Sanjana
கதைத்திரி-29
அத்தியாயம் 74
மறுநாள் சஞ்சு வர , மெதுவாக விவேக் விசயத்தை ஆரம்பிக்க , சஞ்சு உடனே மறுத்தாள் . “ஒரு வருடம் போகட்டும் அண்ணா.”
“ஏன் வேண்டாம் என்கிறாய் சஞ்சும்மா ?”
“இப்போது தான் இத்துறையில் , நான் வளர்ந்து வருகிறேன் . மேலும் எங்கள் டீமின் அடுத்த பிராஜெக்ட் ஒரு பீரியடு படம் , நிறைய...
அத்தியாயம் 72
காலம் வேகமாக ஓட , மூன்று வருடம் முடிந்தது. இந்த மூன்று வருடத்தில் ராஜி கண்ணன் தம்பதியர் , தங்கள் மகன் ரவிக்கு திருமணத்தை முடிக்க , குடும்ப வட்டத்தில் புதிய அங்கத்தினர் இணைய, மகிழ்ச்சி பெருகியது . இடைப்பட்ட காலத்தில் சஞ்சுவும் , கீத்துவும் அவர்கள் பணியில் வாகை சூடியிருந்தனர் ....
கதைத்திரி -27
அத்தியாயம் 70
சஞ்சு கல்லூரிக்கும் தொடர்ந்து போக ஆரம்பித்தாள். வாழ்க்கை சீராக ஓடியது , இந்த ஒன்றை வருடத்தில் , விவேக் சஞ்சுவைத் தொடர்ந்து கவுன்சிலிங் அழைத்துச் சென்றான் . மெல்ல மெல்ல தன் பயங்களை , தடுமாற்றங்களை , தயக்கங்களைத் திறந்தாள் . சஞ்சு மனதளவில் நன்றாகத் தேறி வந்தாள் .
ரமேஷ் மற்றும்...
கதைத்திரி-26
அத்தியாயம் 68
நாட்கள் மெல்ல நகர , சஞ்சு தைரியம் பெற்றவளாக தனியாக நடைபயிற்சிப் போக ஆரம்பித்தாள் . நான்கு நாட்கள் சென்றிருக்க , தற்செயலாக அன்று நடைபயிற்சியில் விஜயனை நேருக்நேர் சந்திக்க , மெதுவாகக் தலையைக் குனிந்தபடி கடக்க முயன்றாள் .
“சஞ்சு…” என்று விஜயன்அழைக்க , நின்றாள் .
“எப்படி இருக்கிறாய்?”
“நன்றாக இருக்கிறேன் அப்பா “என்றாள்...
கதைத்திரி-25
அத்தியாயம் 65.
சஞ்சுவும் தொடர்ந்து நடைபயிற்சி வர ஆரம்பித்தாள் . ராஜி , ராதா மற்றும் கீத்து என்று யாராவது ஒருவர் மாற்றி மாற்றி துணைக்குச் சென்றனர் . ஒரு வாரம் இயல்பாகப் போக , அன்று அப்பா வீட்டிற்குக் கீழே இருக்கும் மாமியைப் பார்க்க , “என்ன சஞ்சனா ? இப்படிச் செய்துவிட்டாய்?”என்று கவலைப்பட,
சஞ்சு...
சஞ்சனா…. கதைத்திரி-24
அத்தியாயம் 61
என் பொண்டாட்டி போனப்பவே சமாளித்தவன் என்று முதலில் பிரிவைப் பெரிதாக யோசிக்காது வீம்பாக இருந்தார் விஜயன் .
நாளாக நாளாக , பொறுப்புகள் கூடியது . இதுவரை அடுத்தவரை வேலை ஏவி சுகவாசியாக இருந்தவருக்கு , அடுத்தடுத்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. தானே வேலை செய்வது அதைவிட...
கதைத்திரி-23
அத்தியாயம் 58
மறுநாளே வேலைகளை ஆரம்பிக்க , அந்த வாரம் சுறுசுறுப்பாக ஓடியது . விவேக் ஆபிஸ் வேலை , காவல் நிலையம் என்று பரபரப்பாக இருந்தான் .
கீத்து முடிந்தவரை சஞ்சுவோடு நேரம் செலவளித்தாள் . அவளிடம் நிறைய பேசினாள் . அறிவுரை மாதிரி இல்லாமல் நாட்டின் நடக்கும் விசயங்களைப் பேசுவது போல் அவளுடைய சூழ்நிலைக்கு...
கதைத்திரி 22
அத்தியாயம் 55
மறுநாள் தன் பெற்றோர்களிடம் கீத்து மேலோட்டமாக விவரங்களையும் கூற , இருவரும் மிகவும் மனம் வருந்தினர் .
“இந்தச் சின்ன வயதிலே இந்தப் பையனுக்கு எவ்வளவு கஷ்டம்…” என்று வாய்விட்டுப் புலம்பினார்கள் . பின் , “நாம் விவேக்கிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று முடிவு செய்தனர்.
மாலை கீத்து சஞ்சுவிற்குத் துணையாகப் போக...
சஞ்சனா… கதைத் திரி 21
அத்தியாயம் 52
நண்பன் வீட்டில் பல யோசனைகளோடு அப்பாவிற்காக காத்திருந்தான் விவேக்.
நண்பன் வேலைக்குப் போயிருந்ததால் தனிமையில் அப்பாவுடன் பேசச் சரியாக இருக்கும் என்று இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் . அவருடன் பொறுமையாகத் தான் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான் . ஆனால் அவரைக் கண்டவுடன் , ஆத்திரம் பொங்க , தடாலடியாக...
கதைத்திரி-20
அத்தியாயம் 50
மறுநாள் காலை ரவுண்ட்ஸ்க்கு பின் , விவேக்கை அழைத்தார் .
“ஸார்…” என்று கவலையுடன் நிற்க ,
“சஞ்சனா உடல் நிலை நன்றாக உள்ளது . ஆனால் நாம் மனதளவில் நிறைய கவனிக்க வேண்டியுள்ளது . மனநல மருத்துவருக்குப் பரிந்துரை செய்கிறேன் . நீங்கள் ஓ.பி.யாகவே அவரை பார்த்துக் கொள்ளலாம் . அடுத்த கட்ட நடவடிக்கைகள்...
சஞ்சனா… கதைத்திரி-19
அத்தியாயம் 47
இரவு உணவை முடித்த பின் , “போலீஸ் நமக்கு நன்றாக உதவுகிறார்கள் . விசயம் வெளியே தெரியாமல் முடித்துவிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள் சஞ்சும்மா…”
இதைக் கேட்டு சஞ்சு ஆசுவாசமானாள் . “அண்ணா எல்லாம் சரியாகி விடும் இல்லையா…?” என்று அவன் கைப்பிடித்தாள் .
“நிச்சயமாக , இதெல்லாம் இன்றைய உலகில் ஒன்றுமே இல்லை…” என்று...
சஞ்சனா…. கதைத்திரி-18
அத்தியாயம் 44
மறுநாள் காலை போலீஸ் என்கொயரிக்கு வந்தார்கள். விவேக்கிடம் , “இன்றும் சில புகைப்படங்கள் வந்தது , ஆனால் அது அத்தனையும் மார்ப்பிங் செய்யப்பட்டவை. பெரிய மெனக்கெடல் இல்லாமல் , பயமுறுத்தும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ளன…”
“ஏதேனும் போன் வந்ததா?”
“அநேகமாக சஞ்சு கல்லூரிக்கு வராத காரணம் என்னவென்று தெரிய காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான்...
கதைத்திரி-17
அத்தியாயம் 41
மறுநாள் காலை பன்னிரெண்டு மணிவாக்கில், காவல் நிலையம் சென்றனர். அங்கே சங்கடப்பட்டுக் கொண்டே , இன்ஸ்பெக்டரிடம் செல்போனை காண்பிக்க, “கவலைப்படாதீர்கள் தம்பி , எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று தைரியப்படுத்தினார் .
“சார் , இன்று காலை கூட வேறு சில புகைப்படங்கள் வந்துள்ளன…” என்றான் கவலையாக.
“தற்கொலை கேஸை நாங்கள் முடித்துக் கொள்கிறோம்...
சஞ்சனா…. கதைத்திரி-16
அத்தியாயம் 38
சஞ்சு இரத்த வெள்ளத்தில் கிடக்க , விஜயன் படபடப்பானார் . மூளை வேலை நிறுத்தம் செய்ய , ஸ்தம்பித்து நின்றார் .பின் ஒருவாறு இயல்புக்கு வந்தவர் , ராதாவிற்கு போன் அடிக்க , படபடப்பில் தப்பான நம்பர்களையே அழுத்தினார் .பின் அரக்கபரக்க ராதாவின் பிளாட்டிற்கு ஓடினார் .
ரமேஷ் கிளம்பிக் கொண்டிருக்க ,...
சஞ்சனா… கதைத்திரி-15
அத்தியாயம் 35
கீத்துவிற்கு விவேக் அலுவலகத்திலே இன்டென்சிப் கிடைக்க , இருவரும் காலையில் சேர்ந்தே கேப்பில் சென்றனர் . ஆனால் மாலையில் கீத்து சிக்கிரம் வந்து விடுவாள் . விவேக் வேலை முடிந்து, தாமதமாகவே வருவான்.
அலுவலகத்தில் விவேக் நல்லபடியாகப் பார்த்துக் கொண்டான். தனியாக வளர்ந்த கீத்துவிற்கு அவனுடைய பாதுகாப்பும் , அக்கறையும் பிடித்தது ....
சஞ்சனா… கதைத்திரி-14
அத்தியாயம் 32
சஞ்சு சமாதானமாகிக் கிளம்பிய பின் , என்ன அப்பா இவர் ? படிக்கத்தானே கேட்கிறாள்? அதற்கு எத்தனை பேச்சு என்று மனதிற்குள் பொங்கினாள் .அந்தக் கோபத்தோடு விவேக்கிற்கு போன் போட , சரியாக அதே நேரம் வண்டியில் ஏறி இருந்தான் விவேக் , உடனே போனை எடுக்க ,
கீத்து போனில் பொங்கு...
சஞ்சனா… கதைத்திரி-13
அத்தியாயம் 30
அயல்நாட்டு வல்லுனர்களைக் கொண்டு சிற்பம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் சென்னையில் ஒரு வாரக் கருத்தரங்கம் , கல்லூரியே ஏற்பாடு செய்ய , இதில் கலந்து கொண்டால் , நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதை உணர்ந்தாள் . அன்று மாலை அப்பாவிடம் விவரத்தைத் தெரிவிக்க , வானத்திற்கும் , பூமிக்கும் குதித்தார்.
“ இந்தப்...
அத்தியாயம் 27
நாட்கள் நகர்ந்தன. தன்னை யாரும் கைகாட்டி விடக் கூடாது என்பதற்காகவும் , தன்னுடைய உறுத்தல்களை போக்குவதற்கும் , விஜயன் வசை பாடுவதைத் தொடர , முக்கியமாக எல்லாம் உன்னால் தான் என்று சஞ்சுவைக் கரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தார் .
அந்த வார்த்தைகளைக் கேட்கும் பொழுதெல்லாம் , அந்த வார்த்தையின் வீரியம் பொறுக்க முடியாமல்...
சஞ்சனா… கதைத்திரி-11
அத்தியாயம் 25
ஒரு மாதம் போக , ஊரடங்குகள் தளர ஆரம்பித்தன . ஆன்லைனில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கின. விஜயனும் வீட்டில் இருந்து வேலை பார்த்தார் .
சஞ்சு அம்மாவை நினைத்து மிகவும் ஏங்கினாள் . அனைத்திற்கும் அம்மாவைத் தேடினாள் . விவேக் முடிந்தவரை சமாளித்தான் .
விவேக் மற்றும் சஞ்சுவிடம் கீத்து தொடர்ந்து பேசினாள்...
சஞ்சனா…. கதைத்திரி-10
அத்தியாயம் 23
இரண்டு நாட்களாக கிடைத்த இடத்தில் அமர்ந்து , படுத்து , ஏதோ சாப்பிட்டு , மனம் நிறைய பயத்தோடு , சுற்றி புலம்பல்களையும் , அழுகைகளையும் , மரண ஓலங்களையும் கேட்டபடி உணர்வற்ற நிலையில் இருந்தான் . விதி தன்னை எதை நோக்கி இழுத்துச் செல்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான்...