மனதில் தோன்றிய எண்ணங்கள் ரிஃபாஷாவை புன்னகைக்க செய்ய, அஜயை அவள் பார்க்கும் பார்வையும் லேசாக மாறியது.
அஜய் மித்ரனுக்கு அவள் மீது ஒரு இனக் கவர்ச்சி உண்டு என்றாலும் அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயக்கம் தான். ஏற்கனவே அவனின் தமக்கை சியாமளா ஒரு நடிகனை எதிர்பாராமல் திருமணம் செய்து அதனால் அவள் பட்ட பாட்டை அறிவான். (ஆதித் சிவித்ரன் சியாமளா கதை செந்தாழம்பூ கண்ணழகி) தனது மாமாவும் ஒரு நடிகன் தான், தங்கை கணவனும் நடிகன் தான் தற்போது நடிப்பை விட்டு விட்டு மனைவியோடு அமெரிக்காவாசி ஆகிவிட்டான். தானும் இதே துறையில் தான் பணியாற்றுகிறோம் ஆனாலும் ஒரு நடிகையை மருமகளாக தன் குடும்பத்தினர் ஏற்பார்களா என்ற எண்ணம் இருக்கவே கவர்ச்சியை கவர்ச்சியாகவே வைத்து புதைத்துவிட முடிவு செய்திருந்தான் அதே நேரத்தில் அத்தனை பெரிய நடிகை முதலில் தன்னை ஏறெடுத்துப் பார்ப்பாளா அதுவும் மனுஷ்யபுத்திரன் மீது காதல் என்று சுற்றிக் கொண்டிருப்பவள் உன்னைக் காதலிக்கிறேன் என்று வந்து சொல்வாளா என அவனின் மனமே துப்பியது.
“நெனப்புதான்டா உனக்கு” என்று சிரித்தபடி ரிஃபாஷாவை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தான் மனுஷ்யபுத்திரன் கூறியதன் பேரில்.
“உங்களுக்கு ஒரு அஸிஸ்டன்ட் வருவாங்க மேம் சார் அனுப்பின ஆள் தான் நம்பிக்கையானவங்க பட் நோ மோர் பர்ஷனல். எதையும் டீப்பா ஷேர் பண்ணிக்க வேண்டாம்” என்று கூறி அவளை தங்க வைத்தான்.
“தேங்க்ஸ் அஜய், உன் படம் பத்தி நான் மனுஷ் சார் ஆர் மகிழன் சார் கிட்ட பேசறேன்” என்றாள்.
“தேங்க்ஸ் மேம்!” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லியவன்,” இதை வினித் கிட்ட ஷேர் பண்ணனும்” என்று கிளம்பினான்.
சொன்னது போலவே உதவிக்கு ஒரு நாற்பது வயது பெண்மணி வந்தார்.
“மேடம் உங்க ஃபுட் சார்ட் அப்புறம் மெடிக்கல் சம்பந்தப்பட்ட டீடெயில்ஸ் எல்லாம் தந்தீங்கன்னா நான் ஃபாலோ பண்ணிக்க வசதியா இருக்கும். அப்புறம் உங்களைப் பார்க்க அலவுட் பீப்பிள் யார் னு லிஸ்ட் தந்திடுங்க மனுஷ் சார் இங்கே உங்க கூட பாதுகாப்பா ஸ்டே பண்ண சொன்னாங்க. “என பாடம் செய்து ஒப்பிப்பது போல ஒப்பித்தார் அவர்.
“ஸ்யூர். தென் நீங்க குக்கிங் பண்ண ஆள் செலக்ட் பண்ணிடுங்க” என்றவள்,” இப்போ கொஞ்சம் ரெஸ்ட்” என்று தன்னறை புகுந்தாள்.
சில நிமிடங்களில் ரிஃபாஷாவின் உணவு பழக்கம் உடல் நிலை பற்றிய குறிப்புகள் எல்லாம் அப்பெண்ணிடம் வந்து சேர்ந்தது.
********
மனுஷ்யபுத்திரன் பேசி விட்டுச் சென்றதையே நினைத்துக் கொண்டிருந்த அகரயாழினி இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘ஆலப்புழா பத்தி எல்லாம் பேசறார்னா என்னைப் பத்தி எதுவோ தெரிஞ்சு இருக்கு இல்லை இவர் விசாரிச்சு இருப்பார் அதனால் தான் பேசுறாரு. உயிர் னு எல்லாம் சொல்றாரே இதெல்லாம் எப்படி நம்பறது?, இது சரியே இல்லை யாழி ஏதோ ட்ரிக் பண்றாங்க இங்கிருந்து நாம் முதல்ல கிளம்பணும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளிடம்,’ போய் என்ன செய்வ?’ என்ற கேள்வி மேலெழும்பியது.
‘வெளியே போனா அந்த நமசிவாயம் கண்டு பிடிச்சுடுவான். மறுபடியும் அதே அடிமை வாழ்க்கை, மறுபடியும் அதே நரகம் அதுக்கு இது பரவாயில்லை யாழி தாலி கட்டிட்டார் ஆனா உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணலையே சும்மா பேச்சுக்காக கூட சொல்லலையே மீடியா ப்ரெஸ் எல்லார் கிட்டயும் அறிமுகம் செஞ்சாரே அப்போ நீ அவரோட அஃப்சியல் பொண்டாட்டி ஆகிட்ட தானே. அப்புறம் என்ன உனக்கு தயக்கம் ?’என்று தன் வழக்கை தானே வாதாடி நின்றாள்.
‘சரி கட்டிக்கிட்டார் எல்லாம் ஓகே. ஆனா ஆனா ..?என்று யோசிக்க அவளின் மனம் குழம்பியது.
‘இவ்வளவு பெரிய டைரக்டர் எதுக்கு என்னை இப்படி எந்த டிமாண்டும் இல்லாம கல்யாணம் பண்ணனும் ஆலப்புழா ல எங்கேயாவது நம்மளைப் பார்த்து லவ்ஸ்ல விழுந்து இருப்பாரோ?’ என்று கேட்டுக் கொண்டவள்,’ இது உனக்கே ஓவராத் தெரியலை யாழி நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா உலக அழகியா? ஏன் டி படுத்துற அதுவும் ஆலப்புழாவில் நீ இருந்த லட்சணத்துக்கு இந்த மாதிரி பரம்பரை பணக்கார பையன் லவ் வேற பண்றாரா… அப்படி பண்றவர் எதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி இருக்கணும். டிவோர்ஸ் வாங்கின பிறகு லவ்வா அய்யோ இவர் வேற என்னைக் குழப்பி விட்டு போயிட்டாரே?’ என்று தலையில் அடித்துக் கொள்ள
“அடிக்கிற அடியில் தலச்சோறு கீழே விழப் போகுன்னு” என்றபடி உள்ளே வந்தான் மனுஷ்யபுத்திரன்.
“ஸ்ஸ்ப்பா ஒண்ணு தமிழ் ல பேசுங்க, இல்லை மலையாளம் இதென்ன தமியாளம்?” என்று கடுப்பாய் கேட்க கலகலவென்று சிரித்து விட்டான் அவன்.
“எத்தரை திவசம் யாழி கன்ஃப்யூஸ் செய்திருக்கும் தமிழ் மலையாளம் கலந்து பேசி. இப்போ மை டர்ன் என்ஜாய் “என்றான் சட்டென
“எத்தனை நாளா அப்போ இதுக்கு முன்னாடி உங்க கிட்ட நான் பேசியிருக்கேனா…? எப்போ எங்கே??”
“அதை யாழி தான் யோசிக்கணும். யோசி செரி ஞான் போவாம். உறங்காம் யாழி. யூ ஆர் ஸோ டயர்ட்” என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.
‘ஹ்ம்ம் இவர் என்ன சொல்லிட்டு போறார்?’ என்று குழம்பியவள் யோசித்தபடியே உறங்கியும் போனாள்.
********
இங்கே ஷகீரா கொடுத்த அதிர்ச்சியிலும் அமுதரசி கூறிய விஷயத்திலும் பலவாறான சிந்தனையில் உழன்றான் நமசிவாயம்.
அமுதரசியை அடிக்க கை ஓங்கிய நொடி அவனது பெற்றோர் வந்து நிற்க அவர்களின் வருகையை எதிர்பாராதவனோ ஓங்கிய கையை இறக்கினான் அவன் அன்னை போட்ட சத்தத்தில்.
“என்ன தைரியம் இருந்தா மாசமா இருக்கவளை கை ஓங்குவ நீ இதுக்கு தான் அவளை வரவச்சியா நீ ஒண்ணுக்கு ரெண்டு ஒவத்திரியத்துக்கு (உபத்திரவம்) மூணுனு கட்டி ஒரு புழுபூச்சி இல்லாம நிக்க எந்த சாமி புண்ணியமோ மொதோ வந்தவ வயித்துலயே புள்ள உண்டாகிருச்சுனு நா கும்புடாத சாமி இல்ல வைக்காத வேண்டுதல் இல்ல அவளை நீ கையி ஓங்குவியா…? அதிர்ச்சியில் ஏதாவது ஆச்சுன்னா என்னடா செய்வ இது சுத்தப்படாது, ஏ அமுதி கெளம்புடி எங்கூட உசுரு நிக்க வரைக்கும் நான் போடுவேன் நூறு பேத்துக்கு சோறு, எம்மருமவ பேரனை விட்ருவேனா ?”என்று ஒரேயடியாக அவர் பொரிந்ததில் நமசிவாயம் சிவனே என்று நின்றார்.
பிறகு இங்கே அவர் சம்பாதித்த பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனும் அளவிற்கு கிராமத்தில் வயலும் வரப்பும் சொத்தும் சுகமும் கொட்டிக் கிடக்கின்றன. அப்புறம் நமசிவாயத்திற்கு பேச்சு வருமா என்ன தந்தை கூட பதவிசானவர் தாய் யாராக இருந்தாலும் வந்து பார் என்று நிற்கும் ரகம். சேலையை இடுப்பில் சொருகி எட்டி உதைத்தால் எதிரில் இருப்பவனுக்கு நெஞ்சாங்கூடே காலியாகும். அத்தனை விரைப்பான பெண்மணி. இதில் நமசிவாயம் என்ன அவன் தந்தையே தள்ளி தான் நிற்க வேண்டும்.
“ஒழுங்கா சாப்பிடலைனு கையை ஓங்கிபுட்டேனுங்கம்மா” என்று பம்மினான் நமசிவாயம்.
“எங்கே அந்த சீமைச்சிறுக்கி இன்னம் காணல? ஏ அமுதி நீ என்ன நிக்கிறவ போய் காப்பித்தண்ணிய கொண்டாத்தா நாக்கு வரளுது “என்று அங்கிருந்த மென்மெத்தையில் அமரவும் ஷகீரா காபியோடு வந்தாள்.
“ஏ நீ கொண்டாரத்துக்கு என்ன வேலைக்காரி தான் வரணுமோ?” என்று மாமியார் நொடிக்க
“இப்ப தான் பெடிகியூர் மெனிக்யூர் எல்லாம் பண்ணேன் டர்டி ஆகிடாது” என்று நக்கலாகவே மாமியாரிடம் பதில் அளிக்க நமசிவாயம் திணறிப் போனான்.
“அடி ஏ வெளக்கமாத்துக் கொண்டை பட்டணத்து பவுசோ? இந்த எகத்தாளம் எல்லாம் எங்கிட்ட வச்சுக்கிட்ட பெறகு பாத்துக்கிடு” என்று எகிற அமுதரசி தான் இடையிட்டு சமாளித்தார்.
“இன்னம் ரெண்டு மாசத்துக்கு இங்கனதேன் இருப்பேன் ஒங்களை எல்லாம் என்னா சேதிண்டு பாத்துப்புடுதேன்” என்று குடித்து முடித்த காபி கப்பை டொக்கென்று வைக்க நமசிவாயத்திற்கு தான் உள்ளூர பதறியது.
ஷகீரா உதட்டை மடித்து சிரித்தவள் யாரும் அறியாமல் மாமியாரைப் பார்த்து கண் சிமிட்டியபடி தலையசைத்தாள்.
“யாத்தே இவ பண்ற அலும்பைப் பாரு” என்று நொடித்துக் கொண்டு,” அடுப்புல எதையாவது ஆக்குனீகளா இல்லையா?” என்றபடி சமையலறை பக்கம் செல்ல மருமகள்கள் இருவரும் நூல் பிடித்தாற் போல அவர் பின்னால் சென்றனர்.
வந்ததில் இருந்து அமைதியாக இருக்கும் தந்தையை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் நமசிவாயம்.
***********
மகிழன் சக்ரவர்த்தி அப்பெண்ணின் முன் அமர்ந்திருக்க அவளோ அலட்சியமாக அவனைப் பார்த்து இருந்தாள்.
“டென் க்ரோர் சக்ரவர்த்தி தந்தா எல்லா எவிடென்ஸையும் தடயமே இல்லாம அழிச்சுடறேன். இல்லாட்டி அத்தனையும் உன் வொய்ஃப் அன்ட் ஃபேமிலி எல்லாருக்கும் போகும் கூடவே மீடியாக்கு “என்றாள் அசட்டையாக.
சிறிது நேரம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்,” வெல் மிஸ் நவ்யா… ஹ்ம்ம் அதானே உன் நேம்?” என்று நிமிர்ந்து அமர்ந்தான்.
“ஹேய் யூ?” என்று கைநீட்டியவளின் விரலை மடக்கிப் பிடித்திருந்தாள் மைத்ரா தேவி.
அங்கே மைத்ராவை எதிர்பாராத நவ்யா விழிகள் தெறித்து விடும் அளவிற்கு அவளைப் பார்க்க ,”வாட் எ ரியாக்ஷன் இந்த எக்ஸ்பிரஸன் எல்லாம் கேமரா முன்னாடி காட்டி இருந்தால் நீதான் நம்பர் ஒன் நடிகை போ. இப்படி மிஸ் பண்ணிட்டியே டியர்” என்று அலட்டாமல் பேசினாள் மைத்ரா.
“நான் நான்..?” என்று நவ்யா தடுமாறித் திகைக்க,” நீயே தான் நான் வேற யாரையாவது எதிர்பார்த்து வந்தேன்னு நினைச்சியோ டியர் , யூ காட்” என்றாள் கிண்டலாக.
“உங்க ஹஸ்பண்ட் என்னை ஏமாத்திட்டார். நான் ப்ரெஸுக்கு போவேன் மீடியாவில் போட்டு “எனும் போதே அவள் கன்னத்தில் பழுக்க ஒரு அறை விழுந்தது.
“இதுக்கா உன்னை அனுப்பினாங்க. நடிக்கத்தானே வந்த?”
“உங்க ஹஸ்பண்ட் சீட்டிங் பண்ணி இருக்கார் அதைத் தட்டி கேட்காமல் என் கிட்ட பாயறீங்க.”
“அது என் பாடு என் புருஷன் பாடு உனக்கென்ன டியர். ஆமாம் எவ்வளவு டிமாண்ட் பண்ண?”
“பத்து கோடி” என்றான் மகிழன்.
“கொஞ்சம் பெரிய அமவுன்ட் தான் மகிழா தந்திடலாமா?” என்று வினவ,
அவனோ,” ஹ்ம்ம் தரலாம் தான் பட் அவ்வளவு வொர்த் இல்லை” என்றான் கையை விரித்து.
“நாம தந்திடலாம் இது ஒரு அமவுன்ட் இல்லை. பட் இதே மாதிரி எத்தனை இடங்களில் சீட் பண்ணியோ அத்தனை டாக்குமென்ட் கால் ரெக்கார்ட்ஸ் அப்புறம் நீ ஊர் சுத்தினது எல்லாம் மீடியாவில் சொல்வேன். இவர் ஜஸ்ட் டாக்கிங் மட்டும் தானே அது பிரச்சினை இல்லை நான் பார்த்துக்கிறேன் பட் வாரிசு நடிகர் ஒருத்தரை வளைச்சு போட்டு ப்ளாக் மெயில் பண்றியாமே அவர் பத்தின டீடெயிலும் வெளியே வந்தா அடுத்து உன் நிலைமையை யோசிச்சுக்கோ” என்ற மைத்ரா,” வாங்க மகிழ் போகலாம்” என்று முன்னே நடக்க மகிழன் அவள் பின்னால் சென்றான்.
…. தொடரும்.