எப்படி மாறிப்போனேன்

என்று சற்றே கோபம்…,

தலைத் தூக்கினாலும்

தலையில் தட்டி விரட்டுகிறது

உன் காதல்…..

எப்படி மாறிப்போனேன்….

என்று நினைக்கும்

ஒவ்வொரு முறையும்

மாற்றிய உன் மீது

கோபத்திற்கு பதிலாக

காதல் வந்து தொலைக்கிறது…..

நாட்கள் வேகமாக ஓட…அவனுடைய காதலும்., அணைப்பும்., சிறு சிறு சண்டைகளும்….. சண்டைகளை மறக்கடிக்கும் அவனது காதலும்.., அவளது சமாதானமும்……, நாள்கள் போவது தெரியாமல் போக வைத்தது இரண்டாவது மாதம் முடிவில் இருந்த நேரம்……..

கயல்…,. கோயிலுக்கு போயிட்டு வருவோமா டா ….. மனசே சரியில்ல….

கிரேஸ் அக்கா தான் பதில் சொன்னார்….. கல்யாண பத்திரிக்கை அடிச்சு குடுத்து முடிக்க போறீங்க…. இப்ப என்ன அம்மா மனசு சரியில்ல….. உங்களுக்கு….

இல்ல கிரேஸ்…. திடீர்னு என்னவோ மனசுல ஒரு பதட்டம்….

அத்தை… அதெல்லாம் ஒண்ணுமில்ல….. எல்லாம் சரியாயிடும்….

அம்மா பதட்டத்திற்கு காரணம் அண்ணி ஊருக்கு போறாங்ளே ன்னு…. அதுதான்…..

கயல்…..இன்னும் அஞ்சு நாள்ல ஊருக்கு கிளம்பனும்… வீட்டிலிருந்து கூப்பிட யாராவது வருவாங்க……

எனக்கு கயல ஊருக்கு அனுப்ப இஷ்டமில்லை……

அம்மா இது கொஞ்சம் ஓவரா இருக்கு…… அண்ணன் சொன்னா அது பரவாயில்லை….. நீங்க சொல்றீங்களே ம்மா…,

அய்யோ அத்தை பயப்படாம இருங்க…… நான் 15 நாளில் திரும்ப வந்துருவேன் இல்ல….

அதுஒன்னும் இல்ல ராதா….. கயல் உனக்கு ஒரு நல்ல பிரெண்ட் மாதிரி இருந்தா….. அதனாலதான் இப்ப அவ ஊருக்கு போறது., உனக்கு ஒரு மாதிரி இருக்கு…, அதுதான் மருமகளா வந்துருவாளே……, என்று சொல்லிக் கொண்டு இருந்தார் கிருஷ்ணன்…

‌ நீங்க இப்படி சொன்னா…. அண்ணன் என்ன சொல்லுவாங்க…. அம்மா.,

ஏன்டா….அப்பாவும் மகனும் என்னையும் என் மகனையும் கிண்டல் பண்றிங்க இல்ல…. நீங்க ரெண்டு பேரும் நெஜமாவே கயல அனுப்புறது சந்தோஷமா அனுப்பறீங்களா சொல்லுங்க…..

அம்மா….. இப்படி யோசிச்சு பாருங்க., இப்போ அவங்க கூட அண்ணி போய்த்தான் ஆகணும்….. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் அண்ணிய கூட்டிட்டு போக முடியாது ஏன்னா அப்ப அண்ணி நம்ம வீட்டு பொண்ணு……… ஆயிருவாங்க…..

கயல்., தீபன் எப்ப வருவான்னு கேளு…. எல்லாருமா சேர்ந்து சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு போய்ட்டு வந்துருவோம்….. அதுக்கப்புறம் ஆவது படபடப்பு குறையுதான்னு பார்ப்போம்…

வந்துருவேன்….. ன்னு., அப்பவே சொன்னாங்க அத்தை….

சாயங்காலம் 5 மணிக்கு….., அங்க இருக்கிற மாதிரி போகணும்……

ஹாஃப் அன் அவர்ல…. போகலாம் அவன் வந்தவுடனே கிளம்பலாம் டென்ஷன் இல்லாம கிளம்பு…….

அண்ணி….., உங்கள எப்படி இன்னிக்கு வீட்ல விட்டாங்க….. அண்ணன் கூடவே கூட்டிட்டு இல்ல போவாங்க…..,

தினேஷ்…..உனக்கு பொறுக்கலையா…. இன்னைக்கு நானே அத்தை மூலமா பெர்மிஷன் வாங்கினேன்….., எழுத வேண்டியது நிறைய இருக்கு நான் முடிச்சு வச்சா தான்…. உங்க அண்ணன் கரெக்ஷன் பாப்பாங்க…. அப்பதான் சர்டிபிகேட் ஒட காலேஜுக்கு கொடுக்க முடியும்…….

அண்ணி…., அண்ணன்., தானே கொடுக்கணும்…. பின்ன ஏன் பயப்படுறீங்க…

உனக்கு தெரியாதுடா….. ட்ரைனிங் சமயத்துல எவ்வளவு திட்டு வாங்கி இருக்கேன் தெரியுமா….. கம்பு எடுத்து அடிக்க மட்டும் தான் செய்யலை….

அடி விழலை இல்ல… அது வரைக்கும் சந்தோஷப்படுங்க…..

என்ன ஒரு நல்ல எண்ணம்…. உனக்கு….. ஒவ்வொரு செக்க்ஷன் முடிச்சு டெஸ்ட் அட்டென்ட் பண்ணும்போது எவ்வளவு திட்டு விழும்……

என்ன….டா…, தினேஷ்…, என்னை பற்றி பேசுற மாதிரி இருக்கு….,

கயல் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க…….

அதுவா அண்ணா ….. ட்ரெய்னிங் ல நீ திட்டினதைப் பத்தி சொன்னாங்க…..

அவ்வளவு திட்டு வாங்க… போய்தான் தனியா பிரான்ஜ கவனிக்கிற அளவுக்கு வந்திருக்க…., இன்னும் இதையே எத்தனை தடவை சொல்லிக் காட்டுவ…..

பிராஜெக்ட் முடிச்சிட்டியா… என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்து கொண்டு லேப்டாப் டேபிளை அவன் அருகில் இழுத்துக் கொண்டு செக் பண்ணத் தொடங்கினான்…

டேய்…..கோயிலுக்கு கிளம்பனும்….

ம்ம்ம்…. என்ன….. திடீர்னு கோயிலுக்கு…..

அம்மாவிற்கு…., அண்ணியை அனுப்பவே இஷ்டம் இல்லை…. அண்ணா ஒரே வருத்தம்…. மனசு கஷ்டமா இருக்கு…. படபடப்பா இருக்கு…. ன்னு… அதுதான் இந்த திடீர் கோவில் ப்ரோக்ராம்

நானும் அனுப்ப வேண்டாம்….. ன்னு… தான் சொன்னேன் முறை அது இது ன்னு நீங்கதான் சொன்னீங்க….என்று சொல்லிவிட்டு அவளுடைய ப்ராஜெக்டில் கவனம் செலுத்தினான்….

ஓரளவு செட் செய்துவிட்டு….. ஸ்பெல்லிங் கரெக்ஷன் மட்டும் இன்னொரு தடவை பாரு….. நிறைய இடத்தில சின்னச்சின்ன மிஸ்டேக் சரி பார்த்திரு…..

கண்டுபிடிச்ச நீங்களே….. திருத்தி இருக்க வேண்டியதுதானே….

உன்கிட்ட கொஞ்சம் ஏமாந்தா…. மொத்தமா ப்ராஜெக்ட் அ என்னைய செய்ய வைத்திருப்ப…..

எனக்கு என்னைக்காவது ப்ராஜக்ட் ல ஹெல்ப் பண்ணி இருக்கியா அண்ணா……
அண்ணிக்கு ப்ராஜக்ட் செய்வதற்கு மட்டும் ஹெல்ப் பண்ற…..

நீ பார்த்தியா தினேஷ்….. உங்க அண்ணன் ஹெல்ப் பண்றத….. இப்படி செய் அப்படி செய் ன்னு ஆர்டர் மட்டும்தான் பண்ணுவாங்க….. அவங்க சொல்ற மாதிரி செய்யலைன்னா கோபம் எப்படி வரும் தெரியுமா…..

ஏய்…. என்னைய பக்கத்துல வச்சுகிட்டே கம்ப்ளைன்ட் பண்ற…..

இப்படிதாண்டா பயங்காட்டுறாங்க….

இப்படியே சொல்லி சொல்லியே இவ என்னை மிரட்டிக்கிட்டு இருக்காடா…..

கயல் அவனைத் திரும்பிப் பார்க்கவும்…..

பாரு…. பாரு….பார்த்து பார்த்தே மிரட்டுறா…..

பார்க்கும் உன் விழிகளில்

தான் வாழ்ந்துகொண்டு

இருக்கிறேன்…..

அருகில் இருந்து பார்த்தால்

போதுமடி…….

‌ ஜென்மம் நிறைந்து விடும்…

அண்ணா இந்த விஷயத்துல நான் அண்ணிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்….
உங்க கோபம் ஊருக்கேபிரசித்தமானது….
கோபப்பட்டால் எப்படி இருப்பீங்கன்னும் எனக்கு தெரியும்….

டேய் எனக்கு சப்போர்ட் பண்ணுவே ன்னு….. பார்த்தா அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க….

மூவரும் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த நேரத்தில்….. ராதா வந்து மூவரையும் விரட்டி கிளம்பி வரும் படி அனுப்பினார்…..

கிளம்பி கோயிலுக்கு போகும்போது தினேஷ் ராதாவிடம் வம்பு செய்து கொண்டிருந்தான்…..

அம்மா…. மாமியார்.., மருமகள்.., அப்படினா ஒரு சண்டை வரணும்….நீங்க என்னடான்னா.., மருமக ஊருக்கு போறதுக்கு வருத்தப்படுறீங்க… சண்டை போடுங்க.., அம்மா.. ரொம்ப போரடிக்கு….

போடா வாயாடி…..

அம்மா…. மாமியார் மருமகளுக்கு உண்டான சண்டையை நீங்க மாத்தாதீங்க…..

ஆமா டா…. சண்டை விலக்க கூப்பிடுவாங்க ன்னு பார்த்தா…. எனக்கு நாட்டாமை பதவி தர மாட்டீக்காங்க டா…..

மாமா…. நீங்களுமா….

உங்க மாமா வீட்டுக்கு வரட்டும்…. இன்னைக்கு இருக்கு….. என்னையும் என் மருமகளையும் பிரிக்க பார்க்கீங்க….

சிரித்துக் கொண்டே கயல்….இது பற்றி ஒரு முறை ராதாவிடம் கேட்டதை நினைத்து கொண்டாள்…..

அத்தை….உங்களுக்கு என் மேல கோவம் வராதா…. நீங்க மாமியார் ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க….ஒரு அம்மா கூட இருக்கிற பீல் உங்க கூட இருக்கும்போது இருக்கு……

ஏன் கயல் இப்படி சொல்ற தீபனுக்கு அம்மான்னா….. உனக்கும் அம்மாதான்…..
உனக்கு தீபன் இப்ப இருக்கறது தான் தெரியும்….. முன்னாடி எப்படி இருந்தான் தெரியுமா….. எப்பவும் சந்தோஷமா ஜாலியா எல்லாரையும் கேலியும்.., கிண்டலுமாக பேசிக்கிட்டு….. அப்படி இருந்தான்…ஆனா இப்போ வேலை.,டென்ஷன்., என் பிள்ளை பாவம் தெரியுமா….அவன் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்… அவனோட சந்தோஷம் உன்ட்ட இருக்கு….. அப்ப நீ எனக்கு எவ்வளவு முக்கியம்…..

அத்தை….. நீங்க என்ன சொல்றீங்க…

உன்ன மொதல்ல பாத்துட்டு வந்த அன்னைக்கு என்ட்ட தான் சொன்னான்…. தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டே இருந்தான்…. ஏன்டா ன்னு கேட்டேன்….
உன்னைப் பத்தி சொன்னான்…. அவன் பேசும்போது அவன் முகத்தில் இருந்த சந்தோஷம் சொல்லுச்சி….உன்னை அவனுக்கு எவ்வளவு பிடிச்சிருக்கு ன்னு….
உன்ன பத்தின விஷயம் முழுவதும் தெரிந்து வைத்திருந்தான்…. ஆனா நீ அவனை பார்த்து பயந்தது….., பயந்த மாதிரி இருந்ததையும் சொன்னான்….. அதுக்கப்புறம் என்கிட்ட எதுவும் சொல்லவில்லை….. ஆனா அப்பப்போ தனியா சிரிச்சிப்பான்…. நானும் உங்க மாமாவும் உன் படிப்பு முடிந்தவுடனே உங்க வீட்ல பேசணும்னு நினைச்சோம்….. ஆனா அதுக்குள்ள உனக்கு ட்ரெய்னிங் இங்க போட்டு இருக்கிறதா வந்து சொன்னான்…..
நாங்களே பேசணும்னு நினைச்சிட்டு இருக்கும்போது…, உங்க வீட்ல இருந்து கூப்டாங்க….. உடனே நாங்கள் கேட்டோம்…..
யோசிச்சி சொல்லுறோம் ன்னு சொன்னாங்க…. ஆனா உங்க அண்ணன்…. கொஞ்ச நேரத்திலேயே போன் பண்ணி எங்களுக்கு சம்மதம் என்று சொல்லிட்டாங்க….

தீபன் தான் பயந்து போய் இருந்தான் நீ எங்க சம்மதிக்க மாட்டாயோ ன்னு… உங்க வீட்டில் இருந்து மறுநாள் போன் பண்ணி சம்மதிச்சுட்டா…. தேதி பார்க்கலாம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அவன் சந்தோஷமா இருந்தான்…..

உன்ன நாங்க நேர்ல பார்த்ததுக்கப்புறம் எங்களுக்கு இன்னொரு பொண்ணு கிடைக்க போறதா நெனச்சு சந்தோஷப்பட்டோம்….இப்பவும் அப்படித்தான்…… நீ எங்களுக்கு இன்னொரு பிள்ளை தான்…..

நானும் மாமாவும் பேசிக்கிட்டோம்… நீ வந்ததிற்கு அப்புறம் தான்…. வீடே கலகலப்பா இருக்கு….. ன்னு….

யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு தான்….. அவனோட ஒன்ன தனியா அனுப்ப யோசிச்சேன்…..ஆனால் அதுவே என் பிள்ளை மனசுல வருத்தத்தை கொண்டு வரும் ன்னு….. நான் நினைக்கலை இப்ப நிம்மதியா இருக்கேன்…. நான் உன்னை மருமகளா பாக்கல மகளா தான் பார்க்கேன்….

ராதா பேசியதே கேட்டபிறகு கயல் ராதாவை கட்டிக்கொண்டாள்….இப்படி ஒரு அத்தை கிடைச்சா…. யாரு வேண்டாம் ன்னு சொல்லுவாங்க… நான் உங்க பையன் எவ்வளவு கோபப்பட்டாலும் பொறுத்து போயிடுவேன்…..

வந்த கொஞ்ச நாளில் ராதாவிடம் தான் பேசியதை…. கேட்டதை…. நினைவு கூர்ந்தாள்….

கோயிலுக்கு வந்து சேரவும் சாமி தரிசனம் முடித்துவிட்டு அர்ச்சனை பூஜை எல்லாம் செய்துவிட்டு ராதாவின் மனதுக்கு திருப்தியா என்று தான் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்…… ராதாவோ திருப்திக்காக செய்துவிட்டோம்… இருந்தாலும் இன்னும் 20 நாளில் கல்யாணம் என்னும்போது இரண்டு பேருமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்….. என்று அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்….

ஏன்மா பயப்படுறீங்க…. ஒன்னும் பிரச்சினை இல்லை…. உங்கள குழப்பிக்காம இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்….. இன்னும் நாலு நாள்தான் இருக்கு…… கயல் வொர்க் பெண்டிங் வச்சிருந்தா முடிச்சிரு……

வொர்க் எல்லாம் முடிச்சிட்டேன் மேனேஜர் கிட்ட சொல்லி இருக்கேன்…… ஒரு சின்ன ஒர்க்…. அது மட்டும் நாளைக்கு முடிச்சிட்டுறேன்….அதுக்கப்புறம் நீங்க தான் பாக்கணும் எனக்கு தெரியாது… காலேஜ்க்கு கொடுக்கவேண்டியது எல்லாம்…. நீங்க கொடுத்து விடுவீங்க இல்ல…..

மத்தத நான் பாத்துக்கறேன் நாளைக்கு நீ மீன் இறங்குற இடத்துக்கு போய் ஜோசப்…. அப்புறம் அங்க இருக்குற மத்த எல்லாத்தையும் பாத்துட்டு நீ ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பு…..

ம்ம்ம்…… சரி…..

மற்ற நாலு நாளும் அவளை தன்னுடனே இருக்கும் படி பார்த்துக் கொண்டான்…. நாலாவது நாள் ஊரிலிருந்து சுதாகரும்… பூரணியும் அவளை அழைத்து செல்ல வந்திருந்தனர்… அன்று மதியம் அவளுடன் பேச வேண்டும் என்று அவளை அழைத்துக் கொண்டு அவர்களுடைய தோட்டத்திற்கு சென்றான்…..

இதுவரை அவளை தோட்டத்திற்கு அழைத்து வந்ததில்லை….. அன்று முதல் முறையாக அழைத்து கொண்டு வந்தான்….

கயல் நான் நீ இங்க வந்ததுக்கப்புறம் எத்தனையோ முறை ஐ லவ் யூ சொல்லிவிட்டேன்…ஏன் உன் பெர்மிஷன் இல்லாமலேயே உனக்கு முத்தம் கொடுத்து இருக்கேன்…..ஆனா நீ ஒரு தடவை கூட என்கிட்ட ஐ லவ் யூ சொல்லல….. ஏன் பதிலுக்கு முத்தம் கூட கொடுக்கல எதனால…..

இது என்ன கேள்வி…… கல்யாணத்துக்கு முன்னாடி கொடுக்கிறது தப்பு….. கல்யாணத்துக்கப்புறம் கொடுப்பது தப்பில்லை….. நீங்க தப்பு பண்றீங்க…. நான் தப்பு பண்ண மாட்டேன் அவ்வளவுதான்….

ஸோ…. நீ கொடுக்க மாட்ட….

மாட்டேன்…..

ஏமாத்திட்ட…..

நான் எப்போ உங்ககிட்ட தரேன்னு சொன்னேன்……

ஒண்ணாவது தருவ ன்னு….. எதிர்பார்த்தேன்……

அது உங்க தப்பு……

ஆனா….. நான் உன்னை கட்டி பிடிச்சா அப்படியே அடங்கி நிக்கிறேயே…. எப்படி….

அதுவா…… என்று தன்னுடைய கனவை அவனிடம் சொன்னாள்…. அதில் வந்த கை உங்களுடையது …… இதை நான் என் ஃபிரண்ட்ஸ் ட்ட கூட சொல்லவில்லை என்பதை சொன்னாள்…..

எப்படி அந்தக் கனவில் வந்தது…. நான் தான் ன்னு சொல்லுற…..

அது நீங்க என்னை எப்பவும் பிடிப்பிங்க ல….. என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே…..

இப்படியா என்று சொல்லிக் கொண்டு….. இறுக்கி அணைத்துக் கொண்டான்…… அவனுடைய அணைப்பின் அழுத்தம் அவளை பதில் பேச விடாமல் செய்தது…….

என்ன பதிலே இல்ல என்று அவன் கேட்கவும்…..

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்……

அணைப்பை விலக்காமல்…. அவளிடம் கொஞ்சம் கதை பேசி அவளை வெட்கப்பட வைத்துவிட்டு….. எப்போதும் போல் முத்தம் கொடுத்தான்….மற்ற நாட்களில் ஒற்றை முத்தத்தோடு நிறுத்துபவன்….அன்று மட்டும் கணக்கின்றி கொடுத்துக்கொண்டே இருந்தான்….. எப்போதும் அவனை தள்ளிவிட்டு விலக்குபவள்., இன்று எதுவும் செய்யாமல் நின்றாள்…, கையால் அவன் தோளை அணைத்துக் கொண்டு நின்றாள்…..

சற்று நேரம் வரை அப்படியே இருந்துவிட்டு தென்னந்தோப்பின் பறவை சத்தத்தில் இருவரும் விலகினர்…. எப்பவும் இல்லாம இன்னைக்கு ஏன் இந்த அனுமதி…
என்னாச்சு கயல்……

‌‌ தெரியலை….. என்னமோ ஒரு மாதிரி இருக்கு……

‌‌ஏன்டா… டல்லா சொல்லுற….

இன்னும் 15 நாள் தான் இருக்கு இல்ல…… தினமும் போன் பண்ணனும் சரியா…..

‌கண்டிப்பா…. பண்ணுறேன்…..

என்னால நம்பவே முடியல….. நான் எவ்வளவு மாறிட்டேன்….

மறுபடியும் தோளோடு அணைத்துக் கொண்டு…… அவள் உச்சந்தலையில் தலை சாய்த்துக் கொண்டான்…….

சரி கிளம்பு வீட்ல உங்க அண்ணாவும்., அம்மாவும் வெயிட் பண்ணுவாங்க…..

ம்ம்ம்…. அத்தை எதுவும் நினைக்க கூடாது வாங்க போலாம்…

ம்ம்ம்….. என்ற படி அங்கிருந்து இருவரும் கிளம்பினர்….

வீட்டிற்கு வந்து அவளுக்கு தேவைப்படும் உடையை எல்லாம் இங்கே வைத்துவிட்டு…… பாண்டிச்சேரியில் வைக்க வேண்டியதை மட்டும் தனியே எடுத்துக் கொண்டு கிளம்ப தயாரானாள்…..

மூன்று நாளில் மலருக்கு திருமணம் இருந்தது அதற்கு அனைவரும் வருவதாக சொன்னார்கள்…. அதன்பிறகு 12 நாளில் தீபன்., கயல் கல்யாணம்…… என்ன செய்ய வேண்டும்…..எப்படி ., என்று இங்கு வருவது அதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்…. திருமணத்திற்கு முதல் நாள் அவளை கன்னியாகுமரி அழைத்து வருவதாக பேசினார்கள்….

தீபன் வீட்டில் அனைவருக்கும் கயலை பிரிந்து இருப்பது கஷ்டம் என்று சொன்னார் ராதா…….

அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கயல்… பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தாள்…….

வார்த்தைகளில் அடக்க

முடியாத வசந்தத்தை

உன் காதலில் அடக்கி

விட்டாயே ராட்சசா…..

‌‌ உன் ஒற்றை முத்தம்

எனக்குள் ஒராயிரம்

முறை யுத்தம் நடத்தி

விடுகிறது…….

மீண்டும் மீண்டும்

யுத்த களம் காணத்

துடிக்கிறது…….

என் காதல் மனது..,