கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டுப் போகாதே!
அத்தியாயம் : 33.1
கார்த்தி முடிந்தவரை மருமளைச் சமாதனப்படுத்தி விட்டுச் சென்றிருந்தான். கணவன் மனைவி பிரச்சனை என்று இருவருமே ஓரேபோல் அவனிடம் உண்மையை மறைத்து விட்டனர்.
கணவன் அன்று உன் முகத்தில் முழிக்கமாட்டேன் என்று சென்றவன்தான் திரும்பி எட்டிப் பார்க்கவே இல்லை.
அப்படி இப்படி என்று ஒருவாரம் கடந்து இருந்தது கணவனின் முகம் கண்டு. கொஞ்சம் கொஞ்சமாக...
அத்தியாயம்: 31
சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள் எழிலரசி. கணவன் நான் இல்லன்னா பூவாக்கு என்ன பண்ணுவீங்களாம் என்று கேட்டது வெகுவாகச் சீண்டியிருக்க, நேரங்கிடைக்கும் போதெல்லாம் தாயிடம் திட்டும் கொட்டும் வாங்கி ஓரளவுக்குக் கற்றுக் கொண்டாள்.
சூப்பராக இல்லை என்றாலும் சுமாராக சமைக்கிறாள். மனம் மட்டும் பிசைந்தச் சப்பாத்தி மாவைப்போல் குழம்பிக் கிடக்க, வழக்கம் போல் மாமன்...
அத்தியாயம்: 30
அம்மு எழிலரசியைக் காண வந்திருந்தார் அமைச்சர் முருகானந்தம். அவள் வழக்கு விசயமாக வெளியில் சென்றிருப்பதாகச் சொல்லவும் ஸ்டேஷனுக்குள்ளயே கோவத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
இரண்டு நாட்கள் முன்பு அவரது மாமனார் அழைத்து ஷ்யாம் இங்கிருந்தும் சென்று விட்டான் என்றபோது அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
திருவண்ணாமலையில் பெரும்புள்ளி அவரது மாமனார். சொந்தமாக ஒரு கலைக்...
அத்தியாயம் : 29
வெற்றி என்றழைத்ததும் விழி திறவாமலே "ம்..ம்" என்றான். அதுவே அவன் கோவத்தின் அளவைச் சொல்லியது.
"அம்மா ஃபைல் எதுக்கு உங்ககிட்ட"
அவன் எதிர்பார்த்தது வேறாக இருக்க, அந்தக் கேள்வி முற்றிலும் புதிது அவனுக்கு.
அதில் "புரியல" என்றவன் இன்னமும் விழி திறந்தானில்லை. ஒரு கையை நெற்றியின் மேல் வைத்தபடி படுத்திருந்தான்.
நேராக படுத்திருந்தவள், திரும்பி அவன் முகத்தை...
அத்தியாயம் : 28
“இரண்டும் ஒரே டிசைன்தான். அன்னைக்கே ஒன்னா வாங்கிட்டுதான் உன்கிட்ட விளையாட்டு காட்டினாரா மாப்பிள்ள”
மறுநாள் தாய் கேட்டபோதுதான் தன் கையில் இப்படி ஒரு வஸ்து இருப்பதையே உணர்ந்தாள் அம்மு எழிலரசி.
‘காலைலர்ந்து என்னவோ மிஸ் ஆகுறமாதிரியே ஃபீல் ஆச்சே அது இந்த வளையல் சத்தம்தானா…” யோசனையுடன் அதை பார்த்திருந்தவளுக்கு கூடவே இதை எப்போ மாட்டியிருப்பான்?’...
“ஏன்டா மகனே! உன்னை நம்பினதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பார்த்தியா?” கண்ணை கசக்கி கசக்கி வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
“ஒழுங்கா என் தங்கச்சிக்கிட்ட சாப்டுட்டு இருந்தேன். தனியா சமைக்கிறேன்னு…” என்றதும் “தகப்பா…!” என்று இடுப்பில் கை வைத்து முறைத்த வெற்றி அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான்.
திவ்யபாரதி நல்லநாள் பார்த்துச்...
அத்தியாயம் : 27
காலை எழுந்தது முதல் தன்மாமனின் முகத்தையுங்கூட பார்க்காமல் சுற்றி வந்தாள் எழிலரசி. ‘என்னை விட்டுப் போவேன் என்று எப்படி சொல்லலாம்?’ கோபத்துடனேச் சுற்றி வந்தவளால் ஒரு மணிநேரங்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.
காக்கி உடையில் கிளம்பி வந்தவள், உணவுமேஜையில் அமர்ந்ததும், கேட்ட முதல் கேள்வியே “மாமா சாப்பிட்டாச்சா” என்றுதான்.
வழக்கமாக கணவனிடமிருந்து வரும் கேள்வி...
கதவைத் தட்டியும் சத்தமே இல்லாமல் போக, மூடியிருந்த கதவையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு பதற்றம் கூடியது.
கதவை ஓங்கித் தட்டி, “மாமா, கதவைத் திறங்க! வெளிப்பக்கம் பூட்டிக்கிச்சி” என்றாள்.
கதவைப் பூட்டியதே அவள் மாமன்தானே! சத்தம் கேட்டும் காதை மூடிக்கொண்டு அமைதியாகப் படுத்திருந்தான். வெற்றியைப் போல் அம்முவை எளிதாக ஏமாற்ற முடியாது. அதுவும் அவள் செல்லம்...
அத்தியாயம் : 26
“மிரு குட்டி, அன்னைக்கு கேன்டீன்ல வச்சி படிச்சிட்டு இருந்தியே, அந்த புக்கோட பெயர் என்ன?”
செழியன் பணியின் நிமித்தம் காலையிலயே கிளம்பியிருக்க, கார்த்தியும் ஊரிலிருந்து வந்த அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியுடனும், கொழுந்தியாவுடனும் அமர்ந்து காலை உணவை அருந்திக் கொண்டிருந்த வெற்றி கேட்டதும் அவனது மனையாள் அம்முவுக்கு புரைக்கேறியது.
ஒருவேளை அன்று, தான் விரலியை...
அத்தியாயம்: 25
அவர்களுக்குள் பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தன.
ஆனால் வழக்கின் அடி ஆழம்வரை தோண்ட ஆரம்பித்திருந்தான் வெற்றி.
“வெற்றி சார பார்க்கணும்!” என்றது ஒரு கரகரத்தக் குரல்.
வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வயதான சூர்யா போல் அதே தோற்றத்தில் கையில் ஒரு ஸ்டிக்குடன் நின்றிருந்த நெடியவனை ஏற இறங்கப் பார்த்த உதவிக் காவலர், “வெயிட்...
அத்தியாயம்: 24
மறுநாள் விடியலில் கண்விழித்த அம்மு, எழுந்தவள் வெற்றியின் காலில் தான் தலைவைத்திருப்பதுக் கண்டு அதிர, “ஷ்ஷப்பா…காலே மரத்துப்போச்சிடி எரும!” என்றவன் காலைப்பிடித்துக் கொண்டு எழுந்தான்.
இது எப்படி? என்றவள் யோசித்துத் தெளியும்முன், “குண்டம்மா உருண்டு பிரண்டு என் காலை உடைச்சிட்டாளே! என்றவன் நொண்டி நொண்டியே அறைக்குச் செல்ல, துருவனை காலைக்கடன் அழைத்துச் சென்று திரும்பிய...
அவள் கெஞ்சியும் ஆறவில்லை அவன் மனம். சிறுவயது முதல் புரிந்த தவத்தை கொச்சைப் படுத்துவாளா? அவள் மீதான என் காதல் எதன் மீதுன்னு நான் புரிய வைக்க வேணாம்!
“நீ தான சொன்ன எடுத்துக்கன்னு” பாம்பாகச் சீறினான்.
“என்ன சொன்ன? பத்து நிமிஷம்… இல்ல பத்து நிமிஷம்” என்று கோபத்துடன் கவிழ்ந்திருந்த அவளது நாடியை அழுந்தப் பற்றி,
“நீ சொன்ன...
அத்தியாயம்: 23
கட்டிலில் சில கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. அம்முவின் கோபத்தை அறிந்து, அவளாக புரிந்தும் கொள்ளும்போது புரிந்துகொள்ளட்டும் என தன் வேலைகளில் மூழ்கி இருக்க, கதவைத் திறக்கும் ஒலியில் நிமிர்ந்தவனின் பார்வை உறைந்தது.
சற்றுமுன் அவன் எடுத்துக்கொண்ட சபதம் எல்லாம் ஆட்டம் காண, ‘வெற்றி வேணாம்டா! வேணாம்டா! தெரிஞ்சா பேய் ஓட்டுவாடா’ எச்சரித்த மனதையும்...
அத்தியாயம்: 22
ஒரு வழியாகத் திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. அதில் முதல் ஆளாக நிம்மதியான பெருமூச்சை இழுத்து விட்டவள் அம்முதான்.
தாலி கட்டும் கடைசிநொடிவரை உள்ளுக்குள் அலை அலையாய் பயம் ஊடுருவிக் கொண்டுதான் இருந்தது.
தந்தையும், கணவனும் அருகிலிருக்க தனக்கு ஏதும் நடந்துவிடாது என்று முயன்று தன்னைத் தேற்றிக்கொண்டாலும் எத்தனுக்கு எத்தனாக, ஏர்போர்ட், மருத்துவமனை துணிக்கடை என்று ஒவ்வொன்றிலும்...
அத்தியாயம்: 21
இனி தனிமையை பழகிக்கணும் என்று விரக்தியாய் கார்த்தி சொல்லவும் வெற்றியின் மனம் கனத்தது.
கார்த்தியும் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை. எண்ணங்களின் அலைகளில் வார்த்தைகள் தானாய் கோர்த்துக் கொண்டன.
உண்மைதானே! இதே வருத்தம் அவனது எழிலரசிக்கும் இருக்குமே! இருவருக்கும் உள்ள அன்பை நன்றாக அறிந்தவன்தானே வெற்றியும்.
அதில் “அவ மட்டும் உங்களைப் பிரிஞ்சி இருப்பான்னு நினைக்கிறீங்களா?” நேரடியாக கார்த்தியின்...
அத்தியாயம் : 20
அம்முவும், திவ்யபாரதியும் கடையைவிட்டு இறங்கி வந்தபோது செழியன் வெற்றியை காய்ந்து கொண்டிருந்தான்.
‘நல்லா வாங்கட்டும். இவன் மட்டும் நடுவுல போகாம, என்னையே சைட் அடிச்சிட்டு இருந்திருந்தா அந்த விருமாண்டி சந்தானம் என்கிட்ட நெருங்கி இருப்பானா? இதுல ஐய்யாவுக்கு கோவம் வேற…’ மனதுக்குள் தானும் வெற்றியை வறுத்தெடுத்தாள்.
“பீ சீரியஸ் மேன்!” என்று எச்சரித்த செழியன்...
அத்தியாயம் : 19
அம்முவும், திவ்யபாரதியும் கடைக்குச் சென்று அரைமணி நேரத்திற்கெல்லாம், வெற்றியும் செழியனும் அந்த பிரபல ஜவுளி கடைக்குள் நுழைந்தனர்.
புடவையை விரித்துப் பார்த்திருந்த திவ்யபாரதி வெற்றியைக் கண்டதும், “வாங்க தம்பி” என்றழைக்க, பதிலாக அவன் குரல் கேட்டும் திரும்பவில்லை அம்மு. மும்முரமாக சேலையை பிரிப்பதுபோல் திரும்பி இருந்தவள் வேண்டுமென்றே விற்பனைப் பெண்ணிடம் எதையோ கேட்டுக்...
அத்தியாயம் : 18
“வாவ்… வாவ்..வாவ்!
வாட் எ ப்ரோப்போஸல்” அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.
அவன் எதிரே கடுப்புடன் நின்றிருந்தாள் எழிலரசி.
“பாரேன்! இத்துனூண்டு வயசுல பத்திரம் காட்டினதுல இருந்து இங்க சுமந்துட்டு இருக்கேன். எனக்கு கூட இப்படி ப்ரோப்போஸ் பண்ண தோணலயே” என்றவனின் சிரிப்பு மட்டும் அடங்கிய பாடில்லை.
அவளிருந்த நிலையில் அவன் சொன்னதைச் சரியாக உணரவில்லை அவள். உணர்ந்திருந்தால்...
அத்தியாயம் : 17
விலங்குகளுக்கான மருத்துவமனையில் துருவனை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மு. மருத்துவரை சந்திக்க நீண்டதொரு வரிசை அமர்ந்திருந்தது. அவளுடையது பத்தாவது டோக்கன்.
“உன்னைத் தனியா சந்திக்க எவ்வளவு பாடு படுறது?” வெகு அருகில் கேட்ட குரலில் திரும்பினாள். பக்கத்தில் மாஸ்க்குடன் அமர்ந்திருந்தவன் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
துருவன் வேறு அவன் பக்கமாகவே இழுக்க, துருவனை சமாளிக்க...
அத்தியாயம் : 16
வெற்றிதான் மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான்.
‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை.
எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்திலயே அவளை தவிர்த்து இருந்தவன், திருமணம் பேசிய பிறகு முதல்முறை அழைக்கிறான்.
அவள் எடுக்காததில், ‘எடுத்துத் தொலைடி’ என்று...