‘ஒரு வார்த்தை கேட்கிறாளா… எப்படி முன்பின் தெரியாத என்னை மனைவியாக ஏற்றாய் என்று. எதுவுமே எண்ணிக் கொள்ளாத சிறுகுழந்தையாய் இருக்கிறாளே!’ என நொந்து கொண்டான்.
அத்தனையும் விழியளவில் மட்டும். விரல் தீண்டிட ஏங்கினாலும் விரகத்தில் மனம் ஓங்கினாலும் அன்பின் ஆலாபனை எல்லாம் பார்வை பரிமாற்றங்களில் மட்டும்.
காதல் அந்த சொல்லுக்கு பொருள் விளங்கியபோது அந்த காதலும் காதலிக்கப்பட்டவளும் வெகுதொலைவில் இருக்க காதல் இயக்குநருக்கு காதலே பிடித்தமில்லாமல் போனது அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில்.
கடந்த காலத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டு திரிந்தவனை களிறு துரத்தி அவன் கரம் சேர்க்க கன்னியவள் கோலம் கண்டு யாரென்று தெரியாமல் விழித்து பின் அவளைப் பற்றி அறிந்து மீண்டும் தன்னிடம் வரவழைத்து விட்டான் தமையன் உதவி கொண்டு. இனி பிரேமமும் பிரேமிக்கும் பித்தனவன் பித்தான காதலில்.
பெண்ணின் அங்கத்தில் அசைவு தெரிய, விலோசனங்களை விரைந்து மூடிக் கொண்டான் உறங்குவது போல பாவனை செய்து.
கண்களை கசக்கி எழுந்தவளுக்கு எதிரே இருந்தவனின் உருவத்தைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடல்.
‘ஸ்ஸப்பா இவரா…!’என நெஞ்சில் கைவைத்தபடி ,’பயந்தே போயிட்டேன். எப்போ வந்திருப்பாரு. உட்கார்ந்தே தூங்கறாங்க கழுத்து வலிக்காது!’ என்று ஆராய்ச்சி செய்தபடி எழுந்து விட்டாள்.
‘என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம்’ என யோசித்தவன், வேண்டுமென்றே தலையை கீழே பட்டென்று சாய்க்க ,ஓடிச் சென்று தாங்கிக் கொண்டாள்.
மனுஷ் நன்கு வாகாக அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.
“சார் சார்…!”என மெல்லிய குரலில் அழைக்க, அவன் கேட்காதது போலவே விழிகளை மூடியிருந்தான்.
‘பாவம் ரொம்ப வேலை போல’ என்று முணுமுணுத்துக் கொண்டே அவனை ஷோபாவில் படுக்க வைக்க முயற்சி செய்ய, அத்தனையும் தோல்வி தான். அவனை எழுப்ப முயன்றவளால் சுத்தமாக முடியவில்லை.
உண்மையாக தூங்குபவனை எழுப்ப முடியும். தூங்குவது போல நடிப்பவனை எப்படி எழுப்ப
வேறு வழியின்றி அவனை சாய்த்தபடி அவளும் ஷோபாவிலேயே சாய்ந்து மீண்டும் உறங்கத் துவங்கிவிட்டாள்.
மனுஷின் இதழ்களில் புன்னகை நெளிய, அவள் உறங்குவதை உறுதி செய்து எழுந்து கொண்டான்.
“நான் எழும்போது வேணும்னே தானே சாயப் போனீங்க” என்று கேட்க
“எப்போ?” ஒன்றுமறியாதவன் போல கேட்க
“ப்ப்ச் பொய் சொல்லாதீங்க. நான் என்ன செய்வேன்னுப் பார்க்கத் தானே!?” என்று மீண்டும் கேட்க
“ஜீவிதமே, எத்தர சமஸ்யம்?” என்றதும் அவனை முறைத்தவள்
“காதலே பிடிக்காத டைரக்டருக்கு நான் உயிராமா ?”என்று கேட்டவள்,” வந்த கொஞ்ச நாளில் லவ்வா என்ன?” என அவனை ஆராயும் பார்வை பார்த்தாள்.
“அப்போ யாழிக்கு ஜீவிதமெனில் அர்தம் அறியுமோ?” என்றவன் “ஆமாம்னா என்ன செய்வ?” என்று வினவினான்.
“ஹ்ம்ம் இந்த வீட்டை விட்டு போயிடுவேன்” என்றாள் முகத்தில் வேறெந்த உணர்வையும் காட்டாது.
“அகரயாழினியெங்கில் தாராளமாயிட்டு போ. பக்ஷே என்ட பார்யாளை ஞான் எங்கேயும் அனுப்ப முடியாது” என்றான் அவளை பார்த்து.
“இது ஒரு நாடகக் கல்யாணம். “
” பக்ஷே ஞான் நடிக்கலையே.”என்றவன் ,” ஜீவிதம்னா என்ன மீனிங் அறியுமோ பறா பொண்ணே?” என்று வேண்டும் என்றே வம்பாய் கேட்க
“எனக்கு மலையாளம் தெரியுமானு ஆராய்ச்சி பண்றீங்களா?” என அவள் பதில் கேள்வி கேட்க
“ஆமாம்னா என்ன செய்ய போற?”
“அது தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க சார் ?,உண்மையை உடைச்சே சொல்லிட்டேன். கொஞ்ச நாள் உங்க பாதுகாப்பு, பிறகு ஆசிரமமோ இல்ல ஏதோ ஒன்னுக்கு போகப் போறேன். நிச்சயம் நான் போகும் போது நல்லா செக் பண்ணிட்டே அனுப்புங்க ஒரு பிரச்சினையும் இல்லை. அப்படியே நான் இங்க இருந்து திருடிட்டு போனாலும் உங்க செக்யூரிட்டி மீறிப் போக முடியாது” என்றாள் அவனை கோபமாக்க
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே ?”அவளின் கோபம் எல்லாம் தன்னை பாதிக்கவில்லை என்பது போல பேசினான்.
“பதில் சொல்ல காரணம் வேணுமே…எனக்கு மலையாளம் தெரியுமா தெரியாதானு ஏன் ஆராய்ச்சி பண்றீங்க.?”
இயக்குனரின் இயற்பெயர் மட்டுமல்ல இயல்பும் வெளியாகியது.
***********
ரிஃபாஷா பல மணி நேர யோசனைக்குப் பிறகு அஜய்மித்ரனை அழைத்தாள்.
“சொல்லுங்க மேம்” என்று வந்து நிற்க,” சார் கிட்ட மறுபடியும் எப்போ ஷூட் கேளு ஏடி பண்ணலாம்” என்றாள்.
“நிஜமாவா மேம் சூப்பர். நான் சார் கிட்ட சொல்லிடுறேன் அப்புறம் இந்த படத்தில் சர்ஷிமன் கேரக்டரை இறந்துடுற மாதிரி காட்டப் போறாராம் சார். இனி அவர் ஷூட்டிங் வர மாட்டார்” என்று கூற
“ஏன் எனக்காகவா?” என்று நெற்றிச் சுருக்கியவளிடம்,” உங்க பாதுகாப்பும் முக்கியம் இல்லையா மேம் அதனால” என்றான்.
” உங்க சார் எனக்கு வெறும் கேர் டேக்கர் தான் அதுக்கு மேல எதிர்பார்க்க வேண்டாம் னு சொல்லாம சொல்ற” என்று அவள் சிரிக்க
“மேம் நான் அப்படி சொல்லலை ” என்று தயங்கியவனிடம் ,”ஐ க்நோ ஏடி. மனுஷ் என்னை எந்த இடத்தில் வச்சிருக்காங்க னு புரியுது. “என்றவள்
“ஓகே ஏடி ஏதோ ஸ்டோரி நீ ரெடி பண்ணி வச்சிருக்கிறதா வினித் சொன்னானே ஃப்ரீ னா ஒன் லைன் சொல்லு அல்லது ஒரு ஷார்ட் லைன் சொல்லு கேட்போம்” என்றாள்.
“சீரியஸ்லி மேம்” என்று ஆச்சரியமாக கேட்டவன் தனது கதையினை சுருக்கமாக சொல்லி முடிக்க ரிஃபாஷா வியந்து போனாள்.
“தேங்க்ஸ் மேம். என்றவன் நான் நைட் சென்னை கிளம்ப அரேஞ்ச் பண்றேன் மேம்” என்றான்.
“தேங்க்ஸ்… ஹ்ம்ம் உனக்கு நான் தான் சொல்லணும் ஏடி. மைன்ட் ரிலாக்ஸாக இருக்கு. தேங்க் யூ என்னை இவ்வளவு நாளும் கேர் பண்ணிட்டதுக்கு” என்றாள் மனமுவந்து.
“சாரோட கெஸ்ட் நீங்க” என்றதும் “அப்படியா?” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தவள்,” நம்பிட்டேன் “என கண் சிமிட்டியபடி போய்விட்டாள்.
அஜயின் முகத்தில் புன்னகை மிளிர தலைக் கோதியபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
மௌனமாய் ஒரு புன்னகை அது பேசும் சங்கேதங்கள் அதிகம் அல்லவா
**********
வேலுச்சாமி ஏமாற்றத்துடன் வந்து நமசிவாயத்தின் முன் நிற்க அவனுக்கோ அவரைக் கொன்று விடும் ஆத்திரம்.
“வாசல்ல கூட நிக்க விட மாட்டேங்கான் அந்த கூர்க்கா பய . என்னைய என்னத்த சொல்ல சொல்றீங்க சாமி. நான் இனி தேட ஆவாது. சினிமாக்காரவுக எடம் அங்கன போய் ஒரண்டு இழுக்க நமக்கு தோதுபடாது” என்று சொல்லிய வேலுச்சாமி,” இனிமேட்டுக்கு நீங்களாச்சு அவளாச்சு ஆளை விடுங்க சாமி” என்று விடுவிடுவென வெளியே நடந்தார்.
“நீ இங்கிருந்து ஒரு அடி நகர முடியாது” என்று பல்லைக் கடித்தபடி எழுந்து நின்ற நமசிவாயத்தை முறைத்த ஷகீரா ,”ஏன் இந்தாளை உட்கார வச்சு தெண்டசோறு போட்டு சரக்கு வாங்கி தரப் போறீங்களா?” என்றாள் எரிச்சலாக.
“வேற என்ன செய்ய? ஓடிப் போனவளை அப்படியேவா விட முடியும்” என்று எரிந்து விழ,” அதான் விட்டுத் தொலைக்க மாட்டேங்கிறியே என்று முனகியவள் அப்போ என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு அப்புறமா அவளைத் தேடலாம்” என்றாள்.
“ஏய் என்ன விளையாடுறீயா நான் ஏற்கனவே கடுப்பில் இருக்கேன்” என்றதும்,” நான் மட்டும் இல்லை அமுதாக்காவும் தான்” என்றாள் அடுத்ததாக.
“அந்த பட்டிக்காட்டு சிறுக்கிக்கு அவ்வளவு தைரியம் இருக்கா என்ன?” என்று எள்ளலாய் கேட்க
“நீங்க அகராவைத் தேடினா கண்டிப்பாக நானும் விவாகரத்து செய்வேன்” என்று வந்து நின்றார் அமுதரசி.
“பிள்ளை இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி விளையாடினானாம் என்று சத்தமாக சொல்லிய ஷகீரா இதோ பாருங்க நீங்க அமைதியா இருந்துட்டா சரி இல்லாட்டி ஷாஜித் கேஸ் இன்னும் ஓபன்ல தான் இருக்கு அந்த வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ண சொன்னது நீங்க தான் னு போலீஸ் ல தருவேன் என் கிட்ட உங்க வாய்ஸ் ரெக்கார்டர் இருக்கு “என்றாள் மிரட்டலாக.
“ஷகீ” என அவன் உறுமவும்,” வாட் நான் அன்னைக்கு சொன்னது தான் சிவா. அவளை இப்படியே விட்டுடுங்க அது தான் உங்களுக்கு நல்லது அப்புறம் உங்களுக்கு தெரியாத இன்னொரு விஷயமும் சொல்லிடுறேன். அந்த டைரக்டரோட அண்ணன் உங்களைப் பத்தி விசாரிக்க ஆள் போட்டு இருக்காராம் ஸோ பீ கேர் ஃபுல்” என்று எச்சரித்து விட்டு அப்படியே வேலுச்சாமியிடம் திரும்பி,” ஹேய் யூ இனி இந்த பக்கம் உன்னை நான் பார்க்கக் கூடாது அப்படி கண்ணில் பட்ட அடுத்த டெட் பாடி நீதான்” என்று சொல்லி விட்டேச் சென்றாள்.
அமுதரசி அவரருகில் வந்தவர் ,”இது ஆஸ்பத்திரி ரிப்போர்ட் மாமா புள்ள உண்டாகியிருக்கேனாம். சொன்னாங்க மூணு மாசம் தாண்டப் போகுது.சொல்ல வேணாம் னு நினைச்சேன் மாமா ஆனா மனசு கேட்கலைங்க நான் எங்க கிராமத்துக்கே போறேங்க. எப்படியாச்சும் கூலி வேலை செஞ்சு புள்ளைய காப்பாத்திக்குவேன். இங்கே நான் இருக்க விருப்பப்படலை” என்று சொல்லவுமே அமுதரசி கழுத்தைப் பிடிக்கச் சென்ற நமசிவாயம் அப்படியே நின்று விட்டார் தன் பெற்றோர் வருகையினால்