வெங்களியின் தேவதை
அத்தியாயம் 6
பலகணியிலிருந்து சரசரவென்று இறங்கி வந்த உருவம், இருட்டில் கலந்து குடிலை வந்து சேர்ந்தது. காவலாளி உட்கார்ந்த நிலையிலேயே உறக்கத்தை தழுவியிருந்தான். சற்றே தலையசைத்து தன் பிடித்தமின்மையைக் காட்டினாலும், தன்னிடமிருக்கும் திறவுகோலால் ஒலி எழுப்பாமல் கதவை திறந்து உள்ளே நுழைந்தது.
தூங்கா விளக்கு லேசான ஒளியைப் பாய்ச்ச, மெல்ல பக்கவாட்டு அறை வாயிலை அடைந்தது உருவம்....
அத்தியாயம் – 5
இரண்டு நாட்கள் முழுதுமாக கழிந்திருந்தது, டாங்ஜின் பற்றிய விவரம் சேகரித்து, வழித்தடத்தை அறிந்து நண்பர்கள் இருவரும் வந்து சேர. அப்போதும் திசை மாறிச் சென்று, வல்லபனின் உடைந்த சீனப் புரிதலை வைத்து அவர்கள் சொல்வதை ஒரு வழியாக அறிந்து தெளிந்து வந்து சேரும் வேளை இருட்டிவிட்டிருந்தது, இருவரும் கையில் தீப்பந்தம் ஏந்தியபடியே...
அத்தியாயம் – 4
குவாங்சான் வந்து நான்கு நாட்கள் கடந்திருந்தது. வல்லபன் சற்றே வெறுத்திருந்தான்.
“நண்பா, மீண்டும் வேகவைத்த கோழியும் வாத்தும் உண்ணச் சொல்லாதேடா. இவர்கள் எண்ணையில் வறுப்பது பொரிப்பது என்று எதையுமே கற்றுக்கொள்ளவில்லையா? புளிப்பும் இல்லை உரைப்பும் இல்லை. என் நா உணர்வற்றுப் போய்விட்டதடா!”
மீண்டும் ஒரு சீன சத்திரத்தில் உணவருந்த மறுத்து வீதியில் நின்று மன்றாடிக்கொண்டிருந்தான்.
“வல்லபா…...
அத்தியாயம் – 3
எங்கோ இளமாறனின் குரல் கேட்பது போல இருந்தது. இறந்து ஒன்றாக சொர்க்கத்திற்கு வந்துவிட்டோமோ என்று நினைத்து லேசாக குரல் வந்த திசை நோக்கி தலை திருப்ப முயன்றான். ஆனால் லேசாக அசைக்க மட்டுமே முடிந்தது. அதற்கே வலியெடுக்க முனகினான்.
சட்டென்று முகத்தில் தண்ணீர் அறைய, முகத்தை சுருக்கிய வல்லபன் சிரமப்பட்டு கண்களைத் திறந்தான்.
“நண்பா…...
அத்தியாயம் 2
அழகிய மலைகள் சூழ்ந்த குவாண்டாங் பெரு நகரத்தில் புகழபெற்ற துறைமுகம் குவாஞ்சாவ். புகழும் பலமும் பொருந்திய மங்கோலியப் பேரரசன் கூப்ளாய் கான் தொடங்கி, கெங்கிஸ் கான் புகழ் சேர்த்த பரந்து விரிந்த யுவான் பேரரசின் பல பகுதிகளிலிருந்தும் கப்பல்கள் வந்து செல்லும். தொலை தூர யவன நாடு, பெரும் செல்வங்கள் நிறைந்த இன்-தூ...
அத்தியாயம் 1
போர்கண்ட வீரனையும் சற்றே கலங்கச் செய்யும் அளவிற்கு இருந்த காரிருள் படர்ந்த நடுஜாமம். நிலவும் நட்சத்திரங்களும் இருளோடு போராட முடியாது சூல் கொண்ட மேகங்களிடையே ஒளிந்துகொண்டிருந்தது. சுற்றி சுழன்றடிக்கும் காற்று அமானுஷ்ய சத்தத்துடன் ஓலமிட, ஓங்கி உயர்ந்திருந்த கூம்புகளில் கட்டியிருந்த பாய்களை நிறைமாத கர்பிணியின் மணிவயிற்றைப்போல நிறைத்து, நடுக்கடலில் மதிந்து கொண்டிருக்கும் நாவாயின்...