ஆட்காட்டி விரலை நீட்டி பின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி ‘உனக்கு என்னாச்சு’ என இதழசைத்தான்.

அதை கேட்டு திடுக்கிட்டவள் சடுதியில் தன் முகத்தில் தோன்றிய உணர்வுகளை மறைத்துக் கொண்டாள். அவன் கண்டுகொள்ளும் முன்னமே.

ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி நீட்டி பின்பு கை விரல்களை அசைத்தவள் ‘எனக்கு ஒன்னுயில்ல’ என அவனைப் போலவே இதழசைத்தாள்.

அதற்குள் பாலாவின் புறம் திரும்பிய ஷாஷியும் ஷிக்குவும் இவர்களின் நயன பாஷையை பார்த்து வாயை பிளந்து ‘என்னடா நடக்கிது இங்க..’ என இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தனர்.

“டேய் தம்பி... என்னடா பண்ற... அவ உனக்கு அக்கா முறையாகனும்... இனிமே இப்பிடி சிக்னல் காட்றத பார்த்தேன் தொலைச்சிடுவேன்... தொலைச்சு...” அவனை விட சில மாதங்கள் முன்னால் பாலா பிறந்ததால் வேண்டுமென்றே அவனை ஓட்டினாள் ஷாஷி. கூடவே ஒப்புக்கு சப்பாய் ஷிக்குவும்.

“அடச்சி சும்மாயிரு... அவன் என் தம்பிடி.. அவனை போய்....” பாலாவும் தோழிகளுடன் தன்னை இணைந்து கொண்டாள்.

“ஹம்மோ மூணு பேரும் கூட்டு சேர்ந்திட்டீங்களா இனி நான் வாயை தொறப்பேன்...” பாவனையுடன் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டு முன்னால் திரும்பிக் கொண்டான். தோழிகள் மூவருக்கும் வெடித்து கிளம்பியது சிரிப்பு.

அதற்குள் ஆசிரியர் வந்து விடவே அத்தனை நேரம் மீன் சந்தை போல் சலசலத்துக் கொண்டிருந்த இடம் நொடியில் மயான அமைதியாக வகுப்பை கவனிக்க ஆரம்பித்தனர். கணித வகுப்பு என்பதாலோ என்னவோ மாணவர்கள் சந்தேகம் கேட்பதும் ஆசிரியர் நிவர்த்தி செய்வதுமாய் நேரம் ஓட மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வகுப்பு நிறைவடைந்திட மீண்டும் மீன் சந்தை உருமாற சலசலத்தபடி வெளியேறினர்.

“இன்னிக்கு என்னடி படிச்சோம்... ஒன்னும் மண்டைக்குள் ஏறமாட்டேங்கிது” வெளியில் வந்த ஷாஷி புலம்ப அவளை சந்தேக கண் கொண்டு பார்த்தனர் ஷிக்குவும் பாலாவும்.

“சார் சொல்லித்தரும் போது எதடி பராக்கு பார்த்திருந்த...”

“அப்பிடியில்லடி உனக்கு தான் தெரியுமே.. எனக்கு சுட்டுப்போட்டாலும் மேத்ஸ் மட்டும் மண்டையில ஏறாதின்னு... அதுக்கு சொன்னேன்...”

“கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கிற மாதிரி நல்லத்தான்டி சமாளிக்கிற ஆனா பாரு எங்களுக்கு அப்போவே காது குத்திட்டாங்க நீ ஒன்னும் புதுசா குத்த வேணாம்...” தன்னுடன் பாலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்ட ஷிக்கு “அப்பிடித்தானேடி” பாலாவை பார்க்க, தோழியின் பார்வையில் “அப்பிடியே தான்..” என்றாள்.

‘அது’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு ஷாஷியை மிதப்பாய் பார்த்தாள் ஷிக்கு.

ஷாஷி ‘என்னை காப்பாத்தேன்’ என்பது போல் பாலாவை பாவமாய் நோக்க அவளின் பாவனையில் ‘அச்சோ’ பரிதாபம் கொண்டவள் “சரி சரி போனா போகுது விடு ஷிக்கு பாவம் அவ... அவளே காதலிக்கிறவன் கிட்ட காதலை சொல்ல முடியாம தவிக்கிறா.. நீயும் சும்மா சீண்டாத பாவம் பொண்ணு...”

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி... நானும் அவர்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.. ஆனா முடியல... அவரும் இப்போ சொல்லுவேன் அப்றோம் சொல்லுவேன்னு எதிர்பார்க்கிறாரு... தொண்டவரைக்கும் வார்த்தை வருது.. ஆனா சொல்ல முடியல.. இப்போ இந்த காதல் தேவையான்னு கூட தோணுது... ஆனா அவர என்னால மறக்கமுடில... வீட்டில தெரிஞ்சா என்னாகும்ன பயம் வேற... காத்திருந்து ஏமாந்து போறாரு...” கண்களில் திரண்ட நீருடன் பாலாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.

தோழிகள் இருவரும் ஷாஷியின் வலியுணர்ந்து அவளை ஆறுதலாய் தேற்றினர். பாலாவிற்கு ஷாஷியின் பேச்சு அதுவும் ‘காத்திருந்து ஏமாந்து போறாரு’ என்ற வரி நெஞ்சுக்குள் புயலை உண்டாக்க மனதினுள் புதையுண்ட நினைவுகள் மேலெழ அதை தாங்கும் திராணியின்றி மூச்சடைத்தது.

‘காத்திருந்து ஏமாந்து போற வலியை எனக்கு கொடுத்திடாத...’ அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் செவியில் ஒலித்து அவளை திண்டாட செய்தது. மறக்க முடியாமல் இதயத்தின் ஆழத்தில் பொதித்து வைத்த வார்த்தைகள் தோழியின் பேச்சில் சுருட்டிக்கொண்டு கிளம்பும் சூறாவளியாய் உள்ளிருந்த அத்தனையையும் வெளித்தள்ளிக் கொண்டு மேலெழும்பியது.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
இதற்கு மேலும் இங்கு நிற்க முடியாமல் பதட்டத்துடன் நிமிர்ந்தவள் ஆட்டோ வந்திருக்கவும் ‘எப்போவும் லேட்டா வாரவரு இன்னிக்கு நேரத்தோட வந்திருக்காரு.. அதுவும் நல்லதுக்கத்தான்....’

“சரிடி... பார்த்து போங்க... ஷாஷி எதபத்தியும் கவலைபடாத... இப்போதைக்கு படிப்பு தான் நமக்கு முக்கியம்.. அதில மட்டும் கவனத்த வச்சுக்கோ.... இந்த காதல் வேணாம்னு சொல்லல... கொஞ்ச நாளைக்கு நல்லா படி... நல்ல மார்க் எடுத்தா தான் நம்ம பேரெண்ட்ஸ் சந்தோஷ படுவாங்க... என்ன நான் சொல்றது புரியுதா... ஷிக்கு இவளுக்கு எடுத்து சொல்லு... பத்திரமா போங்க... வீட்டுக்கு போனதும் போன் பண்ணுங்க என்ன...” நல்ல தோழியாய் அக்கறையுடன் உரைத்தவள் வீட்டிற்கு புறப்பட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் வழியில் எதிர்பட்ட அண்ணியிடம் கூட பேச்சு கொடுக்காது தன் அறையினுள் நுழைந்து கதவை மூடி தாளிட்டவள் கதவிலே சாய்ந்து நின்று கொண்டாள்.

மறந்த ஒன்று என்பதை விட மறக்க வேண்டும் என நினைத்த ஒன்று மீண்டும் நினைவு வந்ததில் பேதை பெண்ணவள் துவண்டு போனாள். நெஞ்சுக்குள் போர் முரசு கொட்டுவது போல் இருந்தது.

எத்தனை முயன்றும் மறக்க முடியாமல் தவித்து இப்போது தான் கொஞ்சமாய் மீண்டிருந்தாள். அது கூட அந்த கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்... நினைவு படுத்தி விட்டானே.. கண் மூடி நின்றவளின் விழியில் இருந்து கண்ணீர் சொரிந்தது. துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் கட்டிலில் வந்து விழுந்தவளின் மனமோ அந்த வார்த்தைகளை கூறியவனின் நினைவை கனத்த மனதுடன் அசைபோட்டது.


@@@கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு..


மாளிகை இல்லாவிடினும் அழகாய் வடிமைக்கப்பட்ட மாடி வீடு. தோட்டம் முழுவதும் வண்ண மலர்களாலும் தோரணங்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க வீடும் அதே தோரணையில் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வீடு முழுவதும் அலங்காரத்திற்காய் சிகப்பு பிங்க் என விதவிதமான திரைச்சிலைகள் தொங்கவிடப்பட்டிருக்க அதே நிறத்தில் பலூன்களும் தன் பங்குக்கு தொங்கிக் கொண்டிருந்தன. இடையிடையே மலர் தோரணங்கள் சொருகி இருக்க வீடு முழுவதும் மின் விளக்குகளின் ஒளியில் பிரகாசமாய் மின்னியது. பார்க்குமிடமெல்லாம் கண்ணை கவர்ந்தது.

நிச்சயதார்த்த விழா இனிதே நடந்து முடிந்திருக்க மணமக்களின் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் இடையே நடைபெறும் சங்கீத் பங்சன் ஆரம்பமாகி இருந்தது.


ச த நிரி ஆ… ச த ஆ…
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ… ஆ…
கம தத நிநி நிகரிகசரிச ஆ… ஆ… ஆ…



மருதாணியிட்ட கைகள் அதில் குடிகொண்டிருந்த வளையல்கள் துள்ளிக்குதித்து ஓடிய கால்கள் அதில் ஒய்யாரமாய் வீற்றிருந்திருந்த கொலுசுகள் அவளின் சிவந்த மேனியை எடுப்பாய் தழுவிய டிசைனர் லெஹெங்கா என அழகு தேவதையாய் மின்னினாள் மதுபாலா.

தமையனின் திருமணத்தில் கலகலப்புடன் வலம் வந்தவளை உறவுக்கார பெண்கள் மாப்பிள்ளை வீட்டு சார்பாய் நடனமாட சொல்லி வற்புறுத்த சிறு சிணுங்கலுடன் ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கொண்டாள்.


கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு


வீட்டுக்குள் மான்கள் படையெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட



சுற்றி இருந்தவர்கள் கை தட்டி ஆர்பரிக்க பாலாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. ஒற்றை கை கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டவள் ஒளிந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்த சித்தி பெண்ணை இழுத்து தன்னுடன் நிறுத்திக் கொண்டாள்.


குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா

சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா
துள்ளி வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை


திருமண வீடு என்றும் தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட

வாண்டுகள் எல்லாம் கை கொட்டி பாட


ஆடலும் பாடலும் கைவந்த கலையாயினும் சுற்றியுள்ள சுற்றத்தார் முன்பு சிறு வெட்கத்துடன் அவள் கைகளை சுழற்றி மயக்கும் மோகன புன்னகையுடன் ஆடிக் கொண்டிருந்தவளை விட்டு கண்களை அகற்ற முடியாமல் தானும் அவர்களுடன் இணைந்து அவளருகில் நெருங்கி போவதும் விலகி வருவதுமாய் மதுவை சுற்றும் வண்டினை போல் மாதுவை சுற்றி வந்தது அந்த ஆண் வண்டு.

ஆறடிக்கும் சற்று குறைவான உயரத்தில் தான் இருந்தான். சிரிக்கும் கண்களும் சிந்தும் இதழ்களும் அவனை அழகாய் காட்டியது. மாநிறத்து மேனி. அவனின் வசீகரிக்கும் புன்னகைக்கு முன் சற்று மங்கித்தான் போனது. காதில் சிறு கடுக்கன். கழுத்தில் பாசிமணி மாலை. அதை மறைத்திருந்த குர்தியின் சால்வை. கையில் கருப்பு பட்டிகள் அழகுக்காய்.


ஊரும் உறவும் இங்கு ஒன்று பட்டாலே

வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஒட்டாதே
எங்கள் அகத்தின் துயர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ… பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

(ஓ) வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ

வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ

நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

விண்ணும் மண்ணும் கூடி (ஓ) வாழ்த்தட்டுமே
மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க…

மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க…



தமயனை பார்த்து குறும்பாய் சிரித்து அண்ணியை சொந்த்துடன் கிண்டல் செய்து இருவருக்கும் கண்ஜாடை காட்டி திருமண விழாவுக்கான குதூகலத்துடன் ஆடிப்பாடி கொண்டிருந்த பாலாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன். அவளின் கடைக்கண் பார்வைக்காக தவமிருந்தான்.

‘ஏய் திருடி... என்ன கொஞ்சம் பார்த்தா தான் என்ன...’ அவன் இதயத்தை கொய்தவளை செல்ல பெயர் வைத்து ஆசையுடன் அவள் பார்வைக்காய் காத்திருந்தான்.

இவனின் தவிப்பு அவளை எட்டியதோ இல்லை எதேர்ச்சியாய் திரும்பினாளோ இவன் இருந்த புறம் திரும்பிய பாலா அவனிற்கு அருகில் நின்றிருந்த அத்தை மகளை பார்த்து கையாட்டி சிரித்து வைத்தாள்.

முத்துப்பல் வரிசை போல் அழகாய் மின்னிய அவளின் தெத்து பற்களும் புன்னகை சிந்தும் போது மின்னல் போல் சிதறி மறைந்த கன்னத்து குழியும் நிமிடத்தில் அவனை நிலை குலைய செய்ய போதுமாய் இருந்தது.

‘ஹையோ கொல்றாளே...’ இடது பக்கமிருந்த இதய பகுதியை அவஸ்தையுடன் தடவிக் கொடுத்தான்.

அத்தை மகளை பார்த்த வண்ணம் கைகளை தட்டிக் கொண்டே அவளருகில் வர இவளின் வருகையில் ஆர்வமாய் காத்திருந்தவன் இவள் நெருங்குகையில் மேனியில் கமிழ்ந்த வாசனையில் சொக்கிக் போனான்.

“இங்க என்ன பண்ற நிஷா, வா வந்து எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ...” கை பிடித்து இழுத்து செல்ல முயல அவள் மறுக்க இவள் முறைக்க, அவை மொத்தமும் அவனுள் அழகுற சேமிக்கப்பட்டது.

“என்னடி... எதுக்கு இப்பிடி பண்ற.. வர போறியா இல்லையா...” பற்றிய கையை விடாமல் இழுக்க அதை செயல்படுத்த முடியாமல் விரித்து விட்டிருந்த துப்பட்டா நழுவி விழுந்து வைக்க சிறு சுனங்களுடன் அதை விசிறி தோளில் போட்டுக் கொண்டாள்.

அதுவோ ஆசை நாயகனின் முகத்தில் பட்டு அவனை மெய்மறக்க செய்து அழகிய சதியாய் அவன் கழுத்து மறைவில் கிடந்த பாசி மணியில் சிக்குண்டது.

பாலா, நிஷாவை இழுத்துக் கொண்டு முன்னேற இவன் அவளின் மெல்லிய துப்பட்டாவினை விடுவிக்க மனமில்லாமல் அவளின் இழுப்புக்கு செல்ல ஆண் மகனின் அசட்டு காதல் அழகாய் அரங்கேறியது பல பேர் முன்னிலையில்.

வெளிவேலையாய் ஆர்யனை தேடிய அவன் மாமன் மகன் ரித்விக் அவன் செல்லும் கோலத்தை கண்டு தலையில் அடித்தவனாய் அவனருகில் சென்று முதுகில் ஒரு போடு போட்டான்.

“மச்சான்... என்ன பண்ற.. உன் காதல் சீனை இங்கயும் விட்டு வைக்கலையா...”
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அதில் சுய உணர்வுக்கு மீண்டவன் தான் நின்ற கோலத்தை கண்டு தலையில் அடித்தவனாய் அசட்டு சிரிப்புடன் அவனை பார்த்தான்.

அதற்குள் முன்னே சென்ற பாலா பின்னால் யாரோ இழுப்பது போல் இருக்க நிலை தடுமாறி சடுதியில் நிலையாய் நின்று கொண்டவள் பின்னால் திரும்பி பார்த்தாள்.

ரித்விக்கின் அதட்டலில் தன்னில் மாட்டிக் கொண்டிருந்த அவளின் துப்பட்டாவை விடுவித்துக் கொண்டிருந்த ஆர்யன் மிருதுவாய் அதை விடுவித்து நிமிர அறியா பார்வையுடன் அவனையே புரியாமல் புருவ சுழிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் பாலா.


போற போக்கில் ஒரு லுக்க உட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சமா காமம் கூட வச்சி செஞ்சிட்டாளே
ஃபர்ஸ்ட்டு லுக்க வச்சி பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சிக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓரப்பார்வையாளே என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே என்னை செஞ்சிட்டாளே
காதல் அம்பு உட்டு என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே வச்சி செஞ்சிட்டாளே



இத்தனை நேரம் அவள் பார்வைக்காய் தவமிருந்தவன் அவள் தன்னை பார்த்தும் ஒரு நொடி திகைத்து போனவன் மறுநொடி கவர்ச்சியாய் புன்னகை சிந்தினான்.

அதை பார்த்து சிறு மருட்சியுடன் இதழ் சுழித்தவள் அவன் கையில் இருந்த தன் துப்பட்டாவை பிடித்து இழுத்துக் கொண்டு திரும்பி திரும்பி அவனை பார்த்த வண்ணம் தன் வீட்டினருடன் சென்று நின்று கொண்டாள்.

மறுநாள் திருமணத்தின் போதும் இதே கதை தான். அவள் போகுமிடமெல்லாம் நிழலாய் அவளை பின்தொடர்ந்தான். முதலில் அதை அறியாதவள் அதன் பின்பே அவனின் செயலை கண்டு பயத்துடன் மணமேடையில் நின்று கொண்டிருந்த தன் குடும்பத்தினருடன் நின்று கொண்டாள்.

“பாலா ஸ்டோர் ரூமில் வெள்ளிகின்னம் ஒன்னு இருக்கு எடுத்திட்டு வாடா...” கலையரசி உரைக்க,

“ம்ச்... மா... இப்போவும் என்னைய சும்மா இருக்க விட மாட்டியா...” சிணுங்கிக் கொண்டு மறுத்தாள்.

“அதே தான் நானும் சொல்றேன்... இப்போ கூட ஒழுங்கா ஒரு வேலை பார்க்க மாட்டியா...” மகளிற்கு மட்டும் கேட்கும் விதத்தில் கோபமாய் முணுமுணுக்க, அதில் பல்லை கடித்தவள் காலை தரையில் உதைத்துக் கொண்டு ஸ்டோர் ரூம் நோக்கி சென்றாள்.

‘இதுக்குள்ள எங்கேன்னு போய் நான் தேடுவேன்... இந்த அம்மாவ...’ சிறு எரிச்சலுடன் அடுக்குகளில் தேடிக் கொண்டிருந்தவளின் முன் திடுமென குதித்தான் ஆர்யன்.

முதலில் யார் என தெரியாமல் பயத்தில் அலற போனவளின் வாயை தன் கரம் கொண்டு மூடியவன் “ஷ்.. ஷ்.. நான் தான்...” என்க,

“நீ தான்னா... அமெரிக்கா ப்ரெசிடெண்டா...” பயத்தில் இருந்தவள் வாயை மூடியிருந்த அவன் கரத்தை தட்டி விட்டு எரிச்சலுடன் மொழிந்தாள்.

சட்டென யாரிடத்திலும் பேசிறாதவள் அவனிடத்தில் தன் இயல்பை காட்டி விட்டாள்.

அதை கேட்டு புன்னகை சிந்தியவன் “அப்பிடியும் வச்சிக்கலாம்...” குறும்பாய் சிரிக்க,

அதில் கோபம் கொண்டவளுக்கு தற்போது பயம் பிடித்துக் கொண்டது. வெளியில் திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் இருக்க இந்த அறைக்குள் அந்நிய ஆணுடன் தான் இருப்பதை பார்த்தால் அவ்வளவு தான்.. சங்கூதிடுவாங்க... மனதிற்குள் பயத்துடன் புலம்பியவள் அவனை பயத்துடன் பார்த்தாள்.

அதை பார்த்தவனுக்கு ஏனோ திடுமென விபரீதமாய் அவளை சீண்டும் ஆசை முளைத்தது.

பார்த்து முழுதாக சில நாட்கள் கூட முடியாத நிலை தான். ஆனால் அவன் மனதில் அழகுற பதிந்து விட்டாள். மறக்க முடியவில்லை. கனவிலும் நனவிலும் பெரிதும் இம்சிக்கிறாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இந்த பக்கம் வரவும் தானும் அவளுடன் உள்ளே நுழைந்து விட்டான். காதலை சொல்லிக் கொள்வோம் என்ற எண்ணம்.

முன்பிருந்த தைர்யம் போய் சிறு பயத்துடன் “ப்ளீஸ் கொஞ்சம் வெளிய போறீங்களா... யாராச்சும் பார்த்தா தப்பாகிடும்...” இதழை கடித்துக் கொண்டு முணுமுணுத்தாள். முகத்தில் வியர்வை துளிகள் கூட அரும்பி விட்டது.

“ஏன் பார்த்தா என்ன... இதில் தப்பாவதற்கு என்ன இருக்கு...”

“இல்ல... ப்ளீஸ்...” கண்கள் வேகமாய் சுழன்று அறைக்கதவை நோட்டமிட்டது. யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம்.

“முடியாதுன்னா...” கண்சிமிட்டி கூறியவன் மெதுவாய் அவள் புறம் நகர்ந்தான்.

அதில் முகம் வெளிற அதிர்ந்த நெஞ்சத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் முன்னேற இவள் பின்னால் நகர ஒரு கட்டத்தில் அங்கிருந்த மர அலுமாரி அதற்கு மேல் அவளை நகர விடாமல் தடுத்து அதில் ஒன்ற செய்தது. அச்சத்தில் பல்லி போல் அதில் அப்பிக்கொண்டு நின்றாள்.

அதில் வெற்றி சிரிப்புடன் சிறு அடி இடைவெளியில் வந்து நின்றவன் அவளை பார்த்து கண்சிமிட்ட அவளோ அச்சத்தில் அங்கிருந்து விலகி செல்ல பார்க்க அதை தடுக்கும் விதமாய் தன் இடது கரத்தை அலுமாரியில் ஊன்றிக் கொண்டான்.

அதில் மிரண்டவள் மறு பக்கமாய் செல்ல முயல வலது கரம் கொண்டு அதையும் அடைத்து விட்டான்.

“எ..என்ன.. ப்..ப..பண்றீங்க... நான் போகணும் வழி வி..விடுங்க...” வாய் குழறியது.

“நான் என்ன பண்ணேன்... ஒன்னும் பண்ணவில்லையே... சும்மா தானே இருக்கேன்... நீ வேணா போய்க்கோ...” தன் மனதிற்கு பிடித்தவள் தன் கை கிட்டும் தூரத்தில்; அவள் வாசனையை முகரும் தூரத்தில் நிற்கிறாள் என்ற எண்ணமே அவனை மயக்கம் கொள்ள செய்ய மயக்கத்துடன் கூறினான்.

அவனின் பேச்சில் அவனை முறைத்தவள் ‘இப்பிடி நந்தி மாதிரி வழி மறிச்சு நின்னா நான் எப்பிடி போறதாம்... அண்ணியோட தம்பின்னு பார்க்காம கன்னத்தில ஒரு அப்பு அப்பினா தான் சரி...’ கோபமாய் மனது முணுமுணுத்தது.

அதற்குள் அறை வாசலில் பேச்சுக் குரல்கள் கேட்க இன்னும் வேகமாய் நெஞ்சம் அதிர அதற்கு மேல் தாமதிக்காமல் தன் வெண்டை பிஞ்சு விரல் கொண்டு ஆண் மகனின் வலுவான மாராப்பை பிடித்து உந்தி தள்ளினாள்.

மயக்கத்தில் இருந்தவன் எதிர்பாராத செயலில் நிலை தடுமாற அதை சாதகமாக்கி அவனிடமிருந்து விலகியவள் அங்கிருந்து நகர அவள் பிரிந்து செல்வதை விரும்பாதவனாய் அவளை தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் இதயத்தின் ஓலத்தை தடுக்க முடியாமல் தன்னையும் மீறி முன்னேறியவளின் கை பிடித்து இழுத்தான்.

அதை எதிர்பாராதவள் இழுத்த வேகத்தில் அவனின் தேக்கு மர தேகத்தில் தன் இளமை மோத திருமணத்திற்காய் அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையில் மேல் பட்டனை திறந்து விட்டிருந்தவனின் முடிகள் அடர்ந்த பரந்த மார்பில் தன் செவ்விதழ் மோத நிலை குலைந்து நின்றாள்.

முதல் தடவையாய் அறிந்த ஆணின் ஸ்பரிசம் அவளை எங்கோ ஆழ்கடலுக்குள் அமிழ்த்தியது போல் இருந்தது. மூச்சு திணறலாய் வெளிப்பட்டது.

பட்டும்படாமலும் அழுந்த மோதிய அவள் இதழ் முத்தம் அவனை பற்றியெரிய செய்ய இதுவரைக்கும் பல பெண்களின் பின்னால் சுற்றி பல பேரிடம் காதல் வசனம் பேசி பொழுதை கழித்தவன் இப்போது முதல் தடவை தன் மனதை தொட்ட பெண்ணின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கிறங்கிப்போய் கிடந்தான்.


“முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி


குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
பேபி என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா...”



சிதறும்...
 

Saroja

Well-Known Member
நன்றாக இருந்தது இந்த பிள்ளைகள் எப்படி இப்படி எல்லாம் பேசுகிறார்கள் அழகுட செல்லம்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top