“சோரி!” என்று உரைக்க 

“உங்க மூஞ்சி ரெட்டிஷா இல்ல இல்ல பிங்கிஷா இருக்கு” என்று சொல்ல சிரித்து விட்டான் மனுஷ். 

“யூ ஆர் ப்ளர்டிங் மீ.!”என்றிட 

“அய்யே! இவர் பெரிய உலக அழகன்.” என்றாள் வாய்த்துடுக்காக. 

மனுஷ் அவளை குறுகுறுவென்று பார்க்க,” கொஞ்சூண்டு அழகா இருக்கீங்க. “என்று சொல்லவும்,” க்யூட் ஜீவிதம் !”என கன்னம் வருடி சொல்லிவிட்டுச் செல்ல அகராவின் நிலை தான் அந்தோ பரிதாபம் ஆனது. 

‘இவர் என்ன டச் எல்லாம் பண்றாரு இனி தொடக் கூடாதுன்னு சொல்லி வைக்கணும்’ என முணுமுணுத்துக் கொண்டாள். 

கதவருகில் நின்றிருந்த மனுஷிற்கும் அவளது முணுமுணுப்பு கேட்டது. 

‘நான் டச் பண்ணக் கூடாதாமா ?!’என்று யோசித்தவன் வேகமாய் உள்ளே நுழைந்து அவளை உரசியபடி நகர்ந்து சென்று அலமாரியைத் திறந்தான். 

அங்கே எடுப்பதற்கு ஒன்றுமில்லை ஆனாலும் ஒரு விளையாட்டு அவளோடு. அலமாரியில் தேடியவன் திரும்பும் போதும் உரசிவிட்டு,” சாரி அது அறியாபெட்டினுரு” என்றபடி போய்விட்டான். 

பத்மாவதி சிரிப்புடன் வெளியே வரும் மகனை மனநிம்மதியோடுப் பார்த்தார். 

“அம்மே… எந்தானு காணுன்னது…?”என்று கேட்டவனை ,”இங்க வந்து உட்காரு “என்று அழைத்தார். 

அவன் அமர்ந்ததும்,” அகி மோளே !”என்று சத்தமிட ,அகரா வெளியே வந்தாள். 

“கொறைச்சு இஞ்சி சாயா வேணும் “என்றிட,” இதோ!” என்று சமையலறைக்குள் பாய்ந்தாள்.

‘ஏன் ?’என்ற கேள்வியுடன் மனுஷ் பார்த்திருக்க,” மருமக்கா உண்டாக்குற இஞ்சி சாயா நன்னாயிட்டு இருக்கும் மோனே” என்றார். 

“ஐ க்நோ!” என்றான் அவருக்கு கேட்காத வகையில். பத்து நிமிடத்தில் இஞ்சி கலந்த தேநீரோடு வந்தவளை ரசனையோடு பார்த்திருந்தான். 

“என்ட ஜீவிதம்!” என்றவனை என்னவென்று புருவமுயர்த்திக் கேட்க ,அன்னையறியாமல் கண்சிமிட்டி ஒன்றுமில்லை என்றான். 

‘அச்சோ!’ என்று மனதினுள் அலறியவள்,’ இவர் இன்னைக்கு சரியே இல்லை. தப்பிச்சு எப்படியாவது ஓடிடு அகரா’ என்று சொல்லிக் கொண்டாள் மனதில். 

“வளர நன்னாயிட்டு இரிக்கி. “என்றவன்,” அம்மே எனிக்கு ஷூட்டிங். ரெண்டு மூணு திவசம்( கிழமை)கழிச்சு பாக்காம்” என்றவன் அகராவை பார்த்து விட்டு கிளம்பினான். 

ஆழ்ந்த பார்வை அது. ஏன் இந்த பார்வை என பிடிபடவே இல்லை அகராவிற்கு 

இரண்டு மூன்று நாட்கள் என கூறியவன் வந்ததோ இரண்டு வாரங்கள் கழித்து தான். அதற்குள் மைத்ரா மகிழன் இருவரும் வீடு திரும்பி இருந்தனர். 

“இது உனக்காக அகி!” என புடவையை நீட்ட நெகிழ்ந்து தான் போனாள் அகரயாழினி. 

“எந்தா மோளே வாங்கிக்கோ!” என பத்மாவதி சொல்லவும் சுயம் வந்தவள் ,”தேங்க்ஸ் கா!” என்றாள் நெஞ்சம் நெகிழ்ந்து. 

“எதுக்கு தேங்க்ஸ் என் சிஸ்டர் தானே நீ” உடனே நன்றியை மறுத்த மைத்ரா அகராவின் உள்ளத்திற்கு நெருக்கமாகிப் போனாள். 

“அத்தை இது உங்களுக்கு !”என்று ஸ்வெட்டரை நீட்ட ,அதனை வருடிய பத்மாவதியோ,” நல்ல ஷாஃப்ட் உல்லன். நல்லா இருக்கு மைத்தி” என்று பாராட்டிட 

“ம்மா செலக்ஷன் என்னுடையது “என்று மகிழன் சொல்ல 

“செலக்ஷன் உன்னோடது தான் பட் வாங்க சொன்னது என் மருமகள் தானே?” என்று கேட்டிட 

ஆமென்று ஒப்புக் கொண்டான்.

அதன் பிறகு ஊர் சுற்றிய கதை, குழந்தை செய்த சேட்டை என்று அவர்கள் பேச்சு நீள மகிழன் அறைக்குள் சென்று விட்டான். 

அறைக்குள் சென்ற நிமிடமே அவனது கைபேசி அழைத்து விட்டது. 

இரண்டு மூன்று தவறிய அழைப்புகள் சென்ற பிறகு எரிச்சலாய் எடுத்தவன்,” எதுக்கு கால் பண்ற?” என்றான் கோபமாய். 

“சிம்லாக்கு வொய்ஃப் கூட வந்தா தப்பிக்கலாம்னு நினைச்சீங்களா எம்சி ?”என நக்கலாய் எதிர்புறம் வினவினாள் ஒருத்தி. 

சத்தமாய் சிரித்த மகிழன்,”உனக்கு பயந்து வொய்ஃப் கூட வந்தேன்னு நினைச்சியா?” என்றான். 

“வேற என்ன?” என்று இன்னுமே நக்கல் தொனியில் கேட்க 

“என் மனைவி கூட செகண்ட் ஹனிமூன் வந்தேன்.” என்றான் சற்றும் சளைக்காமல். 

“அதான் கால்ல விழுந்து நடுரோட்டில் கெஞ்சுனியே” என்றவளைக் கொன்று விடும் கோபம் அவனுக்கு.

“எம்சி… ட்ரை டூ அன்டர்ஸ்டாண்ட் மீ. உன்னை எவ்வளவு ஹாப்பியா வச்சுக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் வச்சுப்பேன்.” எனும் போதே 

“ஓஓஓ அவ்வளவு கம்பெனி தருவியா நீ. தட்ஸ் குட் “என மைத்ராவின் குரல் கேட்டிட எதிர்முனையில் இருந்தவள் அதிர்ந்து இணைப்பைத் துண்டித்தாள். 

மைத்ராவோ கைபேசியை அசட்டையாக தூக்கி பெட்டில் போட்டு விட்டு கடந்து சென்றாள். 

மகிழன் ஆவென பார்த்திருந்தான் அவளை. 

அவன் பேசத் துவங்கவுமே அறைக்குள் வந்திருந்தாள். அவனது உரையாடல் இழுத்துக் கொண்டுச் செல்ல எரிச்சலாகி கைபேசியை பிடுங்கி பேசி விட்டுச் செல்ல, ஆச்சரியம் தான் அவனுக்கு. பழைய மைத்ரா எனில் அவன் யாரிடமாவது பேசினால் சட்டென வெளியேறி விடுவாள். இப்போது இப்படி நடக்க சிரித்துக் கொண்டான். 

“நைஸ் இம்ப்ரூவ்மென்ட் !”என்றான் சத்தமாய். எமோஜி தலையணையை விட்டடித்தாள் அவன் மீது. 

********

ரிஃபாஷா வெட்டவெளியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். மிகவும் மெலிந்து காணப்பட்டாள். ஏற்கனவே டயட் இருக்கிறேன் என்று ஒல்லியாகத் தானிருப்பாள். இப்போது இன்னும் மெலிந்திருந்தாள். கண்கள் உள்ளே சென்றிருந்தது அஜய்க்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. 

“மேடம்…!”நான்கைந்து முறை அழைத்தபிறகு தான் பதிலே தந்தாள். 

“ப்ப்ச் என்ன…?” 

“வெயில் வந்திடுச்சு ரொம்ப நேரமா இங்க உட்கார்ந்து இருக்கீங்க “என்றான். 

அப்போது தான் உணர்ந்தாள் வெயிலின் தாக்கத்தை. கைமுழுவதும் உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டவள் கண்களை மூடித் திறந்தாள். 

“சூடு சுரணை கூட இல்லாமல் போயிடுச்சு பாரேன் ஏடி!” என்றாள் விரக்தியாக. 

“இதெல்லாம் உங்க கற்பனை மேடம். எழுந்து வாங்க சாப்பிடலாம். ரைஸ் ஓகே தானே…?”என்று கேட்க

“வாழவேப் பிடிக்கலை இதுல ஏதா இருந்தா என்ன.?”அலட்சியமாக பதிலளித்து எழுந்து நின்றாள். அவள் முதுகில் சுள்ளென்று விழுந்தது அடி.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ வாட் த…” என்று திரும்ப அஜயின் பாட்டி நின்றிருந்தார் கையில் கம்புடன். 

“ஆளான புள்ளைக்குப் பேச்சப் பாரு. ஏன்டி கொமரி வாழ்ந்து என்னத்த கிழிச்சுட்ட. வாழப் புடிக்கலைனு பேசுற வந்து சோத்தை தின்னு.”என்றவர் 

“எள்ளு எண்ணைக்கி காயுது, எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுது?” என்று சொல்ல அஜய் சிரித்து விட்டான். 

அவனையும் அடிக்க கம்பை ஓங்கியவர்,” ஏன்டா அவளை கூட்டிட்டு வாடான்னா நீயும் சேந்து வெக்கையில நிக்குதவேன். வாங்க ரெண்டு பேரும் கொள்ள சோலி கெடக்கு” என்று மிரட்டியதும் அஜய் அவர் பின்னே செல்ல, அவனைப் பிடித்து இழுத்தவள் 

“இந்த ஓல்டு லேடி எதுக்குடா என்னை அடிச்சுச்சு ?”என்று கோபத்தில் பல்லைக் கடிக்க

“சாப்பிடாம இருக்கீங்களாம் அதான். சாருக்கு தெரிஞ்சா திட்டுவார் மேடம், வாங்க அவங்க அடிச்சதை மனசில் வச்சுக்காதீங்க “என்றான். 

ரிஃபாஷா பிடிவாதம் பிடிக்கவில்லை எழுந்து வந்தாள். உணவை அருந்தி விட்டு எழவும் மனுஷ் அழைத்திருந்தான். 

“ரிஃபா ஆர் யூ ஓகே?” என்று கேட்டிட 

“நோ ஐம் நாட் ஓகே !”என்றவள் சில நொடிகள் தாமதித்து,” என் அம்மா என்னைத் தேடினாங்களா?” என கேட்க  சங்கடமாய் உணர்ந்தான் அவன். 

“தேடலை தானே?!” என்று வலியோடு வார்த்தைகளை உதிர்த்தவள்,” ஒரு வேளை என்னை பெத்திருந்தா தேடியிருப்பாங்களோ சார் !”என்று கேட்டு விட்டு இணைப்பைத் துண்டித்தாள். 

மனுஷ் மீண்டும் அழைத்தான். 

“ரிஃபா டோன்ட் பீ எ எமோஷனல் ஃபூல் ,எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா…?”என்றவன் ,” ரிலாக்ஸ் ஆகிட்டு வா உனக்காக உன் படம் காத்திருக்கு .”என இணைப்பைத் துண்டித்தான்.

*********

மகிழன் மகனோடு விளையாடிக் கொண்டிருக்க, அவனது கைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. 

‘ஏன் பேசாம வச்சிருக்காங்க ?’என்ற யோசனையோடு வந்த மைத்ரா மகனை வாங்கி கொண்டாள் .

“ஏன் மைத்தி…?”

“அவன் சாப்பிடுற டைம் “என்று மணியைக் காட்ட 

“எல்லாம் நேரத்துக்கு தான் செய்வியோ…?”

“எதையுமே டைமுக்கு செஞ்சு முடிச்சிடணும், இல்லாட்டி நீர்த்துப் போயிரும். இல்ல கெட்டுப் போயிரும் “என்றவள் அவன் முகமாற்றம் கண்டு,” நான் சாதத்தை சொன்னேன்.” என்றாள். 

“நீ பேசாம ரைட்டர் ஆகியிருக்கலாம் மைத்தி ,எவ்வளவு நூதனமா பேசுற ?”என்று சிலாகித்தவன்,” எல்லாம் டைமுக்கே செஞ்சிடுறேன். ஆனாலும் காத்திருக்கிறதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்யுது” என்றான் உணவூட்டி முடித்தவளை மகன் அறியாமல் முத்தமிட்டு .

“நீங்க !”என்று முனகியவள் அவசரமாய் மகனைப் பார்த்திட

“அவன் கவனிக்கலை.” என்றான் கண்சிமிட்டி. 

“கவனிச்சா மட்டும். பயப்படுற ஆள் தான்.” என்று சொல்ல 

“இல்லைனு வச்சுக்கோயேன்.” என்றவன்,” இப்போ என்ன செய்யலாம் மைத்தி?” என்று கேட்க 

“என்ன புரியல…?” 

“உனக்கு நல்லாவேப் புரியுது” என்றவன்,”இந்த ஃபோன் கால்… என்ன செய்ய?” என மனைவியிடம் விடை கேட்க

“தப்பு செய்றவங்க தான் பயப்படணும், செய்யாதவன் நின்னு அடிக்கலாம். “

“அடிச்சுட்டா போச்சு. காப்பாத்த என் மைத்தி இருக்காளே… ?”

“நினைப்பிருந்தா சரி.” என்றவள் கிண்ணத்தை எடுத்துச் செல்ல 

“மைத்தி தம்பி தூங்கிட்டான்…” என்றான் ஆர்வத்துடன். 

“ஸோ ?”என்று திரும்பியவளிடம் அதற்கு மேல் பேச வாய் வரவில்லை. அனுமதி கேட்கும் நிலையில் அவனிருக்கையில், வேறு என்ன செய்ய முடியும் அமைதியாய் அவள் போகும் திசையைப் பார்த்திருந்தான். 

***********

நமசிவாயத்தின் தூண்டுதலின் பெயரில் அகராவின் அப்பா மனுஷ் வீட்டிற்கே வந்து விட்டிருந்தார். 

“யோவ்! நானு டைரக்டரோட மாமனாருய்யா என்னைய உள்ள விடுய்யா “என காவலாளியிடம் கத்திக் கொண்டிருக்க,

அவனோ ,”இந்தா இப்படி எத்தனை பேர் கெளம்பி வந்திருக்கீங்க? போய்யா முதல்ல சார் பார்த்தா என் வேலை போயிரும்.” என்று தள்ளிவிட 

“யோவ் என் மக பேர் அகரயாழினி. போய் சொல்லு உங்கப்பா வேலுச்சாமி வந்திருக்கேன்னு” என்று மீண்டும் முன்னேற 

“குடிகாரா, போவமாட்ட. அடிச்சேன்னா சில்லுவா பேந்துக்கும்.சொல்லிக்கிட்டே இருக்கேன் லூசு மாதிரி பேசிக்கிட்டு… உன் டிரெஸும் ஆளும் போய்யா இங்கிருந்து “என்று அடித்து விரட்டாத குறையாக காவலாளி விரட்டினான். 

“ச்சே என்ன சொன்னாலும் நம்ப மாட்டீக்கானே…?இந்த கழுத போட்டோ கூட நம்ம கிட்ட இல்லையே… பேசாம அந்த நமசி கிட்டவே கேட்போம்” என்று முனகியபடி சென்றார் வேலுச்சாமி. 

**********

அகரயாழினிக்கு நிம்மதியான உறக்கம் அன்று. வெகு நாட்களாக கிட்டாத உறக்கம் இன்று கிடைத்தது போல உறங்கிக் கொண்டிருந்தாள். 

சாத்தியமில்லாத சந்திப்பு, உறவு, இணக்கம் இதுவெல்லாம் எப்படி வந்தது எதுவும் அறியாத பெண்ணாய் வலம் வ

ந்தாள். எல்லாம் அறிந்த ஜீவனோ அமைதியிலும் அமைதியாய் இருந்தது. 

மனுஷ்யபுத்திரன் அதிகாலையிலேயே வந்துவிட்டிருந்தான். மென்மெத்தை நாற்காலியில் அமர்ந்தபடி உறங்கும் அவளை விடிவிளக்கின் ஒளியில் விழியகலாது பார்த்துக் கொண்டிருக்க, மனமெல்லாம் நிறைந்து கிடந்தது.

….. தொடரும்